search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anjaneya Temple"

    • கோவில் பூசாரிகளும் அதிகாரிகளும் இணைந்து பணத்தை திருடுவது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
    • கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும்.

    கர்நாடகாவில் உள்ள காளி ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் எண்ணப்படும் உண்டியல் பணத்தை கோவில் பூசாரிகள் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோவில் பூசாரிகளும் அதிகாரிகளும் இணைந்து பணத்தை திருடுவது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இணையத்தில் பலரும் இந்த வீடியோ தொடர்பாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டை போல கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும் என்று பலரும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்ததாக ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலின் தலைமை அர்ச்சகர் ராமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய ராமச்சந்திரா, "கோவில் பணத்தை திருடிய 2 செயற்குழு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 2 சமையல்காரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எதிர்காலத்தில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோவில் வளாகத்தில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் நன்கொடை எண்ணும் பணியில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

    பக்தர்களின் காணிக்கைகளை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் கோயில் நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. ஆஞ்சநேய ஸ்வாமிக்கு காணிக்கை செலுத்தும் போது பக்தர்கள் பயப்பட தேவையில்லை. பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை மோசடி செய்யவோ, திருடவோ வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.

    • கமலஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி விழா 23-ந் தேதி தொடங்குகிறது.
    • கலசம் மேளதாளத்துடன் வீதி உலா நடக்கிறது.

    மதுரை

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தென்மாட வீதியில் உள்ள கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

    முதல் நாள் காலை 6 மணிக்கு விஷ்வக்சேன பூஜை, கலச ஆராதனை, ஹோமம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் கலசம் மேளதாளத்துடன் வீதி உலா நடக்கிறது. 12.30 மணிக்கு சமாராதனையும், மாலை 6.30 மணிக்கு ஆஞ்சநேயர் வீதி உலாவும் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    இதேபோல் 2-வது நாள் இரவு 7 மணிக்கு பக்தி சொற்பொழிவு நடக்கிறது. இதனை தொடர்ந்து 12 ராசிகளுக்கான பலன் மற்றும் பரிகாரங்கள் கூறப்படுகிறது. 3-வது நாளில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், பரதநாட்டியம், கோலாட்டம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • நேயர் திருக்கோவிலில் ஆடிமாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
    • தொட–ர்ந்து பிரசாதம், அன்ன–தானம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளை யம்நால்ரோடு அருகே மாருதிநகர் பகுதியில் உள்ள ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆடிமாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

    மொடக்குறிச்சி அடுத்த கணபதிபாளையம் நால்ரோடு மாருதிநகரில் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை மூலவர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் சுயம்புலிங்க ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி சனிக்கிழமை ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை மாலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சுயம்புலிங்க ஆஞ்சநேயர் வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு பால், நெய், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரம் நடைபெற்று, பக்தர்களுக்கு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். தொட–ர்ந்து பிரசாதம், அன்ன–தானம் வழங்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சிறப்பு பூஜையில் கணக்கம்பட்டி அழுக்கு சித்தர் கோயில் பூசாரி சீனிவாசன், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பட்டாச்சாரியார் ராஜகோபால், பொன்னம் பாளையம் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து–கொண்டனர்.v

    விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு ராஜகுருவாக திகழ்ந்த வியாசராஜர் பிரதிஷ்டை செய்த தலங்களில் ஒன்றுதான் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயம்.
    விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு ராஜகுருவாக திகழ்ந்தவர், வியாசராஜர். மாத்வ குருமார்களில் ஒருவராகவும், ஸ்ரீவியாசராஜ மடத்தின் பீடாதிபதியாகவும் விளங்கிய இவர், அனுமன் பாதம்பட்டதாக அறியப்பட்ட 700-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்தவர். அப்படி அவர் பிரதிஷ்டை செய்த தலங்களில் ஒன்றுதான் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயம்.

    தல வரலாறு :

    வியாசராஜர், தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு பாறையின் மீது அமர்ந்து தியானம் செய்தார். அப்போது அவருக்கு பாறையின் மீது ஆஞ்சநேயர் தியானம் செய்வது போன்ற காட்சி தென்பட்டது. அதன் உண்மை நிலையை அறிய நிஷ்டையில் ஆழ்ந்தார். அப்போது அவருக்கு சில காட்சிகள் தோன்றின.

    ராமனுக்கும் ராவணனுக்குமான போர் முடிந்தது. ராமன் பெற்ற வெற்றியை , அசோகவனத்தில் இருக்கும் சீதையிடம் சொல்வதற்காக பறந்து சென்றார் அனுமன். அங்கு சீதையைக் கண்டு வணங்கியவர், “அன்னையே! உங்களை நானே அழைத்துச் சென்று விடுவேன். அது ராமபிரானின் புகழுக்கு இழுக்காகும். எனவே ராமர் வெற்றி பெற்ற தகவலைச் சொல்லவே நான் வந்தேன்” என்றார்.

    அப்போது சீதையின் நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்திருப்பதைப் பார்த்த அனுமன், அதுபற்றி சீதையிடம் கேட்டார். அதற்கு சீதை, ராவணனுடனான யுத்தத்தில் ராமனுக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினாள்.

    ‘அன்னை நெற்றியில் சிறிதளவு செந்தூரம் இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி கிடைத்தது என்றால், உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டால் என்னுடைய தெய்வம் ராமபிரானுக்கு எவ்வளவு வெற்றி கிடைக்கும்’ என்று எண்ணிய ஆஞ்சநேயர் தன்னுடைய உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டார்.

    வெற்றிக்குப் பின் ராமர், சீதை மற்றும் லட்சுமணனுடன் அயோத்திக்குத் திரும்பினார். வழியில் 7 தீர்த்தங்கள் கொண்ட இந்த இடத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். அதற்கு வழிவகை செய்வது போல், அங்கு ஒரு வில்வ மரத்தடியில் சுயம்பு சிவலிங்கம் காணப்பட்டது. அதன் எதிரில் திருநந்தி தேவரும் தென்பட்டார். இதுவே உகந்த இடம் என்று நினைத்த ராமர், சிவ பூஜை செய்தார். அனுமனும் சற்று தூரத்தில் இருந்த பாறையில் ராம ஜெபம் உச்சரித்தபடியே காவலுக்கு நின்றார்.

    இந்த காட்சிகள் அனைத்தும் வியாசராஜர் தியானத்தில் வந்து போனது. இதையடுத்து அனுமனின் உருவம் தென்பட்ட பாறையின் மீது அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்த அனுமன் 5 அடி உயரத்தில் பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் காட்சி தருகிறார். நேர் பார்வையும், இடது கையில் சவுகந்தி மலரை வைத்தபடியும், வலது கையால் ஆசீர்வதிக்கும் தோரணையிலும் அருள் புரிகிறார். அவரது தலைக்கு பின்புறமாக வளைந்து நிற்கும் வாலில் மணி கட்டப்பட்டுள்ளது.

    அனுமன் அருளும் இந்த ஆலயம், ‘இடுகம்பாளையம் அனுமந்தராயர் கோவில்’ என்றும், ‘ஜயமங்கள ஆஞ்சநேயர் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆலயம் குறுகலான நிலப்பரப்பில் அமைந்திருப்பதால், ‘இடுகம்’ என்ற பெயரில் இந்தத் திருத்தலம் பெயர் பெற்றுள்ளது.

    ஆலயத்தின் தென்புறத்தில் விநாயகரும், கன்னி மூலையில் ராமர் பூசித்த ராமலிங்கேஸ்வரரும், அவருக்கு எதிரில் திருநந்தி தேவரும், வடக்கில் செல்வமுத்துக்குமரனும், அவருக்கு அருகில் பர்வதவர்தனி அம்மனும் சன்னிதி கொண்டிருக்கிறார்கள். பிரதான தெய்வமாக ஜெயமங்கள ஆஞ்சநேயர் விளங்கு கிறார். இவர் நவக்கிரக தோஷங்களைப் போக்குவதோடு, மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

    குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் வேண்டும் பக்தர்கள், ஆஞ்சநேயரை மனதார பிரார்த்திக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், தங்களது வீட்டில் தினமும் ஒரு கைப்பிடி அரிசியை தனியாக எடுத்து வைக்கிறார்கள். இப்படி 30 நாட்கள் சேர்த்த அரிசியை கோவிலில் சமர்ப்பிக்கிறார்கள். இப்படி பக்தர்கள் பலரும் சேர்ப்பிக்கும் அரிசியில் அன்ன தானம் வழங்கப்படுகிறது.

    ஆறு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    கோயம்புத்தூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இடுகம்பாளையம். கோயம்புத்தூரில் இருந்து அன்னூர் வந்து, அங்கிருந்தும் இடுகம்பாளையம் செல்லலாம்.
    தர்மபுரியில் ஆஞ்சநேயர் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி எஸ்.வி. ரோட்டில் பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தருமபுரி நகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். கோவிலில் சுரபி என்பவர் செயல் அலுவலராக உள்ளார்.

    இந்த கோவிலை சுற்றி நிலம் அபகரிப்பு தனிப்பிரிவு போலீஸ் நிலையம், ஊர்க்காவல் படை அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம், கிளை சிறைச்சாலை ஆகியவை அமைந்து இருப்பதால் ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, எஸ்.வி. சாலை பகுதி எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும்.

    அபய ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று இரவு பூசாரி பூஜையை செய்து விட்டு வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றார். இன்று சனிக்கிழமை என்பதால் அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக கோவிலை திறக்க பூசாரி வந்தார்.

    அப்போது கோவிலின் முன்பு இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மர்ம நபர்கள் கோவிலின் வெளியே கிடந்த உண்டியலின் பூட்டை உடைத்து கொள்யைடிக்க வந்துள்ளனர். அவர்கள் முதலில் சி.சி.டி.வி. கேமிராவில் தங்கள் முகம் பதிவாகமல் இருக்க அதனை திருப்பி வைத்து உள்ளனர். பின்னர் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த செயல் அலுவலர் சுரபி கோவிலுக்கு வந்து பார்வையிட்டார். கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் பொதுமக்கள் கோவிலின் அருகே திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.

    அதில் முகமூடி அணிந்து கொண்டு மர்ம நபர்கள் முதலில் சாலை விநாயகர்கோவிலில் உள்ள கேமிராவை குச்சி வைத்து திருப்பி உள்ளனர். அதன்பின்பு ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள கேமிராவை திருப்பி விட்டு உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை சென்றது தெரியவந்தது.

    வருடத்திற்கு ஒருமுறை மட்டும் உண்டியலை திறந்து பணம் எண்ணப்படும். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் உண்டியல் திறக்கப்பட்டது. தற்போது அந்த உண்டியலில் ரூ.45 ஆயிரத்திற்கு மேல் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    பரபரப்பாக இயங்கி வரும் எஸ்.வி. சாலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

    ஆம்பூர் அருகே ஆஞ்சநேயர் கோவில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரியகோமேஸ்வரத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜை நடந்து வருகிறது. விஷேச நாட்களில் பக்தர்கள் துலாபாரம் அளித்தும். உண்டியில் காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

    நேற்று பூசாரி வழக்கம் போல் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டி சென்றார். நள்ளிரவில் மர்மகும்பல் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு பீரோவில் இருந்த 6 பவுன் சாமி நகைகள், பக்தர்கள் துலாபாரம் வழங்கிய ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை கோவிலில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

    இது குறித்து உமராபாத் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கைரேகைகள் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×