என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "anna birthday"
- அ.தி.மு.க.வின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான்.
- 2026- இல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாகும். அ.தி.மு.க.வின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான்.
என்னைவிட அ.தி.மு.க. வரலாறு பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. சிலர் அவர்களின் கருத்துக்களை கூறலாம். அ.தி.மு.க பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் விதியை மாற்றி தேர்ந்தெடுத்துள்ளனர்.
அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தி வருகிறேன். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ஒன்று இணையும் என முன்பு கூறியிருந்தேன். ஆனால் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் கண்டிப்பாக ஒன்றிணையும். 2026- இல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. நான் கட்சி வேஷ்டி கட்டுகிறேன். தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போட்டு பார்க்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர்.
- திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்.
சென்னை:
தி.மு.க, துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'அண்ணா' வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - பண்பாட்டின் குறியீடு - உரிமைப்போரின் முன்னோடி - தமிழ்நாட்டின் அடையாளம் - திராவிட மாடலின் தொடக்கம்.
சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர்.
திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்.
இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
'அண்ணா' வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - பண்பாட்டின் குறியீடு - உரிமைப்போரின் முன்னோடி - தமிழ்நாட்டின் அடையாளம் - திராவிட மாடலின் தொடக்கம். சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின்… pic.twitter.com/f4cRNDLphk
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 15, 2024
- கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி உத்தரவு.
- ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக ஆயுள் தண்டனையில் உள்ள கைதிகள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டி, விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, கடலூர் 4, கோவை 6, வேலூர் 1, புழல் 1 என 12 சிறை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.
- திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
- மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர்:
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழாவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, குணசேகரன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர் கண்ணப்பன், கருணாகரன், ஹரிஹரசுதன், பட்டுலிங்கம், எம்ஜிஆர்., மன்ற செயலாளர் சிட்டி ஈஸ்வரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி. என். பழனிச்சாமி மற்றும் ஆண்டவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
- மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
மதுரை:
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 115-வது பிறந்தநாளையொட்டி மதுரை வலையங்குளத்தில் மாநாடு நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கின. மதுரையில் முகாமிட்ட வைகோ மாநாட்டு பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் இந்த மாநாடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்றும், மதுரை மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் கூறினார்.
இந்த மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
அதன்படி மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. முன்னிலையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. மாலை 4 மணி வரை நெல்லை அபுபக்கர், ஒரத்தநாடு கோபு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு திடலில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மொழிப்போர் தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
மாநாட்டில் வரவேற்பு குழு தலைவர் பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமை தாங்குகிறார். மாநாட்டில் இந்துத்துவ பாசிசம் வேரறுப்போம், இந்தியாவின் எதிர்காலம், சமூக நீதி காப்போம், திராவிட இயக்கத்தின் சாதனைகள், அண்ணாவின் மாநில சுயாட்சி, சுற்றுச்சூழல் சவால்கள், அண்ணா ஏற்படுத்திய அறிவுச்சுடர்,
திராவிட இயக்கத்தில் பெண்கள், மொழி உரிமைப் போராட்டம், நதிநீர் உரிமை போரில் வைகோ, பாராளுமன்றத்தில் வைகோ, முழு மதுவிலக்கே நமது இலக்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையரங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், செல்வராகவன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், மனோகரன், பி.கே. சுரேஷ், துணைப்பொது செயலாளர்கள் ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், டாக்டர் ரொஹையா, ராஜேந்திரன், ஆட்சிக்குழு கிருஷ்ணன் மற்றும் வந்தியதேவன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், ஆசைத்தம்பி, காரை செல்வராஜ், புலவர் அரங்க நெடுமாறன், மல்லிகா தயாளன், வழக்கறிஞர் செந்தில் செல்வன், பாஸ்கர் சேதுபதி, பால சசிகுமார் என்.எஸ்.அழகிரி ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் செந்திலதிபன், துரை வைகோ, மல்லை சத்யா, கணேச மூர்த்தி, சதன் திருமலை குமார், சின்னப்பா எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. மாநாடு நிறைவு உரையாற்றுகிறார்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், அடிப்படை வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
- அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
- மகளிர் உரிமைத்திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பெண்கள் பயன் பெற உள்ளனர்.
காஞ்சிபுரம்:
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் அண்ணா நினைவு இல்லத்தை முதலமைச்சர் பார்வையிட்டார்.
இதையடுத்து அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் குடும்பத்தலைவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மகளிர் உரிமைத்திட்டத்தில் தகுதிவாய்ந்த ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பெண்கள் பயன் பெற உள்ளனர்.
- அண்ணா உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தலைமைக் கழகச் செயலாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
- கழக நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளான வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தலைமைக் கழகச் செயலாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பணம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு சென்றடையும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன.
- இன்னும் ஓரிரு நாளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளது.
சென்னை:
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த பணம் குடும்ப தலைவிகளுக்கு எப்போது கிடைக்கும் என்று எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தன. குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்காக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், நடைபாதையில் வணிகம் செய்திடும் பெண்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பணிபுரியக் கூடிய பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதியோர்கள் பலர் இதில் பயன் அடைய உள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாத சம்பளம் அதிகம் வாங்குபவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது. ஒவ்வொரு குடும்பத்தலைவியின் வங்கி கணக்கில் ரூ.1000 பணம் கிடைக்கும் வகையில் அரசு 1 கோடி பெண்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இந்த பணம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு சென்றடையும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. அது குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் குடும்ப தலைவி யார்-யாருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளை தேர்வு செய்வது, அதில் அவர்களது ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளது.
அதனை அடிப்படையாக வைத்து குடும்ப தலைவிகள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் தகுதியாக இருக்கும் பட்சத்தில் ரூ.1000 பணம் அவரவர் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
இதுகுறித்து அரசு உயர் அதிகாரி கூறுகையில், 'மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவதற்கு யார்-யார் தகுதியானவர்கள் என்பதை கண்டறிய வருமானத்தை கணக்கிடுவது முக்கியம் என்பதால் அதை அடிப்படையாக வைத்தும், ரேஷன் கார்டை அடிப்படையாக வைத்தும் பணம் வழங்கப்படும்.
எனவே அந்த விதிமுறைகளை அரசு விரைவில் வெளியிட உள்ளது. அதை படித்து பார்த்து ஒவ்வொரு குடும்ப தலைவிகளும் ரூ.1000 பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அந்த மனுக்களை பரிசீலனை செய்து அரசு பணம் ஒதுக்கும். அவை வங்கி கணக்கு மூலம் குடும்ப தலைவிகளுக்கு சென்றடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார்.
- திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார்.
காங்கயம் :
காங்கயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி சாம்பவலசு பகுதியில் திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கி பேசினார்.ஒன்றிய துணை செயலாளர் ஏ.என்.திருச்செந்தில், முன்னாள் ஊராட்சி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.
விழாவில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும்,திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார்.விழாவில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் முத்துவெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளருமான குணசேகரன், காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்ஷன், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகவேல் என்ற ஏ.எஸ்.ராமலிங்கம், முத்தூர் பேரூர் செயலாளர் ஜி.முத்துக்குமார், காங்கயம் தொகுதிக்குப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சங்கரன்கோவில் சட்டமன்ற அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழா முப்புடாதி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது
- தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்ற அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழா முப்புடாதி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், ரமேஷ், வேல்முருகன், வாசுதேவன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மகளிர் அணி துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, இலக்கிய அணி துணைச் செயலாளர் சின்னப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மதுரை மண்டல துணைச் செயலாளர் சிவானந்த், சங்கரன் கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகாராஜன், பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பொய்கை மாரியப்பன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் கணபதி, லட்சுமணன், ராமசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அந்தோணி டேனியல், டாக்டர் திலீபன், வழக்கறிஞர் காந்திகுமார், நகர் மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன், முத்துலட்சுமி, மாரிச்சாமி, ராமதுரை, நகர அவைத்தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் அய்யப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் குருசாமி, மாரிச்சாமி, அந்தோணி, ராஜ்குமார், தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டி
- வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் மற்றும் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா ஆகியோர் வழங்கினர்.
முதல் பரிசு ரூ.5 ஆயிரம் 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசு ரூ.2 ஆயிரத்திற்கான காசோலைகள் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்த நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
- குன்னூரில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை குன்னூர் நகரசெயலாளர் சரவணகுமார் செய்திருந்தார். அமைப்பு செயலாளர் கே.ஆர். அர்ஜூணன், பேரவை மாவட்டசெயலாளர் சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குன்னூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி, குன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த், வர்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்