search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "annathanam"

    • ரூ. 47 லட்ச ரூபாய் செலவில் ஸ்ரீமத் சிதம்பர சாமிகள் மடம் திருக்குளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றும் வருகின்றன.
    • மேலும் 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு தைகிருத்திகையை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) திருப்போரூர், கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடு அரங்குகளை பார்வையிட்டு, நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும், கோவிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.

    பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்போரூர் கந்தசாமி கோவில் சார்பில் கட்டப்பட்டு நீண்ட நாட்கள் திறக்கப்படாமல் இருந்த திருமண மண்டபத்தை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் திறந்து வைக்கப்பட்டது. மேலும் கோவில் அலுவலகத்திற்கு ரூ.94 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் முடிவுறும் நிலை யிலும், ரூ.6.65 கோடி செலவில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி தொடங்கப்படும் நிலையிலும், ரூ. 47 லட்ச ரூபாய் செலவில் ஸ்ரீமத் சிதம்பர சாமிகள் மடம் திருக்குளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றும் வருகின்றன.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு இறை பசியோடும், வயிற்றுப் பசியோடும் வருபவர்களின் இரண்டு பசியையும் தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் 2 கோவில்களில் செயல்படுத்தப்படட முழு நேர அன்னதானத் திட்டம் 8 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதோடு, இந்தாண்டு மேலும் 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    அதேபோல ஒருவேளை அன்னதான திட்டத்தில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 10 கோவில்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. இவ்வாண்டு மேலும் 7 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 82 ஆயிரம் பக்தர்கள் உணவருந்துகின்றனர்.

    இதற்கான ஆண்டு ஒன்றிற்கு 105 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. கோவில்களின் அன்ன தானம் மற்றும் பிரசாதத்தின் தரத்தினை உறுதிபடுத்தி ஒன்றிய அரசின் தரச்சான்றிதழ்களை இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் பெற்று உள்ளது.

    பழனியில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு 20 நாட்கள் நாளொன்றுக்கு 10,000 நபர்கள் வீதம் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானமும், பழனி கோவில் நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் 4000 மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்படுகின்றது. வடலூர் வள்ளலார் கோவிலில் ஒரு நாளைக்கு 10,000 சன்மார்க்க அன்பர்கள் என 3 நாட்களுக்கு 30,000 சன்மார்க்க அன்பர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் திருவிழா காலங்களில் 500 நபர்க ளுக்கும், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமை தோறும் 500 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. இப்படி பல்வேறு நல திட்டங்களால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்டமைத்து தருகின்ற ஒரு அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்று வரை 1,225 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது. மேலும் இந்த மாத இறுதிக்குள் 1,316 ஆக இந்த எண்ணிக்கை உயரும். அதே போல் நில மீட்பை பொறுத்த அளவில் ரூ. 5,508 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் நிலத்தை மீட்டிருக்கின்றோம்.

    தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருக பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில் ரூ. 599.50 கோடி மதிப்பீட்டில் 238 பணிகளும், அறுபடை வீடுகள் அல்லாத முருகன் கோவில்களில் ரூ.131.97 கோடி மதிப்பீட்டில் 173 பணிகளும் ஆக மொத்தம் முருகன் கோவில்களில் மட்டும் ரூ.731.47 கோடி மதிப்பீட்டில் 411 பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தாண்டு முதல் 1000 மூத்த குடிமக்களை அறுபடை வீடுகளுக்கு கட்ட ணமில்லாமல் அழைத்துச் செல்லும் ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணம் வரும் 28-ந்தேதியும், ராமேஸ் வரம் – காசி ஆன்மிகப் பய ணத்தில் இந்தாண்டு 300 நபர்கள் 5 கட்டங்களாகவும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    இந்து சமய அறநிலைத் துறையானது இப்படி பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.

    பாம்பன் சுவாமிகளின் மயூர வாகன சேவனத்தின் 100 ஆண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடி, அவரது வாழ்க்கை வரலாற்று சரித்திரத்தை மறுபதிப்பு செய்து வெளியிட்டும், 108 இசைக் கல்லூரி மாணவ, மாணவியர் சண்முக கவசம் மற்றும் குமாரஸ்தவம் ஆகியவற்றை பாராயணம் செய்தும் சிறப்பு செய்தோம். ஆனால் இன்று சிலர் சுத்தமாக இருக்கின்ற கோவில்களையே சுத்தப்படுத்துவது போல மீடியா பப்ளிசிட்டிக்காக செய்து கொண்டிருக்கின்றார்கள்.

    அதற்கு கவர்னர் துணை நின்று, சுத்தம் செய்கிறேன் என்று புறப்பட்டு இருக்கின்றார். ஏற்கனவே ஆலயங்கள் அனைத்தும் தூய்மையாக தான் பராமரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரச்சினையை நான் ஏற்கனவே அமைச்சர் என்ற முறையில் இரண்டு முறை அவர்களை அழைத்து தலைமைச் செய லகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றேன். துறையினுடைய செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும் அழைத்து பேசியிருக்கிறார்கள்.

    இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்திலும் சுமார் 8 முறை பேச்சு வார்த்தை நடத்தி இருக்கின்றோம். மனது ஒத்துப் போனால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

    இவ்வாறு அமைச்சர் பி. கே.சேகர்பாபு கூறினார்.

    இந்நிகழ்ச்சிகளின் போது, செங்கல்பட்டு சார் ஆட்சியர் வி.எஸ்.நாராயண சர்மா, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் எம்.தேவராஜ், கோவில் செயல் அலுவலர் கே.குமர வேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பரமசிவன் ஜோதிவடிவமாக இருப்பதாக சாஸ்தீரங்கள் கூறுகின்றன.
    • ஜோதி என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல. தீப ஒளியோடு கூடிய ஞான ஒளி.

    கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் நீடாடுவது மிகவும் நல்லது.

    அதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் விடியற்காலை ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம்.

    ஞாயிறுக்கு அடுத்த ஒவ்வொரு கார்த்திகை சோமவாரமும் சிவபூஜைக்கு விசேஷமாக சொல்லப் பட்டிருக்கிறது.

    எப்படி சிவராத்திரி இரவு பூஜை விசேஷமோ, அப்படி கார்த்திகை மாதம் பகல் நாலு ஜாமமும் சிவ பூஜைக்கு விசேஷமாகும்.

    கார்த்திகை மாதம் அமாவாசை சோமவாரமும் சேர்ந்தால் அன்று அரசமர பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    அரச மர பிரதட்சணத்தின் மூலம் மும்மூர்த்திகளை பிரதட்சிணம் செய்த பலன் உண்டு.

    இதையேதான் பகவானும் பகவத் கீதையில் மரங்களுள் அரசமரமாக நான் இருக்கிறேன் என்றார்.

    கார்த்திகை பௌர்ணமியில் அன்னதானம் மிக விசேஷமாக சொல்லப்படுகிறது.

    பரமசிவன் ஜோதிவடிவமாக இருப்பதாக சாஸ்தீரங்கள் கூறுகின்றன.

    பஞ்ச பூத தலங்களுள் ஜோதி தலமாக திருவண்ணாமலை தலம் திகழ்கிறது.

    ஜோதி என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல. தீபம் மாத்திரம் அல்ல, தீப ஒளியோடு கூடிய ஞான ஒளி.

    இப்படிப்பட்ட தலம் திருவண்ணாமலை.

    திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் மலை மேல், தீபம் ஏற்றப்பட்டு ஜோதி வடிவமாக இறைவன் உள்ளதாக நாமெல்லாம் அறிகிறோம்.

    ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்பட வேண்டும்.

    புழுக்களுக்கும், கொசுக்களுக்கும், வண்டுகளுக்கும், மரங்களுக்கும், ஜலத்தில் வசிக்கக்கூடியவைகளுக்கும்

    ஆகாசத்தில் வசிக்கக்கூடியவைகளுக்கும், நலல கதி கிடைக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்து,

    சிவ பூஜை முடிந்த பிறகு, குங்கிலியம் போட்டு ப்ரார்த்தனை செய்வார்கள்.

    ஒவ்வொரு கோயிலிலும் பழமை எல்லாம் கழித்து பாபங்களை பொசுக்கும் நினைவாகவும், நல்ல சொர்க்க

    லோகத்திற்கு செல்லும் நினைவாகவும் சொக்கபானை (ஸ்வர்க்கபானை) கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ஆகவே கார்த்திகை மாதம் புனித நீராடல், தானம், பூஜை, பிரார்த்தனை, ஞானம் இத்தனையும் வருகிறது.

    இதனால் தான் மற்ற மாதங்களை விட கார்த்திகை மாதம் விசேஷமான மாதமாகிறது.

    • தானத்தில் சிறந்தது அன்ன தானம். அத்தானத்திற்கு சமமான தானம் மூவுலகிலும் இல்லை.
    • பவுர்ணமி தோறும் எதை நினைத்து அன்னதானம் செய்தாலும், அவை நல்ல பயனைத் தரும்.

    தானத்தில் சிறந்தது அன்ன தானம். அத்தானத்திற்கு சமமான தானம் மூவுலகிலும் இல்லை.

    அன்னம் கொடுப்பவர் உயிரையே கொடுப்பவர் ஆகிறார்.

    தென்னாட்டில் முன்னொரு காலத்தில் சிங்கத்வஜன் என்ற அரசன் இருந்தான்.

    அவன் அன்னதானம் தவிர மற்ற தானங்கள் யாவையும் எக்காலமும் செய்து வந்தான்.

    அவன் இறந்த பிறகு இந்திரலோகம் சென்றான். அரசனின் குமாரன் சித்திரகேது அரசபட்டம் சூட்டப் பெற்றான்.

    நாரதர் அவனிடம், உன் தந்தை எல்லாவித தானங்களும் செய்திருந்த போதிலும் அன்னதானம் செய்யாததினால் அவர் மேலோகம் சென்றபோது அமிர்தம் கிடைக்கவில்லை.

    ஆகவே உனக்கும் உன் தந்தைக்கும் அமிர்தம் கிடைக்கும் பொருட்டு நீ அன்னதானம் செய்வாயாக என அறிவுறுத்தினார்.

    அரசனும் அதைக் கேட்டு அன்னதானம் செய்யத் தீர்மானித்தான்.

    அரசன் நாரதரை நோக்கி, "இப்பூவுலகில் எவ்விடத்தில் எந்த நாளில் அன்னதானம் செய்தால் பிற இடங்களில் செய்வதை விட அதிகப்பலன் அடையலாம்" என்று கேட்டான்.

    அதற்கு நாரதர் மற்ற இடங்களில் ஒரு லட்சம் பேருக்கு அன்னமளிப்பது காசியில் ஒருவருக்கு அன்னமளிப்பதற்கு ஈடாகும்.

    காசியில் கோடி பேருக்கு அன்னமளிப்பது திருவண்ணாமலையில் ஒருவருக்கு அன்னமளிப்பதற்கு சமமாகும்.

    அப்பேற்றை பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் அளவிட முடியாது.

    திருவண்ணாமலையில் செய்யும் அன்னதானத்திற்கு சமமான பலன் வேறெங்கும் கிடையாது என்று கூறினார்.

    சித்ரகேது அண்ணாமலையாரை ஆராதித்து தினமும் அன்ன தானம் செய்து வழிபட்டான்.

    இவன் அன்னதானம் ஆரம்பித்த உடனே இந்திரன் கொடுத்த அமிர்தத்தை அவன் தந்தை அருந்தி சிவலோகம் அடைந்தார்.

    எனவே நீங்கள் ஒவ்வொரு பவுர்ணமி தோறும் எதை நினைத்து அன்னதானம் செய்தாலும், அவை நல்ல பயனைத் தரும்.

    கல்வி, திருமணம், புத்திரம், வேலை, பதவி உயர்வு, அரசியல், வெற்றி, பிறந்தநாள், திருமண நாள், முன்னோர்கள் திதி, ஆரோக்கியம் போன்ற எல்லா வகையான பயனை பெற தாங்களால் இயன்ற சிறுதொகையை அன்னதானத்திற்கு அளிக்கலாம்.

    • போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு வருஷாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போத்தி விநாயகர் கோவில் தர்மகர்த்தாவாக முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.

    அன்னதானம்

    இந்நிலையில் போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தி விநாயகருக்கு வருஷாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட சமபந்தி அன்னதான விருந்தை சாமி தரிசனம் செய்து வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    விழாவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, செயலாளர்கள் செல்வராஜ், செல்வகுமார், பொருளாளர் வேல்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செல்லப்பாண்டி, ரத்தினசாமி, பேச்சிமுத்து, ஜீவானந்தம், ஆழ்வார்ராஜ், மந்திரமூர்த்தி, இளஞ்சூரியன், ராஜ்குமார், முருகேசன், ராம்குமார், சேகர், மணி, கணேஷ், சண்முகசுந்தரம், அசோக் பெரியசாமி, சரவணன், தங்கசந்திரன், சித்திரைசெல்வன், பெரியசாமி, மாணிக்கம், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநில பேச்சாளர் சரத்பாலா, விவசாய அணி தங்கராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜாமணி, முத்துச்செல்வம், செல்வகுமார், ரவீந்திரன், செந்தில்குமார், மற்றும் கருணா, பிரபாகர், மணி, ஜோஸ்பர், லிங்கராஜா, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    • அன்னதானம் ஒருவரை உச்ச நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும்.
    • ஆடிப்பெருக்கன்று காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    ஆடி 18-ம் நாள் புது சக்தி தரும் நாளாக மாறுவதாக கணித்துள்ளனர். அதாவது அன்று புத்துணர்ச்சி பன் மடங்கு பெருகும். எனவே எந்த செயலை செய்தாலும் அது பெருகும் என்பது ஐதீகம்.

    புண்ணியத்தை அதிகரிக்க செய்யும் ஆடி பெருக்கு தினத்தன்று அன்னதானம் செய்வது குடும்பத்தை மேம்படுத்தி செழிக்க வைக்கும். பொதுவாகவே எந்த ஒரு தானத்துக்கும் உரிய பலன் கிடைக்கும்.

    அதிலும் அன்னதானத்துக்கு ஈடு, இணையே கிடையாது. காக்காவுக்கு சாதம் வைப்பதில் இருந்து வயிறு நிறைய உணவு வழங்குவது வரை அன்னதானம் ஒருவரை உச்ச நிலைக்கு நிச்சயம் கொண்டு செல்லும்.

    இத்தகைய அன்னதானத்தை, இரட்டிப்பு பலன் தரும் ஆடி பெருக்கு தினத்தன்று செய்தால் வாழ்வு மங்களகரமாக மாறும். ஆடிப்பெருக்கு தினத்தன்று எந்த நட்சத்திரம், திதி அமைகிறதோ, அதற்கு ஏற்பவும் நமக்கு பலன்கள் கிடைக்கும்.

    சதயம் நட்சத்திரம் என்பது முழுமையான ராகு பகவான் நட்சத்திரமாகும். 7 மணிக்கு பிறகு தொடங்கும் பூரட்டாதி நட்சத்திரம் குருவுக்குரிய நட்சத்திரமாகும்.

    தனி ஆலயத்தில் காவிரி தாய்

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் திருச்சேறை என்ற ஊர் உள்ளது. இங்கு சாரப்புட்கரணி என்ற குளத்தின் தென்மேற்கு கரையில் காவிரி தாய்க்கு தனிக்கோவில் உள்ளது. இங்கு காவிரி தாய் தனது மடியில் கிருஷ்ணனை வைத்தபடி காட்சி தருகிறாள். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    கும்பகோணம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் மங்களாம்பிகை கோவில் உள்ளது. இங்கு உள் பிரகாரத்தில் காவிரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ஆடிப்பெருக்கன்று காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். திருமணம் ஆன புதுமண தம்பதிகள் தாலிச்சரடை வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வர். வெற்றிலை, பாக்கு, பூ மாலை ஆகியவற்றை தண்ணீரில் விடுவார்கள்.

    • வழிபாடு முடிந்தபின் அன்னதானம் செய்ய வேண்டும்.
    • வேதம் முதலிய பயிற்சியும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.

    பிரதோஷ வழிபாட்டின் பயனாக வறுமை, பயம், மரண வேதனை முதலான பிரச்சினைகள் நீங்கும். அதுமட்டுமின்றி...

    1. இன்பம் கிடைக்கும்.

    2. மலடு நீங்கி மகப்பேறு பெறுவர்.

    3. கடன் நீங்கித் தனம் நிறையப் பெறுவர்.

    4. வறுமை ஒழியும்.

    5. நோய் நீங்கி நலம் பெறுவர்.

    6. அறியாமை நீங்கும்.

    7. பாவம் தொலைந்து புண்ணியம் பெறுவார்கள்.

    8. தடைகள் நீங்கித் திருமணம் நடைபெறும்.

    9. சகல தோஷங்களும் நீங்கிச் சுகம் பெறுவர்.

    10. அனைத்துக்கும் மேலாக முக்தி அடையவர்.

    நந்தியெம் பெருமான் தன்னை நாடொறும் வணங்கு வோர்க்கு

    புந்தியில் ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்

    குலமுறை தழைத்தே ஓங்கும் குணம்நிறை மக்கள் சேர்வர்

    சிந்தையில் அமைதி தோன்றும் சிறப்புறும் வாழ்வு தானே!

    பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாதவை

    ஜீரணமாகாமல் விஷமாக மாறுவதால் சாப்பிடுதலும் யோகத்தை பேணுவதால் உறக்கமும், நல்லொழுக்கம் இயலாததால் பிரயாணமும், உடலை நிலைப்படுத்த முடியாததால் எண்ணைக் குளியலும், சிவனை, விஷ்ணு வணங்கும் நேரமாதலால் விஷ்ணுவைக் கண்டு வணங்குதலும், ஆன்மஹானம் வேண்டுவதால் பஞ்சாட்சரம் அல்லாத மற்ற விருப்பம் வேண்டும் (காம்ய) ஜபம் செய்தலும், அகத்தூய்மை வேண்டுவதால் தவம் செய்தலும், ஒரு நிலைப்பட்ட மனம் தேவையாதலால் வேதம் முதலிய பயிற்சியும் பிரதோஷ காலத்தில் செய்யக்கூடாது.

    பிரதோஷ நோன்பு

    பிரதோஷ நோன்பு இருப்பது மிகுந்த பலன் தரும். கஷ்ட நஷ்டங்கள் உடனே தீரும். அன்று அதிகாலையில் குளித்து, தூய உடை அணிந்து, நோன்பு தொடங்க வேண்டும். பகல் முழுக்க எதுவும் சாப்பிடக் கூடாது. பசி தாங்காதவர்கள் பால், பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

    மாலையில் பிரதோஷம் தொடங்கிய பின்பு சிவபூஜை பண்ண வேண்டும். வெல்லப் பொங்கல் படைக்க வேண்டும். நெய் விளக்கு ஏற்ற வேண்டும். வில்வ இலையால் அர்ச்சனை பண்ண வேண்டும்.

    வழிபாடு முடிந்தபின், இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பின்தான் சாப்பிட வேண்டும். அன்னதானம் செய்யாவிட்டால் நோன்பு இருந்தும் பலன் இல்லை. சிவனே பிச்சாண்டிதானே! மாலையில் கோவிலுக்கு போய் வழிபாடு செய்வதும் நல்லது. அப்போது வெல்லப்பொங்கல் செய்து எடுத்து போக வேண்டும். முடியாவிட்டால் கார அரிசியில் வெல்லம் கலந்து நந்திக்கு படைக்க வேண்டும். அன்னதானம் செய்வது முக்கியம்.

    • தூத்துக்குடி -பாளை நெடுஞ்சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி -பாளை நெடுஞ்சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கோவிலுக்கு வருகை தந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அம்மன் தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, கோவில் நிர்வாக கமிட்டியை சேர்ந்த பொன்ராஜ், பாண்டியராஜன், பொன்இசக்கி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வென்னிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மாசி பெருந்திரு விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
    • அன்னதான நிகழ்ச்சியை ஆர்.கே. காளிதாசன் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜ் நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வென்னிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மாசி பெருந்திரு விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜைகளும், சப்பர பவுனியும் நடை பெற்று வந்தது. 10-ம் திருவிழாவான நேற்று நாடார் சமுதாயம் சார்பில் நடத்தப்பட்டது.

    காலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராம பகுதிகளான ஆவுடை யானூர், திப்பனம்பட்டி, அரியப்பபுரம், கல்லூரணி, குறும்பலாபேரி, கீழப்பாவூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும் பறவை காவடிகள் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

    முன்னதாக தட்சணமாற நாடார் சங்க தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளரு மான ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து திரு விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை ஆர்.கே. காளிதாசன் தொடங்கி வைத்தார். அவருடன் நிர்வாகிகளான நாராயண சிங்கம், கண்ணன், முருகே சன், கண்ணன்மோகன், பாலசுப்ர மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் பா.சிவந்தி ஆதித்த னார் மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி, செய லாளர் பரமசிவம், மன்ற துணைத் தலைவர் ஈஸ்வர பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பால் கண்ணன், தங்கதுரை, மேகநாத பிரபு, செல்வ குமார், காமராஜ், வெண்ணி குமார், முருகன், முத்துக் குமார்,சுதன், சண்முகராஜ், லிங்கம், தர்மராஜ், மகேஷ் மற்றும் பா.சிவந்தி ஆதித்தனார் ஸ்போர்ட்ஸ் கிளப் கால்பந்து அணி வீரர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 17-வது மாத அன்னதான நிகழ்ச்சி கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில் உள்ள காளியம்மன் கோவிலில் நடைபெற்றது.
    • கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன், குழந்தை பேரு மருத்துவ நிபுணர் பூவேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் உலக மக்கள் நன்மை வேண்டியும், தைமாத கடைசி ஞாயிற்றுக்கிழ மையை முன்னிட்டும், ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 17-வது மாத அன்னதான நிகழ்ச்சி கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில் உள்ள காளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தொழிலதி பரும், கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவரும், நகராட்சி உறுப்பினருமான முத்துராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் நகராட்சி உறுப்பினர் மாரிமுத்து வரவேற்று பேசினார். நகர்மன்ற உறுப்பினர் மாரியம்மாள் சுரேஷ், தொழிலதிபர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், குழந்தை பேரு மருத்துவ நிபுணர் பூவேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இதில் கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் ஸ்ரீ ராக வேந்திரா சேவா அறக்கட்ட ளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் லவராஜா, பாலமுருகன், மாரிமுத்து, சண்முகசுந்தரம், செல்வம், சுப்பிரமணியன், முத்து மாரியப்பன், பொன் பாண்டியன், நடராஜன், மிலிட்டரி சந்திரன், குமார், சுரேஷ், தொழிலதிபர் தனபால், தங்கராஜ், காளிராஜ் மற்றும் முருகன் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் பாத யாத்திரை குழு சார்பாக 1000 நபர்களுக்கு அன்னை சிவகாமி மண்டபத்தில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விநாயகர் கோவிலில் பஜனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தென்காசி:

    வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் ராமநாதபுரத்தில் பழனி முருகன் பாதயாத்திரை குழு மற்றும் திருச்செந்தூர் பாத யாத்திரை குழு சார்பாக 1000 நபர்களுக்கு அன்னை சிவகாமி மண்டபத்தில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு ஆனந்தன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். விநாயகர் கோவிலில் பஜனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பஜனை நிகழ்ச்சியில் பாரதமாதா படங்களை பொதுமக்களுக்கு வழங்கி ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.

    இதனைத் தொடர்ந்து சிவகிரி அருகே தென்மலையில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சோழராஜன், ஒன்றிய பொருளாளர் மாடசாமி, ஆசிரியர் கிருஷ்ணசாமி, சங்கர நாராயணன், மாவட்ட இளைஞரணி பொதுச்செ யலாளர். நீராத்துலிங்கம், தங்கராஜ், சுமன் மற்றும் ஊர் நாட்டாமைகள், பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை ஆரப்பாளையம் வைகை கரை சாலையில் அன்னதானம் நடத்த எப்படி அனுமதித்தார்கள் என்று பொதுமக்கள் வினா எழுப்பி உள்ளனர்.
    • இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    மதுரை

    தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியாக விளங்கும் மதுரை மாநகராட்சியில் மத்திய-மாநில அரசுகள் வழங்கும் நிதி மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1100 கோடி ரூபாய் மதிப்பில் பாலங்கள் அமைத்தல், பஸ் நிலையங்களை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    அதில் மதுரை நகரில் ஓடும் வைகையாற்றின் இருபுறமும் ரூ. 380 கோடியில் நவீன சாலை அமைக்கும் பணியும் ஒன்று. இந்த திட்டத்தில் 80 சதவீத பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளன. அதனால் நகர் பகுதியில் இருந்து 4 வழிச்சாலைக்கு எளிதாக சென்றடையலாம் என நினைத்தது நடக்கவில்லை.

    பழைய குயவர்பாளையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஆரப்பாளையம் பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வைகை கரை பகுதிகளிலும் இத்திட்டத்தின் கீழ் சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் பேச்சியம்மன் படித்துறை, ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு சாலை பணிகள் முழுமையடைய வில்லை.

    மேற்கண்ட பகுதிகளில் ஒர்க்‌ஷாப்கள் அதிகம் என்பதால் அங்கு பழுதுக்கு வரும் வாகனங்களை இந்த சாலையில் நிறுத்திச் செல்கின்றனர். இதனால் வாகனம் நிறுத்துமிடமாக வைகை கரை சாலை மாறி வருகிறது. மேலும் அந்தப்பகு தியைச் சேர்ந்த சிலர் மாட்டு கொட்டகையாகவும் மாற்றியுள்ளனர். இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் போக்குவரத்து தடை பட்டுள்ளது.

    இதுபோன்ற இடையூறுக ளால் இந்த திட்டம் முழுமையாக முடியாமல் ஆங்காங்கே பாதியில் நிற்கிறது. இந்த சாலை திட்டத்திற்கான நோக்கம் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் ஆரப்பாளையம் அருகே உள்ள வைகை தென்கரை சாலையில் அன்னதான பந்தல் போட்ட வினோதம் நடந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று அன்னதானம் நடைபெற்றது. இதற்காக யாருடைய அனுமதியும் இல்லாமல் பலகோடி மதிப்பில் போடப்பட்ட சாலையை முழுமையாக ஆக்கிரமித்து ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    மதுரையில் ஹெல்மெட் அணியாமல் சாலையில் செல்பவர்களை பாய்ந்து பிடித்து அபராதம் வசூலிக்கும் போலீசார் சாலை விதிகளை மீறிவிட்டதாக சாதாரண மக்களிடம் ஆயிரக்கணக்கில் அபராதம் வசூலித்து வருகின்றனர். ஆனால் சாலையையே ஆக்கிரமித்து அன்னதானம் நடத்த எப்படி அனுமதித்தார்கள் என்று பொதுமக்கள் வினா எழுப்பி உள்ளனர்.

    போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ரூ. 380 கோடியில் போடப்பட்ட வைகை கரை சாலை திட்டம் கேள்விக் குறியாகி உள்ளது.

    இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், நகரில் உள்ள கோவில்களில் திருவிழா நடக்கும் போது அந்தந்த பகுதிகளில் உள்ள கட்சி மற்றும் பதவிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைக்கின்றனர். இதனால் விழா நடத்துவோர் விதிகளை மீறலாம் என்ற தொணியில் இஷ்டத்திற்கு சாலைகளை மறித்து மேடை அமைப்பது, மின் கம்பத்தில் மின்சாரம் திருடுவது, சாலைகளை தோண்டி கட்சிக்கொடிகளை நடுவது போன்ற செயல்கள் நடந்து வருகிறது. இத னால் அதிகாரிகளும், போலீசாரும் எதுவும் செய்யமுடியாமல் மவுனம் காத்து வருகின்றனர். யாரும் கேட்காததால் இதுபோன்ற விதிமீறல்கள் மதுரையில் தொடர்ந்து நடந்து வருவது வேதனைக்குரியது என்றனர்.

    சாலையில் பந்தல் அமைக்கப்பட்ட பகுதி மேயர் இந்திராணியின் சொந்த வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    • நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி 4 ரதவீதிகளிலும் சிவனடியார்கள் சங்கொலி எழுப்பி சென்றனர்.
    • குழந்தைகளுக்கு பிஸ்கட், சுத்தமான குடிநீரும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி இன்று 4 ரதவீதிகளிலும் சிவனடியார்கள் சங்கொலி எழுப்பி சென்றனர். ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசகம் முற்றோதினர்.

    பாராயணங்களும் பாடினர். சிறுவர்கள் கூட்டமாக கூடி இசை வாத்தியங்கள் வாசித்தனர்.

    விழாவை முன்னிட்டு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    குழந்தைகளுக்கு பிஸ்கட், சுத்தமான குடிநீரும் வழங்கப்பட்டது. இதுதவிர ரதவீதிகளுக்கு நுழையும் பகுதிகளில் ஏராளமான இடங்களில் சர்பத், பானக்காரம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    ×