search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Appointed"

    • கோவை மண்டல செயலாளராக பிரின்ஸ் சுந்தர் நியமிக்கப்பட்டார்.
    • கோவை மாவட்டம், ஒன்றியம், பகுதிகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை,

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல செயலாளராக பிரின்ஸ் சுந்தரை கட்சியின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் நியமித்துள்ளனர்.மேலும் கோவை மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளனர்.

    கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வருமாறு:-

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல செயலாளராக பிரின்ஸ் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கோவை மாவட்ட தலைவராக ஜெயராஜ், மாவட்ட செயலாளராக வில்லியம் ஜோஸ், வடக்கு மாவட்ட செயலாளராக ரங்கசாமி, தெற்கு மாவட்ட தலைவராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் சிறு பான்மை பிரிவு மாவட்ட செயலாளராக அக்பர் ெஷரீப், தகவல் தொழில் நுட்ப மாவட்ட செயலாளராக நித்யானந்தன், மாவட்ட இணை செயலாளராக சண்முகம், மாவட்ட பொருளாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுபோன்று கோவை மாவட்டம், ஒன்றியம், பகுதிகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரின்ஸ் சுந்தருக்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    • பக்கத்து ஊரை சேர்ந்த செயலர் பொறுப்பு செயலராக பணியாற்றுகிறார்.
    • பல வேலைகள் நிலுவையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கூக்கல்தொரை ஊராட்சி. இந்த ஊராட்சியில் உயில்ஹட்டி, கூக்கல், கூக்கல்தொரை ஹட்டி, ஜீவா நகர், மசக்கல், தீனட்டி, பாரதி நகர் மற்றும் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன.

    கூக்கல்தொரை ஊராட்சிக்கு என்று தனியாக செயலர் இல்லை. பக்கத்து ஊரை சேர்ந்த செயலர் பொறுப்பு செயலராக பணியாற்றுகிறார். அவர் 2 ஊராட்சிகளையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் தங்கள் பகுதியில் அனைத்தும் வேலைகளும் தடைபடுவதாகவும், பல வேலைகள் நிலுவையில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே கூக்கல்தொரை ஊராட்சி அலுவலகத்திற்கு தனியாக செயலர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தற்போது உள்ள செயல் அலுவலர் 2 பேரூராட்சிகளில் பணியாற்றுகிறார்.
    • பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் உலிக்கல் பேரூராட்சியில் பல ஆண்டுகளாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் மக்கள் பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

    மேலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது உள்ள செயல் அலுவலர் 2 பேரூராட்சிகளில் பணியாற்றுகிறார். அவர் பெரும்பாலும் கீழ் குந்தா அலுவலகத்திலேயே உள்ளதால் பொதுமக்கள் தங்களது குறைகளை செயல் அலுவலரிடம் கூற 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    எனவே பொதுமக்களின் பணிகளை விரைந்து முடிக்கவும், அவர்களுக்கு உரிய பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கவும் உடனடியாக உலிக்கல் பேரூராட்சி பகுதிக்கு நிரந்தர செயல் அலுவலர் பணிமடுத்தப்பட வேண்டும்.

    காலதாமதம் ஏற்பட்டால் அ.தி.மு.க சார்பாக 12-வது வார்டு உறுப்பினர் பாஸ்கரன் தலைமையில் பல கட்ட போராட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வார்டு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

    • கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
    • முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.

    அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய தளபதியாக லிசா பிரான்செட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். அவரது நியமனத்துக்கு சென்ட்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட்டால் அமெரிக்க ராணுவ தளபதியாக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.

    தற்போது கடற்படையின் துணை தலைவராக உள்ள லிசா, பணியாளர்களின் தலைமையில் முதல் பெண் உறுப்பினர் ஆவார். கடல் மற்றும் கரையோர அனுபவத்தின் அடிப்படையில் லிசா பிரான்செட்டியை கடற்படை தளபதியாக அதிபர் ஜோபைடன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு
    • 5 அறங்காவலர்கள் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கோவை,

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதற்காக பலர் விண்ணப்பித்து இருந்தனர். அந்த விண்ணப்பங்களை மாநிலகுழு ஆய்வுசெய்து, இதற்கான பரிந்துரை பட்டியலை இந்து சமய அறிநிலைய ஆணையருக்கு அனுப்பி வைத்து உள்ளது. அதன்படி வடவள்ளி ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்து மகேஷ்குமார், நஞ்சுண்டாபுரம் ஜெயக்குமார், சங்கனூர் பிரேம்குமார், சொக்கம்புதூர் கனகராஜ், தொண்டாமுத்தூர் விராலியூரை சேர்ந்த சுகன்யா ராசரத்தினம் ஆகிய 5 பேர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பரம்பரை சாராத அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் 30 நாட்களுக்குள் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் அடுத்த 2 ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    விழாவில் வாசிம்ராஜாவுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    ஊட்டி,

    குன்னூர் நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விளையாட்டு மேம்பாட்டு துறை மாநில துணை செயலாளராக நியமிக்க பட்டிருக்கும் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு. வாசிம் ராஜாவுக்கு குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி குன்னூர் நகர தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.

    விழாவில் வாசிம்ராஜாவுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, பொது குழு உறுப்பினர் செல்வம் நகர துணை செயலாளர் வினோத், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகிர்கான், மன்சூர், குமரேசன், இளைஞர் அணி பத்மநாபன், வெலிங்டன் நகரிய செயலாளர் மார்டின், நகர பொருளாளர் ஜெகநாதராவ், தி.மு.க நிர்வாகிகள் கோவர்தணன், மணிஅல்போன்ஸ் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

    • மதுரை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பேன்.
    • புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் நியமிக்கப் பட்டுள்ளார். அவர் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் பொறுப்பேற்றுக் கொண் டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து நரேந்திரன் நாயர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    பேசும் போது, மதுரை மாநகரில் மக்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்று வேன், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல், மற்றும் சித்திரை திரு விழாவை கொண்டாட மாநகர காவல்துறை பாதுகாப்பு அளிக்கும், மாநகரில் ரவுடிசம், கஞ்சா குற்றச்சம்பவங்களை முழுமையாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தால் செயல்படுத்தபடும் அனைத்து திட்டங்களும் மேம்படுத்தப்பட்டு செயல் படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் நாயர், 2005-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் ஈரோடு, கமுதி, வந்தவாசி, சிதம்பரம் ஆகிய இடங்களில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி, 2009-ம் ஆண்டு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

    எஸ்.பி.சி.ஐ.டி., எஸ்.பி.யாக தூத்துக்குடியிலும், எஸ்.பி.யாக திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்டங்க ளிலும் , கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் துணை ஆணையராகவும், ஆளு நரின் பாதுகாப்புப்பிரிவு கூடுதல் துணை ஆணையராகவும் , கேரளா மாநிலத்தில் ஐ.பி.பிரிவு எஸ்.பி.யாகவும் நரேந்திரன் நாயர் பணியாற்றியுள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற நரேந்திரன் நாயர் சென்னை தலைமையிட டி.ஐ.ஜி. பணியாற்றிய பின்னர், கோவை சரக டி.ஐ.ஜி.யாகவும் பணி புரிந்தார். அதன் பின்பு சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்து வந்தார்.

    • மாவட்ட செயலாளராக எ.ம். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புறநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தாராபுரம் : 

    அ.தி.மு.க., ஓபிஎஸ் அணியில் தாராபுரத்தை சேர்ந்த டி. டி. காமராஜ் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம், உடுமலை மடத்துக்குளம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இவர் பொறுப்பளாராக செயல்படுவார். மற்றொரு மாவட்ட செயலாளராக எ.ம். சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இவர் மாவட்ட செயலாளராக செயல்படுவார் என அ.தி.மு.க. ஓபிஎஸ். அணியின் தலைமை அறிவித்து உள்ளது. புறநகர் மாவட்ட செயலாளர் பதவி ஏற்று கொண்ட பின் டி.டி. காமராஜ் தாராபுரம் வந்தபோது புறநகர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி முன்பு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண்கள் உள்பட 79 பேரை பணி நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • கோவில் நிர்வாகம் சார்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது.

    மதுரை

    உலகப்புகழ் பெற்ற திருத்தலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் 6 பெண்கள் உள்பட 79 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

    இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான படிவத்தை www.tenders.tn.gov.in, www.tnhrce.gov.in இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், 5 கோபுர வாயில்களில் உள்ள பொருட்கள் பாதுகாப்பு வைப்பறை, அம்மன்-சுவாமி சன்னதி பிரகாரங்கள், தெற்கு நுழைவு வாயில் விபூதி விநாயகர் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம், 4 ஆடி வீதிகள், மீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எல்லீஸ் நகர் வாகன பாதுகாப்பு மையம், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், கொந்தகை, தெய்வநாயகப் பெருமாள் கோவில், செல்லூர் செல்லத்தம்மன் கோவில், திருவாப்புடையார் ஆலயம், கோச்சடை மற்றும் விளாங்குடி தோட்டங்கள், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், ஆமூர் அய்யம்பொழில் ஈஸ்வரர் கோவில், மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதி வாகன பாதுகாப்பகம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தட்டச்சர்- கணினி பணியாளர், டிராக்டர் டிரைவர், பேட்டரி கார்- ஆம்புலன்ஸ் டிரைவர், பிளம்பர், குங்குமம் தயாரிப்பு மிஷின்களை இயக்க தெரிந்த மெஷினிஷ்ட், மின் உதவியாளர், கூடல் செங்குளம் பண்ணை, தெப்பக்குளம் கல் தூண் பாதுகாக்கும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம், தெப்பக்குளம் பெரிய கிணறு, நாகமலை புதுக்கோட்டை சித்தி விநாயகர் கோவில், மீனாட்சி தியேட்டர் ஆகிய இடங்களில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #MariazeenaJohnson #SathyabamaUniversity
    சென்னை:

    சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றுள்ளார்.

    கல்வி மற்றும் சமூக சேவைகளில் முழு ஈடுபாடு கொண்டவர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் . மத்திய பெண்கள் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்தால் 2016-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள சிறந்த 100 பெண்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு ஜனாதிபதி விருந்து அளித்து கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சத்யபாமா பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தர சான்றிதழ் அமைப்பின் (என்.ஏ.ஏ.சி.) சிறந்த பல்கலைக்கழகத்துக்கான ஏ கிரேடு சான்றிதழ் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் 37-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதிய வேந்தராக பதவி ஏற்ற டாக்டர் மரியஜீனா ஜான்சனுக்கு பல்கலைக்கழக தலைவர் மேரி ஜான்சன் வாழ்த்து தெரிவித்தார். #MariazeenaJohnson #SathyabamaUniversity

    அரசு மருத்துவமனைகளில் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 345 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். #MinisterVijayaBhaskar
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி அருகே சீறிப்பாயும் காளையை வீரர் அடக்குவது போன்ற தோற்றத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தத்ரூபமாக உலோக சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

    இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து பேசினார். முன்னதாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில், அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 13 புதிய அதிநவீன அரசு பஸ்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகம் மற்றும் செவிலியர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கி பேசினார்.

    தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 35 அடி உயரம் கொண்ட நினைவு சின்னத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு விரைவில் 2 ஆயிரத்து 345 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதேபோல் சிசு பராமரிப்பு மையங்களில் 640 சிறப்பு செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். தமிழகத்திலேயே முதல்முறையாக ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற சிலை புதுக்கோட்டையில் மட்டும்தான் அமைக் கப்பட்டு உள்ளது, என்றார். #MinisterVijayaBhaskar
    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #BCCI #Ombudsman #DKJain
    புதுடெல்லி:

    டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்தது சர்ச்சையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு விசாரணை முடியும் வரை இருவரும் தொடர்ந்து விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. இதற்கிடையில் இருவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு என்று விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நிர்வாக கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை அதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கிரிக்கெட் வாரியத்துக்கு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    மேலும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் வினோத்ராய், டயானா எடுல்ஜி ஆகியோர் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை வெளிப்படையாக பேசி வருவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இதுபோல் மீண்டும் நடந்து கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் நிர்வாக கமிட்டியின் 3-வது உறுப்பினராக ராணுவத்தில் பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் ரவி தோட்ஜ் நியமிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.
    ×