search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arable land"

    • குப்பை, கூளங்களும் நிரம்பி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
    • பயிர்கள் நாசமானதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    நாங்குநேரியான் கால்வாயில் இருந்து படலையார்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறும் மறுகால் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.

    இதனைதொடர்ந்து மறுகால் புதர் மண்டி கிடக்கிறது. குப்பை, கூளங்களும் நிரம்பி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மறுகாலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் களக்காடு பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் படலையார்குளம் நிரம்பியது. குளத்தின் மறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உபரிநீர் வெளியேற வழியின்றி அருகில் உள்ள வட்டமொழி பத்து, மாணிக்கம்குளம் பத்து, மாவநேரி பத்து விளைநிலங்களுக்குள் குளத்து நீர் புகுந்தது.

    இதனால் அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல், வாழைகள் நீரில் மூழ்கியது. 150 ஏக்கர் பரப்பளவிலான நெல், வாழைகள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். பயிர்கள் நாசமானதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே படலையார்குளத்தின் மறுகாலை போர்க்கால அடிப்படையில் தூர்வாரவும், தண்ணீர் வெளியேறவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை விளை நிலங்களாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.
    • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் ரூ.522.9 லட்சம் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக செலவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 941 ஏக்கரும், நடப்பு ஆண்டில் 308 ஏக்கரும் தரிசு நிலங்கள் கண்டறியப் பட்டு அவற்றை விளை நிலங்களாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.

    ஈரோடு வட்டாரம் மேட்டுநாசுவன்பாளையம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நிலத்தொகுப்பில், புதர்களை அகற்றும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

    தமிழக அரசால் வரும் 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும், ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட வேளாண் துறையின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் என்ற மாபெரும் புதிய திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் 2021-22-ம் ஆண்டு 60 கிராம ஊராட்சிகளும், 2022-23-ம் ஆண்டு 44 கிராம ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வள ஆதார துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மற்றும் எரிசக்தி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சி களாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    2021-22-ம் ஆண்டு 31 தரிசு நிலத்தொகுப்புகளில் நிலநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 11 கிராம பஞ்சாயத்துகளில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு 9 இடங்களில் இலவச மின்சார இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பிக்கபட்டுள்ளது.

    2022-23-ம் ஆண்டு 20 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டு 13 இடங்களில் நிலநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை மூலம் இவ்வாறான தொகுப்பு களில் முட்செடிகள் மற்றும் புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டு சாகுபடி செய்வதற்கு உகந்த நிலமாக தரிசு நிலங்கள் மாற்றம் செய்யப்படுகிறது.

    பின்னர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தரிசு நில தொகுப்புகளில் நுண்ணீர் பாசனம் அமைக்கப் படுகிறது. தோட்டக்கலைப் பயிர்களில் நிலையான வருமானம் தரக்கூடிய பழப்பயிர்கள், காய்கறி தோட்டம் மற்றும் மரவகைப் பயிர்கள் தொகுப்பு விவசா யிகளின் பங்கேற்புடன் சாகுபடி செய்ய ஒருங்கி ணைக்கப்பட்டுள்ளது.

    வேளாண் பொறியியல் துறை மூலம் 10 எச்.பி மின்மோட்டார் பொருத்தப்பட்டு ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் இறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இவையல்லாது கலைஞரின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இலவச தென்னங்கன்றுகள், வரப்பு பயிராக உளுந்து சாகுபடிக்கு மானியம், கைத்தெளிப்பான், விசைத் தெளிப்பான், தார்பாலின் ஆகியவையும், தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டு தோட்டம் அமைக்க தளைகள் விநியோகம் நெகிழி கூடைகள், பழச்செடிகள் ஆகியவை மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 100 சத மானியத்தில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் மண் வரப்புகள், கல் வரப்புகள் அமைத்தல் போன்ற நீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2021-22-ம் ஆண்டு ரூ.425.5 லட்சம், 2022-23-ம் ஆண்டு ரூ.97.40 லட்சம் மொத்தம் ரூ.522.9 லட்சம் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக செலவிடப்பட்டுள்ளது.

    இந்த தொகுப்புகளில் மொத்தம் 1,187 விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியின்போது ஈரோடு உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஆசைத்தம்பி, சென்னிமலை வேளாண்மை துணை இயக்குநர் சாமுவேல், வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • நெல் பயிரிடப்பட்ட நிலங்களில் மழைநீர் புகுந்தது.
    • நீர் புகுந்ததால் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியது.

    கடலூர்:

    வடலூர் அருகே உள்ள மருவாய், வாலாஜ ஏரியும் அதன் உள்பகுதியில் உள்ள நைனார்குப்பம், மேலக் கொளக்குடி, கருங்குழி உள்ளிட்ட பகுதி யில் உள்ள நெல் பயிரிட ப்பட்ட நிலங்களில் மழைநீர்பு குந்தது. இதனால் நெற்பயி ரிகள் அழுகும்நிலையில் உள்ளது.

    மேலும் பரவனாற்று ங்கரை ஓரம் உள்ள ஓணான்குப்பம், அந்தாரசி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மழை நீரும் மழைநீருடன் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் இருந்து வெளிேயற்றப்படும் நீரால் பரவனாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளின் நெல் பயிரி டப்பட்ட விளைநில கங்க ளில் நீர் புகுந்ததால் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால் நெல் பயிர்கள் அழகும் நிலையில் உள்ளன.

    • 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் முழுவதும் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
    • கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்–டுகிறது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2022-23 ஆம் நிதியாண்டிற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தகரம், திருப்புகலூர், ஆதலையூர், பண்டார–வாடை, காரையூர், நெய்க்குப்பை, கோபுராஜ–புரம், ஆலத்தூர், திருச்–செங்காட்டங்குடி, கீழத்தஞ்சாவூர், மருங்கூர் உள்ளிட்ட 11 கிராமங்கள் இத்திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசின் வாயிலாக கிராமங்களில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்காக 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்களை கொண்ட குறைந்தபட்சம் 8 விவசாயிகளை கொண்ட தரிசு நில தொகுப்பில் முழுவதும் இலவசமாக ஆழ்துளைக்கிணறு வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது.விருப்பமுள்ள விவசாயிகள் மேற்குறிப்பி டப்பட்டுள்ள கிராமங்களில் 15 ஏக்கருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலமாக காணப்பட்டால் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்–டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×