என் மலர்
நீங்கள் தேடியது "Arittapatti"
- பாராளுமன்றத்தின் மக்களவையில் வெங்கடேசன் எம்.பி. இன்று உரையாற்றினார்.
- அப்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிற ஒன்றிய அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும் என்றார்.
புதுடெல்லி:
அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவத்திற்கு வழங்கப்பட்ட ஏலத்தை ரத்து செய்யக் கோரி பாராளுமன்றத்தின் மக்களவையில் வெங்கடேசன் எம்.பி. பேசியதாவது:
ஒன்றிய அரசு மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதித்திருக்கிறது. அந்த அனுமதியை, ஏல உத்தரவை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அரிய வகை நிலம் அரிட்டாபட்டி நிலம். இங்கே 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால படுக்கை இருக்கிறது.
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி கல்வெட்டு இருக்கிறது. 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணச் சிற்பம் இருக்கிறது.
1,200 ஆண்டுகளுக்கு முந்தைய முற்காலப் பாண்டியர்கள் கட்டிய சிவன் குடைவரைக் கோவில் இருக்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன்பு பிற்காலப் பாண்டியர்கள் அமைத்த ஏரி இருக்கிறது.
வரலாறு முழுக்கத் தனது மேனியில் வரலாற்றுச் சின்னங்களை ஏந்தியிருக்கிற அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கிற ஒன்றிய அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும்.
அரிட்டாபட்டி கல்வெட்டில் இமையன் என்கிற சொல் இருக்கிறது. இமையம் எப்படி இந்தியாவைக் காக்கிறதோ, அதேபோல இமையன் என்ற சொல் இருக்கிற அரிட்டாபட்டி நிலத்தை நாங்கள் காத்து நிற்போம் என்பதை இந்த அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
கீழடியிலே பத்து அடி குழி தோண்ட தொல்லியல் துறைக்கு அனுமதி கொடுக்காத ஒன்றிய அரசு, இன்றைக்கு தொல்லியல் சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டியில் பல நூறு கிலோமீட்டர் சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்கிறது என்றால் தமிழ்நாட்டினுடைய வளத்தையும், வரலாற்றையும் ஒருசேர அழிக்கிற இந்த முயற்சியை தமிழ்நாடு மக்கள் எதிர்ப்பார்கள். மதுரை மக்கள் எதிர்ப்பார்கள். அங்கே இருக்கிற அனைத்து கிராமங்களிலும் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கிற இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அனுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளித்து மதுரை மக்களை அகதிகளாக்கக்கூடாது.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமம் ஏலம் எடுத்ததாக கூறப்பட்டது. இதற்கு அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதன் விவரம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராகவும், தெற்குத்தெரு மேலநாட்டார் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி டோல்கேட் அருகே இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. மோகன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காலையில் தொடங்கிய தர்ணா போராட்டம் மாலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்றவர்கள் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளித்து மதுரை மக்களை அகதிகளாக்கக்கூடாது. அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தர்ணா போராட்டத்தை முன்னிட்டு மேலூர் டி.எஸ்.பி. சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாளில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இந்த நிலையில் அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர் தலத்தை அழித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்துக்கு அனுமதி அளித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை (13-ந்தேதி) நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சி நிர்வாகிகள் செய்து வந்தனர். போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சீமான் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாளில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- சீமான் போராட்டத்திற்கு போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
- கட்சியும் தேர்தலும் இரண்டாம்பட்சம் தான்; அரிட்டாபட்டி மக்களுக்கு அரணாக நா.த.க.வினர் இருப்போம்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்துக்கு அனுமதி அளித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.
போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சீமான் போராட்டத்திற்கு போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தும் மக்களை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார்.
கட்சியும் தேர்தலும் இரண்டாம்பட்சம் தான்; அரிட்டாபட்டி மக்களுக்கு அரணாக நா.த.க.வினர் இருப்போம் என்று அவர் உறுதி அளித்தார்.
- வேதாந்தா நிறுவனத்தார் அவ்வளவு எளிதில் டங்ஸ்டன் திட்டத்தை விட்டு விட்டு போக மாட்டார்கள்.
- பாராளுமன்றத்திற்குள் அதானி என்ற பெயரை கூற முடியவில்லை.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 3 நாட்கள் நடைபயண நிறைவு நிகழ்ச்சி பொதுக்கூட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினார்.
டங்ஸ்டன் தொடர்பாக பாராளுமன்றத்தில், சட்ட மன்றத்தில் பேசலாம். ஆனால் சம்பந்தப்பட்ட ஊர்களில் பேசினால் தான் டங்ஸ்டன் திட்டம் ரத்தாகும். டங்ஸ்டன் குறித்த முழுவிவரமும் மேலூரின் ஒவ்வொரு கிராமத்தினருக்கு தெரிந்தால் தான் திட்டம் ரத்தாகும். டங்ஸ்டன் குறித்து நமக்காக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், அதிகாரிகள் பேசுவார்கள் என்பதை விட நமக்காக நாம் பேசினால் தான் அரசு செவி மடுக்கும்.
வேதாந்தா நிறுவனத்தார் அவ்வளவு எளிதில் டங்ஸ்டன் திட்டத்தை விட்டு விட்டு போக மாட்டார்கள். இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி எடுப்பார்கள். டங்ஸ்டன் பிரச்சனையில் நமக்கு மிகப்பெரிய நம்பிக்கை சட்டமன்ற தீர்மானம். இவ்வளவு நடந்த பிறகும் ஒன்றிய அரசு இப்போது வரை டங்ஸ்டன் தொடர்பாக வாய் திறக்கவில்லை.
மத்திய அமைச்சரிடம் பேசும்போது, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது எனக்கேட்டேன். அதற்கு மத்திய மந்திரி மொத்தம் 5,000 ஏக்கரில் அரிட்டாபட்டி பாரம்பரிய சின்னங்கள் வெறும் 500 ஏக்கர் தான், மீதமுள்ள 4,500 ஏக்கரில் திட்டத்தை நிறைவேற்றினால் உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்கிறார்.
மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளார்கள். டங்ஸ்டன் ஏல உத்தரவு ரத்து என மத்திய அரசு அவ்வளவு எளிதாக அறிவிக்க மாட்டார்கள். நம் எதிர்ப்பு நடவடிக்கைகள் போதாது. போராட்டம் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தால் மட்டுமே டங்ஸ்டன் திட்டம் ரத்தாகும்.
பாராளுமன்றத்திற்குள் அதானி என்ற பெயரை கூற முடியவில்லை. அதானி என பேசினால் மைக் ஆப் செய்யப்படுகிறது. பெரு முதலாளிகளின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு வந்திருப்பது சாதாரண ஆபத்து அல்ல. மேலூர் மக்கள் பெருமுதலாளிகளின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். மேலூர் போராட்டம் இந்தியளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் மேலூரின் சத்தம் கேட்டுக்கொண்டு உள்ளது.
கூடங்குளம், மீத்தேன், ஸ்டெர்லைட் போன்று மதுரை மேலூர் ஆகிவிடக்கூடாது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் 14 பேர் சுடப்பட்டார்கள். அங்கெல்லாம் ஜனநாயக சக்திகள் கோட்டை விட்டு விட்டார்கள். கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள். மேலூரை எந்த தலைவர்களும் காப்பாற்ற மாட்டார்கள்.
மக்கள், தலைவர்களை நம்ப வேண்டாம். மக்களே விழிப்புணர்வு பெற்று போராடுங்கள். டங்ஸ்டன் ஏலம் ஒப்பந்த அறிவிப்பு ரத்து என்பதை அறிவிக்கிற வரை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்த நாட்டின் அரசமைப்பு சட்டம், ஒன்றிய அரசு என எல்லாமே வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக உள்ளது. ஆனால் மக்கள் சக்தி வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக உள்ளது.
ஒரு கேடயம் போல சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி. ஒப்பந்தம் ரத்து என மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்தவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது.
- டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது.
சென்னை:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில், ஆரம்பம் முதலே நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கலாம் என்று, மத்திய அரசுக்குக் குறிப்பு அனுப்பி, சுரங்க ஒப்பந்தம் வழங்கப்படும் வரையில், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது.
மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி சுரங்கம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்து, தமிழக அரசு மேற்கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தங்களைப் பரிசீலிக்கக் கூடாது என்று தெரிவித்த பின்னர், திமுக அரசு அது குறித்து அரிட்டாப்பட்டி விவசாயிகளுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
தற்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்த முற்படுவது, டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது திமுக அரசின் கடமை. அதை விடுத்து, மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்ட பிறகும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக எந்த உறுதியும் அளிக்காமல், நாட்களைக் கடத்திவிட்டு, தற்போது விவசாயிகள் போராட்டத்திற்குக் காரணமாக இருக்கிறது திமுக.
உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், விவசாயிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள், வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
- தமிழக அரசும் இந்த திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்லுயிர் தளமான அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் சுற்றுச்சூழல், விவசாயம் பாதிக்கும் என கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
மேலும் விவசாயிகள், வணிகர் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த மாத தொடக்கத்தில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மேலூரில் இருந்து லட்சக்கணக்கானோர் மதுரைக்கு பேரணியாக புறப்பட்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசும் இந்த திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. இதற்கிடையில் மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கூறி தற்போது வரை அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக தங்களது கோரிக்கைகளை மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிசான் ரெட்டியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி அந்த பகுதியை சேர்ந்த விவசாய சங்க பிரமுகர்கள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் புறப்பட்டனர்.
இந்த குழுவில் ஒருங்கிணைப்பாளர்களாக பா.ஜனதாவை சேர்ந்த மகா சுசீந்திரன், பேராசிரியர் ராம சீனிவாசன், ராஜ சிம்மன், பாலமுருகன் ஆகியோர் செயல்பட்டனர்.
இவர்களுடன் கிராம விவசாயிகள் மகாமுனி அம்பலம், ஆனந்த், போஸ், முருகேசன், முத்துவீரனன், சாமிக்கண்ணு, ஆனந்த் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர்.
- டங்ஸ்டன் அரிய வகை தாதுப்பொருள்.
- டங்ஸ்டன் போராட்டத்தை திசை திருப்ப முயன்றும் மக்கள் உறுதியுடன் போராடினர்.
மதுரை:
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 60 நாட்களாக மேலூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அரிட்டாபட்டி சென்ற பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு நிச்சயமாக டங்ஸ்டன் திட்டத்தை கொண்டு வராது என உறுதி அளித்து இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஏழு பேர் கொண்ட குழுவினர் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் தலைமையில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர். இதனைத் தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இது மேலூர் பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டெல்லி சென்ற விவசாயிகள் இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். அவர்களுக்கு பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் அரிட்டாபட்டி கிராம மக்கள் மாலை அணிவித்து பட்டம் சூட்டி உற்சாக வர வேற்பு அளித்தனர். பின்னர் ராம.சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
டங்ஸ்டன் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய மந்திரி மூலமாக டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கொடுத்த அனுமதி ஏலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த முடிவுக்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எந்தெந்த மாநிலங்களில் கனிம வளங்கள் உள்ளது என நாடு முழுவதும் ஜியாலஜிகல் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. டங்ஸ்டன் அரிய வகை தாதுப்பொருள். அதை தற்போது வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் இருப்பதால்தான் தமிழக அரசிடம் பேசி ஏலம் விட தயாரானபோது மாநில அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுடன் கலந்தாலோசித்தபோது தான் இங்கிருக்கும் பாதிப்புகள் எங்களுக்கு தெரிய வந்தது. மக்கள் தெரிவித்த கருத்துக்களை மத்திய மந்திரி ஏற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கும். இதற்காக மோடியிடம் பேசி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தார்.
டங்ஸ்டன் போராட்டத்தை திசை திருப்ப முயன்றும் மக்கள் உறுதியுடன் போராடினர். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ததை தொடர்ந்து டெல்லி சென்ற விவசாயிகள் கிஷன் ரெட்டிக்கு அரிட்டாபட்டி வர விவசாயிகள் அழைப்பு விடுத்ததாகவும், அவரும் வருவதாக ஒத்துக்கொண்டுள்ளாதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக பாடுபட்ட அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோருக்கும், எல்லாவற்றிற்கும் காரணமான பிரதமர் மோடிக்கும் நன்றி.
தமிழக அரசின் நடவடிக்கையால்தான் மோடி அரசு பணிந்து திட்டத்தை ரத்து செய்துவிட்டது என தமிழக முதல்வர் தெரிவித்தது குறித்து இந்த விவகாரத்தை நான் அரசியலாக பார்க்கவில்லை. அதற்காக அனைத்து கட்சியினருமே போராடி உள்ளனர். ஆனால் இந்த விஷயத்தை அரசியலாக இப்போது பேச விரும்பவில்லை அதற்காக தனியாக நான் பதில் கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேலூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் கவலையோடு இருந்தார்கள். மிகப்பெரிய சவாலாக இருந்தது. மதுரை நோக்கி மிகப்பெரிய நடைபயணம் மேற்கொண்டு இருந்தோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக மிகப்பெரிய வெற்றி பரிசு கிடைத்திருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வந்து, டங்ஸ்டன் திட்டம் கிராமத்திற்கு வராது என உறுதி அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்டு டெல்லி சென்று மத்திய அமைச்சரிடம் டங்ஸ்டன் விவகாரம் பற்றி தெரிவித்தோம். எங்களிடம் விளக்கம் கேட்ட மத்திய மந்திரி தொடர்பாக பிரதமரிடம் பேசிவிட்டு சொல்வதாக கூறினார். நாங்கள் முடிவு தெரியாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறினோம்.
அடுத்த அடுத்த நாள் டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்ட ஆணையை எங்களிடம் வழங்கினார்கள். இத்திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கும், மத்திய மந்திரி கிஷன் ரெட்டி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் அனைவருக்கும் கிராமத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.
- அரிட்டாப்பட்டி, நாயகர்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர்.
- ‘டங்ஸ்டன்’ திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் அறிவித்தது.
மின்விளக்கு இழைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ராக்கெட் உதிரி பாகங்களின் பயன்பாட்டுக்கான 'டங்ஸ்டன்' கனிமம் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதியில் இந்த கனிமம் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவன நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்து மத்திய அரசிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு 4,981.64 ஏக்கர் நிலத்தில் 'டங்ஸ்டன்' கனிமத்தை எடுப்பதற்கு ஆய்வுடன் கூடிய, சுரங்க உரிம குத்தகைக்கு மத்திய சுரங்க அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த உரிமத்தை பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்துக்கு கடந்த நவம்பர் மாதம் உரிமம் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தை அரிட்டாப்பட்டி, நாயகர்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர். திட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டங்களை நடத்தினர்.
ஏற்கனவே, சுரங்கம் அமைய இருந்த பகுதியை பல்லுயிர் பெருக்க மண்டலமாக தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்து இருந்தது. எனவே, கனிமச்சுரங்கம் இந்த பல்லுயிர்ப் பெருக்க மண்டலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என மக்கள் வாதிட்டனர். அதுபோல தமிழர் கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடவரைக் கோவில்கள் போன்ற பண்பாட்டு, கலாசார அம்சங்களும் அங்கு இருப்பதால் அவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
50 கிராம மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை ரத்து செய்யுமான தமிழ்நாடு அரசும், மத்திய அரசை வலியுறுத்தியது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
கடந்த 9-ந்தேதி தமிழ்நாடு சட்டசபையில், 'டங்ஸ்டன்' கனிமச்சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தமிழக பா.ஜனதாவும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நின்றது. மாநில தலைவர் அண்ணாமலை அந்த பகுதி விவசாயிகளுடன் பேசி, திட்டத்தை ரத்து செய்ய துணை நிற்பதாக கூறினார். மத்திய சுரங்கம் மற்றும் கனிமத்துறை மந்திரி கிஷன் ரெட்டியை அண்ணாமலை தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். அதன்பேரில் 'டங்ஸ்டன்' திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளைச் சேர்ந்த அம்பலக்காரர்கள் என்று சொல்லப்படும் ஊர் முக்கிய பிரமுகர்களுடன் அண்ணாமலை டெல்லியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை மீண்டும் சந்தித்தார்.
அப்போது, பிரதமர் மோடியுடன் இது தொடர்பாக பேசி நல்ல முடிவை தெரிவிப்பதாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக மதுரை மேலூர் பகுதி மக்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததுபோல், 'டங்ஸ்டன்' திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை அரிட்டாப்பட்டிக்கு செல்கிறார்.
டங்ஸ்டன் திட்ட போராட்டக் குழுவினர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளனர். இதையடுத்து அவர் நாளை அரிட்டாப்பட்டிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
- தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த மாதம் மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்லுயிர் தலமான அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் திட்டம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் மற்றும் ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மேலூர் மற்றும் 48 கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கடையடைப்பு, பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவற்றை பொதுமக்கள் தொடர்ந்து நடத்தினர். தமிழக சட்டசபையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது என்று திட்டவட்ட மாக தெரிவித்தார். கிராம மக்களின் தொடர் போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கிராம மக்களுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார். டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க இன்று காலை அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 32 பேர் அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னை சென்றனர். இந்த குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை அல்லது அரிட்டாப்பட்டியில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கவுரவிக்கப்படுகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் 48 கிராம மக்கள் சார்பில் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் 48 கிராம மக்கள் சார்பில் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து அரிட்டாபட்டி கிராம மக்கள் பெருமூச்சுவிட்டனர்.
இதைதொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 32 பேர் அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று காலை நேரில் சந்தித்தனர்.
இந்த குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.
டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை அல்லது அரிட்டாப்பட்டியில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கவுரவிக்கப்படுகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் 48 கிராம மக்கள் சார்பில் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு மூலம் அரிட்டாபட்டிக்கு தான் செல்லயிருப்பதை உறுதி செய்தார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்..!" என்றார்.
- மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.
- 'உங்கள் அன்பை ஏற்க அரிட்டாபட்டிக்கு வருகிறேன்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேலூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த அரிட்டாபட்டி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார். அப்போது, நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது என உறுதி அளித்தார்.
பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மதுரைக்கு நான்கு வழிச்சாலை வழியாக பேரணியாக நடந்து வந்து போராட்டம் நடத்தியது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் அரிட்டாபட்டி பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கிராம மக்கள் பிரதிநிதிகள் 18 பேர், அமைச்சர் மூர்த்தியுடன் நேற்று சென்னைக்கு சென்றனர். அங்கு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து, பாராட்டு விழா நடத்த உள்ளதாகவும் அதற்கு அரிட்டாபட்டி மற்றும் அ.வல்லாளபட்டிக்கு வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 'உங்கள் அன்பை ஏற்க அரிட்டாபட்டிக்கு வருகிறேன்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சென்னையில் குடியரசு தின விழாவை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை புறப்பட்டார்.
அரிட்டாப்பட்டி மக்களின் அழைப்பை ஏற்று பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மதுரை புறப்பட்டார்.