என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "arrested young man"
தாடிக்கொம்பு:
கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள செம்மணக் கோன்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் அன்பரசன் (வயது 23). இவருக்கும் திண்டுக்கல் சென்னமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தியின் மகளுக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
கரூரில் வட்டி கடையில் வேலை பார்த்த அன்பரசன் அந்த வேலையை விட்டு விட்டு மாமனார் வீட்டுக்கே வந்து விட்டார். அங்கு டிரைவர் வேலை பார்த்து வந்தார்.
அவரது மனைவியின் தங்கை திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது அன்பரசனுக்கு மனைவியின் மீது இருந்த மோகம் அவரது தங்கையின் மீது திரும்பியது.
இதனால் அவரிடம் ஆசை வார்த்தை பேசி பழகி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்தார். தனது கணவரும் தங்கையும் மாயமானதைக் கண்டு அன்பரசனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். மதுரை மாவட்டம் கப்பலூரில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரிய வரவே அங்கு சென்ற போலீசார் இருவரையும் பிடித்து வந்தனர். அன்பரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை:
ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சிலர் தடைசெய்யப்பட்ட குட்கா பெருட்களை கடத்து வதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசனுக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் நகர எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வடநாட்டு வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். அவரை நிறுத்தி சீட்டின் பின்புறம் இருந்த மூட்டையில் சோதனை செய்தபோது ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா இருந்தது. மோட்டார் சைக்கிளுடன் குட்காவை பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சர்தாராம் (வயது 22) என்று தெரியவந்தது.
ஊத்துக்கோட்டை நேரு பஜாரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆந்திராவிருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை சேமித்து வைத்து சென்னை கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்திலும் குட்கா தாராளமாக விற்கப்படுகிறது. வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் புகையிலை பொருட்கள் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி.சக்கரவர்த்தி போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் தலைமை காவலர் கோபிநாத் ஆகியோர் ஈக்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த லக்காராம் என்பதும், மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்ததும் தெரிந்தது.
போலீசார் விசாரணை நடத்திய போது திடீரென லக்காராம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சப்- இன்ஸ்பெக்டர் ஈஸ்வரனை தாக்க முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. லக்காராமுக்கு குட்கா எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்