என் மலர்
நீங்கள் தேடியது "arrests"
- சங்கராபுரம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
- அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் உழவு டிராக்டரை ஓட்டிச் சென்றார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (40) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சொந்தமான வயலில் அதே கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் உழவு டிராக்டரை ஓட்டிச் சென்றார். இதைபார்த்த தயாளன் எதற்காக எனது நிலத்தில் டிராக்டரை ஓட்டிச் செல்கிறாய் என கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அருள் தயாளனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அருள் மீது சங்கராபுரம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
- சின்ன சேலத்தில் ஆட்டோவை எரித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நைனார்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரதிஷ் (22) என்பவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு ராகேஷ் (20) என்ற சகோதரர் உள்ளார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதியான தீபாவளி அன்று பட்டாசு வாங்குவதற்காக ரதிஷும், ராகேஷும் சின்னசேலம் பேரூராட்சி எதிரே நின்று கொண்டிருக்கும் பொழுது அந்த வழியாக வந்த சின்னசேலம் அருந்ததியர் தெருவை சேர்ந்த கனி என்கின்ற கனியழகன் (20) என்கின்ற விஜயபுரத்தை சேர்ந்த ஆனந்த் (20) என்பவரும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்பு இரு தரப்பி னரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
பின்னர் இரு தரப்பினரும் வீட்டுக்கு சென்று விட்டனர். இதை மனதில் வைத்துக் கொண்டு மதியம் ஒரு மணிக்கு ரதிஷ் வீட்டிற்கு நேரடியாக கனியும் ஆனந்தும் சென்றதாக கூறப்படுகிறது. ஆட்டோவில் படுத்திருந்த ராகேஷ் என்பவரை எழுப்பி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சண்டையை விளக்க வந்த ரதிஷையும் தாக்க முயன்று ள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் உயிருக்கு பயந்து இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் ரதிஷ் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து நேற்று கனி மற்றும் ஆனந்த் இருவரையும் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பண்ருட்டியில் சீட்டு பண மோசடி செய்த ரேசன் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
- பாக்கியம் என்பவர் நேரில் சென்று பழனியிடம் சீட்டு பணம்கேட்டுள்ளனர்.
கடலூர்:
பண்ருட்டி திருவதிகை யை சேர்ந்தவர் மாரிமுத்து இவர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார்.இந்த சீட்டு நிறுவனத்தில் ஏராள மான பெண்கள் உள்பட பலர் பணம் கட்டி வந்தனர். இதற்கிடையில் சீட்டு நிறு வனம் நடத்தி வந்த மாரிமுத்து கொரோனாவுக்கு பலியானர். இதனால் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த இவரது மனைவி, மாமனார், ஆகியோரிடம் சீட்டுகட்டியவர்கள் பணம் கேட்டுவந்தனர். இதற்கிடையில் திருவதிகை சக்கரபாணி நகரில் உள்ள மாரிமுத்துவின் மாமனார் பழனியின் வீட்டுக்கு திருவதிகை ஓறையூரான் சந்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மனைவி பாக்கியம் (57) என்பவர் நேரில் சென்று பழனியிடம் சீட்டு பணம்கேட்டுள்ளனர். பழனி, பாக்கியத்தை ஆபாசமாக திட்டிகொலைமிரட்டல்விடுத்துள்ளார். இது பற்றி பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு) சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரேஷன் கடை ஊழியர் பழனியை கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
- 10 கிராம் எடையுள்ள போலி தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ. 31 ஆயிரம் பெற்று சென்றுள்ளார்
- வினோத் அந்த பெண்ணை பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம்புலியூர் கிராமத்தில் அடகு கடை கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இதனை வினோத் நடத்திவருகிறார். கடந்த 10-ந் தேதி இந்த கடைக்கு வந்த பெண் ஒருவர் தனது குழந்தைகள் வளையல்கள் என பொய் சொல்லி 10 கிராம் எடையுள்ள போலி தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ. 31 ஆயிரம் பெற்று சென்றுள்ளார் பின்னர் வினோத் அதனை மாற்றி அருகில் உள்ள வங்கியில் அடகு வைக்க முயன்றபோது அது போலி நகை என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அதே பெண்மணி மீண்டும் வேறுஒரு போலி நகையை வைக்க மீண்டும் அதே அடகு கடைக்கு வந்தார். அப்போது அந்த நகையை சோதித்த பார்த்த போது அது போலி நகை என தெரியவந்தது. உடனே உரிமையாளர் வினோத் அந்த பெண்ணை பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் இந்த பெண்ணுடன் மேலும் 2பேர் வந்து உள்ளனர். பிடிபட்ட பெண்ணின் பெயர் சத்யா(வயது38)சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததுபின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த பெண்ணுடன் வந்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- சேலம் சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த 2 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
- இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
சேலம்:
சேலம் சேலம் அம்மாபேட்டை நாமமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் அருண் (வயது 30). சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (36). பிரபல ரவுடிகளான இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்–செயல்களில் ஈடுபட்டு வரும் பூபதி, அருண் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதை பரிசீலனை செய்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.
- சங்கராபுரம் அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு பகுதியில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் வடபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிங்காரம் மகன் குமார்(வயது42), புதுப்பாலப்பட்டு கிராமம் பாண்டியன் மகன் வல்லரசு(21), ஆனந்தன் மகன் அருண்(21) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையில் போலீசார் மேலதேவநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
- ஆத்திரம் அடைந்த முருகன் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையில், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அமலன் மற்றும் போலீசார் மேலதேவநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே கீழதேவ நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகன் என்ற சுண்டல் முருகன் (வயது47) என்பவர் வெள்ளை நிற சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓட முயற்சி செய்தார்.
இதை கண்ட போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் போலீசாரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களும் ரூ.1050-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அதில் 2.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை
மதுரையில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரசாத் ஆலோசனையின் பேரில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவத்தன்று மதியம் பைபாஸ் ரோடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். வ.உ.சி. ரெயில்வே பாலத்தில் ஆட்டோ வந்தது. அதில் ஒரு பெண் உள்பட 2 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.
அதில் 2.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் கரிமேடு, அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த பூபதி மனைவி அழகம்மாள் (46), களத்துபொட்டல், நேரு நகர் உதயகுமார் (36) என்பது தெரிய வந்தது.
அழகம்மாளின் கணவர் பூபதி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு இவருக்கு களத்துப்பொட்டல் உதயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்து, மாநகரம் முழுவதும் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும்எ கைது செய்தனர்.
- அரியலூர் மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் 16 கொலை வழக்குகளில் 21 பேர் கைது செய்யபட்டுள்ளனர் என மாவட்ட எஸ்.பி தகவல் தெரிவித்தார்
- 182 குற்றவழக்குகள் பதிவான நிலையில், 120 வழக்குகள் கண்டறியப்பட்டு, தொடர்புடைய 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றுள்ள 16 கொலை வழக்குகளில் தொடர்புடைய 21 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டள்ளனர் என மாவட்ட எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற 16 கொலை சம்பவங்களில் தொடர்புடைய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போக்ஸோ சட்டத்தில் 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 186 பேரும், 10 பாலியல் வழக்குகளில் 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 182 குற்றவழக்குகள் பதிவான நிலையில், 120 வழக்குகள் கண்டறியப்பட்டு, தொடர்புடைய 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களி டமிருந்து ரூ.89 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சொத்து இழப்பு (பாரி) தொடர்பாக பதிவான 19 வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.55 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் கண்டுபிடி க்கப்பட்டுள்ளன.அதேபோல், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட பாலியல் குற்ற வாளிகள் 18 பேர், போதை பொருள் குற்றவாளிகள் 5 பேர், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்திய 10 பேர், சாராயம் காய்ச்சிய 5 பேர் என 43 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் மணல் கடத்தல் தொடர்பாக 127 வழக்குகள், லாட்டரி மோசடி தொடர்பாக 19 வழக்குகள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 179 வழக்குகள், சூதாட்டம் விளையாடியதாக 25 வழக்குகள், கஞ்சா விற்பனை செய்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.67,66,010 மதிப்பில் குட்கா, ரூ.5, 25,898 மதிப்பில் கஞ்சா பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளது என்றார்.
- இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது.
- அவரது செல்போனுக்கு, ஆபசாமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
காரைக்கால் மெய்தீன்பள்ளி வீதி, ஆயிஷா காலணியை சேர்ந்தவர் தஸ்லிமா. இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது.தஸ்லிமா ஏற்கெனவே குடியிருந்த பைபாஸ் சாலை தீன்ஸ்பார்க்கில் வசிக்கும் உசேன்(வயது21) என்பவர், அடிக்கடி மது அருந்திவிட்டு, ஆயிஷா காலணி அருகே வந்து, தஸ்லிமாவிடம், உங்கள் மூத்த மகளை காதலிப்பதாக கூறி ஆபசமாக திட்டிவந்துள்ளார். இதனால் பயந்த தஸ்லிமா, தனது மூத்த மகளை, மயிலாடுதுறையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.மேலும் ஆயிஷா காலணியில் இருந்தால் உசேன்தொடர்ந்து சண்டை போடுவார் என பயந்து, மெய்தீன்பள்ளிவாசலில் உள்ள உறவினர் வீட்டுக்கு தஸ்லிமா சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உசேன், நேற்று முன்தினம் தஸ்லிமா செல்போனுக்கு போன் செய்துள்ளார். அதை தஸ்லீமா எடுக்க மறுத்ததால், அவரது செல்போனுக்கு, ஆபசாமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து தஸ்லீமா உஷேனிடம் கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன். மீறி கேட்டால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, தஸ்லிமா காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலிசார் வழக்கு பதிவுசெய்து, உசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- பானிபூரி விற்பனை செய்பவர் உள்ளிட்ட 3 பேர் பள்ளி மாணவர்க ளிடம் கஞ்சாவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
- இதனை அடுத்து பாணி பூரி விற்பனை செய்யும் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூா:
சிதம்பரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் தனிப்படை உதவியாளர் நாகராஜ் மற்றும் போலீசார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி அருகே பானிபூரி விற்பனை செய்பவர் உள்ளிட்ட 3 பேர் பள்ளி மாணவர்க ளிடம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து பாணி பூரி விற்பனை செய்யும் சிதம்பரம் தொப்பையான் தெருவில் வசிக்கும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த கல்லு மகன் அஜய் லாலு (வயது 19), மற்றும் ஒமக்குளம் ஜமால்நகர் முஸ்தபா(எ)சுல்தான் (22 ), சீர்காழி ராதா நல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி (20), ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட 3 பேரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் மது பாட்டில்கள் விற்பதாக தகவல் வந்தது.
- மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த ரத்தினம் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் மற்றும் சேகர் (53) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் சந்தப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் மது பாட்டில்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற சப் -இன்ஸ்பெக்டர் சதீஷ் நடத்திய அதிரடி வேட்டையில் அங்கு மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த ரத்தினம் (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் பல்லவாடி கிராமத்தில் சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் சேகர் (53) என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 8 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் திருக்கோவிலூர் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.