என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "at home"
- கொங்கு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
- 10 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறை கொங்கு நகரில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து பெருந்துறை யில் உள்ள மளிகை கடை களுக்கு விற்பனை செய்ய ப்பட்டு வருவதாக பெரு ந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் கொங்கு நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவரது பெயர் சக்தி சிவசுப்பிரமணியன் (வயது 39) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொரு ட்களை பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி களில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 கிலோ புகையினை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தி சிவசுப்பிரமணியனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வேலகவுண்டன்பட்டி அருகே கருங்கல்காடு பச்சானூர் பகுதில் வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்.
- இதுகுறித்து சசிகலா, வேல கவுண்டன் பட்டி போலீசில் புகார் செய்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே கருங்கல்காடு பச்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவரது மகள் தாரணி (25). இவரை அதே பகுதியை சேர்ந்த விஜய் மதுரவேல் (30) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 3 வயதில் கோபீசன் என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் தார ணிக்கும் அப்பகுதியில் உள்ள அஜித்குமார் என்ப வருக்கும் பழக்கம் ஏற்பட்டு, தாரணி அவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த தாரணியின் தாய் சசிகலா (47), அவரை அஜித்குமாரிடமிருந்து பிரித்து கூட்டி வந்து கூப்பிட்டாம் பாளையத்தில் உள்ள தனது சகோதரர் கதிர்வேல் வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று கதிர்வேல் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு தாரணியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த கதிர்வேல், இது குறித்து தாரணியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
தாரணியின் பெற்றோர், அவரை பல்வேறு இடங் களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சசிகலா, வேல கவுண்டன் பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து தாரணி தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சம்பவத்தன்று நள்ளிரவு அந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.
- 2 பேர் தனது வீட்டில் திருடியதாக கூறி இருந்தார்
சேலம்:
ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை ஊராட்சி சின்னவடகம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 39). கட்டிட மேஸ்திரி. அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு ஒன்று உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு அந்த வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.
அவர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 2¼ பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து சேகர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
அதில் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தனது வீட்டில் திருடியதாக கூறி இருந்தார்.இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- தாளவாடி போலீசார் சாந்தி என்பவரை கைது செய்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமை யில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது தாளவாடி அடுத்த கல் மண்டிபுரம், சோழகர் தொட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்த போது அங்கு 100 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து தாளவாடி போலீசார் சாந்தி (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுகாகுணமங்கலம் கிராமத்தில் ஆதம்மாளிக். இவரது வீட்டில் இரவு வீட்டின் கதவு பூட்டாமல் திறந்துவைத்துவிட்டு தூங்கும்போது 1.30 மணிக்கு மேல் பீரோவில் இருந்த நகை பணம் திருடு போனது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார் .
- வீட்டில் உள்ள அனைத்து பொரு ட்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.
- தரைத்தளத்துக்கு கீழே ரகசிய லாக்கர் இருக்குமோ என வீட்டில் தரையையும் சேதப்படுத்தி உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து (வயது45 ). இவர் குடும்பத்தினருடன் 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். மேலும் சிங்கப்பூரில் கன்சல்டிங் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.இந்த நிலையில் அவரது சொந்த கிராமத்தில் விருதாச்சலம் -திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் மெத்தை வீடு உள்ளது. இந்த வீட்டை வேலையாட்கள் மூலம் பராமரித்து வருகிறார். சிசிடிவி கேமரா மூலம் சிங்கப்பூரிலிருந்து அன்றாட நிகழ்வுகளை பார்ப்பது வழக்கம்.
இந்த நிலையில் அவரது வீட்டில் பின்புறம் சுவற்றில் துளையிட்டு வெளிநாட்டு எலக்ட்ரானிக்ஸ் பொரு ட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் வீட்டில் உள்ள அனைத்து பொரு ட்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.தரைத்தளத்துக்கு கீழே ரகசிய லாக்கர் இருக்குமோ என வீட்டில் தரையையும் சேதப்படுத்தி உள்ளனர். கைரேகை பதியாமல் இருக்க கை உறைகளும் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து பிடிக்காமல் இருக்க சிசிடிவி கேமராவில் பதிவு எந்திரத்தையும் கழட்டி திருடி சென்று விட்டனர்.
அந்த வீட்டில் எவ்வளவு ரூபாய், எவ்வளவு தங்க நகை, திருடு போனது என சிங்கப்பூரில் உள்ள வீட்டின் உரிமையாளர் வந்தால் மட்டுமே தெரியும் இது குறித்து ஆவினன்குடி காவல்துறை , திட்டக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா தலைமையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.சம்பவ இடத்தில் காவல்துறையினர் பாது காப்பு பணியில் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று தடயவியல் நிபுணர், மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை வட்டத்தின் தெரிவிக்கப்படுகிறது.
அதிகம் மக்கள் நெருக்கம், மக்கள் நடமாட்டம் உள்ள விருத்தாசலம் -திட்டக்குடி சாலையில் சுவற்றின் துளையிட்டு உள்ளே புகுந்து திருடி இருப்பது கிராம பகுதியில் உள்ளவர்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சந்தோஷ் என்பவர் வீட்டில் புலியின் பற்கள், நகங்கள், எலும்புகள் மற்றும் எரும்பு திண்ணியின் ஓடுகள் பதுக்கி வைத்தி ருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
- மேலும் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் உத்தரவின் பேரில் கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் புலி பற்கள், எழும்புகள் பதுக்கி வைத்திருப்பதாக கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் வன அலுவலர்கள் சின்ன உள்ளேபாளையம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தோஷ் என்பவர் வீட்டில் புலியின் பற்கள், நகங்கள், எலும்புகள் மற்றும் எரும்பு திண்ணியின் ஓடுகள் பதுக்கி வைத்தி ருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அேத பகுதியை சேர்ந்த சந்தோஷ் (25), பத்ரிபடுகை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (29), மாதேவன் (45), ராஜப்பன் (37) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் உத்தரவின் பேரில் கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்