என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Athletes"

    • விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம்.
    • இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிறவிண்ணப்பங்கள் எக்காரணம்கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர்வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம். ஏற்கனவே அஞ்சல் வழியில் நேரடியாக விண்ணப்பிருந்தாலும், மீண்டும் இணையவழியில்விண்ணப்பிக்க வேண்டும்.இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிறவிண்ணப்பங்கள் எக்காரணம்கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

    • ஆலங்குளத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான வளு தூக்கும் போட்டியில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு 19 பதக்கங்களை வென்றனர்.
    • 59 கிலோ எடை பிரிவில் அப்துர் ரகுமான் இரண்டு தங்கம் வென்றார்.

    தென்காசி:

    ஆலங்குளத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான வளு தூக்கும் போட்டியில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு 19 பதக்கங்களை வென்றனர். இதில் ஊட்டச்சத்து நிபுணர் பிரியதர்ஷினி சீனியர் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்துடன் ஸ்ட்ராங் வுமன் பட்டத்தையும் வென்றார். 59 கிலோ எடை பிரிவில் அப்துர் ரகுமான் இரண்டு தங்கம் வென்றார். 83 கிலோ எடை பிரிவில் தங்க மணிகண்டன் இரண்டு தங்கம் வென்றார்.

    66 கிலோ மாஸ்டர் 2 எடை பிரிவில் சுப்ரமணியன் இரண்டு தங்கம் வென்றார். 93 கிலோ மாஸ்டர் 3 எடை பிரிவில் மனசாட்சி ராஜேந்திரன், ஜூனியர் பிரிவில் முகமது லால், சீனியர் பிரிவில் கோச் ராம்சங்கர் இரண்டு தங்கப்பதக்கம் வென்றனர். அதே பிரிவில் ஹரிஹர சுப்ரமணியன் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். 105 கிலோ எடை பிரிவில் முத்துராஜா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றார். 120 கிலோ எடைப்பிரிவில் செந்தில் ஆறுமுகம் இரண்டு தங்கம் வென்றார். வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்த மாதம் மாநில அளவில் நடக்க இருக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு மாவட்ட அளவில் வளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் அனைவரும் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள்.
    • புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம், தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டங்களில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் சேர்ந்து உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

    மேற்காணும் 3 திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள தங்களுடைய பதிவெண் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் கிறிஸ்துராஜ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இருந்து வழியனுப்பி வைத்தார்.
    • திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த  66 விளையாட்டு வீரர் வீராங்கனைகளும்  8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    திருப்பூர்:

    முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் சென்னையில் நடைபெறுவதையொட்டி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 66 விளையாட்டு வீரர் வீராங்கனைகள்,  8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்கள் சென்னை புறப்பட்டு சென்றனர். அவர்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இருந்து வழியனுப்பி வைத்தார்.

    இது குறித்து கலெக்டர் தெரிவித்தாவது:-

    முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நாளை 1-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 பிரிவுகளில் சென்னையில் பல்வேறு விளையாட்டு அரங்கங்களில் நடைபெற உள்ளது.

    முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரி விளையாட்டு வீரர்களுக்கான சிலம்பம், கபடி மற்றும் கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட உள்ளது. அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த  66 விளையாட்டு வீரர் வீராங்கனைகளும்  8பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ள வீரர், வீராங்கனைகள் விளையாட்டு ப்போட்டிகளில் வெற்றி பெற்று திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

    பின்னர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளை அழைத்து செல்லும் பேருந்தினை கொடியசைத்து வழிஅனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அரசுக்கு நலச் சங்கம் கோரிக்கை
    • புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை உடனடியாக கலைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்  நடந்தது.

    சங்க தலைவர் காரத்தே வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், கோகுல்காந்தி. வீரபாரதி, பாலுசாமி, அருள்ஜோதி, பிரகதீஸ்வரர், சுரேஷ், கோடீஸ்வரன் சுப்ரமணி, இருதயராஜ் ஜில் முன்னிலை வகித்தனர். சதீஷ் வரவேற்றார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    படஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தபடி விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச இன்சூரன்ஸ் வழங்கவும், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

    மேற்படிப்பு அரசு வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவு விளையாட்டு வீரர்களுக்கும் முறையான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதுச்சேரி விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை உடனடியாக கலைக்க வேண்டும்.

    இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் மற்றும் ராஜிவ்காந்தி உள்விளையாட்டரங்கத்தை முறையாக பராமரிக்க வேண்டும். விளையாட்டுக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளுக்கு விளையாட்டு அரங்கங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    செந்தில்வேல் நன்றி கூறினார்.

    • தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது.
    • மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

    தமிழ்நாடு அரசு எடுத்து வரும் விளையாட்டு மேம்பாட்டு முன்னெடுப்பு திட்டங்களால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.

    விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது. மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது.

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற் கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

    "யாதும் ஊரே யாவரும் கேளிர்"-எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனது உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு மிகவும் இனிமையானதாகத் திகழும் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள் தான் தமிழர் பண்பாட்டின் அடையாளமும், அடித்தளமும் ஆகும்.

    அந்த வகையில், தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட் டிற்கு வருகை தந்து பயிற்சி கள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

    இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை களுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள் ளார்.

    மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகனை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங்கள், விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற விவரங்களுடன் மின்னஞ்சல்-(sportstn2023@gmail.com) முகவரியில் மற்றும் தொலைபேசி எண். +91-8925903047 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
    • சன்.சண்முகம் தலைமையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறார்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக இளைஞர்கள், மாண வர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் தி.மு.க. மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் சன்.சண்முகம் தலைமையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறார்.

    இதுபோல் அபிஷேகப்பாக்கம் எங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி வீரர்களுக்கு சீருடை, கிரிக்கெட் மட்டை, ஹெல்மட் உள்ளிட்ட உபகர ணங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் ராஜாராமன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில அமைப்பாளர் ரவி, ஆதிதிராவிடர் மாநில துணை அமைப்பாளர் சக்திவேல், கிளை செயலாளர் ராஜவேல், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் பலராமன், சாந்தபாலன், செந்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணை ப்பாளர்கள் செல்வம், விமல்ராஜ், தொகுதி பொருப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் செந்தில், மணி, அருண், லிங்கேஸ்வரன், ராஜா, தனசேகரன், இளவயதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
    • 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்படுகிறது.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

    கி.மு.776-ம் ஆண்டு முதலாவது ஒலிம்பிக் போட்டி கிரேக்க நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரில் நடந்தது. பின்னர் கிரேக்க மன்னர் தியோடோசியஸ் இநத ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதித்தார்.

    நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி நடந்தது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடை கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் உலகப்போர் காரணமாக 1916-ம் ஆண்டும், 2-வது உலகப் போர் காரணமாக 1940 மற்றும் 1944-ம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.

    கடைசியாக 2021-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. 2020-ம் ஆண்டு நடைபெற இருந்த போட்டி கொரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப் பட்டது. கொரோனா பாதிப்பால் ரசிகர்கள் யாருமே அனுமதிக்கப்படாமல் இந்த போட்டி நடத்தப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்படுகிறது. இந்த ஒலிம்பிக் திருவிழா நாளை (26-ந் தேதி) கோலாகலமாக தொடங்கு கிறது. ஆகஸ்ட் 11-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கிறது. 3-வது முறை யாக பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதற்கு முன்பு 1900, 1924 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். முதல் முறையில் வீரர்கள், வீராங் கனைகள் சம அளவில் கலந்து கொள்கிறார்கள். 32 விளையாட்டில் 46 பந்தயத்தில் 324 வகை பிரிவில் போட்டி நடைபெறுகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா சீனா இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா 592 பேரையும், சீனா 388 பேரையும் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜப்பான், இங்கிலாந்து, தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள். பதக்கங்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதால் பிரான்ஸ் இந்த முறை அதிகமான பதக்கங்களை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் ஆக மொத்தம் 113 பதக்கத்தை குவித்து முதல் இடத்தை பிடித்தது. சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 89 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் மொத்தம் 58 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் தடகளம் (நீரஜ் சோப்ரா) , பேட்மின்டன் (பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் ஜோடி) , பளு தூக்குதல் (மீராபாய், சானு), குத்துச்சண்டை (லவ்லினா), ஆக்கி, துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுக்களில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்க மும், மீரா பாய் சானு (பளு தூக்குதல்) ரவி குமார் தகியா (மல்யுத்தம்), பி.வி.சிந்து, லவ்லினா, பஜ்ரங் புனியா மற்றும் இந்திய ஆக்கி அணியினர் வெண்கல பதக்கம் வென்றனர். இந்தப் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் பெற்றது. பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இரட்டை இலக்க பதக்க ஆர்வத்துடன் இருக்கிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் "எல்லோருக்கும் வாய்ப்பு" என்பதாகும்.

    • பாிஸ் ஒலிம்பிக் 2024-ல் பங்கேற்ற ஆறு பேரில், 4 பேர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளனர்.
    • அனைவரையும் வாழ்த்துவதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

    பாரிஸ் பாராலிம்பிக்ஸ்-ல் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு வௌயிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2024ம் ஆண்டு பாரிஸில் நடந்த பாராலிம்பிக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பதக்கங்களைப் பெற்றுத் தமிழகம் திரும்பிய நமது சாம்பியன்களான துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோரை வாழ்த்தினோம்.

    பாிஸ் ஒலிம்பிக் 2024-ல் பங்கேற்ற ஆறு பேரில், 4 பேர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளதால், இது உண்மையிலேயே தமிழகத்திற்கு பெருமையான தருணம்.

    நம் துணை விளையாட்டு வீரர்கள் தங்கள் பயணத்தில் நம் அரசாங்கத்தின் அசைக்க முடியாத ஆதரவை ஒப்புக்கொண்டனர். முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் பயனாளிகளில் பெரும்பாலானோர் பாரா-தடகள வீரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரையும் வாழ்த்துவதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா இதுவரை 27 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • இதில் 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றது. நாளையுடன் இந்தப் போட்டிகள் முடிவடைகின்றன்.

    இதுவரை இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பாரீசில் இருந்து இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

    துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற அவனி லெகரா மற்றும் பிரனவ், மோனா அகர்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


    • பெண்களுக்கான குண்டு எறிதலில் ஷர்மிளா 13.20 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.
    • 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் டி.லதா 37 நிமிடம் 34.34 வினாடியில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தினார்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகம் சார்பில் 56-வது ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 1120 கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    2-வது நாளான நேற்று 5 புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது. பெண்களுக்கான குண்டு எறிதலில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி வீரர்களை ஷர்மிளா 13.20 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம்.ஓ.பி. வீராங்கனை டி.லதா 37 நிமிடம் 34.34 வினாடியில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தினார். 100 மீட்டர் ஓட்டத்தில் கிருத்திகா (எத்திராஜ்) சாதனை படைத்தார்.

    ஆண்களுக்கான குண்டு எறிதலில் டி.ஜி. வைஷ்ணவா மாணவர் ஆர்யன் தியாகி (17.91 மீட்டர் தூரம்), ஈட்டி எறிதலில் தனுஜ் காலிரா (டி.ஜி.வைஷ்ணவா, 74.50 மீட்டர் தூரம்) ஆகியோர் சாதனை படைத்தனர். இன்றுடன் போட்டி முடிகிறது.

    • இங்கிலாந்தில் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் 2024-ம் ஆண்டில் உயிரிழந்தார்.
    • அண்மையில் ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ உயிரிழந்தார்.

    நியூசிலாந்து அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக விளங்கிய மார்டின் குரோ, நீண்ட நாட்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். 

    மார்டின் குரோ 1992 உலக கோப்பை போட்டிகளில் மிக சிறப்பாக தன் அணியை வழிநடத்தி, தன் அணி அரையிறுதி போட்டிக்கு இடம்பெற செய்தார். அவரின் மரணத்துக்கு உலகில் உள்ள பல விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆன கிரஹாம் தோர்ப் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.



    இங்கிலாந்தில் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜோஸ் பாகர் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


    அதிகாலையில் ஜோஸ் பாகர் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாகருக்கு என்ன நடந்தது என்ற தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உலகின் நட்சத்திர கூட்டைப்பந்து விளையாட்டு வீரராக வளம்வந்தவர் லாக்கர்ஸ் அணியின் கோபி பிரையன்ட் இவர் ஞாயிற்றுக்கிழமை தனது மகள் ஜியானாவும் கலிஃபோர்னியாவிற்கு ஹெலிகாப்டரில் பயணித்தபோது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பிரைன்ட், அவரது 13 வயது மகள் ஜியானா பிரைன்ட் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த ஒன்பது பேரும் உயிரிழந்தனர்.


    இந்தோனிசியாவில் 2 எஃப்.எல்.ஒ. பாண்டுங் மற்றும் எஃப்.பி.ஐ. சுபாங் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்தாட்ட போட்டியில் திடிரென மின்னல் தாக்கி 35 வயதான செப்டைன் ரஹர்ஜா என்பவர் உயிரிழந்தது.


    இளம் ரக்பி வீரரான கோகில சம்மந்தபெரும (28) கோர விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

    அண்மையில் ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ உயிரிழந்தார்.


    இது போன்ற மரணங்கள் அந்தந்த விளையாட்டு ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×