search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attendance"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஹெலிபேட் தளத்தில் துப்புரவு பணிகள் நடந்து வருகிறது.
    • இந்த பணிகளை பேரூர் செயலாளர் பார்வையிட்டார்.

    மண்டபம்

    ராமநாதபுரத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 10 மாவட்டங் களை சேர்ந்த தி.மு.க. முக வர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதேபோன்று மண்டபத்தில் ஆக.18-ந்தேதி மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறு கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மண்டபம் அருகே ஹெலிபேட் தளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் துப்புரவு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் பார்வையிட்டார்.

    அப்போது கவுன்சிலர்கள் சாதிக்பாட்ஷா, வாசிம் அக்ரம், நிர்வாகி வேல்முரு கன், அவைத்தலைவர் முரு கானந்தம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து அப்துல் ரகுமான் மரைக்காயர் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உத்தரவின் பேரில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மண்டபத்தில் அவர் மீன வர்களை சந்திக்க உள்ளதால் அதற்கான சிறப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் மண்டபம் ஹெலிபேட் தளத்தில் துப்புரவு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் சில நாட்களில் முடிந்து பந்தல் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளிகளில் வருகைப் பதிவேடு 'TNSED Attendance'என்ற மொபைல் ஆப் மூலம் தினசரி பதிவேற்றம் செய்யப்படுகிறது.
    • மாணவ, மாணவிகள் வருகைப்பதிவு காலை, மாலை இருவேளை கட்டாய பதிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    திருப்பூர்

    எமிஸ் இணையதளம் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் பல திட்டங்கள், செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. தேவையான செயல்முறைகளும் வகுக்கப்படுகிறது.பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளின் விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வருகைப்பதிவை கண்காணிப்பது, தினசரி அப்டேட் செய்வது எளிதாகியுள்ளது.

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேடு 'TNSED Attendance'என்ற மொபைல் ஆப் மூலம் தினசரி பதிவேற்றம் செய்யப்படுகிறது. முந்தைய கல்வியாண்டு இறுதியில் செயல்பாடு பயன்பாட்டுக்கு வந்தாலும் தற்போது அப்டேட் செய்யப்பட்டு, ஆசிரியர், மாணவ, மாணவிகள் வருகைப்பதிவு காலை, மாலை இருவேளை கட்டாய பதிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    பள்ளிக்கு மாணவர், மாணவி வரவில்லையெனில், தங்கள் மகன்/மகள் பள்ளிக்கு இன்று (தேதியுடன்) வரவில்லை என பெற்றோருக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ்., சென்று விடும்.

    மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், எமிஸ் இணையதளம் அப்டேட் செய்யப்பட்ட பின், வருகைப்பதிவு நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., செல்லும் திட்டம் நடப்பு கல்வியாண்டு அமலாகி கடந்த 15-ந் தேதி முதல் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., சென்று சேர்கிறது. பெற்றோர் அறியாமல் மாணவர் விடுப்பு எடுத்தால் உடனே தெரிய வந்து விடும் என்றனர்.

    • மாணவ-மாணவிகளுக்கு சிலேட், ரப்பர்,பென்சில் இலவசமாக வழங்கப்பட்டது,
    • பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.

    சீர்காழி:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சீர்காழி ஊழியக்காரன் தோப்பில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வி ஆண்டின் முதல்நாள் தொடக்கவிழா விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஷகிலாரெத்தி னகுமாரி தலைமை வகித்தார்.

    நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய், கல்வியாளரும், பெற்றோர் ஆசிரியசங்கத்தலைவர் பாபுநேசன்,துணை தலைவர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் கலந்துக்கொண்டு அரசின் பாடநூல்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி சிறப்புறையாற்றினார்.

    தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய் தனது சொந்த செலவில் 170 மாணவ-மாணவிகளுக்கு சிலேட், ரப்பர், பென்சில், நோட் ஆகிய கல்விஎழுதுப்பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

    முன்னதாக பள்ளிக்கு வருகைபுரிந்த மாணவ, மாணவிகளை கார்டூன் வேடமணிந்து சாக்லெட் கொடுத்து உற்சாக ப்படுத்தி வரவேற்றனர்.

    நிகழ்வில்முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கருணாமூர்த்தி உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

    • காலை, மாலை இரு வேளையும் வருகைப் பதிவும், புவிசாா்குறியீடு புகைப்படமும் எடுப்பதை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
    • செல்போன் செயலி மூலம் வருகை பதிவு மேற்கொண்டால் மட்டுமே ஊதியம் வழங்க இயலும்

    திருப்பூர்:

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் செல்போன் செயலி மூலம் கட்டாயம் வருகைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் அறிவுறுத்தியுள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அதிக வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    இதனால் ஜனவரி 1முதல் அனைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளும், 20 பேருக்கு மேல் பணிபுரியும் பணித் தளங்கள், 20 பேருக்கு குறைவாக பணிபுரியும் பணித்தளங்களில் உள்ளவா்கள் கட்டாயம் செல்போன் செயலி மூலம் காலை, மாலை இரு வேளையும் வருகைப் பதிவும், புவிசாா்குறியீடு புகைப்படமும் எடுப்பதை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.செல்போன் செயலி மூலம் வருகை பதிவு மேற்கொண்டால் மட்டுமே ஊதியம் வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளாா்.

    • நகா்மன்ற உறுப்பினா்களுக்கான சாதாராண கூட்டம் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. உறுப்பினா்களின் வாா்டுகளை புறக்கணிக்காமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    தாராபுரம் :

    தாராபுரம் நகராட்சியில் நகா்மன்ற உறுப்பினா்களுக்கான சாதாராண கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் தலைமை வகித்தாா்.இதில், பங்கேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் கூறுகையில், நகரில் தேங்கியுள்ள குப்பைகள் துரிதமாக அகற்ற வேண்டும். அ.தி.மு.க. உறுப்பினா்களின் வாா்டுகளை புறக்கணிக்காமல் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆழ்குழாய்களில் இருந்து குடிநீா் கொண்டு செல்லும் குழாய் உடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

    இதைத்தொடா்ந்து தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக 46 தீா்மானங்கள் நிறைப்பட்டன. இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் பாப்புகண்ணன் பேசுகையில், நகராட்சி அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு ஊழியா்களின் வருகை கண்காணிக்கப்படும். சொத்து வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு உரிய காலக்கெடுவுக்குள் சான்றிதழ்கள் வழங்க வேண்டும். அதே வேளையில் சான்றிதழ்கள் வழங்காவிட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றாா். இந்த கூட்டத்தில் நகா் மன்ற துணைத் தலைவா் ரவிசந்திரன், நகராட்சி ஆணையா் ராமா், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • சேலத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் அதிகளவில் இன்று வந்தனர்.
    • மக்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு சேலம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான தருமபுரி, நாமக்கல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

    தொடர் விடுமுறை காரணமாக கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இங்குள்ள அண்ணா பூங்கா, ஏரி பூங்கா,

    சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட் போன்ற சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் காணப்பட்டனர்.

    பொதுவாகவே வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள். தற்போது அதி களவில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு வருவதால் ஏற்காடு களைகட்டியுள்ளது. இங்குள்ள படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்து வருகின்றனர்.

    நீட் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த மாணவி, பீகார் பள்ளி இறுதி ஆண்டு தேர்விலும் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அவரது வருகைப்பதிவில் சர்ச்சை எழுந்துள்ளது. #NEET
    பாட்னா:

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. சார்பில் ‘நீட்’ தேர்வு கடந்த மே மாதம் 6-ந்தேதி நடந்தது. இதில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 922 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு கடந்த 4-ம் தேதி வெளியானது.

    இந்த தேர்வில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேசிய அளவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி முதலிடம் பிடித்தார். அவர் 720-க்கு 691 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இதேபோல, பள்ளி இறுதி ஆண்டு தேர்விலும் அவர் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

    விருப்பப் பாடமாக அறிவியல், கலை மற்றும் வணிகவியலை தேர்வு செய்து படித்த கல்பனா குமாரி, இந்த ஆண்டுக்கான இறுதித்தேர்வில் 500-க்கு 434 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரெகுலர் முறையில் படித்தது தெரியவந்துள்ளது.

    2 ஆண்டுகளாக டெல்லியில் நீட் பயிற்சி பெற்று வந்த அவர், பீகாரின் ஷெயோகரில் உள்ள பள்ளிக்கு எப்படி வந்து தினமும் பாடங்களை கவனித்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. போதிய வருகைப்பதிவு இல்லாமல் அவர் பள்ளி இறுதித்தேர்வு எழுதியது எப்படி எனவும் சர்ச்சை எழுந்தது.

    இதற்கு விளக்கமளித்துள்ள அம்மாநில கல்வித்துறை பத்தாம் வகுப்பு மற்றும் இறுதி ஆண்டு தேர்வுக்கு வருகைப்பதிவு அவசியமில்லை என தெரிவித்துள்ளது. 
    ×