என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auction"

    • 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.
    • வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.

     உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலின் திருவிழா சுற்றுவட்டார கிராமங்களின் திருவிழாவாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும் 28 -ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் திருவிழாவுக்காக ஆயத்தப்பணிகள் தொடங்குகிறது.இதனையடுத்து ஏப்ரல் 4 ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்குகிறது.விழாவின் உச்ச நிகழ்வான தேர்த்திருவிழா ஏப்ரல் 13 -ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.மேலும் 14 -ந் தேதி இரவு 10 மணிக்கு குட்டை திடலில் வாண வேடிக்கை நடைபெறவுள்ளது.

    அத்துடன் திருவிழா நாட்களில் வருவாய்துறைக்கு சொந்தமான 91 சென்ட் பரப்பளவுள்ள குட்டை திடலில் ராட்டினம்,மரணக்கிணறு உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ஏராளமான கடைகள் அமைக்கப்படும்.இவ்வாறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கான உரிமம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் வருவாய்த்துறையின் சார்பில் ஏலம் விடப்படும்.அந்தவகையில் நடப்பு ஆண்டில் வரும் ஏப்ரல் 7 ந் தேதி முதல் 14ந் தேதி வரை பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்காக குட்டை திடல் ஏலம் வரும் 27 ந் தேதி மதியம் 12 மணிக்கு உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    இந்த ஏலத்துக்காக அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ. 46 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பங்குத்தொகையான ரூ .11 லட்சத்து 50 ஆயிரத்தை அச்சார தொகையாக இன்று காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கேட்பு வரைவோலையாக (டி டி)செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டில் அரசு நிர்ணயித்த தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி பல முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.நடப்பு ஆண்டில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2ஆயிரத்து 395கிலோ நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ நிலக்கடலை காய் ரூ.75.80க்கு கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை, வெள்ளிக்கிழமை நிலக்கடலை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை,நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று வெள்ளிக்கிழமை விவசாயிகள் கலந்து கொண்டு 2ஆயிரத்து 395கிலோ நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ நிலக்கடலை காய் ரூ.75.80க்கு கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ.1லட்சத்து 81 ஆயிரத்து 578க்கு வணிகம் நடைபெற்றது.இத்தகவலை வெள்ளகோவில் ஒழு ங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • காலை 10:30 மணிக்கு தாராபுரம் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.
    • டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

    தாராபுரம் :

    தாராபுரம் தாலுகாவுக்குட்பட்ட தாராபுரம், மூலனூர், அலங்கியம் குண்டடம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது :- வழக்குகள் தொடர்பாக மொத்தம் 86 இருசக்கர வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் அவைகள் தாராபுரம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் தாசில்தாரால் வருகிற 5-ந் தேதி காலை 10:30 மணிக்கு தாராபுரம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது இடத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்குச் சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம்.

    தாராபுரம் போலீஸ் நிலையத்தில் 6, அலங்கியம் போலீஸ் நிலையத்தில் 26, குண்டடம் போலீஸ் நிலையத்தில் 20, மூலனூர் போலீஸ் நிலையத்தில் 34 என இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் 5-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம். பின்னர் மீதி தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 46ஆயிரத்து 471கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • அதிகபட்சமாக ரூ.51.39 க்கும், குறைந்தபட்சம் ரூ.44.59 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வார ம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 43 விவசாயிகள் கலந்து கொண்டு 46ஆயிரத்து 471கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்திவிதை அதிகபட்சமாக ரூ.51.39 க்கும், குறைந்தபட்சம் ரூ.44.59 க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ. 22லட்சத்து 6 ஆயிரத்து 843க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடே ஸ்வரன் தெரிவித்து ள்ளார்.

    • விவசாயிகள் 2ஆயிரத்து 194கிலோ நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • நிலக்கடலை அதிகபட்சமாக ரூ.79.20க்கும், குறைந்த பட்சமாக ரூ.77.80க்கும் கொள்முதல் செய்தனர்

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய ன்று தேங்காய் பருப்பு, வியாழனன்று சூரியகாந்தி விதை,வெள்ளிக்கிழமை நிலக்கடலை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர்,திருச்சி, திண்டுக்கல், மதுரை,திருப்பூர்,ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை,நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.நேற்று விவசாயிகள் 2ஆயிரத்து 194கிலோ நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ நிலக்க டலை காய் அதிகப ட்சமாக ரூ.79.20க்கும், குறைந்த பட்சமாக ரூ.77.80க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.1லட்சத்து 73ஆயிரத்து 287க்கு வணிகம் நடைபெற்றது.இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை க்கூட கண்காணிப்பாளர் சி.மகுடே ஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.97லட்சத்து 2 ஆயிரத்து 764-க்கு ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 66.43 1/2 குவிண்டால் எடை கொண்ட 19,749 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.20.16-க்கும், சராசரி விலையாக ரூ.24.89-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்து 202-க்கு தேங்காய் விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 253.74 குவிண்டால் எடை கொண்ட 509 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.76.60-க்கும், சராசரி விலையாக ரூ.83.19-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.06-க்கும், சராசரி விலையாக ரூ.74.35-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 31ஆயிரத்து 579-க்கு விற்பனையானது.

    எள்

    அதேபோல் 364.77 குவிண்டால் எடை கொண்ட 487 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.165.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.145.99-க்கும், சராசரி விலையாக ரூ.160.99-க்கும், வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.167.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.156.99-க்கும், சராசரி விலையாக ரூ.157.99-க்கும் என மொத்தம் ரூ.55 லட்சத்து 91 ஆயிரத்து 959-க்கு விற்பனையானது.

    நிலக்கடலை காய்

    அதேபோல் 263.17 குவிண்டால் எடை கொண்ட 780 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.16-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.67.29-க்கும், சராசரி விலையாக ரூ.80.39-க்கும் என மொத்தம் ரூ.20 லட்சத்து 29 ஆயிரத்து 24-க்கு நிலக்கடலை காய் விற்பனையானது.

    இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.97லட்சத்து 2 ஆயிரத்து 764-க்கு ஏலம் போனது.

    • கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
    • நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

    எடப்பாடி:கொங்கணாபுரத்தில்

    ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

    கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 3 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 550 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு ஏலம் நடந்தது. இதில் பி. டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ. 7 ஆயிரத்து 350 முதல் ரூ. 8 ஆயிரத்து 361 வரை விற்பனையானது. இதேபோல் டி. சி. எச். ரக பருத்தியானது, ஒரு குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 600 முதல் ரூ. 8 ஆயிரத்து 529. வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ. 4 ஆயிரத்து 250 முதல் ரூ. 6 ஆயிரத்து 50 வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

    • காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்டு காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு எவராலும் உரிமை கோரப்படாத 79 இருசக்கர வாகனங்கள் வருகிற 17- ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அணுகி அங்கு ஏலத்தில் விட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்.

    வாகனங்களை பார்வையிட விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்றோ அல்லது ஏலம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வரை வாகனங்களை பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்குள் முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஆதார் அடையாள அட்டையுடன் முன்வைப்பு தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவாள் மட்டும் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் ஏலம் நடக்கும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தை அவர்களது முழு பொறுப்பில் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • விண்ணப்பத்தினை 2.5.2023 அன்று மாலை 5மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வந்த சிவா ஈமு பார்ம்ஸ் என்றநிறுவனத்திற்கு பாத்தியப்பட்ட திருப்பூர் தெற்கு வட்டம்,நாச்சிபாளையம் கிராமத்தில் உள்ள நிலம் அதில் 494 சதுர மீட்டர் பரப்பளவுள்ள கட்டடம்,203.32 சதுர மீட்டர் பரப்பளவுள்ள சிமெண்ட் சீட் கட்டிடம் மற்றும் 5 ஆழ்துழாய்கிணறுகள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் 1997-ன் கீழ்தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் 4.5.2023அன்று முற்பகல் 11.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் (அறை எண்.240) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படஉள்ளது.

    மேற்கண்ட சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர், ஏலநிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சார்ஆட்சியர் அலுவலகம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது.

    ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம்உள்ளவர்கள் கலந்து கொள்ளவும் , நிறுவனத்திற்கு சொந்தமான மேற்படிஅசையா சொத்தினை நிலையில் உள்ள விதத்தில் உள்ளவாறே ஏலம் விடப்படும் எனவும்தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவ விண்ணப்பத்தினை 2.5.2023 அன்று மாலை 5மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.  

    • விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.
    • ஏப்ரல் 18 முதல் அடுத்த மாதம் மே 5-ந் தேதி வரை நடைபெறும்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஒன்றியம், பச்சாபாளையம் ஊராட்சி, கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கால்நடை சந்தை நடைபெறும். இந்த கால்நடை சந்தைக்கு ஏராளமான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவார்கள், கால்நடை சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.

    இந்த ஆண்டு 2023 ஏப்ரல் 18 முதல் அடுத்த மாதம் மே 5-ந் தேதி வரை நடைபெறும் கால்நடை சந்தை மற்றும் தற்காலிக கடைகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமம் ரூ. 79 ஆயிரத்து 700 க்கு ஏலம் விடப்பட்டது.

    • மதுவிலக்கு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 34 மோட்டார் சைக்கிள்கள் வருகிற 24-ந்தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே ஒரு வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம் முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடை மையாக்கப்பட்ட 34 மோட்டார் சைக்கிள்கள் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையம் அருகே உள்ள மது விலக்கு அமலாக்கப் பிரிவு வளாகத்தில் வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படுகிறது. இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முன்னீர் பள்ளத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ள லாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே ஒரு வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம் முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் தங்கள் பெயரை பதிவு செய்யும்போது தங்களது ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல் கொண்டு வர வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப் படுவார்கள். ஏலம் எடுத்த வுடன் முழுத் தொகை மற்றும் அரசால் விதிக்கப் படும் ஜி.எஸ்.டி. சேர்த்து முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம்.
    • மே 17-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

     காங்கயம்:

    காங்கயம் போலீஸ் நிலையம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் காவல் உட்கோட்டத்திற்குப்பட்ட காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    வழக்குகள் தொடர்பாக மொத்தம் 79 இருசக்கர வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் அவை காங்கயம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் தாசில்தாரால் வருகிற மே 17-ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது இடத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.

    ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம். காங்கயம் போலீஸ் நிலையத்தில் 62 வாகனங்களும், வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் 17 வாகனங்களும் என மொத்தம் 79 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் அடுத்த மாதம் மே 17-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×