என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barrier"

    • விளையாடி கொண்டிருந்த அமரன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கினான்.
    • வாய்க்கால் கரையை ஒட்டி தடுப்பு கம்பி அமைக்கப்படவில்லை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி செங்கல்மேடு கிராமம் கொடுக்கால்வலி தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம்-ரஞ்சிதா ஆகியோரின் இரண்டரை வயது மகன் அமரன்.

    அமரனை நேற்று அவரின் தாய் ரஞ்சிதா அழைத்துக் கொண்டு கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது அலுவலக வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அமரன், அலுவலகத்திலிருந்து 10 அடி தூரத்தில் உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டான்.

    தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் அதிகம் சென்று கொண்டிருப்பதால் சிறுவன் அமரனை அப்பகுதியில் உள்ளவர்கள் வாய்க்காலில் சென்று தேடினர்.

    பின்னர் கொள்ளிடத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் தெற்குராஜன் வாய்க்காலில் அமரனின் உடல் மிதந்ததை கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமரனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தெற்கு ராஜன் வாய்க்கால் கரையில் அஞ்சல் அலுவலகம் உள்ளது. பாதுகாப்பற்ற முறையில் அலுவலகம் எதிரே எந்த தடுப்புச் சுவரோ, தடுப்பு கம்பியோ வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி அமைக்கப்படவில்லை.

    அஞ்சல் அலுவலகம் எதிரே தெற்கு ராஜன் வாய்க்கால் கரையை ஒட்டி தடுப்புச் சுவர் அமைத்திருந்தால் கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பாக அமையும்.

    எனவே அனைத்து மக்களின் பாதுகாப்பு கருதி அஞ்சல் அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள்.
    • மீனவர்கள் மீன் பிடிக்க செய்வதற்கு ஏதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தேத்தாக்குடி தெற்கு, தேத்தாக்குடி வடக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் குளங்கள் புனரமைப்பு பணிகள் நடந்துவருகிறது.

    வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தேத்தாகுடி வடக்கு பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள், சிறுதலை காடு பகுதியில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செய்வதற்கு எதுவாக வனத்துறையுடன் இணைந்து சுமார் 3 கி.மீ தூரம் உள்ள சாலை மேம்பாடு உட்பட ரூ.1.25 கோடி செலவிலான வளர்ச்சி பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பெரியசாமி பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜூ, ஒன்றிய பொறியாளர்கள் மணிமாறன், அருள்ராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.
    • தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்.

    கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சரியான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் 240 டிஎம்சி காவிரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளது.

    காவிரி நீர் வீணாவதைத் தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே ஒவ்வொரு 10 கி.மீ. தூரத்திற்கு இடையே தடுப்பணை கட்டவேண்டும்.

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மதுரவாயல் பகுதியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டது வேதனை அறிக்கிறது.

    மாணவர்களின் தற்கொலைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம். பெற்றோர்களின் அழுத்தத்தால்தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    பெற்றோர் தங்களது விருப்பத்தை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். மத்திய அரசு உடனடியாக நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    அதேசமயம் தமிழகத்தில்தான் நீட் தேர்வால் அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

    தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றார்.

    அப்போது, பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் குத்தாலம் கணேசன் மற்றும் விமல், காமராஜ், லண்டன் அன்பழகன் உட்பட மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • தடையாணை மூலம் அ.தி.மு.க.வுக்கு தடுப்புசுவர் எழுப்பிட முடியாது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. வளர்ச்சிக்காக வும், தொண்டர்களின் நன்மைக்காகவும் எடுத்த அத்தனை முயற்சி களையும் நடத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டவ ர்கள் யார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன், அவர் தான் ஓ.பி.எஸ். அவர்தான் ஒத்துழையாமை இயக்கத்தின் தலைவராக இந்த நிமிடம் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

    நீதிமன்றத்திற்கு நீங்கள் எத்தனை முறை செல்வீர்கள் உரிமையில் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் செல்வீர்கள் இன்றைக்கு நீங்கள் கிடைத்த தீர்ப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்,

    உணர்வுபூர்வமாக, உளப்பூர்வமாக தொண்டர்கள் தலைமையை ஆதரிக்கும் போது அதை நீங்கள் தடையாணை வைத்து தடுப்பு சுவர் எழுப்பி விடலாம் என்று கனவு கண்டால், அது பகல் கனவாகவே தான் போகும். தவிர எந்த நாளும் நிலைத்து நிற்கிற தடுப்பு சுவராக இருக்காது,

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்றைக்கு அ.தி.மு.க. வலிவோடும், பொலிவோடும் திகழ்கிறது. அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்று வகையில் ஒன்றரை கோடி தொண்டர்களும் அவரை மனதார ஏற்றுக்கொள்கின்றனர்,

    ஏகமனதாக சீர்திருத்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் உங்களுக்கு என்ன மன வருத்தம், கட்சியின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்கு என்ன மனவருத்தம்.

    நீங்களும் அ.தி.மு.க. முகமாக அறியப்பட்டு உள்ளீர்கள். அதனால் தான் 15 முறை எடப்பாடியார் உங்களிடம் உடன்பட்டு பேச்சுவார்த்தை நடத்து வதற்கு எடுத்த முயற்சியில் நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வில்லை.

    அம்மா அரசு அமை வதற்கு நீங்கள் ஒத்துழை யாமை இயக்க தலைவராக உள்ளீர்கள். ஒத்துழைப்பு தரமாட்டேன் என்றும், உடன்பட்டு பணியாற்ற மாட்டேன். உழைக்க மாட்டேன், வேடிக்கை பார்ப்பேன், விமர்சனம் செய்வேன் என்றும், ஒத்துழையாமை இயக்க தலைவராக உள்ள உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததை தவிர கட்சியில் எந்த பிளவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பலத்த மழை மற்றும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாபநாசம் மலைப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சிங்கை:

    பாபநாசம் மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று பாபநாசம் அணை நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடும் வெள்ளம் காரணமாக தாமிரபரணி கரையோர மண்டபங்கள் மூழ்கியுள்ளன.

    பாபநாசம் மலைப்பகுதியில் அணைக்கு செல்லும் பாதையில் பழமையான பாலம் 1992-ம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த பகுதியில் தற்போது புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே காரையார் கோவில் மற்றும் அணைபகுதிக்கு செல்ல 1992-ம் ஆண்டிலேயே தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.

    தற்போது இந்த பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியே பொதுமக்கள் மற்றும் சுற்றுல பயணிகள், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அகஸ்தியர் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாபநாசம் செக்போஸ்ட் இன்று காலை மூடப்பட்டது. இதன் காரணமாக மலையில் உள்ள மின்வாரிய ஊழியர்கள், காணிக்குடியிருப்பு கிராம மக்கள் நகருக்குள் வர முடியாமல் தவித்துள்ளனர்.
    ×