என் மலர்
நீங்கள் தேடியது "Bees"
- மண்புழுக்கள் எப்படி வேளாண்மைக்கு நன்மை தருகிறதோ, அதே போல் தேனீக்களும் விளைச்சலுக்கு நன்மை தருகின்றன.
- பூக்களில் இருந்து மகரந்த சேர்க்கை செய்யும் போது, காய் பிடிப்பு அதிகரிக்கிறது.
குடிமங்கலம் :
காய்கறி மற்றும் பழத்தோட்டங்களில் தேனீ வளர்த்தால் 30 சதவீதம் மகசூல் அதிகரிக்கும் என தோட்டக்கலை த்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது :- மண்புழுக்கள் எப்படி வேளாண்மைக்கு நன்மை தருகிறதோ, அதே போல் தேனீக்களும் விளைச்சலுக்கு நன்மை தருகின்றன. இந்த விபரம் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை.தேனீக்கள் காய்கறி செடிகள் மற்றும் பழச்செடிகளில் உள்ள பூக்களில் இருந்து மகரந்த சேர்க்கை செய்யும் போது, காய் பிடிப்பு அதிகரிக்கிறது.
பல்வேறு மலர்களில் இருந்து தேனீக்கள் தேனை சேகரிக்கும் போது மகரந்த கலப்பு ஏற்பட்டு நல்ல விளைச்சல் கிடைக்கிறது. அதனால் காய்கறி மற்றும் பழப்பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் தேனீ பெட்டி வைத்து தேனீ வளர்ப்பது நல்லது.இதன் மூலம் தோட்டப்பயிர்களின் மகசூல் 30 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்தோடு தேன் மூலமும் வருமானம் கிடைக்கும்.தோட்டக்கலை துறை சார்பில் தேனீ வளர்க்கும் பெட்டி, மானிய விலையில் வழங்கப்படு கிறது. தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 1000 தேனீ பெட்டிகள் வழங்கப்ப ட்டன. இந்த ஆண்டு இரண்டாயிரம் தேனீ பெட்டிகள், தேன் பூச்சியுடன் வழங்கப்படுகிறது. தேனை பிரித்து எடுக்கும் கருவியும் மானியத்தில் பெறலாம். தேனீ வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். தேவையான உதவியும், ஆலோசனையும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- தொண்டூர் ஊராட்சி பூதேரியில் கன்னிமார் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- அப்போது அருகில் இருந்த புதரில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொட்டியது.
விழுப்புரம்:
வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தொண்டூர் ஊராட்சி பூதேரியில் கன்னிமார் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த புதரில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொட்டியது. இதனால் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் அக்கம் பக்கத்தில் சிதறி ஓடினார்கள். ஆனாலும் 26 பேரை தேனீக்கள் கொட்டியது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மேல்ஒலக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் .அங்கு முதலுதவி பெற்ற அவர்கள் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினார்கள்.
- 26 பெண் தொழிலாளர்கள் மினி மேனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர்.
- தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 26 பெண்களும் காயமடைந்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் போன்ற பகுதிகளில் தேனீக்கள் கொட்டியதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது தொடர்கதையாகி வருகிறது. இதேபோன்று ஒரு சம்பவம் நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே நடந்துள்ளது. இந்த சம்பவம் வருமாறு:-
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று 26 பெண் தொழிலாளர்கள் மினி மேனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மினிவேனை விட்டு கீழே இறங்கியதும் அந்தப் பகுதியில் இருந்த தேனீக்கள் திடீரென அந்த 26 பெண் தொழிலாளர்களையும் கொட்டத் தொடங்கியது. இதனால் அந்த பெண்கள் அலறடித்து ஓடினர். எனினும் தேனீக்கள் அவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 26 பெண்களும் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர்கள் பின்னர் சிறிது நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
- பரமத்தி வேலூர் தாலுகா சின்ன மருதூர் காலனியில் கிளுவமரம் உள்ளது.
- இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சின்ன மருதூர் காலனியில் கிளுவமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.
இந்நிலையில் அந்த சாலையின் வழியாக செல்லும் பொதுமக்களை மலைத் தேனீக்கள் தீண்டி அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து சின்ன மருதூர் காலனியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வேலாயுதம்பாளை யம் தீயணைப்புத் துறை யினரிடம் புகார் மனு கொடுத்து மலைத் தேனீக்களை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தார்.
அதன் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கிளுவ மரத்தில் கூடுகட்டி இருந்த ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
- தென்னை மரத்தில் பெரிய அளவில் மலைத்தேனீக்கள் கூடு இருந்தது.
- அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை தேனீக்கள் தீண்டி தொல்லை கொடுத்து வந்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் காந்தி மற்றும் சம்பத். இவர்களது விவசாய தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் தென்னை மரங்கள் பயிர் செய்துள்ளார். அங்கிருந்த தென்னை மரத்தில் பெரிய அளவில் மலைத்தேனீக்கள் கூடு இருந்தது. அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை தேனீக்கள் தீண்டி தொல்லை கொடுத்து வந்தது. மேலும் அப்பகுதிகளில் விவசாய பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.பொதுமக்களால் தேன் கூட்டை அகற்ற முடியாததால் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து வந்து தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து முழுமையாக அகற்றினார்கள் .இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
- வனவிலங்கு அட்டகாசத்தை தடுத்து மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.
- காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் யானைகளை விரட்டும் சிறப்பு வகை தேனீக்கள் உரிய பகுதிகளில் வளர்க்கப்படும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கின்றன. அங்கு மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை, கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.
அவ்வாறு புகும் வன விலங்குகள் மனிதர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை கொன்றுவிடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிக அளவில் நடந்து வருகின்றன. வயநாடு மாவட்டம் வானந்தவாடி பகுதியில் கடந்த மாதம் அஜி என்பவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
வீட்டு காம்பவுண்ட் சுவரை உடைத்துக் கொண்டு புகுந்த காட்டு யானை, அஜியை மிதித்து கொன்றது. இந்த சம்பவம் வயநாடு மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வயநாடு மாவட்டத்தில் குர்வா தீவு அருகே வனத்துறை வழிகாட்டி பால் என்பவரும் காட்டு யானை தாக்கி பலியானார். வயநாடு மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்குள் காட்டு யானை தாக்கி 3 பேர் பலியாகி விட்டனர்.
இதற்கிடையே வயநாடு மாவட்டத்தில் சில இடங்களில் புலி மற்றும் சிறுத்தையும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் பீதிக்கு உள்ளாகினர். வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மனித மற்றும் வனவிலங்கு மோதலை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.
வனவிலங்கு அட்டகாசத்தை தடுத்து மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்க, யானைகள் புகும் பகுதிகளில் சிறப்பு தேனீக்களை வளர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:-
மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வனத்துறை தலைமையகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 36 வனப்பிரிவுகளில் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்படும்.
காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் யானைகளை விரட்டும் சிறப்பு வகை தேனீக்கள் உரிய பகுதிகளில் வளர்க்கப்படும். இந்த தேனீக்கள் கரடிகளை ஈர்ப்பதால், அவை கரடி இல்லாத பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
வனவிலங்குகள் தாக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை செய்ய ஊராட்சி அளவில் வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கப்படும். மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட சுமார் 900 தற்காலிக கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதற்காக வயநாடு வனப்பகுதியில் 341 குளங்களும், இடுக்கியில் 249 குளங்களும் பராமரிக்கப்படுகின்றன. தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணியும் பரிசீலனையில் உள்ளது.
வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.13.70 கோடியில் ரூ.6.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.7.26 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.
இவ்வாறு முதல்- மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வீடியோவைப் பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட்டுக்கு சென்றார்.
அப்போது அவர் தனது ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்து பார்க்கும் போது ஆட்டோவில் பெரிய அளவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ஹைச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கதாநாயகனாக தோன்றி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்
- மேத்யூ படப்பிடிப்புக்காக கடினமான சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் 'இன்டெர்ஸ்டெல்லார்' படத்தின் கதாநாயகனாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் நடிகர் மேத்யூ மெக்கானஹே. இவர் நடிப்பில் வெளியான 'உல்ப் ஆப் வால் ஸ்டிரீட்' 'டாலஸ் பையர்ஸ் கிளப்', 'தி ஜென்டில்மேன்' ஆகியவை பேசப்பட்ட படங்கள் ஆகும். இன்டர்டெல்லாருக்கு அடுத்த படியாக இவர் நடித்த 'ட்ரூ டிடக்டிவ்ஸ்' வெப் சீரிஸுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மேத்யூ தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது முகம் வீங்கிய நிலையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் அவரது வலது புற கண்கள் வீங்கிய நிலையில் உள்ளன. தேனீக்கள் கொட்டியதால் அவருக்கு இந்த வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது படப்பிடிப்பின்போது ஏற்பட்டுள்ளதா என்று படத்தைப் பார்த்து கலவலையடைந்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாகவே மேத்யூ படப்பிடிப்புக்காக கடினமான சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர். கடந்த 2008 ஆம் ஆண்டு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அவரது முகத்தில் அவரே கடுமையான காயங்களை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'டாலஸ் பையர்ஸ் கிளப்' படத்தில் ஹைச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கதாநாயகனாக தோன்றி தனது அபாரமான நடிப்பை மேத்யூ வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடதக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மேல்மலையனூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் விவசாயி பலியானார்.
- ஏரிக்கரையில் வரும்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை கொட்டிவிட்டன.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(66) விவசாயி. நேற்று முன்தினம் (5-ந்தேதி) முருகேசன் மாடுகளை மேய்த்துவிட்டு வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். ஏரிக்கரையில் வரும்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை கொட்டிவிட்டன. இதனால் அலறித்துடித்த முருகேசனை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் முருகேசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழுப்புரம் அருகே இன்று 15 மாணவர்கள் தேனீக்கள் கொட்டியதில் மயக்கம் அடைந்தனர்.
- சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் விரைந்துவந்து மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்த்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வடவாம் பாளையத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்தை சுற்றிலும் ஏராளமான மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த மரங்களில் தற்போது தேனீக்கள் அதிக அளவில் கூடுகட்டி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இயற்கை உபாதைக்காக மரத்தடி யில் ஒதுங்குவது உண்டு. அதன்படி இன்று காலை 9.30 மணி அளவில் மாணவர்கள் மரத்த டிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்து படை யெடுத்து வந்த தேனீக்கள் மாண வர்களை கொட்டியது. இதனால் அவர்கள் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் 15 மாணவர்கள் தேனீக்கள் கொட்டியதில் மயங்கினர். சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் விரைந்துவந்து மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலு வலர் காளிதாஸ் விரைந்து சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள மொரட்டுப்பாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 58).
வீட்டில் கண் திருஷ்டிக்காக வைக்கப்படும் ஆகாச கிழங்குகளை இவர் சேகரித்து திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விற்பனை செய்து வந்தார்.
இவரும் மேலும் 2 பேரும் சேர்ந்து துலுக்கம்பாளையம் பகுதியில் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் தேனீக்கள் தேன் கூடு கட்டி இருந்ததை கண்டனர்.
இந்த கூட்டை அழித்து தேன் எடுக்க சுப்பிரமணியத்திடம் அனுமதி கேட்டு தேன் கூட்டை அழித்து தேன் சேகரித்து கொண்டிருந்தனர்.
தேனீக்களை விரட்டியடிக்கும் ஒருவித பொடியை தூவி தேன் எடுத்த போது கருப்புசாமியை தேனீக்கள் சூழ்ந்து சரமாரியாக கொட்டியது.
இதில் மயங்கி விழுந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு குஞ்சாள் (55) என்ற மனைவியும், சுரேஷ் என்ற ஒரு மகனும், பூங்கொடி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
கருப்புசாமியின் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
கொளத்தூரை அடுத்த மாங்காடு பகுதியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 237 மாணவர்களும், 213 மாணவிகளும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று உலக கை கழுவும் தினம் என்பதால் அப்பள்ளி ஆசிரியர்கள் கை கழுவதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு சோப் வழங்கி கை கழுவ செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பள்ளியின் பின்புறம் இருந்து வந்த தேனீக்கள் கூட்டம் அங்கிருந்த மாணவ-மாணவிகளை கொட்டியது. இதில் மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓடினர்.
இதைத்தொடர்ந்து அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்டு காயம் அடைந்த 30 மாணவ- மாணவிகளும் கொளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்களும் பள்ளிக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர். தேனீக்கள் கொட்டியதில் அதிகம் பாதிப்படைந்த குபேரன் என்ற 9-ம் வகுப்பு மாணவனும், அவனை பள்ளிக்கு அழைத்து வந்த அவனது தந்தை ராஜவேல் என்பவரும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. தகவல் அறிந்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை பாதிப்புக்குள்ளான மாணவ-மாணவிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சந்தித்து பேசினார்.