என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bjp mla"

    • தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் பயணம்.
    • டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம் செய்துள்ளார்.

    தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    டெல்லிக்கு சென்றுள்ள நயினார் நாகேந்திரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அடுத்த வாரம் பாஜக மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி வர உள்ள நிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • இந்த வழக்கில் பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
    • தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக கூறி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவின் சன்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்ஷப்பா, கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு மூலப்பொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை தனி நபர் ஒருவர் கோரி உள்ளார். ஒப்பந்தம் வழங்க கமிஷன் வழங்க வேண்டும் என்று அந்த தனி நபரிடம் எம்எல்ஏவின் மகன் பிரசாந்த் மதல் பேரம் பேசியுள்ளார். அதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டதையடுத்து, ரூ.81 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளது.

    அதில், ரூ.40 லட்சத்தை முன்பணமாக கொடுப்பதாக பிரசாந்த் மதலிடம் அந்த தனி நபர் தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் பணத்தைக் கொடுக்கும்போது மறைந்திருந்த லோக்ஆயுக்தா லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பிரசாந்த் மதலை கையும் களவுமாகப் பிடித்தனர். மேலும், அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்திய லோக்ஆயுக்தா போலீசார், அங்கு கணக்கில் வராத ரூ.8 கோடி பணத்தை கைப்பற்றி உள்ளனர். மேலும், பிரசாந்த் மதலை கைது செய்ததுடன், எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக எம்எல்ஏவின் மகன் லஞ்ச வழக்கில் சிக்கிய விவவாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏவை போலீசார் தேடுவதை அறிந்ததும், அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதற்கிடையே தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து எம்எல்ஏ மதல் விருபாக்ஷப்பா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது குடும்பத்தினருக்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தன் மீது குற்றச்சாட்டு இருப்பதால், தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக கூறி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    • கர்நாடக மாநிலத்தில் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாஜக எம்எல்ஏ-வின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
    • ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மடல் விருபக்ஷப்பா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் மடல் விருபக்ஷப்பா பெற்றிருந்த முன்ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி மடல் விருபக்ஷப்பாவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த நிலையில், ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மடல் விருபக்ஷப்பா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    ஒப்பந்தம் வழங்க மடல் விருபக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மடல் ரூ. 40 லட்சத்தை லஞ்சமாக வாங்கும் போது கையும் களவுமாக சிக்கினார். கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜெண்ட் லிமிடெட் (கே.எஸ்.டி.எல்.) தலைவராகவும் இருந்த வந்த மடல் விருபக்ஷப்பா மகன் லஞ்சம் வாங்கி சிக்கியதை அடுத்து, தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

    கே.எஸ்.டி.எல். நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க பாஜக சட்டமன்ற உறுப்பினர் தனது மகன் மூலம் லஞ்சம் பெற முயற்சித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 8 கோடியே 23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கை விசாரித்த நீதிபதி கே நடராஜன் சன்னகிரி சட்டமன்ற உறுப்பினர் விருபக்ஷப்பாவின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஒப்பந்தம் வழங்க மொத்தத்தில் ரூ. 81 லட்சம் வரை லஞ்சமாக கேட்டுள்ளார். இதற்காக ரூ. 40 லட்சம் முன்பணமாக கேட்டிருக்கிறார். இதனை தனது அலுவலகத்தில் வைத்து பெறும் போதே சிக்கினார். 

    • இதை "தயங்காமல் அவ்வாறு செய்யுங்கள்" என்று அங்கு போஸ்டரிலும் குறிப்பிட்டுள்ளார்.
    • ஆயுதத்தை வீச வரும் எவரும் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

    மணிப்பூர் மாநிலத்தில் போலீசிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களை சேகரிக்க பாஜக எம்எல்ஏ ஒருவர் டிராப் பாக்ஸ் ஒன்றை அமைத்துள்ளார்.

    பாஜக எம்எல்ஏ லீஷாங்தெம் சுசிந்த்ரோ மெய்டே, மணிப்பூரின் கிழக்கு இம்பாலில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஒரு டிராப் பாக்ஸை அமைத்துள்ளார். அதில், மாநிலம் முழுவதிலும் இருந்து போலீசார் மற்றும் ஆயுதக் களஞ்சியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மக்கள் இந்த டிராப் பாக்ஸில் கைவிடும் வகையில் அமைத்துள்ளார்.

    மேலும் இதை "தயங்காமல் அவ்வாறு செய்யுங்கள்" என்று அங்கு போஸ்டரிலும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆயுதத்தை வீச வரும் எவரும் விசாரிக்கப்பட மாட்டார்கள் அல்லது அவரது அடையாளத்தை வெளிப்படுத்தும்படி கேட்கப்பட மாட்டார்கள் என்றார்.

    • சிறுமிகளை அன்புடன் பொதுவெளியில் சந்தித்ததாக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் விளக்கம்
    • தவறாக சித்தரிக்கும் வகையில் இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளதாக மாநில அமைச்சர் கண்டனம்.

    மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கவுரிசங்கர் பிசென், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் சிறுமிகளை தவறான கண்ணோட்டத்துடன் தொடுவதாக குற்றஞ்சாட்டி இது சம்மந்தமாக ஒரு வீடியோவை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர் ட்வீட் செய்து பகிர்ந்தனர்.

    மத்தியபிரதேச காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்தியில் இருக்கும் இந்த வீடியோவை வெளியிட்டு, இது "வெட்கக்கேடான செயல்" என தெரிவித்து, பிசெனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    பாலாகாட் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த சம்பவம் நடந்ததாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

    ஆனால், இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த பா.ஜ.க., சிறுமிகள் தொடர்பான வீடியோவை ட்வீட் செய்ததற்காக எதிர்க்கட்சியான காங்கிரஸை கண்டித்ததுடன், இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது.

    மாநில பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா கூறும்போது, "இந்த சிறுமிகள் அவரது (பிசென்) பேத்தியின் வயதுடையவர்கள். பிசென், அவர்களை அன்புடன் பொதுவெளியில் சந்திக்கிறார்" என கூறினார்.

    மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சரும், அரசின் செய்தித்தொடர்பாளருமான நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், "இது காங்கிரஸின் கீழ்த்தரமான மனநிலையை பிரதிபலிக்கிறது. கேவலமான அரசியலின் காரணமாகவே, பெண்கள் மீதான அவரது (பிசென்) பாசத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் வீடியோவை காட்டிய விதம் வெட்கக்கேடானது. குறிப்பாக சிறுமிகளின் அடையாளத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்சினையை நாங்கள் சட்டப்பூர்வமாக அணுகுவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்," என்றார்.

    • ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதற்காக சென்றபோது தன்னை கைது செய்ததாக எம்எல்ஏ தெரிவித்தார்.
    • இரு சமூகங்களைச் சேர்ந்த 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் கஜ்வேல் நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையின் பீடத்தின்மீது கடந்த திங்கட்கிழமை இரவில் ஒரு நபர் போதையில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுநீர் கழித்த நபரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரை அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தனர்.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு சமூகத்தினரும் தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். பதற்றம் அதிகரித்ததையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில், பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் இன்று கஜ்வேல் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அல்வால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதற்காக கஜ்வேல் சென்றபோது தன்னை தடுப்பு காவலில் வைத்திருப்பதாக எம்எல்ஏ தெரிவித்தார்.

    இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கஜ்வேலில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இரு குழுக்களைச் சேர்ந்த 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள்' என்றார்.

    • சுமார் 11 மணிக்கு மெய்தி இன மக்கள் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கும்பலாக திரண்டனர்.
    • இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுசிந்ரோ என்பவர் வீடு உள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    கடந்த ஜூலை மாதம் அந்த மாநிலத்தில் காணாமல் போன மாணவன்-மாணவி 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் அந்த மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஒரு வாரமாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்கள் சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவு சுமார் 11 மணிக்கு மெய்தி இன மக்கள் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கும்பலாக திரண்டனர்.

    அவர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர் குகி இன மக்கள் வாழும் பகுதிகளில் ரகளையில் ஈடுபட்டனர். போக்குவரத்தையும் துண்டித்தனர்.

    இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுசிந்ரோ என்பவர் வீடு உள்ளது. அவரது வீட்டை தகர்க்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு படையினர் உரிய நேரத்தில் தலையிட்டதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த ஜூன் மாதமும் அவரது வீட்டை தகர்க்க முயற்சி நடந்தது.

    மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த சமூக வலை தளங்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் சேவை இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. என்றாலும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.

    • 2014-ம் ஆண்டு சிறுமி பலாத்காரம் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
    • பின்னர் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    உத்தர பிரதேச மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். இவர் மீது கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.

    சம்பவம் நடைபெற்றபோது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை. தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதால் வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த நிலையில்தான் நேற்று விசாரணை முடிவில் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. மேலும், நாளை மறுதினம் (டிசம்பர் 13) வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்றபோது ராம்துலார் கோண்ட் மனைவி பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.

    இரண்டு வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் ராம்துலார் பதவி விலக நேரிடும்.

    • கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.
    • எம்.பி., எம்.எல்.ஏ. வழக்க விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.

    சம்பவம் நடைபெற்றபோது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை. தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதால் வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    வழக்கில் விசாரணை முடிந்ததும், நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்தது. எனினும், இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட ராம்துலாருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து சோன்பத்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால், ராம்துலார் கோந்த் மக்கள் பிரதிநிதகள் சட்டப்படி எம்.ஏ.எல். பதவியை இழந்துவிட்டார்.

    • விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    சென்னை:

    புதுச்சேரி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கல்யாண சுந்தரம் . இவர் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார் இந்த தேர்வில் தனித் தேர்வலராக அவர் பங்கேற்றார். அப்போது இவருக்கு பதில் வேறு ஒருவர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.

    இது குறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியது. இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு அவரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிறப்பித்தார்.

    போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    சண்முகசுந்தரம் அமைச்சராக இருந்த போது என்.ஆர்.காங்கிரசில் இருந்தார். தற்போது காலாபட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    • விழா மேடையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை.
    • காவலரை அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    புனேவில் உள்ள சாசன் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுத் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார், சுகாதாரத்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவீந்திர தங்கேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது விழா மேடையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் விரக்தி அடைந்து மேடையில் இருந்து கீழே இறங்கிய போது சுனில் காம்ப்ளே தடுமாறினார். அப்போது கோபமடைந்த அவர் பாதுகாப்பு பணிக்காக படிக்கட்டில் நின்றிருந்த காவலரை கன்னத்தில் அறைந்தார்.


    இதை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்ளே அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். துணை முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் எம்.எல்.ஏ. ஒருவர் காவலரை அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    இதனிடையே காவலரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ. சுனில் காம்ப்ளேவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குற்றச்சாட்டுகளை மறுத்த காம்ப்ளே, "நான் யாரையும் தாக்கவில்லை. நான் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவர் வழிமறித்து வந்தார். அவரைத் தள்ளிவிட்டு முன்னால் சென்றேன்" என்று கூறியுள்ளார்.

    காவலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 353, அதாவது அரசு ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல் அல்லது குற்றவியல் செயலின் கீழ் காம்ப்ளே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வழக்கில் கைது.
    • 2010ம் ஆண்டு முதல் 2020 வரை கைலாஷ் பதவி வகித்துள்ளார்.

    மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விய்வர்கியா.

    இவர், கடந்த 2019ம் ஆண்டு அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய் வர்கியா இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்தூர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக 2010ம் ஆண்டு முதல் 2020 வரை கைலாஷ் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×