search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blackmail"

    • அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.
    • இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார்.

    இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தமிழில் இடிமுழக்கம், 13, கிங்ஸ்டன் ஆகிய படங்களை லைன் அப்பில் வைத்துள்ளார். மேலும் இசையமைப்பாளராக தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் சூர்யாவின் 45வது படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இவர் சமீபத்தில் இசையமைத்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு படங்களிலும் பாடல் மிகப்பெரியளவில் ஹிட்டானது.

    இதனிடையே பிளாக் மெயில் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    டி. இமான் இசையமைக்கிறார் மற்றும் சான் லோகேஷ் படத் தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். சமீபத்தில் வெளியான 'பிளாக்' படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த கோகுல் பெனாய் படத்தின் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார்.

    இந்த நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் படக்குழு பகிர்ந்துள்ளது. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • மும்பையில் சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார்.
    • பாபா சித்திக் கொல்லப்பட்டதையடுத்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.

    பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் அச்சுறுத்தல் உள்ள நிலையில், சமீபத்தில் அவரது வீடு அருகே துப்பாக்கி சூடு நடந்தது.

    இதற்கிடையே மும்பையில் சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டது.

    மும்பை போக்குவரத்து போலீசின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ரூ.5 கோடி கேட்டு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாக ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் ஷேக் ஹுசைன் ஷேக் மவுசின் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.

    அதேபோல் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தயீப் அன்சாரி (வயது20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில் சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் அனுப்பிய தகவலில், நடிகர் சல்மான்கான் ரூ.2 கோடி தராவிட்டால் அவரை கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தார். அந்த மர்ம நபர் மீது மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மிரட்டல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய பகுதிகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
    • சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்ரமணிய சாமி தனியார் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    இந்திய பகுதிகளைத் தொடர்ந்து சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.

    இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனப்படைகளை ஏற்கனவே நாம் இரு முறை விரட்டியுள்ளோம்.

    நம்மிடம் உள்ள ராணுவ வலிமையால் சீனா ஆக்கிரமித்த பகுதிகளை எளிதில் கைப்பற்றிவிடலாம். ஆனால் பிரதமர் மோடி அதை செய்வதில்லை. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது.

    சீனா பிரதமர் மோடியை பிளாக்மெயில் செய்வதற்கான காரணத்தை தேர்தலுக்குப் பிறகு வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

    மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வரக்கூடாது என கடந்த மாதம் கருத்து தெரிவித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடன் வாங்கியவர்கள் பணத்தை செலுத்திய பிறகும் வீட்டு பத்திரங்களை கொடுக்காமல் கந்து வட்டி கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரிய மாயாகுளத்தை சேர்ந்தவர் கலீல் ரகுமான். இவர் ராமநாதபுரத்தில் மிளகாய் கமிசன் கடை வைத்திருந்த போது வட்டிக்கு பணம் கொடுக்கும் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கலீல் ரகுமான் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டதால் கங்காதரனிடம் சென்று பணம் கேட்டார். 100 ரூபாய்க்கு 1 ரூபாய் வட்டி வீதம் ரூ.4 லட்சம் பெற்று மாதம் தவறாமல் வட்டி செலுத்தி வந்துள்ளார்.

    உறவினர்களுக்கு பணம் தேவைபட்டால் வாங்கி கொடுங்கள் என்று கூறியதால் கலீல் ரகுமான் உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ள 19 பேருக்கு மொத்தம் ரூ.46 லட்சம் கடனாக பெற்றுகொடுத்தார். அந்த பணத்திற்கு பதிலாக 19 பேரின் வீட்டு பத்திரங்களை வாங்கி கொடுத்தார்.

    பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் பணம் வாங்கிய சிலர் வட்டி செலுத்த முடியாமல் போனதால் ரூ.100-க்கு 3 ரூபாய், 100 ரூபாய்க்கு 10 ரூபாய், 100 ரூபாய்க்கு 13 ரூபாய் வட்டி வீதமும் மற்றும் அபராத தொகையும் சேர்த்து ரூ.1 ½ கோடி கட்டினர்.

    பெரும்பாலானோர் அசல் தொகையை செலுத்தி விட்டதால் அசல் தொகை அனைத்தையும் வட்டி தொகையில் வரவு வைத்து தற்போது ரூ.50 லட்சம் தர வேண்டும் என்று கங்காதரன் மிரட்டியுள்ளார். பணம் பெற்றவர்கள் அசல் தொகை செலுத்தியதால் வீட்டு பத்திரத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை.

    ரூ.46 லட்சம் அசல் தொகைக்கு ரூ. 1 ½ கோடி செலுத்தியும் கங்காதரன் பத்திரத்தை கொடுக்காமல் அடியாட்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து மிரட்டி உள்ளார். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையிடம் கலீல் ரகுமான் மனைவி உம்முல் ஹபீபா புகார் செய்தார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை கைது செய்தனர்.

    உத்தரப்பிரதேசம் அருகே காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. #KalindiExpress
    கான்பூர்:

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர்-பிவானி இடையே ஓடும் காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.10 மணிக்கு பாரஜ் பூர் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது.

    அப்போது அந்த ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் ரெயிலின் மேல் கூரையில் உள்ள பிளைவுட் சேதம் அடைந்தது.

    கழிவறையில் வெடித்ததால் பயணிகள் காயமின்றி தப்பினர். குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து வந்து பார்வையிட்டனர். அது பட்டாசை விட சற்று சக்தி வாய்ந்தது என தெரிவித்தனர். இதனால் பயணிகள் தப்பினர்.

    குண்டு வெடித்ததும் புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பெயரில் ரெயில் நிலையத்துக்கு மிரட்டல் வந்தது.

    சம்பவ இடத்துக்கு பயங்கரவாத தடுப்பு படை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சிறிது நேர தாமதத்துக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் ரெயில் புறப்பட்டுச் சென்றது. #KalindiExpress
    திருமங்கலத்தில் மணல் எடுப்பதை கண்டித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் பகுதியில் சிலர் ஆற்றுப்படுகையில் மணல் எடுத்து வந்தனர். இதனை ராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 49) உள்பட 10 பேர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மணல் எடுத்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். கிருஷ்ண மூர்த்தியும் வீட்டிற்குச் சென்று விட்டார்.

    மறுநாள் காலை அவர் வீட்டில் இருந்தபோது அலம்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் அம்சு பாண்டி (31), தனுஷ்கோடி மகன் ராஜேஷ் (31) ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் மணல் எடுப்பதை ஏன் தடுக்கிறாய்? என கேட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக திருமங்கலம் தாலுகா போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அம்சு பாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    ×