என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bloody camp"
- மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
- கல்லூரியை சேர்ந்த 200 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் வரதராஜன், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் என்.விஜயகுமார், நிலைய மருத்துவர் கோவிந்தராஜ், கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமை திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலைமங்கலம் பாலு தொடங்கி வைத்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டல இணை இயக்குனர் தஞ்சை தனராஜன் சிறப்புரையாற்றினார்.
ரத்ததான முகாமில் கல்லூரியை சேர்ந்த 200 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.
அவர்களில் தேர்வு செய்யப்பட்ட 50 ரத்த தானம் வழங்கினர்.
இரத்தம் சேகரிக்கும் பணியை மன்னார்குடி ரத்த வங்கி பொறுப்பு மருத்துவர் காத்தி காயினி தலைமையிலான மருத்துவ குழுவினர் இரத்தம் சேகரித்தனர்.
ரத்ததான முகாமை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மன்னார்குடி வட்ட கிளை துணைத்தலைவர் என். ராஜப்பா, மன்னார்குடி இரத்தக்கொடையாளர்கள் ஒருங்கிணைப்பு மைய பொறுப்பாளர் கார்த்தி கேயன், கவிஞர் தங்கபாபு ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
- தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 37-வது அமைப்பு தினத்தையொட்டி அவிநாசியில் ரத்த தானம் நடைபெற்றது.
- ரத்த தான முகாமில் 20 போ் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.
அவிநாசி:
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 37-வது அமைப்பு தினத்தையொட்டி அவிநாசியில் ரத்த தானம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தாா்.
இதில், கண் சிகிச்சை, ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், இசிஜி, எக்கோ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. முகாமில் 300-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை செய்துகொண்டனா்.
மேலும், ரத்த தான முகாமில் 20 போ் பங்கேற்று ரத்த தானம் செய்தனா்.நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட தலைவா் சாந்தி, மாவட்ட செயலாளா் செந்தில்குமாா், துணைத் தலைவா் ரமேஷ் குமாா், மாவட்ட, வட்டார கிளை நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
- ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா ரத்த தானம் செய்தார்.
தஞ்சாவூர்:
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் எழிலன் ஆலோசனையின் பேரில் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையேற்று தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாவது ஆளாக தானாக முன்வந்து ரத்த தானம் செய்தார்.
இந்த முகாமில் தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான முருகானந்தம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வாசுகி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தஞ்சை மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயக்குமார், திருச்சி விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் வசந்த், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வேல்முருகன், கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் கற்பகம் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 75 மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்.
- உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நாட்டுநலப்பணித்திட்டம் இணைந்து இலவச ரத்ததான முகாமினை கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடத்தியது.
- மாணவர்களுடன் சேர்ந்து முதுகலை வணிகவியல் துறை பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர் கோபிநாத் உள்பட 75 பேர் ரத்ததானம் செய்தனர்.
புதுச்சேரி:
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நாட்டுநலப்பணித்திட்டம் இணைந்து இலவச ரத்ததான முகாமினை கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடத்தியது. கல்லூரியின் முதல்வர் கா.உதயசூரியன், முன்னாள் இளைஞர் செஞ் சிலுவைச் சங்கத்தின் தலைவர் சிவராமச்சந்திரன் ஆகியோர் முகாமினை தொடங்கி வைத்தனர்.
புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் ரத்த வங்கிப் பிரிவு மருத்துவ அலுவலர் டாக்டர் வடிவேலு மற்றும் அவரது மருத்துவக் குழுவினரும் ரத்த தான முகாமினை நடத்தினர். மாணவர்களுடன் சேர்ந்து முதுகலை வணிகவியல் துறை பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர் கோபிநாத் உள்பட 75 பேர் ரத்ததானம் செய்தனர். கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, இணை ஒருங்கிணைப்பாளர் கணேஷ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரியசெல்வம் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- சான்றிதழ் மற்றும் மரக்கன்று வழங்கப்பட்டது
- 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் அம்ஜத் பாஷா தலைமையில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அசேன் முன்னிலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தௌபிக் பிர்கத் மாவட்ட செயலாளர் பாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் தொகுதி செயலாளர் தென்னரசு, தொகுதி பொறுப்பாளர்கள் பாஸ்கரன், கார்த்திகேயன், நரேந்திரன், முகம்மது காசிம், கண்மணி, ராஜா, லட்சுமிபதி, அய்யப்பன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குருதி நன்கொடை கொடுத்த தோழர்களுக்கு அரசு டாக்டர் ஷோபனா சான்றிதழ் மற்றும் மரக்கன்று வழங்கினார்.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் பகுதியில் உள்ள இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கமும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது.
முகாமிற்கு கல்லூரி செயலாளர் எம். கோபால் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் புவனேஸ்வரி கண்ணன், செயலாளர் மலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் எம். ஸ்ரீனிவாசன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்எல்ஏ கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வர், ரோட்டரி சங்கத்தினர் உட்பட 50 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை கோ.செந்தில்குமார் எம்எல்ஏ வழங்கினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் எஸ். சரவணன், முன்னாள் தாசில்தார் பிதாம்பரம், உதயகுமார், செல்வம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, குமார், நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர்அஹமத், நவீன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லையப்பர் கோவில், சாலைக்குமாரர் கோவில், மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்டகணபதி விநாயகர் கோவில்களில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
- சிறப்பு அழைப்பாளராக ராம் சினிமாஸ் உரிமையாளர் ராமசாமி ராஜா கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடக்கி வைத்தார்.
நெல்லை:
நடிகர் விஜய் 48-வது பிறந்தநாள் இன்று கொண்டா டப்பட்து. இதை முன்னிட்டு மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் படி நெல்லை மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று இருக்கன்குடி மாரியம்மன் கோவில், நெல்லையப்பர் கோவில், சாலைக்குமாரர் கோவில், மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்டகணபதி விநாயகர் கோவில்களில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் அங்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ரத்ததான முகாம் ராம் சினிமாஸ் வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு நெல்லை மாவட்ட தொண்டரணி தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ராம் சினிமாஸ் உரிமையாளர் ராமசாமி ராஜா கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் கார்த்திகேயன் பெருமாள், ஜோசப் ரத்தீஷ், திருக்குமரன், மெட்டி சரவணன், ரமேஷ், மைதீன், சிந்து டேனியல், மகாராஜா, பேட்டை பீர், பழனிவேல், அண்டோவளன், திம்மை கார்த்திக், கிங்ஸ்டன், கணேஷ், அய்யப்பன், தளபதி அரவிந்த், சுரேஷ், சிவந்தி விஜய் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.தொடர்ந்து முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம், மனவளர்ச்சி குன்றியோர், ஆதரவற்றவர்களுக்கும் உணவு வழங்கப்படடது. மேலும் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பென்சில், பேனா வழங்கப்பட்டது. முன்கள பணியாளர்களுக்கு அரிசி, பெண்களுக்கு சேலைகள், ஏழை மாணவியின் கல்விக்கு காசோலை வழங்குதல் உள்ளிட்டவை நெல்லை மாவட்ட தலைமை தொண்டரணி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்