என் மலர்
நீங்கள் தேடியது "Bopanna pair"
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, ரஷியாவின் ரோமன் சபியுலின் - கஜகஸ்தானின் ஆண்ட்ரூ கொலுபேவ் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற நேர்செட்டில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
- இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ரோம்:
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, இத்தாலியின் பிரான்செஸ்கோ பாஸாரோ-மேட்டியோ அர்னால்டி ஜோடியுடன் மோதியது.
இதில் ஆரம்பம் முதலே போபண்ணா ஜோடி அபாரமாக செயல்பட்டது. இறுதியில், போபண்ணா ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, குரோசியாவின் நிகோலோ மெடிக்-நெதர்லாந்தின் வெஸ்லி ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை போபண்ணா ஜோடி 6-7 (5-7) என போராடி தோற்றது. இதில் சுதாரித்துக் கொண்ட போபண்ணா ஜோடி 2வது செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் போபண்ணா ஜோடி 12-14 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஆஸ்திரியா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ்-ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஜோடி உடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 2-6, 7-5, 10-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் காலிறுதியில் போபண்ணா ஜோடி அமெரிக்காவின் நீல் கப்ஸ்கி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியுடன் மோதுகிறது.
- வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரியா:
வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, அமெரிக்காவின் நீல் கப்ஸ்கி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 7-6 (9-7) 4-6, 8-10 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
பாரீஸ்:
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெப்டன் ஜோடி, குரோசியாவின் நிகோலா மெக்டிக்- நெதர்லாந்தின் வெஸ்லி கூலுப் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-7 (13-15), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறியது.
கடந்த அக்டோபரில் நடந்த வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரிலும் போபண்ணா ஜோடி காலிறுதியில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வென்றது.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, குரோசியாவின் இவான் டோடிக்-பிரான்சின் கிறிஸ்டினா மிலாடெனோவிச் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 12 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.
இதில் ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 4-6, 9-11 என இழந்து தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ஆண்கள் இரட்டையரில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-போர்ச்சுகலின் நுனோ போர்கஸ் ஜோடி, இத்தாலியின் அண்ட்ரியா வவசோரி-சைமன் போலேலி ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி 7-6 (7-2), 7-6 (7-4) என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.