என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Boxes"
- தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேனி பெட்டிகள்.
- ரூ.4 ஆயிரம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பெட்டிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை வட்டாரத்தை சேர்ந்த 40 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு 2 தேனி பெட்டிகள் வீதம் தலா ரூ.4 ஆயிரம் மதிப்பில் (ரூ.3 ஆயிரத்து 200) மானியத்துடன் கூடிய தேனி பெட்டிகளை விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
அருகில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயபாலன் ஆகியோர் உள்ளனர்.
- வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரி தலைமை ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது.
- ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 6 குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரி தாலுக்கா மருத்துவமனையாகவும், தலைமை மருத்துவ–மனையாகவும் செயல்பட்டு வருகிறது.
இங்கு இறப்புக்குள்ளாகும் மற்றும் அடையாளம் தெரியாத இறந்தவர்களை பாதுகாக்க ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 6 குளிர்சாதன பெட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கி, அதன் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். தலைமை மருத்துவர் முருகப்பா வரவேற்றார்.
இந்த நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், துணைத் தலைவா் அறிவழகன், மாவட்ட கவுன்சிலரும், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான சுப்பையன், நகரச் செயலாளர் நமசிவாயம் உட்பட கட்சி நிர்வாகிகளும், முன்னாள், இந்நாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள் கட்சி பிரமுகர்கள் மாரியப்பன், தோப்புத்துறை அமானுல்லா, அம்மா பேரவை ஜின்னாஅலி உட்பட மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- அறைகள் முழுவதும் குட்கா மற்றும் பான் மசாலா புகையிலை பொருட்களை நிரப்பி வைத்துள்ளனர்.
- 98 அட்டை பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமாரின் உத்தரவு படி "ஆப்ரேஷன் கருடா" என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை அழித்து வருகின்றனர்.
அந்த வகையில் சிறப்பு காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான போலீசார் ஆவூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டின் முன் பகுதியில் டீ தூள் மற்றும் கோதுமை மாவு போன்ற பொருட்களை ஏஜெண்ட் எடுத்து செய்வது போல், பொதுமக்களை நம்ப வைத்து, வீட்டின் மற்ற அறைகள் முழுவதும் குட்கா மற்றும் பான் மசாலா புகையிலை பொருட்களை நிரப்பி வைத்துள்ளனர்.
இதில், 65 மூட்டைகள் மற்றும் 98 அட்டை பெட்டிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு சுமார் ரூ. 25 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து நபர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
- பட்டுக்கோட்டைக்கு மதியம் 1.13 மணிக்கு வந்தடைந்து மீண்டும் சென்னை எழும்பூருக்கு இரவு 9.50 மணிக்கு சென்றடைகிறது.
- ராமேஸ்வரம் பகுதிக்கு வியாழக்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூர் செகந்திராபாத் பகுதிகளுக்கும் செல்லலாம்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு 16 வருடங்களுக்கு பிறகு திருவாரூர்-பட்டுக்கோட்டை -காரைக்குடி ரெயில் தடத்தில் முதன் முறையாக செகந்திரபாத்தில் இருந்து சென்னை வழியாக ராமேஸ்வரத்திற்கு விரைவு ரெயில் இயக்கப்படும்.
சிறப்பு விரைவு ரெயிலுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் நாளை வரவேற்பு அளிக்கப்–படுகிறது.
தென்மத்திய ரெயில்வே சார்பில் இன்று 24-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண் 07695) இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நல்கொண்டா குண்டூர் தெனாலி ஓங்கோல் நெல்லூர் கூடூர் வழியாக மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்து, தொடர்ந்து செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு மாலை 4.50 மணிக்கு வருகிறது.
தொடர்ந்து அறந்தாங்கி- காரைக்குடி- சிவகங்கை- மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்று அடைகிறது.
மீண்டும் இந்த ரெயில் (வண்டி எண் 07696) இதே வழி தடத்தில் ராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.50 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு மதியம் 1.13 மணிக்கு வந்தடைந்து மீண்டும் சென்னை எழும்பூருக்கு இரவு 9.50 மணிக்கு சென்றடைகிறது.
அதனைத் தொடர்ந்து செகந்திராபாத்திற்கு சனிக்கிழமை நண்பகல் 12.50 மணிக்கு சென்றடைகிறது.
இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் புதன்கிழமைகளில் இரவு செகந்தராபாத்தில் புறப்பட்டு வியாழக்கிழமை சென்னை எழும்பூர் பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு இரவு சென்று சேரும். மீண்டும் ராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமைகளில் காலை புறப்பட்டு பட்டுக்கோட்டை சென்னை வழியாக செகந்திரா பாத்திற்கு சனிக்கிழமைகளில் நண்பகலில் சென்று சேரும்.
இந்த ரெயில் மூலமாக பட்டுக்கோட்டை பகுதி மக்கள் ராமேஸ்வரம் பகுதிக்கு வியாழக்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூர் செகந்தி ராபாத் பகுதிகளுக்கும் செல்லலாம்.
இந்த ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் 5, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 10, முதல் வகுப்பு குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2 சரக்கு மற்றும் மேலாளர் பெட்டிகள் 2 ஆக மொத்தம் 21 ரெயில் பெட்டிகளை கொண்டிருக்கும்
இந்த சிறப்பு விரைவு ரெயிலுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை மாலை 4.50 மணிக்கு வாழை மரங்கள் தோரணங்கள் கட்டி வாணவேடிக்கைகளுடன் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்