என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boxing Day Test"

    • ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.

    மெல்போர்ன்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் 'பாக்சிங் டே' நாளான டிசம்பர் 26-ம் தேதி அன்று ஏதாவது ஒரு அணி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடிக் கொண்டு இருக்கும்.

    மெல்போர்னில்... 1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சில காரணங்களால் சில ஆண்டுகள் அந்த போட்டியை குறிப்பிட்ட நாளில் நடத்த முடியாமல் போய் இருக்கிறது. என்றாலும் 1980-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

    அந்த வகையில் இந்த முறை 'பாக்சிங் டே'யில் தென் ஆப்பிரிக்க அணி மல்லுக்கட்டுகிறது.

    பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்ட் வெறும் 2 நாளுக்குள் முடிந்து போனதால் அது தரமற்ற ஆடுகளம் என்று கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து மெல்போர்ன் ஆடுகளம் சர்ச்சைக்கு இடமில்லாமல் மிக நன்றாக அமைய வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் 36 வயதான டேவிட் வார்னருக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 14-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை பெறும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக சதம் அடிக்காத ஏக்கத்தை தணிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 12 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டிருக்கிறது.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மெல்போர்ன் மைதானத்தில் 80 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் பார்க்க முடியும்.

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் கடந்த 14-ந்தேதி முதல் டெஸ்ட் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் பாக்சிங் டெஸ்டாக டிசம்பர் 26-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கம்மின்ஸ், 2. ஸ்காட் போலந்து, 3. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), 4. ஹேசில்வுட், 5. டிராவிஸ் ஹெட், 6. உஸ்மான் கவாஜா, 7. லபுசேன், 8. நாதன் லயன், 9. மிட்செல் மார்ஷ், 10. ஸ்டீவ் சுமித், 11. மிட்செல் ஸ்டார்க், 12. டேவிட் வார்னர், 13. கேமரூன் க்ரீன்.

    மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்க முடியும். கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாளான 26-ந்தேதி மைதானம் ரசிகர்களால் முழுமையான நிறைந்திருக்கும்.

    • இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்கும்.
    • மிடில் ஆர்டர் வரிசையில் ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் களம் இறங்குவார்கள்

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது.

    கிறிஸ்துமஸ் விழாவிற்கு அடுத்த நாள் தொடங்கும் டெஸ்ட் "பாக்சிங் டே" டெஸ்ட் என அழைக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாடிய கையோடு ஏராளமான ரசிகர்கள் போட்டியை பார்க்க வருவார்கள். இந்த போட்டிக்கான ஆடும் லெவன் இவ்வாறாகத்தான் இருக்கும் என சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.

    கவாஸ்கர் கணித்துள்ள இந்திய ஆடும் லெவன் அணி:-

    ரோகித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், ஜடேஜா, அஸ்வின், முகேஷ் குமார், பும்ரா, முகமது சிராஜ்.

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். சுப்மன் கில் 3-வது வீரரராகவும், விராட் கோலி 4-வது வீரராகவும் களம் இறங்க வாய்ப்புள்ளது.

    ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மிடில் ஆடவர் வரிசையில் களம் இறங்குவார்கள். இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள். இந்த நேர சூழ்நிலையை பொறுத்து 5-வது வீரர் யார் என்பது முடிவு செய்ய வாய்ப்புள்ளது.

    இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார்.

     நாளை செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் தொடங்கும் நிலையில், 2-வது டெஸ்ட் ஜனவரி 3-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது.

    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படுகிறது.
    • செஞ்சூரியன் மைதானத்தில் 3 டெஸ்டில் ஆடியுள்ள இந்திய அணி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படுகிறது. 'பாக்சிங் டே' என்றால் ஒருவருக்கொருவர் சண்டையிடும் நாள் என்று அர்த்தம் கிடையாது. இந்த பெயருக்கு சில சுவாரஸ்யமான வரலாறு உண்டு.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, கனடா போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். ஆலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள். மறுநாள் டிசம்பர் 26-ந்தேதி அன்று அந்த பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்குவார்கள். இப்படியாக பாக்சை திறக்கும் நாளை 'பாக்சிங் டே' என்று அழைக்கிறார்கள்.

    தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் சீசனில் குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது அவர்களது முதலாளிகள் சிறப்பு பரிசாக கிறிஸ்துமஸ் பாக்ஸ் வழங்கும் பழக்கம் இருந்தது. இதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    இன்னொரு காரணமும் உண்டு. முந்தைய காலத்தில் காற்றால் இயக்கப்படும் கப்பல்களில் மேற்கொள்ளப்படும் பயணம் ஆபத்து இன்றி பாதுகாப்பாக அமைய வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பணம் அடங்கிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். பயணம் நிறைவு பெற்றதும் அந்த பெட்டி பாதிரியாரிடம் ஒப்படைக்கப்படும். கிறிஸ்துமஸ் அன்று அது திறக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும். இதுவும் 'பாக்சிங் டே' பெயருக்கு ஒரு அச்சாரமாக சொல்லப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நாளை (பிற்பகல் 1.30 மணி) தொடங்குகிறது. இதுவும் 'பாக்சிங் டே' என்றே அழைக்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மோதலை தவிர்த்து மற்றபடி 'பாக்சிங் டே' அன்று தங்கள் நாட்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது.

    'பாக்சிங் டே' போட்டி நடக்கும் செஞ்சூரியன் மைதானத்தில் 3 டெஸ்டில் ஆடியுள்ள இந்திய அணி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2-வது நாளில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர்.
    • 30.5 ஓவரில் 131 ரன்கள் எடுப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா ஆல்அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போரன் மைதானத்தில் "பாக்சிங் டே" டெஸ்டாக நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டேவிட் வார்னர் (38), கவாஜா (42) நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

    மழைக்காரணமாக நேற்றைய ஆட்டத்தின் பெரும்பகுதி ஆட்டம் தடைபட்டதால் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலியா 66 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 44 ரன்களுடனும், டிராவிட் ஹெட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய லபுசேன் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் வெளியேறினார்.

    அதன்பின் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கடைநிலை வீரர்கள் அலேக்ஸ் கேரி (4), ஸ்டார்க் (9), கம்மின்ஸ் (13), லயன் (8) அடுத்தடுத்து ஆட்மிழந்தனர். மிட்செல் மார்ஷ் 41 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 318 ரனனில் ஆல்அவுட் ஆனது.

    இன்று 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 131 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆமிர் ஜமால் 3 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. அந்த அணி 13 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது.

    • பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் (62), ஷான் மசூத் (54) நல்ல தொடக்க கொடுத்தனர்.
    • கம்மின்ஸ் 5 விக்கெட்டும், லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தி பாகிஸ்தான் கட்டுப்படுத்தினர்.

    மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் (62), ஷான் மசூத் (54) நல்ல தொடக்க கொடுத்தனர். இருந்த போதிலும் பாபர் அசாம் (1), சாத் ஷஹீல் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரிஸ்வான் பொறுப்புடன் நின்று விளையாட நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. ரிஸ்வான் 29 ரன்களுடனும், ஆமிர் ஜமால் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஸ்வான் மேலும் 13 ரன்கள் சேர்த்து 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜமால் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுக்க பாகிஸ்தானில் முதல் இன்னிங்சில் 264 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், நாதன் லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

    • சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சமியை அதிகமாக மிஸ் செய்கிறது.
    • முகமது சமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார்.

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர், ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி, 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இன்றைய 3-ம் நாள் உணவு இடைவெளி வரை 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியை அதிகமாக மிஸ் செய்வதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சமியை அதிகமாக மிஸ் செய்கிறது. பந்து வீச்சு படைக்கு ஒரு தலைவனாக முகமது சமி செயல்படுவார். பும்ராவுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பார். இந்த பிட்ச் பந்தின் சீம் பகுதியை பிடித்து வீசும் பவுலர்களுக்கு சாதகமானது என்பதை போல் தெரிகிறது.

    முகமது சமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார். இந்திய அணி அவரை அதிகமாக மிஸ் செய்கிறது என்பது உறுதி. ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் 27 ஓவர்கள் வீசி 118 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.

    இன்னொரு பக்கம் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் 31 ஓவர்கள் வீசி 111 ரன்களை தான் விட்டுக் கொடுத்துள்ளனர். சிராஜும் கொஞ்சம் ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், அவரால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் வீச முடிந்துள்ளது.

    ஒவ்வொரு பந்தை வீசும் போது சிராஜ் அல்லது பும்ரா ஆகியோர் விக்கெட்டுக்கு அருகில் சென்று வருகின்றனர். அதுபோன்ற உணர்வை களத்தில் அளிக்கிறார்கள். ஆனால் ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பதை போல் தெரிகிறது.

    என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்கள் உள்ளது.
    • 4-வது டெஸ்ட் போட்டி மெர்ல்போனில் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட்டில் இந்தியாவும் 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் உள்ளது. இதனையடுத்து 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி கப்பா மைதானத்தில் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து 4-வது டெஸ்ட் போட்டி மெர்ல்போனில் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில் 4-வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. இந்த டெஸ்ட் போட்டி பாக்சிங் டே போட்டியாக நடைபெற உள்ளது. பொதுவாகவே, டிசம்பர் 26-ம் தேதி துவங்கும் டெஸ்ட்களை பாக்சிங் டே டெஸ்ட் என அழைப்பார்கள்.

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் துவங்கும் போட்டிகளை பாக்சிங் டே போட்டி என ஒவ்வொரு ஆண்டும் விளையாடப்படுகிறது. இதனால் இந்த போட்டிகளுக்கு ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பார்கள். மெர்போர்ன் ஒரு லட்சம் பார்வையாளர்கள் பார்க்ககூடிய அளவில் மிக பெரிய ஸ்டேடியம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் துவங்கும் போட்டிகளை பாக்சிங் டே போட்டி என அழைப்பர்.
    • 4-வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட்டில் இந்தியாவும் 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மழையினால் டிரா ஆனது.

    இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் உள்ளது. இதனையடுத்து 4-வது டெஸ்ட் போட்டி மெர்ல்போனில் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் போட்டி பாக்சிங் டே போட்டியாக நடைபெற உள்ளது. பொதுவாகவே, டிசம்பர் 26-ம் தேதி துவங்கும் டெஸ்ட்களை பாக்சிங் டே டெஸ்ட் என அழைப்பார்கள்.

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் துவங்கும் போட்டிகளை பாக்சிங் டே போட்டி என ஒவ்வொரு ஆண்டும் விளையாடப்படுகிறது. இதனால் 4-வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.

    இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி புதிய லுக்கில் இருக்கும் விடியோவை ஆஸ்திரேலியாவின் பிரபல சிகையலங்கார நிபுணர் ஜோர்டான் தபக்மேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், 'கிங்'கிற்கு புத்தி கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. விராட்கோலி எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்" என்று ஜோர்டான் தபக்மேன் பதிவிட்டுள்ளார். கோலியின் இந்த புதிய லுக் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • 4-வது டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் 2 மாற்றங்கள் கொண்டுவரப்பட்டள்ளது.
    • காயம் காரணமாக விலகி ஹசில்வுட்டுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் போலண்ட் இடம் பெற்றுள்ளார்.

    இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

    3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போனில் தொடங்குகிறது.

    இந்த போட்டியில் விளையாடும் ஆடும் லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில் 2 மாற்றங்கள் கொண்டுவரப்பட்டள்ளது. அதில் காயம் காரணமாக விலகி ஹசில்வுட்டுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் போலண்ட் இடம் பெற்றுள்ளார்.

    அதேபோல் தொடக்க வீரர் நாதன் மெக்ஸ்வீனிக்கு பதிலாக 19 வயது இளம் வீரரான சாம் கான்ஸ்டாஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

     

    4-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா வீரர்கள் விவரம்:-

    உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்ட்.

    • ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • இத்தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இணைவார் என கூறப்பட்டுள்ளது.

    புலவாயோ:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நாளை புலவாயோவில் தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரரான ரஷித் கான் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து வெளியான தகவலின் படி, ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் ஒரு தொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்.

    அதேசமயம் இத்தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 311 ரன்கள் குவித்தது.
    • ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர். 

    அதன்படி 87 ஆயிரத்து 242 ரசிகர்கள் இந்த போட்டியை நேரில் கண்டு களித்துள்ளனர்.

    ×