என் மலர்
நீங்கள் தேடியது "bridge collapse"
- பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
- ஜார்கண்டில் ஒரு பாலமும் இடிந்து விழுந்துள்ளது.
நாடு முழுவதும் பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் தற்போது தொடர்கதையாகியுள்ளது.
பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. ஜார்கண்டில் ஒரு பாலமும் இடிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் மேலும் ஒரு பாலம் இடிந்து விழும் வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த வெள்ளிக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
உத்தரகாண்டில் பெய்துவரும் கனமழையால் கங்கை, அலக்நந்தா, பாகீரதி, சாரதா, மந்தாகினி, கோசி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் உத்தரகாண்டில் பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மான் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது.
- பீகாரில் ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம் இதுவாகும்.
பீகார்:
பீகாரில் பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகியுள்ளது. அவ்வகையில் நேற்று மாலை மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது.
அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மான் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது.
2008ல் கட்டப்பட்ட இந்த பாலம், 2017ல் ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2021ல் புனரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பீகாரில் ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம் இதுவாகும். ஏற்கனவே பாலம் விபத்துகள் தொடர்பாக 15 பொறியாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
- விபத்தில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
- ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
ஷாங்லூ நகரில் உள்ள ஜாஷுய் கவுண்டியில் அமைந்துள்ள பாலம், நேற்று மாலை பெய்த கனமழையாலும் அதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இடிந்து விழுந்துள்ளது.
காலை நிலவரப்படி 11 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. பாலம் இடிந்து விழுந்ததில், ஏராளமான வாகனங்களும் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டன.

இதில், ஆற்றில் விழுந்த ஐந்து வாகனங்களை மீட்புக் குழுவினர் மீட்டதாகவும், மாயமானவர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புப் பணிகளுக்கு கூடுதலாக ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அவசர மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் தேசிய விரிவான தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு 736 பேர், 76 வாகனங்கள், 18 படகுகள் மற்றும் 32 ஆளில்லா விமானங்களை மீட்புப் பணிகளுக்காக அனுப்பியுள்ளது.
விபத்து குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறுகையில், "மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க, மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை முழுவதுமாக மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
கொல்கத்தாவில் உள்ள மேஜெர்ஹட் மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலத்துக்கு கீழே சென்ற வாகனங்கள் மற்றும் ஆட்கள் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் இதுவரை உயிர்சேதம் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் மேற்குவங்காள மந்திரி ஃபிர்ஹத் ஹக்கீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி பொதுப்பணித்துறை மற்றும் ரெயில்வே நிர்வாகம் தான் இந்த மேம்பாலத்தின் பராமரிப்பு பணிகளுக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்றும், மேம்பாலத்துக்கு கூடுதல் பராமரிப்பு அளித்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி குறிப்பிட்டுள்ளார். #kolkatabridgecollapse
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மேஜெர்ஹட் என்ற மேம்பாலத்தின் ஒருபகுதி இன்று மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த பின் பேசிய மந்திரி ஃபிர்ஹத் ஹக்கீம், இந்த மேம்பாலம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும், தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து பகுதியில் இருந்து 6 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில், டார்ஜிலிங்கில் இருக்கும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளம் திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், மீட்பு பணிகளை கண்காணித்து வருவதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த மேம்பால விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‘கொல்கத்தாவில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது மிகவும் துரதிஷ்டவசமானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் இறைவனை வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #kolkatabridgecollapse
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் தமிழகத்துக்கு உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதையொட்டி மேட்டூர் 2 முறை நிரம்பியது. உபரி தண்ணீர் அனைத்தும் பாசனத்துக்காக திருப்பி விடப்பட்டது.
காவிரி தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் வழியாக திருச்சி முக்கொம்பை வந்தடைந்தது. இங்கிருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பாக கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்தது.
இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதில் குறிப்பாக கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிட கரையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் நேற்று முன்தினம் தடுப்பு சுவர் உடைப்பு ஏற்பட்டது.
இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்று வெள்ளம் கரையில் மோதி ‘எல்’ வடிவ திருப்பத்தில் சென்று திரும்பும். இதனால் ரூ.64 கோடி செலவில் ஆற்றுக்குள் 20 அடி ஆழம் முதல் 60 அடி ஆழம் வரை சிமெண்ட் கான்கிரீட் முனைகள் அமைத்து அதன்மேல் சுமர் 1200 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் கடந்த 2013-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
இந்நிலையில் அளக்குடி கிராமத்தில் கொள்ளிட கரையில் ஏற்பட்ட உடைப்பால் சுற்றியுள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. முதலைமேடு, முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ள மணல், மேலவாடி ஆகிய 5 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
கொள்ளிடம் ஆற்றில் தற்போது 1 லட்சம் கனஅடி வரை தண்ணீர் ஆக்ரோஷமாக பாய்ந்து செல்கிறது. இதனால் கரையில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வேகமாக ஊருக்குள் சென்றது.
இதற்கிடையே இதுபற்றி தகவல் கிடைத்ததும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி கரை உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றின் தண்ணீர் வேகத்துக்கு, சீரமைப்பு பணிகள் கைகொடுக்கவில்லை.
இதையடுத்து பெரம்பலூர் மாவட்டததில் ராட்சத பாறாங்கற்கள் கொண்டு வரப்பப்பட்டு கரையோரம் அடுக்கி வைக்கப்பட்டன. அதன் மேல் மணல்மூட்டைகள் கொண்டு ராட்சத தடுப்பு போன்று அமைக்கப்பட்டது. இந்த முயற்சி ஓரளவு பலன் அளித்து வருகிறது.
இதற்கிடையே அளக்குடியில் ஏற்பட்ட கரை உடைப்பை இன்று 2-வது நாளாகவும் பொதுப் பணித்துறையினர் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் சீரமைத்து வருகின்றனர்.
இதற்கிடையே கரை உடைப்பு காரணமாக முதலைமேடு, முதலைமேடு திட்டு, நாதல்படுகை, வெள்ள மணல், மேல வாடி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் தவித்து வருகின்றனர். அவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, துணிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்த 5 கிராமங்களிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இவைகளை உடனடியாக மீட்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் அளக்குடி கிராமத்தில் மற்றொரு இடத்திலும் கரை உடைப்பு ஏற்பட்டது. சுமார் 7 மீட்டர் அளவுக்கு ஏற்பட்ட உடைப்பை பொதுப் பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, நாகை சிறப்பு திட்ட செயற்பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர் பார்வையிட்டு அங்கேயே முகாமிட்டு உடைந்து விழும் பகுதிகளிலும் கரையின் மறுபுறம் சிதைந்துள்ள பகுதிகளிலும் பாறை கற்களை போட்டு அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கரை உடைப்பு காரணமாக அளக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு, கத்தரி, நெல் பயிர்கள் சேதமாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். #kollidamriver
முக்கொம்பு அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்தால் பாதுகாப்பு கருதி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. தற்போது 1 லட்சத்து 67 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது.
இதனால் அந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1928-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இரும்பு பாலம் சேதம் அடைந்தது. அந்த பாலத்தை தாங்கி நிற்கும் ஆறாவது தூணில் கடந்த புதன்கிழமை இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது.
இந்த விரிசல் நேற்று முன்தினம் காலை மேலும் அதிகமானது. இதனால் அந்த தூண் அப்படியே தண்ணீருக்குள் இறங்கியபடியே சென்றது. நேற்று காலை சுமார் 10 அடி ஆழத்திற்கு தண்ணீருக்குள் இறங்கியது. எனவே இந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இந்த பாலத்தை நேற்று இரண்டாவது நாளாக ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கலெக்டர் ராசாமணி ஆகியோர் கூறியதாவது:-
கொள்ளிடத்தில் மேலும் நீர் திறப்பு அதிகரிக்கும் பட்சத்தில் ஆறாவது தூண் முற்றிலுமாக தண்ணீருக்குள் இறங்கி பாலத்தின் அந்த பகுதி அப்படியே இடிந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பாலத்தில் யாரும் செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பாலத்தை இப்போது உடனடியாக இடிக்க முடியாது.
கொள்ளிடத்தில் தண்ணீர் முற்றிலுமாக வற்றிய பின்னர் தான் தொழில் நுட்ப குழு தயாரிக்கும் திட்டத்தின் அடிப்படையில் அரசுக்கு கருத்துரு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் பின்னர் தான் பாலத்தை இடிக்கும் பணி தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார். #TNMinister #VellamandiNatarajan