என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cars"
- ஐதராபாத்தில் கன்டெய்னர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் 8 கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
ஐதராபாத்:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத் நோக்கி கன்டெய்னர் லாரி, புதிய கார்களை ஏற்றிக்கொண்டு நேற்று வந்தது.
அந்த லாரி தேசிய நெடுஞ்சாலை 65-ல் சென்று கொண்டிருந்தபோது ஜகீராபாத் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில், அந்த லாரியில் இருந்த 8 கார்களும் எரிந்து நாசமடைந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் கார்கள் எரிந்து சாம்பலாகின.
விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான்.
- சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ஷிவாம்ஸ். அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவரும் இந்த சிறுவன் ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது.
சிறுவனுக்கு கார்கள் மீதான மோகம் காரணமாக தனது 3 வயதில் ஏற்பட்டிருக்கிறது. அதில் இருந்து பல கார்களின் பெயரை லோகோவை பார்த்ததும் கூறிவிடுவான். இந்நிலையில் சிறுவன் ஷிவாம்ஸ் ஒரே நேரத்தில் 200 கார்களின் பெயரை கூறி உலக சாதனை படைத்துள்ளான்.
சிறுவனின் சாதனை நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. அப்போது 33 வினாடிகளில் 50 கார்களின் பெயரையும், 1.57 நிமிடத்தில் 110 கார்களின் பெயரையும் லோகோவை பார்த்து சரியாக கூறினான். இதன் காரணமாக 'டைம் வோல்ட் ரெக்கார்ட்ஸ்' சார்பில் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
- பிப்ரவரில் 3,73,177 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன
- கார்கள் விற்பனை பிப்ரவரியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது
கடந்த ஆண்டு பிப்ரவரியில் கார்கள் 3,35,324 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரில் 3,73,177 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் கார்கள் விற்பனை பிப்ரவரியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
தொழில்துறை மதிப்பீட்டின்படி இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் விற்பனையான 3,35,324 யூனிட்களை விட 11.3 சதவீதம் அதிகம். உள்நாட்டு சந்தையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட பயணிகள் வாகன விற்பனையில் 3-வது சிறந்த மாதமாக பிப்ரவரி அமைந்துள்ளது.
உள்ளூர் சந்தையில் விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை பிப்ரவரியில் அதிகரித்துள்ளது. மஹிந்திரா வாகன விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் வாகனங்கள் மாதாந்திர விற்பனை 23,300 ஆக உள்ளது
- சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
- பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை முன்னே சென்று கொண்டிருந்த கார் ஓன்று திடீரென பிரேக் போட்டதால், அதன் பின்னே வந்த மற்றொரு கார், மற்றும் சரக்கு வேன் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர்.
- வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.
திருப்பூர் :
தங்களது சொந்த கார்களை வாடகைக்கு இயக்குவோர் மீது எடுக்க ப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்துதுறை உத்தரவிட்டுள்ளது.
பலரும் தங்கள் சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனர். நேரடியாக உரிமையாளரே இயக்கியும் அல்லது ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர். இதனால் வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து அவ்வப்போது புகார்கள் வந்தாலும், வட்டார போக்குவரத்து துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது இல்லை.இதனால், விதிமீறல் தொடர்கிறது. இதை தடுக்க சொந்த வாகனங்களை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தொடர்பாக சிறப்பு சோதனை, தணிக்கை நடத்த வேண்டும். சோதனை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜ், அனைத்து போக்குவரத்து மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியு ள்ளார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ.,க்களுக்கும் விரிவான உத்தரவு அடுத்தடுத்து வர உள்ளது.
திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கூறுகையில், வாடகைக்கு இயக்கும் சொந்த வாகனங்கள் குறித்து அவ்வப்போது கண்காணிக்க ப்படுகிறது.பொதுமக்கள் முன்வந்து புகார் தெரிவி த்தால், உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். போக்கு வரத்து ஆய்வாளர்கள் சிறப்பு தணிக்கையில் கவனம் செலுத்தி அபராதம் விதிக்க அறிவுறுத்தப்படும் என்றார்.
- 30 பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
- மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
அதில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பும் ஒன்று. இந்தப் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் கார் எப்படி ஏற்பட்டு பார்க்கிங் செய்யப்படுகிறது என்பதை பார்வையிட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பு நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட பணிகள் முடிவடைந்துள்ளது. 6 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன.
விரைவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங்கை திறந்து வைப்பார்.
இதில் 56 கார்கள் நிறுத்தி வைக்கலாம்.
இது தவிர வளாகத்தில் 10 கார்களை நிறுத்தி வைக்கலாம். கார்களை நிறுத்தி வைப்பதற்கு மிக குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 102 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 30 பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகளும் விரைவில் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி , செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் வேலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
மோட்டாா் வாகனச் சட்டத்தை நடை முறைப்படுத்தக் கூடாது. சட்டப் பேரவையில் இதற்கான தீா்மா னத்தை நிறைவேற்ற வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மேலப்பாளையம் நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் சுபேர் அகமது (வயது45). இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனது வீட்டுக்கு எதிரே நேற்று இரவு 3 கார்களை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவரது வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக 3 கார்களும் தீப்பிடித்து எரிந்தன. சத்தம் கேட்டு வெளியே வந்த சுபேர் அகமது, உடனடியாக பாளை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு அதிகாரி ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் 3 கார்களும் தீயில் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. அதிர்ஷ்டவசமாக தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது. தீ விபத்தில் எரிந்து நாசமான 3 கார்களின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
இதுகுறித்து சுபேர் அகமது மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதில் மேலப்பாளையத்தை சேர்ந்த மற்றொரு ஜமாத் நிர்வாகிகள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். நேற்று மேலப்பாளையத்தில் இறந்தவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுக்கும், சுன்னத் ஜமாத் நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. போலீசார் இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.
இந்த பிரச்சினையின் எதிரொலியாக தவ்ஹீத் ஜமாத்தின் கிழக்கு மாவட்ட தலைவர் சுபேர் அகமதுவின் 3 கார்களும் தீவைத்து எரிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்