என் மலர்
நீங்கள் தேடியது "Case registration"
- பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
- தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை. தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை.
சீர்காழி:
சீர்காழி அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இங்கு தலைமை ஆசிரி யராக சாமுவேல் செல்ல துரை பணியாற்றி வருகிறார்.
இப்பள்ளியில் 54 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 104 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர்சா முவேல் செல்லதுரை பள்ளியின் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்க ப்பட்ட மாணவி ஒருவரின் பெ ற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா (பொறுப்பு) மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருநாவலூர் அருகே ஆடு மேய்த்தவர் வேன் மோதி பலியானார்.
- குணபூசணி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிழக்கு மருதூர் காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி (வயது 50) அதே ஊரைசேர்ந்த குணபூசணி (வயது 52) இருவரும் கிழக்கு மருதூர் மேம்பாலம் அருகில் ரோட்டோரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பண்ருட்டி மார்க்கத்தில் இருந்து சேந்தநாடு சென்ற வேன் இவர்கள் மீது மோதி பலத்த காயம் அடைந்தனர். ராணி சம்பவ இடத்திலே இறந்தார். குணபூசணி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
மேலும்இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்அசோகன் சம்பவ இடத்திற்கு சென்று ராணியின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேன் ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- நேற்று இரவு பால குரு வழக்கம்போல் கடையில் வேலை முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தை அருகே பைப் எலக்ட்ரிகல் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் விற்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை பாலகுரு என்பவர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பால குரு வழக்கம்போல் கடையில் வேலை முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடைக்குள் இருந்த பொருள்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலகுரு பணம் வைத்திருக்கும் பெட்டி சென்று பார்த்தபோது பெட்டி யை உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூபாய் 7000 ரொக்கப் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து பாலகுரு திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடத்த கடையை பார்வையிட்டனர். அப்போது கடையின் பூட்டை உடைக்காமல் கடையின் பின்புறம் இருந்த தகர கூறையை உடைத்து கடைக்குள் நுழைந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- நான் உயிரோடு இருப்பதை விட சாவதே மேல் என அடிக்கடி கூறி வந்துள்ளார்.
- பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி, திருவதிகை சேர்ந்தவர் ராதா (வயது 50), வாணி (47). இருவரும் அக்காள்தங்கை. ராதாவின் கணவர் இறந்து விட்டதால் தங்கைவாணியுடன் வசித்துவந்தார். எனக்கு யாரும் இல்லை நான்உயிரோடு இருப்பதை விட சாவதே மேல் எனஅடிக்கடி கூறி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவரது நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, வந்த ராதா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இன்று உயிரிழந்தார். இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொறுப்பு), சப்- இன்ஸ்பெக்டர்சரண்யா ஆகியோர் வழக்கு பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- திருவெண்ணைநல்லூர் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி முதியவர் பலியானார்.
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே மழவராயனூர் ஆற்றுத் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 70). இவர் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சின்ன செவலை- மழவராயனூர் சாலையின் குறுக்கே கடக்க முற்பட்டார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரங்கசாமி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 13 வயது சிறுமி, கடை வீதிக்கு வந்துவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
- செல்போனில் உள்ள ஆபாச வீடியோ ஒன்றை போட்டு காட்டினார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திருநள்ளாறு நகர் பகுதியைச்சேர்ந்த 13 வயது சிறுமி, கடை வீதிக்கு வந்துவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது திருநள்ளாறு சுப்புராயபுரம் ெரயில்வே லைன் அருகே, 18 வயதுள்ள ஊர் பெயர் தெரியாத இளைஞர் ஒருவர், சிறுமியை வழிமறித்து, தன் செல்போனில் உள்ள ஆபாச வீடியோ ஒன்றை போட்டு காட்டினார். அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார். உடனே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. விபரம் அறிந்த சிறுமியின் தந்தை, இது குறித்து, திருநள்ளாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இளைஞரை தேடிவருகின்றனர்.
- மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் போட்டோவை மார்பிங் செய்ததை அறிந்த மோகனசுந்தரி அதிர்ச்சியில் மன உளைச்சலுக்கு ஆளானார்.
- வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்துள்ளார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் இருகலூரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (42). இவரது மனைவி மோகன சுந்தரி (39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நம்பியூர் அரசு போக்குவரத்துக்கு கழக கிளையில் வெங்கடாசலம் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனசுந்தரி ஆன்லைன் செயலி மூலமாக கடன் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மோகனசுந்தரியின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த அனைத்து போன் நம்பர்களையும் எடுத்து அனைவருக்கும் அவரது போட்டோவை மார்பிங் செய்து அனுப்பி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு சென்ற மோகனசுந்தரி அதன் பின் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மோகன சுந்தரியை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- லில்லிசெல்வராணி, மரியசெல்வம் மனைவி ராக்கேல் மரிஸ்டெல்லா ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
- விசாரணை செய்து வருகின்றன
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மங்கலம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பிலவேந்திரன் (வயது 85). சம்பவத்தன்று இவரை அவரது மகன் சகாயராஜ் மற்றும் லில்லிசெல்வராணி, மரியசெல்வம் மனைவி ராக்கேல் மரிஸ்டெல்லா ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இமானுவேல்ராஜ் மனைவி மரியமத லேயம்மாள் என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ஈருடையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி லூர்துசசிகலா (வயது 35). இவருக்கும், இமானுவேல்ராஜ் மனைவி மரியமத லேயம்மாள் என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இம்மானுவேல்ராஜ், மரியமதலேயம்மாள் ஆகிய இருவரும் சேர்ந்து லூர்துசசிகலாவை ஆபாசமாக திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் இமானுவேல்ராஜ், மரியமதலேயம்மாள் ஆகியோர் மீது மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கவுசல்யா தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
- கடந்த 20-ந் தேதி, வெளியே சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
புதுச்சத்திரம் அருகே உள்ள தீர்த்தனகிரியை சேர்ந்தவர் சங்கர். அவரது மனைவி விஜயா. இவர்களது மகள் கவுசல்யா, (வயது 24) இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவக்கும், கடந்த3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மணிகண்டன் திருப்பூரில் வேலை செய்து வருவதால், கவுசல்யா தாய் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த 20-ந் தேதி, வெளியே சென்ற கவுசல்யா வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விஜயாஅளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- ராசாத்தி தனது தாயார் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றார்.
- அசோக் உள்பட 6 பேர் வீட்டுக்குள் நுழைந்து கனகவள்ளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி கல்குணம் சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராசாத்தி தனது தாயார் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்றார். இந்த நிலையில் கணவன், மனைவிக்குள் குடும்பத்தகராறு ஏற்படுவதற்கு அதே பகுதியை சேர்ந்த கனகவல்லி என்பவர் தான் காரணம் என எண்ணிக்கொண்டு அசோக் உள்பட 6 பேர் வீட்டுக்குள் நுழைந்து கனகவள்ளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்தி வீட்டில் இருந்த டிஷ் ஆண்டனாவை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த கனகவள்ளி கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் கனகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் அசோக், அன்பழகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி அருகே கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கவரைத் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 45) கூலிதொழி லாளி, இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று சோமண் டார்குடி பகுதியில் உள்ள தடிகார கோவில் அருகே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலைசெய்தார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள்.