என் மலர்
நீங்கள் தேடியது "catch"
- கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
சிவகாசி
சிவகாசி சிந்துராஜபுரம் தேவி நகர் பகுதியில் பத்மநாபன் என்பவர் வீடு உள்பட 4 வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து 90 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது சிவகாசி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை உடனடி யாக பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன், சிவகாசி டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி, சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீ சார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் 2 மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
- கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தது திருப்புமுனையாக அமைந்தது.
புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தது திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில், டேவிட் மில்லர் கேட்சை பிடித்ததும் எல்லோரும் சூர்யகுமாரிடம் லைஐ டச் செய்தீர்களா என கேட்டோம் என்றார் அக்சர் படேல்.

இதுதொடர்பாக அக்சர் படேல் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
நான் மிட் விக்கெட்டில் இருந்தேன். மில்லர் பந்தை அடிக்கும்போது இது சிக்சருக்குப் போய்விட்டது என நினைத்தேன்.
ஆனால் சூர்யா கேட்சை பிடித்ததும், எல்லோரும் அவரிடம் கேட்டார்கள் கயிற்றைத் தொட்டீர்களா? என. சூர்யா பாய்க்கு கூட உறுதியாக தெரியவில்லை. முதலில் ஆம், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனக்கூறிய அவர், சில நொடிகளில் எனக்கு உறுதியாக தெரியவில்லை என்றார்.
ரீப்ளேயைப் பார்த்தபோது 99 சதவீதம் பேர் உலகக் கோப்பையை வென்றோம் என நினைத்தோம்.
அது நெருக்கடியான நிலையில் பிடிக்கப்பட்ட கேட்ச். அப்போது அவர் தனது சமநிலையை தக்கவைத்த விதம் ஆச்சரியமாக இருந்தது என தெரிவித்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும், 65 விசைப்படகுகளிலும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாள்தோறும் அதிகாலையில் பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் மதியம் கரை திரும்புகின்றனர். விசைப்படகில் செல்லும் மீனவர்கள் ஓரிரு நாட்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். நாள்தோறும் மீனவர்கள் வலைகளில் ஷீலா, காலா, வாவல், கூரல், நண்டு, இறால் மீன்கள் கிடைக்கின்றன.
தற்போது ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சீலா மீன்கள் அதிக அளவு சிக்குகின்றன. இதில் ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை எடையுள்ள சீலா மீன்கள் கிடைக்கின்றன.
3 கிலோ எடையுள்ள சீலா மீன்கள் கிலோ ரூ.750-க்கும், 2 கிலோ எடையுள்ள சீலா மீன்கள் கிலோ ரூ.500-க்கும், ஒரு கிலோ எடையுள்ள மீன்கள் கிலோ ரூ.350-க்கும் வியாபாரிகள் மீனவர்களிடம் இருந்து வாங்கி செல்கின்றனர். காலா மீன்கள் ரூ.400 முதல் ரூ.500 வரையும், வாவல் மீன்கள் ரூ.500 முதல் ரூ.900 வரையிலும், கூரல் மீன்கள் கிலோ ரூ.400-க்கும் நீலக்கால் நண்டு ரூ.400-க்கும், புள்ளிநண்டு ரூ.250-க்கும் இறால் ரூ.200 முதல் ரூ.500 வரையிலும், மட்லீஸ் கிலோ ரூ.60-க்கும் விற்பனையாகின்றன.
மீன்கள் அதிகளவில் கிடைப்பதால் மீனவர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் மீன்பிடிக்க செல்கின்றனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) பவுர்ணமி வருகிறது. அதற்கு பிறகு வெளிச்சமாக நேரத்தில் அதிகளவில் கூரல் மீன் சிக்கும் என்பதால் மீனவர்கள் அதிக அளவில் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அதிகளவில் ஷீலா மீன்கள் கிடைப்பதாலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.