search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBSE School"

    • தக்க்ஷின் சகோதயா சங்க பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.
    • கால்பந்து போட்டி டி.சி.டபிள்யூ. விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    ஆறுமுகநேரி:

    தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளி–களுக்கு இடையிலான கால்பந்து போட்டி சாகுபுரத்தில் தொடங்கியது.

    நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களை உள்ளடக்கிய தக்க்ஷின் சகோதயா சங்க பள்ளிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.

    இதில் கால்பந்து போட்டி டி.சி.டபிள்யூ. விளையாட்டு மைதானம் மற்றும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

    முதல் போட்டியை சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.

    நிகழ்ச்சியில் சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியின் முதல்வர் அனு ராதா. தலைமையாசிரியை சுப்புரத்தினா, அட்மினிஸ்ட்ரேட்டர் மதன், டி.சி.டபிள்யூ. மக்கள் தொடர்பு துறையைச் சேர்ந்த ஒயிட்பீல்டு மற்றும் விஜய், கணபதி, திருவேங்கடத்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களின் திறமையை ஊக்கு விக்கும் விதமான தென் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இடையேயான பள்ளிகளுக்கான பல்வேறு போட்டிகள் பாரத் மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்றது.
    • போட்டி வாரியாக பரிசு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

    சிங்கை:

    மாணவர்களின் திறமையை ஊக்கு விக்கும் விதமான தென் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு இடையேயான பள்ளிகளுக்கான பல்வேறு போட்டிகள், தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் கடந்த 30-ந் தேதி நடைபெற்றது.

    போட்டியை, பாரத் மாண்டிசோரி பள்ளி தாளாளர் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் முன்னிலை வகித்தார். இப்போட்டியில் நெல்லை, தென்காசி, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சுமார் 26 பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கீழாம்பூர் கேம்பிரிட்ஜ் சி.பி.எஸ்.இ. இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்குகொண்டு 41 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று சுழற்கோப்பையை வென்றனர்.

    மேலும் போட்டி வாரியாக பரிசு பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

    பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் டாக்டர். ராபர்ட், தாளாளர் ஆனி மெட்டில்டா, டிரஸ்டி ஜோசப் லியாண்டர், பள்ளி முதல்வர் அமலா ஜூலியன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    • தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் இண்டர்நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் பரிசுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அமைப்பினை சேர்ந்தவர்கள் மாணவர்களை வரவேற்று பாராட்டினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் பள்ளி மாணவர்களான ஆகாஷ்குமார், நகுலேஷ் ஆகியோர் தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில் இண்டர்நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவன் ஆகாஷ்குமார் 17 வயதுக்குட்பட்டோருக்கான தனித்திறமை சிலம்பத்திலும், சண்டை சிலம்ப போட்டியிலும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மாணவன் நகுலேஷ் 12 வயதிற்குட்பட்டோருக்கான தனித்திறமை சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

    பல்வேறு பதக்கங்களை பெற்று நாடு திரும்பிய மாணவர்களை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட விளையாட்டு அமைப்பினை சேர்ந்தவர்கள் வரவேற்று பாராட்டினர்.

    பள்ளியின் சார்பில் மாணவர்களை பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், அருள்ஜோதி, பள்ளி பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் பிரமோதினி மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று பாராட்டினர். 

    அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் விளையாட்டை தனி பாடத்திட்டமாக உருவாக்கி, அதில் தேர்வு நடத்துவது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. #CBSE #CentralGovernment
    புதுடெல்லி:

    மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் விளையாட்டு கல்விக்கும் முக்கியத்தும் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் விளையாட்டு பீரியடு என தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

    ஆனால் இது தனி பாடமாக உருவாக்கப்பட்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதற்காக பரீட்சைகளும் கிடையாது.

    இப்போது அதை தனி பாடத்திட்டமாக உருவாக்கி அதிலும் பரீட்சை நடத்துவது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆய்வு நடந்து வருகிறது.

    ஏற்கனவே விளையாட்டு கல்வியை சுகாதாரம் மற்றும் உடற்கல்வி என்று அழைக்கப்பட்டு வந்தது. புதிதாக கொண்டுவரப்படும் பாடத்திட்டத்தின்படி இதை சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டு என்று மாற்றுகிறார்கள்.

    இது சம்பந்தமாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மற்றும் கல்வி மந்திரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இது அமலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை செயலாளர் ராகுல்பட்நாகர் கூறியுள்ளார்.

    மற்ற பாடங்களை போல இதுவும் தனி பாடமாக இருக்கும். அதற்கு பரீட்சையும் நடத்தப்படும். 100 மார்க்குக்கு தேர்வு நடக்கும். அதில் 70 மார்க் எழுத்து தேர்வுக்கும், 30 மார்க் செய்முறை தேர்வுக்கும் வழங்கப்படும்.



    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்த பாடம் இருந்தாலும் அவர்களுக்கு பரீட்சை நடத்தப்படமாட்டாது. ஆனால் 8-ம் வகுப்புக்கு மேல் கட்டாயம் பரீட்சை நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால்தான் அவர்கள் தேர்வானவர்களாக கருதப்படுவார்கள்.

    இது மட்டுமல்லாமல் இந்த பாடத்திற்காக தினமும் தனியாக வகுப்புகளும் நடத்த வேண்டும். அதற்காக தனி பீரியடு உருவாக்க வேண்டும் என்றும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. #CBSE #CentralGovernment

    ×