என் மலர்
நீங்கள் தேடியது "CCTV footage"
- திருடர்கள் இருவர் சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் கொள்ளை.
- எஸ்ஆர் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள செக் காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேஷ்வர ராவ். தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஆந்திராவில் உள்ள ஓங்கோ என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், மறுநாள் காலை பணிப்பெண் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பணிப்பெண் வெங்கடேஷராவிடம் கூறியதை அடுத்து, அவர் போலீசில் புகார் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். பிறகு, சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அப்போது, திருடர்கள் இருவர் சுடிதார் அணிந்துக் கொண்டு பெண் வேடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களின் தனித்துவமான உடையின் காரணமாக "சுடிதார் கும்பல்" என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அவர்கள் எஸ்ஆர் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், மே 18 ஆம் தேதி அதிகாலையில் சுடிதார் மற்றும் முகமூடி அணிந்த இரண்டு ஆசாமிகள் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்தது தெரியவந்தது.
இதில், 12 சவரன் தங்கம், ரூ. 1 லட்சம் ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- படுகாயமடைந்த மனைவி சரளா தேவி, காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- முறிந்து விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள பொலராம் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதி மீது மரம் முறிந்து விழுந்ததில் கணவர் ரவீந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மனைவி சரளா தேவி, காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சரளா தேவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
தொடர்ச்சியாக மழை பொழிந்து வருவதால் மரம் முறிந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முறிந்து விழுந்த மரத்தை முழுவதுமாக வெட்டி அங்கிருந்து அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் முறிந்து விழுந்த மரம் பல வாரங்களாக மெதுவாக சாய்ந்து வந்ததாகவும், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தம்பதி மீது மரம் முறிந்து விழுந்த காட்சி மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
- உத்தரப் பிரதேசத்தில் மகன்களின் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அர்ஷத் துப்பகையால் சுடப்பட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மகன்களின் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் துணி வியாபாரம் செய்து வருபவர் அர்ஷத் (32). இவர் தனது குடும்பத்துடன் நீச்சல் குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஏற்பட்ட சிறிய பிரச்சனை கைகலப்பாக மாறி துப்பாக்கிச்சூடு வரை சென்றுள்ளது. பேசிக்கொண்டிருந்த போதே அர்ஷத் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட்டத்தில் சம்பவ இடத்திலேயே அர்ஷத் உயிரிழந்தார்.
அப்போது அவரது மகன்கள் உடன் இருந்தும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது .சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கு நடத்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்று தெரியவராத நிலையில் நீச்சல் குளத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அர்ஷத் துப்பகையால் சுடப்பட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு.
- இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியானது.
மதுபோதையில் வாலிபர் மற்றும் சிறுவனை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது எழுந்த புகார் விவகாரத்தில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியானது.
பாடகர் மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
அதில், மனோவின் மகன்களை 10 பேர் கொண்ட கும்பலும் மனோவின் மகன்களும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
கடந்த 11ம் தேதி சிறுவனை, மதுபோதையில் தாக்கியதாக மனோவின் மகன்கள் ஷகீர், ரப்பீக், வீட்டு பணியாளர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது.
- காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் செலாம்பாளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது. இதில் வேலுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டிவந்த உடுமலைப்பேட்டை போடி பட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆட்டோ மற்றும் பிக்கப் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
அன்னூர்,
கோவை நரசீபுரம் ராமதேவி கோவில் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார்.
இவர் தனது காரில் உறவினர் ரங்கசாமி மற்றும் பழனிச்சாமி ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி சென்று, மீண்டும் அங்கிருந்து கோவை நோக்கி வந்தனர்.
இந்த காரை சிவக்குமார் இயக்கினார். கார் அன்னூர்-சத்தி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பயணிகள் ஆட்டோ மற்றும் பிக்கப் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பிக்கப் வாகனம் குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை இயக்கி வந்த சிவகுமார் பலத்த காயம் அடைந்தார். மற்ற 2 பேர் லேசான காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவம் குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிவக்குமார் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ெசல்லும் மற்ற வாகனங்கள் மீது மோதும் காட்சிகள் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தன. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய அசோகன்(வயது 55) அங்குள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
- அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளே வந்துள்ளனரா? என்று பார்த்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய அசோகன்(வயது 55) அங்குள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கடந்த 1-ந்தேதி அசோகன் கர்நாடகா மாநிலம் கைகா அணுமின் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இதனால் அவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கர்நாடகா மாநிலம் சென்றுவிட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து சுமார் 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளே வந்துள்ளனரா? என்று பார்த்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த குடியிருப்புக்கு வெளி நபர்கள் யாரும் அவ்வளவு எளிதாக உள்ளே வர முடியாது. பாதுகாப்புக்கு ஊழியர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் குடியிருப்பில் உள்ளேயே வசிக்கும் எந்த குடும்பத்தினராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த குடியிருப்புகளில் வசித்து வருபவர்களின் கைரேகை மாதிரிகளை எடுத்து கைரேகை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டாஸ்மாக் கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
- சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை அடையாளம் கண்டனர். அவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் கடந்த 23-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் 2 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் இதுவரை அடையாளம் தெரியாததால், மாயமானவர்கள் பட்டிலை கொண்டு அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள் கிடந்ததால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து அதில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரும் உள்ளனரா? என்றும் கொலை செய்யப்பட்ட வாலிபரின் அடையாளங்களோடு யாரேனும் உள்ளனரா? எனவும் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை அடையாளம் கண்டனர். அவரை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.