என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "chain flush"
- செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
- பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சாலையில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து பைக்கில் வந்த மர்ம நபர் செயின் பறித்து சென்றுள்ளனர்.
அந்த பெண் வீடியோ எடுக்கும்போது, செயின் பறிப்பு சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது. செயின் பறிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்று நடந்த செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டது.
- திருடுபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நாகாடியை சேர்ந்த வர் சுப்பிரமணியன். இவரது மனைவி கனகம் (வயது45). இவர் சம்பவத்தன்று மொபட்டில் தேவகோட்டை பஜாருக்கு சென்றார். அங்கு ரெடிமேட் ஆடைகளை வாங்கிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
தேவகோட்டை-சிவ கங்கை சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது திடீரென அந்த நபர் கனகத்தை வழிமறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்து வாகனத்தை நிறுத்தினார். அப்போது மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி கனகம் கழுத்தில் அணிந்தி ருந்த 10 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.
இதுகுறித்து அவர் வேலாயுதபட்டிணம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டப்பகலில் தாலிச்செயினை பறித்த மர்ம நபரை தேடி வருகின் றனர். திருடுபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
- கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிக்கப்பட்டது.
- சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை தேடி வருகின்றனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரபு (வயது 36). இவர் அதே பகுதியில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி பொன்னுத் தாயி (வயது33).
இவர்கள் இவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று மதியம் உறவினர் இல்ல திருமண விழா விற்காக ஊமச்சிகுளம் வழி யாக அலங்காநல்லூர் அரு கே உள்ள கல்லணை திருமண மண்டபத்திற்கு வந்தனர்.
அப்போது இவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் வாவிடமருதூர் கண்மாய் கரை அருகே வந்தபோது ஜெயபிரபுவிடம் முகவரி கேட்பது போல் பேசினர். அப்போது மர்ம நபர்கள் திடீரென பின்னால் அமர்ந்தி ருந்த பொன்னுத்தா யி கழுத்தில் ணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர் செயினை இறுக பிடிக்க தங்க சங்கிலியின் ஒரு பகுதி மட்டும் திருடர்கள் கையில் சிக்கி கொண்டது.
உடனே கண் இமைக்கும் நேரத்தில் முகமூடி அணிந்த இருவரும் டூவிலரில் தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து பொன்னுத் தாயி அளித்த புகாரின் பேரில் அலங்கா நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை தேடி வருகின்றனர்.
- ஜெயந்தி மாலா சம்பவத்தன்று காய்கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டி ருந்தார்.
- ஜெயந்தி மாலா முகவரி தெரியாது எனக்கூறி அங்கிருந்து செல்ல முயன்றார்.
கடலூர்:
வடலூர் என்.எல்.சி. ஆபீசர்ஸ் நகரை சேர்ந்தவர் இளமுருகு. இவரது மாமி யார் ஜெயந்தி மாலா (வயது 62). சம்பவத்தன்று காய்கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டி ருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த ஒரு நபர் ஜெயந்தி மாலாவிடம் முகவரி விசாரித்தார்.
அப்போது ஜெயந்தி மாலா முகவரி தெரி யாது எனக்கூறி அங்கி ருந்து செல்ல முயன்றார். அப்போது அந்த நபர் திடீரென்று ஜெயந்தி மாலா வின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு கண்ணி மைக்கும் நேரத்தில் தப்பி விட்டார். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடந்து சென்ற பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிக்கப்பட்டது.
- சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் கடம்பங்குளம் பொட்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி நாகலட்சுமி(54). இன்று காலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் திடீரென நாகலட்சுமியின் முகத்தில் தண்ணீரை ஊற்றி உள்ளனர். மேலும் நாகலட்சுமி சுதாரிப்பதற்குள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். அப்போது நிலைதடுமாறி நாகலட்சுமி கீழே விழுந்தார்.
இதில் காயமடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் ரோந்துயின்போது சிக்கினர்
- பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக தகவல்
வேலூர்:
வேலூர் அடுத்த செதுவாலையை சேர்ந்தவர் ஜானகி (வயது 42). இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை இவர் வல்லண்டராமம் கூட்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை 2 பேர் பைக்கில் பின் தொடர்ந்தனர். யாரும் இல்லாதபோது திடீரென அவர் கள் ஜானகியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகையை கழற்றி கொடுக்கு மாறு கூறினர்.
அதிர்ச்சி அடைந்த அவர் மறுக்கவே அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து ஜானகி விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து விரிஞ்சிபுரம் போலீசார் ரோந்து சென்ற போது 2 வாலிபர்கள் சந்தே கத்துக்கு இடமளிக்கும் வகை யில் பைக்கில் வந்தனர்.
அவர்களை போலீ சார் மடக்கி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித் தனர்.
அதில் அவர்கள் விரிஞ் சிபுரம் பகுதியை சேர்ந்த சுதா கர் (29), அஜித் (21) என்பதும், அவர்கள் ஜானகியிடம் செயினை பறித்ததும் தெரிய வந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து, பைக்கையும், செயினையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ரூபசேனா காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார்.
- 4.5 பவுன் தங்கச் செயினையும், ரூ.5 ஆயிரம் வைத்திருந்த கைப்பையினையும் பறித்து சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரி செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபசேனா (வயது 38). இவர் திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். இவர் வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி கீழே இறங்கினார். அப்போது வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ரூபசேனாவின் கழுத்தில் இருந்த 4.5 பவுன் தங்கச் செயினையும், ரூ.5 ஆயிரம் வைத்திருந்த கைப்பையினையும் பறித்து சென்றனர். இது தொடர்பாக ரூபசேனா அளித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நகைபறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, மின்னல் வேகத் தில் தப்பித்துச் சென்றனர்.
- இதை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 74), ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் இவரது மனைவி மனோன்மணி (70). நேற்று மாலை வீட்டின் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டி ருந்த போது பைக்கில் வந்த இரண்டு மர்மநபர்கள் மனோன்மணி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, மின்னல் வேகத் தில் தப்பித்துச் சென்றனர்.
இதை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- இளையான்குடி அருகே வீட்டின் முன்பு பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டது.
- போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளையான்குடி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மனைவி நாகவள்ளி (வயது57). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்றிருந்தனர். இதை பார்த்த நாகவள்ளி அவர்களிடம் விசாரித்தார்.
அப்போது அவர்கள் அந்த பகுதியில் திருட வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாகவள்ளி இங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தார். உடனே மர்மநபர்கள் நாகவள்ளியை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து நாகவள்ளி கொடுத்த புகாரின்பேரில் சாலை கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு ேபான்றவை அடிக்கடி நடந்து வருகிறது. பூட்டி இருக்கும் வீட்டை ேநாட்டமிடும் கொள்ளை யர்கள் கைவரிசை காட்டுவதும், தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பதும் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதுவை பெண்கள் அச்சம்
- ஒரே நாளில் 2 இடங்களில் பைக்கில் வந்த ஆசாமிகள் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. புறநகர், கிராமப்பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் பைக்கில் வந்த சில நபர்கள் செயினை பறித்து சென்றனர். சில பெண்கள் தாலிச்செயினையும் இழந்தனர்.
கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் ஆகியவற்றிலும், மக்கள் கூடும் இடங்களை பயன்படுத்தி செயின்பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் ஒரு சில குற்றவாளிகளை போலீசார் பிடித்தனர். பின்னர் செயின்பறிப்பு சம்பவங்கள் சமீபகாலமாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் செயின்பறிப்பு சம்பவங்கள் தலை தூக்க தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 2 இடங்களில் பைக்கில் வந்த ஆசாமிகள் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
புதுவை முத்திரையர் பாளையத்தை சேர்ந்தவர் வள்ளி. புதுவை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அட்டென்டராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7 மணியளவில் அவர் பணி முடிந்து டெம்போவில் முத்திரையர்பாளையம் சென்று இறங்கி உள்ளார்.
அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் முககவசம் அணிந்து வேகமாக வந்த இரண்டு வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து சென்றனர். வள்ளி திருடன் திருடன் என கத்தியுள்ளார்.
அப்பகுதியில் இருந்தவர்கள் சுதாகரிப் பதற்குள் இருசக்கர வாகனத்தில் வாலிபர்கள் வேகமாக தப்பி சன்றுள்ளனர். இதுகுறித்து வள்ளி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளனர். உதவி ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார். இதே வாலி பர்கள் முதலியார்பேட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் நடை பயிற்சி சன்றுக்கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலியையும் பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து முதலியார்பேட்டை ஆய்வாளர் இனியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் செயின்பறிப்பில் ஈடுபட்டது ஒரே ஆசாமிகள் என தெரியவந்துள்ளது. வண்டியை ஓட்டும் நபர் முகத்தில் முககவசம் அணிந்துள்ளார்.
மற்றொருவர் முகத்தை மூடிக்கொண்டு செயின்பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய வாகனம் தமிழக பதிவெண்ணாக இருந்தது. இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த செயின்பறிப்பில் ஈடுபட்டுள்ளார்களா? என தமிழக போலீசாருடனும், படங்களை அனுப்பி பழைய குற்றவாளிகளா? என விசாரித்து வருகின்றனர். புதுவையில் மீண்டும் செயின் பறிப்பு சம்பவங்கள் தலை தூக்கியுள்ளது பெண்களிடையே அச்சத்தை உருவாக் கியுள்ளது.
- கேமரா காட்சிகள் ஆய்வு
- போலீசார் விசாரணை
ஆம்பூர் :
ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி கிருஷ்ணவேணி (வயது 68). இவர் சம்பவத்தன்று மாரப்பட்டு பகுதியில் இருக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு, பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது ஆம்பூரை சேர்ந்த சதீஷ் (வயது 24) மற்றும் ராகுல் (23) ஆகியோர் கிருஷ்ணவேணி அணிந்திருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து கிருஷ்ணவேணி ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி சதீஷ் மற்றும் ராகுலை நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செயினை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்