என் மலர்
நீங்கள் தேடியது "Chandrachud"
- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மும்பையில் பார் கவுன்சில் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
- அப்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சமீபத்தில் மும்பையில் நடந்த பார் கவுன்சில் நிகழ்ச்சியில் பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிட வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசியுள்ளார். அதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். இது பாராட்டத்தக்க சிந்தனை. ஏராளமானோருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
மேலும், தலைமை நீதிபதி பேச்சு அடங்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
- நீதித்துறை மக்களுடையது. மக்களுக்காக செயல்படும் என்று நான் நம்புகிறேன்.
- நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில் என்றார் மேற்கு வங்காள முதல் மந்திரி.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நீதித்துறை வளர்ச்சிகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்தக் கருந்தரங்கில் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கருத்தரங்கில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:
நீதித்துறை எங்களுக்கு முக்கியமான கோயில். இது மந்திர் மற்றும் குருத்வாரா போன்றது.
மக்களுக்கு நீதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். நீதித்துறை மக்களுடையது. மக்களுக்காக செயல்படும் என்று நான் நம்புகிறேன்.
யாரையும் இழிவுபடுத்துவது எனது நோக்கமல்ல. ஆனால் நீதித்துறையில் அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீதித்துறை முற்றிலும் தூய்மையாகவும், நேர்மையாகவும், புனிதமாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடியில் ஈடுபட்டு, பணம் பறிக்க முயற்சித்த நபர்.
- இந்த பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
கைலாஷ் மேக்வால் என்ற நபருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயர் கொண்ட ஐடியில் இருந்து 500 ரூபாய் பணம் கேட்டு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியின் ஸ்க்ரீன்ஷாட்டை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், " நான்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நான் அவசரமாக கொலீஜிய ஆலோசனைக்கு செல்ல டாக்சி புக் செய்ய ரூ.500 பணம் வேண்டும். நான் நீதிமன்றத்தை சென்றதும் உங்களது பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த குறுஞ்செய்தியின் நம்பகத்தன்மையை அதிகரிக்க இதனை எனது ஐபாட்-ல் இருந்து அனுப்புகிறேன் என்று இன்னொரு குறுஞ்செய்தியை அவர் அனுப்பியுள்ளார். இந்த பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
- தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் கணபதி பூஜை நடைபெற்றது.
- இந்த பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் டி.ஒய்.சந்திரசூட். டெல்லியில் உள்ள இவரது வீட்டில் இன்று கணபதி பூஜை நடைபெற்றது. இந்த கணபதி பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்துகொண்டார்.
பிரதமர் மோடியை நீதிபதி சந்திரசூட் மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பிரதமர் மோடி மகாராஷ்டிராவினர் அணியும் தொப்பியை அணிந்திருந்தார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
- பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்தது சர்ச்சையானது.
- ஐகோர்ட் நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.
புதுடெல்லி:
கர்நாடக மாநில ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீஷானந்தா, நில உரிமையாளருக்கும், குத்ததைதாரருக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பான வழக்கில் பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை பாகிஸ்தான என அழைத்தார். இது மிகவும் சர்ச்சையானது.
இதுதொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது ஐகோர்ட் நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டது. இரு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்யகாந்த், ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.
அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, நீதித்துறை நடவடிக்கைகளின்போது, பெண் வெறுப்பு அல்லது சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கும் பாதகமானதாகக் கருதப்படும் கருத்துக்களை வெளியிடாமல் கோர்ட்டுகள் கவனமாக இருக்கவேண்டும்.
நாட்டில் உள்ள பெரும்பாலான கோர்ட்டுகள் தற்போது வழக்கு விசாரணையை நேரலை செய்து வருகின்றன. இந்த நேரலை என்பது மக்கள் மத்தியில் நேரடியாக செல்பவை என்பதை நீதிபதிகள், வக்கீல்கள், நீதித்துறையினர் மனதில் கொள்ள வேண்டும்.
எனவே எந்தக் கருத்தையும் கூறுவதற்கு முன் இதனை மனதில் வைத்திருக்க வேண்டும். நீதிபதியின் இதயம், மனசாட்சியும் பார பட்சமற்றதாக இருந்தால் மட்டுமே நீதியை வழங்கமுடியும். நீதித்துறையில் முடிவெடுப்பதற்கு வழிகாட்டு மதிப்புகள் மட்டுமே அரசியலமைப்பில் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீதித்துறையின் அனைத்துத் தரப்பினரும் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். எனவே இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என்று யாரும் அழைக்கவேண்டாம். இது தேச
ஒருமைப்பாட்டிற்கு எதிரானது.
நீதி என்பது சூரிய ஒளி போன்று பிரகாசமானது. அது மேலும் பிரகாசமானதாக இருக்கவேண்டும். அதனடிப்படையில் கோர்ட்டில் நடப்பதையும் வெளிச்சத்தில் கொண்டு வர வேண்டுமே தவிர, மூடி மறைக்கக் கூடாது என்பதே ஆகும் என்றார்.
மேலும், தான் தெரிவித்த கருத்துக்களுக்காக கர்நாடக நீதிபதி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளதால் இவ்வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
- சுப்ரீம் கோர்ட் நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஓ. சந்திரசூட் இந்த சிலையை திறந்துவைத்தார்.
- சட்டம் குருடு அல்ல என்ற வாசகத்துடன் புதிய நீதி தேவதை சிலை அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று திறந்து வைத்தார்.
இப்புதிய நீதிதேவதை சிலை, சட்டம் குருடு அல்ல என்பதையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது.
இடது கையில் தராசுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகம் உள்ளது.
ஏற்கனவே இருந்த நீதி தேவி சிலையில், அதன் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் வாளும், வலது கையில் தராசும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், குடியரசு தின கொண்டாட்டத்திலும் கூட சந்தித்துக்கொள்கிறோம்.
- நிச்சயமாக, அது சட்டம் மற்றும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படும் மனசாட்சியாக இருக்க வேண்டும்.
புதுடெல்லி:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டில் சிறப்பு பூஜை நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டது சர்ச்சையை உண்டாக்கியது. எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில், ஒரு ஆங்கில பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு எனது வீட்டுக்கு பிரதமர் மோடி வந்தார். சமூக மட்டத்தில், நீதித்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் இடையே இதுபோன்ற சந்திப்புகள் நடப்பது வழக்கம்தான். எனவே, இதில் தவறு எதுவும் இல்லை.
நாங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், குடியரசு தின கொண்டாட்டத்திலும் கூட சந்தித்துக்கொள்கிறோம். பிரதமருடனும், மத்திய மந்திரிகளுடனும் தொடர்ந்து உரையாடி வருகிறோம்.
ஆனால் அந்த உரையாடல், வழக்குகள் சம்பந்தப்பட்டது அல்ல. வழக்குகளை நாங்கள்தான் முடிவு செய்வோம். வாழ்க்கை, சமுதாயம் பற்றி பொதுவானதாகவே அந்த உரையாடல்கள் இருக்கும்.
நீதித்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் இடையே அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது என்பதற்காக, இருதரப்பும் சந்தித்துக் கொள்ளக்கூடாது என்று அர்த்தம் அல்ல. இதுபோன்ற விஷயங்களை அரசியல் உலகம் முதிர்ச்சியுடன் அணுக வேண்டும்.
அயோத்தி ராமர் கோவில் சுமுக தீர்வுக்காக நான் கடவுளை வேண்டியது உண்மைதான். நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவன்.
"பொதுவாகவே, நீதித்துறையின் சுதந்திரம் என்பது நிர்வாகத்திற்கு கட்டுப்படாத சுதந்திரம் என வரையறுக்கப்பட்டது. தற்போதும், நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரமாக செயல்படுவதையே குறிக்கிறது. ஆனால் அது மட்டுமே நீதித்துறை சுதந்திரத்தின் அடிப்படையில் அல்ல.
நம் சமூகம் மாறிவிட்டது. குறிப்பாக சமூக ஊடகங்களின் வருகையால், மின்னணு ஊடகங்களை பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான முடிவுகளைப் பெற நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் சில குழுக்கள் செயல்படுவதை காண முடிகிறது.
இந்த குழுக்கள் நீதிபதிகள் தங்களுக்கு சாதகமாக முடிவெடுத்தால், அதை நீதித்துறையின் சுதந்திரம் என்று அழைக்கின்றன. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு நீதிபதிக்கு அவரது மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். நிச்சயமாக, அது சட்டம் மற்றும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படும் மனசாட்சியாக இருக்க வேண்டும்.
நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என்றோ, அல்லது அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், நீதித்துறை சுதந்திரமாக இல்லை என்றோ அர்த்தமில்லை. அது சுதந்திரம் பற்றிய எனது வரையறை அல்ல."
இவ்வாறு அவர் பேசினார்.
- மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?
- அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உச்சநீதிமன்றத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பக (NJMA) திறப்பு விழாவின் போது இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஏஐ (AI) வழக்கறிஞரை அறிமுகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் மரண தண்டனை குறித்த கேள்வியைக் கேட்டு ஏஐ வழக்கறிஞரின் அறிவை சோதிக்க தலைமை நீதிபதி முடிவு செய்தார். "இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?" என்று தலைமை நீதிபதி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ஏஐ வழக்கறிஞர், "ஆம், இந்தியாவில் மரண தண்டனை என்பது அரசியலமைப்புச் சட்டம். இது உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட அரிதான வழக்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு குற்றம் மிக கொடூரமாக இருக்கும் போது அத்தகைய தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கிறது" என்று கூறியது.
இந்த பதில் சந்திரசூட் மற்றும் மற்ற வழக்கறிஞர்களை கவர்ந்தது. அருங்காட்சியக திறப்பு விழாவில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த அருங்காட்சியகத்தின் கருத்தாக்கம் மற்றும் திட்டமிடலுக்கு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் எடுத்ததாக கூறினார். இந்த அருங்காட்சியகம் நம் தேசத்தின் வாழ்க்கைக்கு நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது."
"இங்குள்ள எனது சகாக்கள் அனைவரின் சார்பாகவும், இந்த அருங்காட்சியகத்தை இளைய தலைமுறையினருக்கு இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறினார்.
தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் 65 வயதை எட்டியவுடன் பதவியில் இருந்து விலக உள்ளார். இதற்கு மறுநாளான நவம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார்.
- தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பணிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.
- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா 11-ம் தேதி பதவியேற்கிறார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு ஜனாதிபதியால் டி.ஒய்.சந்திரசூட் அறிவிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக இவர் பதவியேற்றார்.
இவரது பணிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை நிதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் 11-ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு நேற்று கடைசி பணி நாளாகும். 9 மற்றும் 10-ம் தேதி நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், நேற்றே ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிரியாவிடை அளித்தனர்.
அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:
நான் இளம் வக்கீலாக இருந்தபோது, கோர்ட்டிற்கு வந்து நீதிமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிப்பேன்.
எப்படி வாதாடுவது, நீதிமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது என பலவற்றை கற்றுக் கொண்டேன்.
வாழ்க்கையைப் பற்றி நீதிமன்றத்தில் நான் ஏராளமாக கற்றுக்கொண்டேன். இந்த நீதிமன்றம்தான் தொடர்ந்து என்னை இயக்கிக் கொண்டிருந்தது. முந்தைய வழக்கைபோல புதிய வழக்கு ஒன்று வருவதில்லை, ஒவ்வொன்றும் புதியதாகவே இருக்கும்.
உங்களில் யாரையாவது நான் காயப்படுத்தி இருந்தாலோ, பாதித்திருந்தாலோ என்னை மன்னித்து விடுங்கள்.
ஏனென்றால் நான் எதையும் உள்நோக்கத்தோடு செய்யவில்லை. உங்கள் அனைவருக்கும் நன்றி. நாளை முதல் நான் தீர்ப்பளிக்கமுடியாது. ஆனால் பணி ஓய்வு நாளில் நிறைவாக உணர்கிறேன்.
நீதிபதி சஞ்சீவ் கண்ணா மிகவும் கண்ணியமானவர் என நெகிழ்ச்சியுடன் பேசி விடைபெற்றார்.
- வழக்கு விசாரணையில் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
- டி.ஒய்.சந்திரசூட் பதவிக்காலம் 10-ந்தேதியுடன்(இன்று) முடிவடைகிறது.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் வட மாநிலங்களில் புல்டோசர் நீதி என்ற பதம் சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று புல்டோசர்களுடன் சென்று உள்ளூர் அதிகாரிகள் வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது.
சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி பாஜக மாநில அரசுகள் புல்டோசர் நடவடிக்கைகளை தொடர்ந்தன.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மனோஜ் திப்ரேவால் ஆகாஷ் என்பவரது பூர்வீக வீடு கடந்த 2019-ம் ஆண்டு உரிய முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமைநீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜேவி பார்த்திவலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
விசாரணையின்போது பேசிய சந்திரசூட், புல்டோசர் மூலம் நீதி என்பது நாகரீகமடைந்த மனித சமுதாயத்தில் இல்லாத ஒன்று. புல்டோசர் நடவடிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டத்திற்குப் புறம்பான இந்த நடவடிக்கையை அனுமதித்தால் பழிவாங்கும் நடவடிக்கைக்காகக் குடிமக்களின் சொத்துக்கள் இடிக்கப்படும் ஆபத்து உள்ளது. மக்களின் குரலை அவர்களின் சொத்துக்கள் மற்றும் வீடுகளை அழிக்கும் அச்சுறுத்தலால் ஒடுக்க முடியாது. ஒரு மனிதனுக்கு இருக்கும் இறுதிப் பாதுகாப்பு வீடுதான்.

சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன் அரசு உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். புல்டோசர் நீதி அனுமதிக்கப்படுமானால், சொத்துரிமைக்கான அரசியலமைப்பு சட்டத்தின் 300ஏ பிரிவு ஒரு உயிரற்ற காகிதமாக மாறிவிடும்.
இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையை மேற்கொண்ட அல்லது அதற்கு அனுமதியளித்த மாநில அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக ஜனாதிபதியால் டி.ஒய்.சந்திரசூட் அறிவிக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக இவர் பதவியேற்றார்.
இவரது பதவிக்காலம் 10-ந்தேதியுடன்(இன்று) முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை நிதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் வரும் 11-ந்தேதி(நாளை) பதவி ஏற்க உள்ளார்.