என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Character"
- நாம் விரும்பும் ஒருவர் நம் அன்பை உணராமல் இருந்தாலோ, நமக்குக் கோபம் வருகிறது.
- கோபம் என்பது ஒரு எதிர்மறையான நமக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்ச்சி ஆகும்.
கோபம் என்பது அனைவரிடமும் உள்ள ஓர் இயற்கையான குணம். கோபப்படாமல் எப்படி இருக்க முடியும்? என்று ஒரு சிலர் நினைப்பதுண்டு. நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்காமல் போனாலோ, பிறர் நம்மை துன்புறுத்தினாலோ, நாம் விரும்பும் ஒருவர் நம் அன்பை உணராமல் இருந்தாலோ, நமக்குக் கோபம் வருகிறது. உண்மையில் கோபம் நல்லதா? கெட்டதா? என்று ஆராய்ந்து பார்த்தோ மேயானால், உடல் அளவிலான பல சிக்கல்களை இது கொடுக்கிறது, அதுமட்டுமல்லாமல் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று புரியும்.
சிலர் கோபப்படுவார்கள் ஆனால், அடுத்த நொடியே தன்னை மாற்றிக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால் ஒரு சிலரோ கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மற்றவர்களைத் திட்டுவது, கத்துவது, பொருட்களை உடைப்பது, தன்னைத்தானே சுவரில் இடித்துக் கொள்வது, தலையில் அல்லது மார்பில் அடித்துக் கொள்வது என்று தன் கட்டுப்பாட்டை இழந்து தவிப்பார்கள். இயல்பு நிலைக்கு வருவதற்கு மிகவும் துன்பப்படுவார்கள். கோபம் நம் உடலை எவ்வாறு பாதிக்கிறது? அதைக் கையாள்வது எப்படி? என்பது பற்றி இதில் பார்ப்போம்.
கோபம் எங்கிருந்து உருவாகிறது?
மூளையில் நம் உணர்வுகளுக்கான தனிப்பட்ட பகுதியான லிம்பிக் வளைவு என்ற ஒன்று உள்ளது. இந்தப் பகுதிக்கு நமது நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அமிங்டலா என்னும் மூளையின் பகுதி கோபத்துடனும், பழிவாங்கும் குணத்துடனும் தொடர்புடையது. இதன் செயற்பாட்டைப் பொறுத்துத்தான் கோபஉணர்வு அதிகமாக உள்ளதா? அல்லது கட்டுப்பாட்டில் உள்ளதா? என்பது உறுதியாகிறது.
இந்தப் பகுதி சிலருக்கு அதிகமாகத் தூண்டப்படுவதால் எளியனவற்றுக்கும் கூட அதிகமாகக் கோபப்படுகிறார்கள். யாரையாவது கோபப்பட்டுத் திட்டினால் நம் உடலில் சில வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. அதனால் நம் உடலுக்குப் பலவிதமான இடர்கள் ஏற்படுகின்றன. அவைகளைப் பற்றி முதலில் பார்ப்போம்.
கோபப்படும்போது நம் உடலுக்குள் நடப்பது என்ன?
கோபம் என்பது ஒரு எதிர்மறையான நமக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்ச்சி ஆகும். கார்ட்டிசால் (Cortisol), நார்அட்ரினலின் (Noradrinaline) என்னும் உட்சுரப்பு நீர் (Hormone) இரத்த ஓட்டத்தில் அதிக அளவில் கலக்கிறது. இவை நம் இரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் அதிகரிக்கச் செய்கின்றன. மூளையில் நினைவுத்திறனுக்கான பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சிலருக்குக் கோபம் என்ற உணர்ச்சியின் உச்சத்தில் பக்கவாதம், மாரடைப்பு வருவதை நான் பார்த்திருக்கிறேன்.
கோபப்படும்போது கீழ்காணும் நிகழ்வுகள் நம் உடலுக்குள் நடக்கின்றன.....
வேகமான இதயத்துடிப்பு, வேகமான மூச்சு, இறுக்கமான தோள்கள், தாடை மற்றும் கைகளை இறுக்குவது, இரத்த அழுத்தம் அதிகரிப்பது, முகம் சிவத்தல், உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டி, நடுக்கத்தை உணர்வது, வயிற்றைக் கலக்குவது போன்ற ஓர் உணர்வு, பதற்றமான அல்லது வெறித்தனமான உணர்வுகளை வெளிப்படுத்துவது, தேவையில்லாத சொற்களைப் பேசுவது.
என்ன செய்கிறோம் என்ற கட்டுப்பாட்டை இழந்துவிடுவது, இப்படிச் செய்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தவறிவிடுவது. நட்பு மற்றும் உறவுகளில் பிரிவுகள் ஏற்பட்டு மனஅளவிலான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவது.
இத்தனை மாற்றங்களுக்கும் காரணம், கோபப்படும்போது நம் உடலில் கார்டிசால் என்னும் நொதி அதிகமாகச் சுரப்பதுதான். இந்த நொதி மூளையில் உள்ள நினைவுத் திறனுக்கான ஹிப்போகேம்பஸ் எனப்படும் பகுதியில் உள்ள செல்களை அழிக்கிறது, என்று அண்மை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதனால்தான் நம் முன்னோர்கள் "ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு" என்ற பழமொழியைக் கூறினார்களோ? ஆம்! அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு நினைவாற்றல் குறைந்து விடக்கூடும். கோபத்தின்போது சுரக்கும் கார்டிசால் மூளையில் உள்ள நினைவுத்திறனுக்கான பகுதியில் உள்ள நியூரான்களை அழிக்கிறது.
இதனால் மறதி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கோபம் நம் உடலுக்குத் தீங்கு செய்யும் ஓர் உணர்வு என்பதைக் கோபப்படாமல் உணர வேண்டும்.
கோபப்படுவதற்கான காரணங்கள்:-
*சரியாகத் திட்டமிடாமல் வேலைகளைச் செய்வது.
*நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளாதது.
*பிறரிடம் உள்ள எதிர்பார்ப்புகள் நடக்காமல் போவது.
*பிறரால் ஏற்படும் ஏமாற்றங்கள்.
*எதிர்மறையான சிந்தனைகள்.
*பிறரைத் தவறானக் கண்ணோட்டத்திலேயே பார்ப்பது.
*சரியானத் தூக்கம் இல்லாமல் இருப்பது.
*மன அழுத்தங்கள்.
*பிறரின் பிரிவுகள்.
*நிதி நெருக்கடிகள்.
*குழந்தை வளர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள்.
*அலுவலக வேலை, குடும்பநேரம், வீட்டுவேலைகள் இவற்றைக் கையாள்வதில் ஏற்படும் சிக்கல்கள்.
*குழந்தைகளை வளர்ப்பது, வீட்டு வேலைகள் பற்றிய முடிவுகளில் குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடு இருக்கும்போது, சில வேளைகளில் கோபமான சூழல் ஏற்படலாம். இந்த வகையான கருத்து வேறுபாடுகள் மோதலுக்கு வழிவகுக்கும்.
*சில சமயங்களில் குழந்தையின் கோபம் அல்லது பற்றின்மை பெற்றோர்களைக் கோபப்படவைக்கும். எடுத்துக்காட்டுக்கு, குழந்தைகள் கோபத்துடன் முரட்டுத்தனமாகப் பேசினால் அல்லது சொல்வதைச் செய்யவில்லை என்றால், அத்தருணத்தில் நீங்களும் கோபப்படலாம்.
*இயலாமை, வேலையில் மனஅழுத்தம், நோய் மற்றும் உங்களுக்கான போதுமான நேரமின்மை போன்ற பிறகாரணிகளும் உங்களைக் கோபப்பட வைக்கும்.
நீங்கள் இந்தச் சூழ்நிலையில் இருக்கும்போது, பொறுமையை இழப்பதும், திட்டமிட்டபடி நடக்காத போது கோபப்படுவதும் எளிது. இதில் எது உங்களைப் பாதிக்கிறது? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் கோபத்தை எளிதாகக் கையாளமுடியும்.
கோபத்தைக் கையாள்வது எப்படி?
கோபம் என்பது மனிதனுடைய இயல்பு, கோபப்படாமல் யாரும் இருக்க முடியாது என்ற எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். நான் கோபப்படக் கூடாது, கோபப்படக் கூடாது என்று நினைத்துக் கொண்டு அதைக் குறைப்பதற்கான முயிற்சியில் ஈடுபடவில்லை என்றால் அதை நம்மிடம் இருந்து விரட்ட முடியாமல் போய்விடுகிறது. அன்புதான் அனைத்திற்குமான ஆதாரம் என்பதை மனத்தில் பதியவைத்தால் மட்டுமே, கோபத்தை வெல்ல முடியும். கோபத்தைக் கையாள்வதற்குச் சில வழிமுறைகளை இப்போது பார்ப்போம். கோபமான ஒரு சூழ்நிலையைக் கடந்த பிறகு பொறுமையாக அமர்ந்து கீழ்க்காண்பவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்,
*எதற்காகக் கோபப்பட்டேன்?
*கோபத்தின்போது என் உடலிலும், மனத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?
*கோபத்திற்கான காரணம் என்ன? இந்தச் சூழலை வேறுவிதமாக எப்படி எதிர்கொண்டிருக்கலாம்? கோபத்தைத் தவிர வேறு ஏதேனும் உணர்வுகளால் (எ.கா: அமைதி) வெளிபடுத்தியிருக்கலாமா? இல்லை கோபம் மட்டுமேதான் தீர்வா?
*இந்த எதிர்மறையான எண்ணங்களைக் கட்டுப்படுத்த எவ்வாறு முயல வேண்டும்?
*கோபமான சூழ்நிலையைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல் அந்த நேரம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய முடிகிறதா? இல்லை கோபத்தின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோமா? என்று சிந்திக்க வேண்டும்.
நம் மூளை நமக்குத் தேவையான அனைத்தையும் சொல்லிக் கொடுக்கக் கூடியது. இவ்வாறு நாம் சிந்திக்கத் தொடங்கும்போதுதான் நம் மனத்தில் சில மாறுதல்கள் வரத்தொடங்கும்.
எளிய கோப மேலாண்மைக்கான கருத்துரைகள்:
கோபமான நேரங்களில் மூச்சை மெதுவாக்க முயன்றிட வேண்டும். இதற்கு இரண்டு வினாடிகள் மூச்சை உள்ளிழுத்து நான்கு வினாடிகள் மூச்சைச் சீராக வெளியே விடவும். இப்படிச் செய்யும்போது இதயத் துடிப்பு மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும்.
கோபம் குறையச் செய்ய வேண்டியவை:-
*கோபப்பட வேண்டாம் என்று நினைப்பதை விட்டுவிட்டு அனைவரிடமும் அன்பாக இருப்பேன் என்று மனத்துக்குள் அடிக்கடி கூறிக்கொள்ள வேண்டும்.
*அதிகக் கோபம் உள்ள நேரங்களில் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. வார்த்தைகளைக் கடுமையாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும். அந்த நேரத்தில் தண்ணீர் 2 குவளைகள் பருகலாம்.
*கோபம் என்பது, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் நஞ்சு என்பதை உணர வேண்டும்.
*அன்புதான் இந்த உலகத்தின் மொழி என்றும், அன்பு கொண்டு அனைவரையும் வெல்ல வேண்டும் என்றும், பொறுத்தார் பூமி ஆள்வார் என்றும், மனத்திற்கு அடிக்கடி கூறிக்கொள்வது மிகநன்று.
நாம் அன்பாகவும், அமைதியாகவும் இருக்கும்போதுதான் நம் வாழ்க்கை ஆனந்தமாகவும், நலமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து, இப்படிபட்ட கோபம் நமக்குத் தேவையில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இது போன்று செய்வதால் கோப உணர்வால் நம் உடலுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்திடலாம். உடலுக்கு ஊறு செய்யும் இக்கோபம் நமக்குத் தேவைதானா? சிந்தியுங்களேன்.
செல்: 75980-01010, 80564-01010.
- கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
- எனது கேரக்டருக்கு மம்தா போன்ற ஒருவர் களங்கம் விளைவிக்க முடியாது.
கடந்த மே 2 ஆம் தேதி மேற்கு வங்க கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக கல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 27 இல் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்' என்று பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மம்தா மீதும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ஆனந்தா போஸ் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் தற்போது மம்தாவின் கருத்து குறித்து பேசியுள்ள ஆனந்தா போஸ், மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் மம்தாவை நான் மதிக்கிறேன்.அதுபோல மம்தாவும் நாகரீகமான முறையில் பேச வேண்டியது அவசியம். யாரை வேண்டுமானாலும் சீண்டலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார்.
எனது கேரக்டருக்கு மம்தா போன்ற ஒருவர் களங்கம் விளைவிக்க முடியாது. எனது சுய மரியாதையில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். மம்தா என்னை சீண்டவோ பயமுறுத்தவே முடியாது. அந்த அளவுக்கு அவர் வளரவில்லை.
ஒரு முதலமைச்சராக சட்டப்படி என்னை அவர் எதிர்க்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைக் குறித்து பொய்களைப் பரப்பி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் மம்தா மேனியாவை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நான் மம்தா என்ற தனி நபர் மீதே அவதூறு வழக்கு தொடர்ந்தேன். அந்த தனி நபர் முதலமைச்சராக உள்ளார் அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார்.
- ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
- எனது கேரக்டரை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், பிற கட்சிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறேன் என்று கூறியவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்ட ஸ்வாதி மலிவாலிடம் இன்று (மே 16) போலீசாளர் அவரது இல்லத்துக்கு சென்று 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது ஸ்வாதி மலிவால் எழுத்துபூர்வமாக போலீசிடம் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனையடுத்து விரைவில் எப்ஐஆர் பதியப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே நாளை தேசிய மகளிர் ஆணையத்தின் முன் ஆஜராக கோரி பிபவ் குமாருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே டெல்லி பாஜக தீவிரமாக விமர்சனங்களை முனைவைத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போலீசிடம் வாக்குமூலம் அளித்த பின் ஸ்வாதிக்கு மலிவால் தனது X தள பக்கத்தில் "எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி.
எனது கேரக்டரை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், பிற கட்சிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறேன் என்று கூறியவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். நாட்டில் இப்போது முக்கியமானது தேர்தலே அன்றி நான் இல்லை. நாட்டின் பிரச்சினையே இப்போது முக்கியம். குறிப்பாக பாஜக இதை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை.
- பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது.
ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை. பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது. உலகெங்கும் பல்வேறு நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கூந்தலை அலங்கரிப்பதோடு அன்பு, பாராட்டு மற்றும் நன்றியை வெளிப்படுத்துவதற்கு ரோஜாக்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் தனித்துவ குணம் கொண்ட சில ரோஜாக்கள் உங்கள் பார்வைக்கு..
பீச் வண்ண ரோஸ்:
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்களின் கலவையை பிரதிபலிக்கும் பீச் வண்ண ரோஜாக்கள் நன்றியுணர்வை குறிக்கின்றன. அடக்கம், அனுதாபம் போன்றவற்றை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
மஞ்சள்:
மஞ்சள் நிற ரோஜாக்கள் நட்பு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கின்றன. நண்பர்களுக்கிடையேயான அன்பையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்த இவை சிறந்த தேர்வாக அமைகின்றன.
ஆரஞ்சு:
ஆரஞ்சு நிற ரோஜாக்கள் உற்சாகம், ஆசை மற்றும் கவர்ச்சியை குறிக்கின்றன. ஈர்ப்பை வெளிப்படுத்துவதற்கு அவை பகிரப்படுகின்றன.
வெள்ளை:
வெள்ளை நிற ரோஜாக்கள் தூய்மை, அப்பாவித்தனம் மற்றும் வாழ்வின் புதிய தொடக்கங்களை குறிக்கின்றன. தம்பதியினரிடையே நிலவும் தூய அன்பை குறிக்க திருமண நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இளஞ்சிவப்பு:
இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு உணர்ச்சிகளை குறிப்பிடுகின்றன. வெளிர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் போற்றுதலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றன. அதே சமயம் அடர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் நன்றியையும், பாராட்டையும் குறிப்பிடுகின்றன.
நீலம்:
நீல நிற ரோஜாக்கள் மர்மம், சாத்தியமில்லாதது போன்ற உணர்வை குறிக்கின்றன.
சிவப்பு:
இது காதலின் அடையாள சின்னமாக விளங்குகிறது. இரு மனங்களுக்கு இடையே புதைந்திருக்கும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், காதல், அன்பு, ஆசையின் வெளிப்பாட்டை பகிரவும் உதவும் தூதுவனாக பயன்படுகிறது, சிவப்பு ரோஜா.
- கண்ணந்தகுடியில் அடுத்தடுத்து 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.
- ரூ.10 ஆயிரம் மற்றும் சமையலுக்கு தேவையான பாத்திரங்களும் வழங்கினர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே கள்ளிக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது.
அதேபோல், தண்டலச்சேரி அருகே கண்ணந்தகுடியில் அடுத்தடுத்து 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.
இந்நிலையில், திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் லயன் முகம்மது இக்பால்தீன், செயலாளர் தங்கமணி, மாதவன், செல்வ முத்துக்குமரன், துரை ராயப்பன், சீனிவாச பாபு, ராஜ் மோகன் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் சமையலுக்கு தேவையான பாத்திரங்களும் வழங்கினர்.
இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- பெண் கதாபாத்திரங்களை ஆண்களே தேர்வு செய்து நடிக்கின்றனர்.
- விடிய விடிய நடைபெற்ற இந்த நாடகத்தை கிராம மக்கள் தூங்காமல் பார்த்து ரசித்தனர்.
தஞ்சாவூர்:
வைகுண்ட ஏகாதசியின் போது, கிராம மக்கள் இரவில் கண்விழிக்க வேண்டும் என்பதற்காக இன்றும் சரித்திர நாடகங்களை நடத்தி வருகின்றனர் ஒரு கிராமத்தினர். அந்த கிராமம் தஞ்சாவூர் அருகே உள்ள கொல்லாங்கரை ஆகும்.
இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவினை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோவில்களுக்கு சென்று சொர்க்கவாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாள் சுவாமியை வழிபடுவது வழக்கம்.
இரவு நேரங்களில் பொதுமக்கள் கண்விழிக்க வேண்டும் என்பதால், அந்த இரவை பொழுதுபோக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி ஏகாதசியின் போது மூன்று நாட்களுக்கு சரித்திர நாடகங்களான ராமாயணம், வள்ளி திருமணம், ருக்மாங்கதன், சத்தியவான் சாவித்ரி நாடங்கள் நடத்தப்படுகிறது.
இந்த நாடகங்களுக்கு தேவையான கதாப்பாத்திரங்களுக்குரிய கலைஞர்கள் கிராம மக்களே நடித்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே தேர்வு செய்து நடிக்கின்றனர்.
வெள்ளித்திரை, சின்னத்திரை ஆதிக்கம் நிறைந்த இந்த காலத்திலும், சரித்திர நாடகங்களை இந்த கிராம மக்கள் இன்றும் பாரம்பரியத்தோடு நடத்தி அதனை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு ருக்மாங்கதன், சம்பூர்ண ராமாயணம் உள்ளிட்ட சரித்திர நாடகம் நடைபெற்றது.
விடிய விடிய நடைபெற்ற இந்த நாடகத்தை கிராம மக்கள் தூங்காமல் பார்த்து ரசித்தனர்.
பின்னர் அதிகாலையில் நாடகம் முடிந்த பிறகு பெருமாள் கோவில்களில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர் .இதே போல் இன்று மற்றும் நாளை இரவும் சரித்திர நாடகங்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் கூறும்போது:
எங்களது கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று நாட்கள் சரித்திர நாடகங்களை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறோம்.
இதற்காக கார்த்திகை மாதம் முதல் தேதியிலேயே நாடக பயிற்சியை தொடங்கி விடுவோம். இதில் எங்களது கிராமத்தில் பிறந்த ஆண்கள் எல்லோரும் ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பதை கனவாக கொண்டு நடித்து வருகிறோம். முன்பெல்லாம் ஒரு நாடகத்துக்கு 50 கலைஞர்கள் இருந்தார்கள். தற்போது பத்து கலைஞர்கள் தான் நடித்து வருகின்றனர்.
தொலைக்காட்சியில் சீரியல்கள் இருந்தாலும் கிராம மக்கள் அன்றைய தினம் சரித்திர நாடகங்களை பார்த்து, ரசித்து வருகின்றனர்.
இதில் பொதுமக்களிடம் கொஞ்சம் ஆர்வம் குறைந்தாலும், நாடகம் நடத்துவதை பாரம்பரியமாக தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
நாடகம் நடத்த 7 தினங்களுக்கு முன் பந்தகால் முகூர்த்தம் செய்ததும், இதற்காக விரதம் தொடங்கிவிடும்.
நாடக கலைஞர்கள் எல்லோரும் விரதம் இருந்து நடித்து வருகிறோம். நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் நாங்கள் சொந்தமாக வைத்திருக்கிறோம்.
இரவு 10 மணிக்கு தொடங்கும் நாடகம் அதிகாலை 5 மணிக்கு முடியும்.நாங்கள் அனைவரும் ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை நினைத்து தான், அவரது படத்தினை வைத்து வழிபட்டு வருகிறோம்.
பின்னர் சித்திரை மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு சென்று சித்திரை தேரோட்டத்தில் எங்களது கிராம மக்கள் சுமார் 100 பேராவது சென்று பாட்டுப்பாடி, தேர் வடம் பிடித்து, பெருமாளை வழிபட்டு ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து தரிசனம் செய்து வருவதை இன்றளவும் கடைபிடித்து வருகிறோம் என்றார்.
பாரம்பரிய முறையில் 200 ஆண்டுகளாக சரித்திர நாடகம் நடத்தி அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு கிராம மக்களே நடித்து வருவது இன்னும் கிராம கலைகள் உயிர்ப்புடன் உள்ளதாக பாரம்பரிய கலைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பெருமிதம் கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்