search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "checkup"

    • திருத்துறைப்பூண்டி சாலையில் மணலி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே குரும்பல் காளிய ம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 62). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று இவர் திருத்துறைப்பூண்டி சாலையில் மணலி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆலத்தம்பாடி பகுதியில் இருந்து பருத்திச்சேரி நோக்கி ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக லோடு ஏற்றி வந்த டிராக்டர் நந்தகுமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேர்வைகாரன்மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெபக்கனி முகாமை தொடங்கி வைத்தார்.
    • முகாமில் பொது மருத்துவம், ரத்த சோகை, காய்ச்சல் உட்பட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சாயர்புரம்:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தூத்துக்குடி சுகாதார மாவட்டம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் டி.என்.டி.டி.ஏ. பள்ளியில் நடந்தது.

    சேர்வைகாரன்மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெபக்கனி முகாமை தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர் ஞானசேகர், காமராஜ் நகர் வார்டு உறுப்பினர் ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முடிவைத்தானேந்தல் மருத்துவ அலுவலர் டாக்டர் காளீஸ்வரி, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் முருகேசன், புதுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா ஆகியோர் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

    தூத்துக்குடி வட்டார மருத்துவமில்லா மேற்பார்வை யாளர் மதிவாணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுக நயினார் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு மருத்துவர்கள், சமுதாய நல செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொது மருத்துவம், ரத்த சோகை, விட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு நோய், இறப்பை மற்றும் குடல் நோய், மனநோய், பால் வினை நோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, பல், கண் நோய், மகளிர் நலம், மகப்பேறு, குழந்தைகள் நலம் உட்பட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு, இரும்பு சத்து அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனை, கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறிய பாப் தடவல், இ.சி.ஜி, கர்ப்பிணி பெண்க ளுக்கு ஸ்கேன் பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோத னைகள் இலவசமாக செய்யப்பட்டன. இந்த முகாமில் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • திருக்கோளூர் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுரேஷ், நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் சரண்யா ஆகியோர் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்தனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் திருக்கோளூர் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் கால் நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவி ராஜ் ஆலோசனையின்படி கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கால்நடை துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி இயக்குனர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடை வளர்ப்பிற்கான கண்காட்சி மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்போர்களுக்கு விருது மற்றும் சிறந்த கன்று வளர்ப்புக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் ஆழ்வார்திரு நகரி கால்நடை மருத்துவ மனை மருத்துவர் சுரேஷ், நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர் சரண்யா ஆகியோர் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்தனர். முகாமில் சிறப்பு விருந்தினராக திருக்கோளூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஈனமுத்து கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் முகாமில் வாழ்ந்து காட்டுவோம் பணியாளர்கள் கால்நடை பராமரிப்புத்துறை ராஜேஷ், செல்வம் மற்றும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை அருள் ராஜேஸ்வரி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • காட்டாற்று பாலம் எதிரே மல்லிப்பட்டினத்தில் மீன்லோடு இறக்கிவிட்டு வந்த மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பேராவூரணி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி மயிலாடு தெருவை சேர்ந்தவர் காதர்மைதீன் (வயது 60).

    இவர் கட்டுமாவடி மொத்த மீன் விற்பனை மையத்திற்கு தினசரி அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்து மீன் வாங்கிச் சென்று சில்லரை வியாபாரம் செய்வது வழக்கம்.

    சம்பவத்தன்று அதிகாலை கட்டுமாவடி சென்று மீன் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த போது அம்மணிசத்திரம் காட்டாற்றுப் பாலம் எதிரே மல்லிப்பட்டினத்தில் மீன்லோடு இறக்கிவிட்டு வந்த மினி வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழ ந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் அலாவுதீன் (39).அளித்த புகாரின்பேரில் சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திலேயே மினிவேனை விட்டுவிட்டு தலைமறைவான ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    • வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமை துணை மேயர் நாகராஜன் தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை வாசன் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அருணின் 54-வது பிறந்த நாளை முன்னிட்டு வாசன் கண் மருத்துவமனை மற்றும் மதுரை குறிஞ்சி மலர் அரிமா சங்கம், வரதன் கிளினிக் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் செல்லூர் மனோகரா நடுநிலை பள்ளியில் நடந்தது.

    முகாமை துணை மேயர் நாகராஜன் தொடங்கி வைத்தார். முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

    முகாம் ஏற்பாடுகளை வாசன் கண் மருத்துவமனை முதன்மை மேலாளர் பன்னீர் செல்வம், மக்கள் தொடர்பு அதிகாரி பிச்சைக்கனி மற்றும் ஊழியர்கள், குறிஞ்சி மலர் அரிமா சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • எம்.டி. சமுதாய அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை எம்.டி. சமுதாய அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தி நகரில் உள்ள சகாய பள்ளியில் கார்த்திகா விஷன் கேர் ஆப்டிக்கல்ஸ் மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் பங்கேற்றவர்க ளுக்கு கண்பார்வை சோதனை, கண் அழுத்த சோதனை, கண்புரை, நீரழிவினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கார்த்திகா விஷன் கேர் ஆப்டிக்கல்ஸ் மற்றும் பள்ளி தாளாளர் ஜோசப், தலைமையாசிரியர் ரஞ்சி ரூபிணி மற்றும் எம்.டி. சமுதாய அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.ஜெரினா செய்திருந்தனர்.

    • முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சைக்கு தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பார்வை இழப்பு சங்கத்தின் உதவியுடன் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை,பாரத் கேஸ் விநியோகஸ்தர் வேலவன் கேஸ் நிறுவனம் மற்றும் விவேகானந்தா கேந்திரம் கோவில்பட்டி கிளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் திருச்செந்தூர் தனியார் மடத்தில் வைத்து நடைபெற்றது. சுப்புலெட்சுமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சைக்கு தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    முகாமில் வந்திருந்த பயனாளிகளுக்கு சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளுக்கு கண் நோய் பரிசோதனை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. விவேகானந்த கேந்திர பொறுப்பாளர் பரமகுரு நன்றி கூறினார்.

    ×