என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cheif minister"
- சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், போலீசாரை ஊக்கு விக்கும் வகையில், முதல்-அமைச்சர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என, அறிவித்தார்.
- உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்-அமைச்சரின் பதக்கம் வழங்க, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல்:
தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், சட்டசபையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கையின்போது, சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையா கவும் உழைக்கும் அதிகாரி கள், போலீசாரை ஊக்கு விக்கும் வகையில், முதல்-அமைச்சர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என, அறிவித்தார்.
2023-ம் ஆண்டு, சர்வ தேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை யொட்டி, உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்-அமைச்சரின் பதக்கம் வழங்க, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாரா யணன், தேனி எஸ்.பி. டோங்கரே பிரவின் உமேஷ், சேலம் சப்-டிவிஷன் ரெயில்வே டி.எஸ்.பி. குணசேகரன், நாமக்கல் எஸ்.ஐ. முருகன், புதுச்சத்தி ரம் போலீஸ் குமார் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக மாநில அளவிலான விருது பட்டி யலில், நாமக்கல் மாவட் டத்தை சேர்ந்த எஸ்.ஐ., மற்றும் போலீஸ் என 2 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்-அமைச்சர் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ., முருகன், போலீஸ் குமார் ஆகியோருக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள், சக போலீசார் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
- தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான உத்தரவு 21 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களின் நலனுக்காக தேவைப்படும் அத்தனை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியினை நடத்தி வருகிறார்.
100 பெண்கள்
இந்த விழாவில் ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 86 பேர், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 பேர், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 12 பேர் என மொத்தம் 100 பெண்களுக்கு ரூ.43.75 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்க நாணயம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல் அன்னை சத்திய வாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 77 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான உத்தரவு 21 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 12 பயனாளிகளுக்கு ரூ.3.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் 30 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- பொட்டல் காட்டில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 3 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி ரூ. 41.50 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி:
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சி,பொட்டல் காட்டில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் 3 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி ரூ. 41.50 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது.
அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதற்கான நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கி முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வரவேற்று பேசினார்.
தொடர்ந்து கட்டுமான பணிக்கான செங்கலை எடுத்து வைத்தார். முள்ளக்காடு ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத் நிர்மல், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ மாணவிகள் கைகளில் பூங்கொத்துடன் அணிவகுத்து நின்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தளவாய்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- நியூசிலாந்து நாட்டின் தலைநகர் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்று நாடு திரும்பினர்.
- காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தை சேர்ந்த 13 வீரர், வீராங்கனைகள் கடந்த நவம்பர் 28-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை நியூசிலாந்து நாட்டின் தலைநகர் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்று நாடு திரும்பினர்.
அவர்கள் அனைவரையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் அண்ணா அறிவாலயம் வரவழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
மேலும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது மாநில வலுதூக்கும் சங்கத் தலைவர் ராஜா எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் நாகராஜன், இணைத் தலைவர் ஹரிதாஸ், செயலாளர் லோகநாதன் மற்றும் வீரர், வீராங்கனைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.
- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நமது மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
- நகர தி.மு.க. அலுவலகத்தில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் கட்சி கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புளியங்குடி:
புளியங்குடியில் முதல்-அமைச்சர் வருகிற 8-ந் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருவதை ஒட்டிய சிறப்பு ஆலோசனை கூட்டம் நகர தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர அவைதலைவர் வேல்சாமி பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நமது மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதில் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் வழங்குகிறார். நலத்திட்ட உதவிகள் முடிந்தவுடன் புளியங்குடி வழியாக செல்லும் அவருக்கு 3 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. முதலாவதாக நமது மாவட்டத்தின் தொடக்க எல்லையில் நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திரபாண்டியன் தலைமையில் டி.என்.புதுக்குடி காமராஜர் சிலை அருகிலும், அடுத்து புளியங்குடி பஸ் நிலையம் முன்பு பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது தலைமையிலும், 3-வதாக சிந்தாமணியில் நகர செயலாளர் அந்தோணிசாமி தலைமையிலும் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகர தி.மு.க. அலுவலகத்தில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் கட்சி கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான தி.மு.க. நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்