என் மலர்
நீங்கள் தேடியது "chemical"
- பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
- 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது
நாடு முழுவதும் நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது.
இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சிறுமிகளின் பெற்றோர் பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.
7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடக் GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்ற மூவர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் மற்றும் அவ்வூர் மக்கள் இடையே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- ஐதராபாத் வெங்கடாத்ரி நகர் பகுதியில் தெரு முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி
- தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா தொழிற்பேட்டை அருகே வெங்கடாத்ரி நகர் பகுதியில் தெரு முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள், நகராட்சி அதிகாரிகளை அழைத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகள், இது ரத்தம் இல்லை என்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சிவப்பு நிற ரசாயனம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இத்தகைய ரசாயனக் கழிவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து, தொழிற்சாலைகள் ரசாயனங்கள் வெளியேற்றப்படுவதை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தனர்.
- இன்று அதிகாலை 5.50 மணியளவில் வந்துகொண்டிருந்த டிரக் பக்கவாட்டில் கவிழ்த்து தீப்பிடித்தது.
- தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
மும்பை பூனே நெடுஞ்சாலை அருகே ரசாயணம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரித்து விபத்துகளாகியுள்ளது.
டேங்கரில் ஸ்பிரிட் (எத்தனால்) ஏற்றப்பட்டு கோபோலியில் உள்ள மதுபான உற்பத்தி நிறுவனத்தை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. மும்பை-புனே விரைவுச்சாலையை தாண்டி கோபோலி பகுதியில் ஷில்பாடா அருகே இன்று அதிகாலை 5.50 மணியளவில் வந்துகொண்டிருந்த டிரக் பக்கவாட்டில் கவிழ்த்து தீப்பிடித்தது.
வாகனத்திலிருந்து விலகிய டேங்கரில் தீ மளமளவென பரவியது. மேலும் எத்தனால் சாலையில் கொட்டிய நிலையில் சாலையின் சுற்றளவில் சுமார் 20-25 அடி தூரத்திற்கு தீ பரவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
- 20 பேரல்களில் காலாவதியான ரசாயனங்களை கொட்டி சென்றுள்ளனர்.
- அதிக திறன் கொண்ட கெமிக்கல் கழிவுகள் இரவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஊர் முழுவதும் புகை சூழ்ந்தது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விவசாய நிலத்தில் காலாவதியான ரசாயனங்களை மர்மநபர்கள் கொட்டி சென்றுள்ளனர். 20 பேரல்களில் காலாவதியான ரசாயனங்களை கொட்டி சென்றுள்ளனர்.
அதிக திறன் கொண்ட கெமிக்கல் கழிவுகள் இரவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஊர் முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமப்பட்டனர்.
கெமிக்கல் பாக்ஸ் மற்றும் கெமிக்கல் பேரல்களை விவசாய நிலங்களில் கொட்டி சென்றுள்ளதாகவும் ரசாயனங்களை கொட்டி சென்றது யார் என்று தெரியவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.
- சிங்கம்புணரியில் ரசாயன கலப்பில்லாத பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது.
- கொல்கத்தாவில் இருந்து லாலாட் அரிசி முதல் ரகமும் கொள்முதல் செய்யப்படுகிறது.
சிங்கம்புணரி
ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை நாளன்று வீடுகள், தொழிற்சாலைகள் மெக்கானிக் கடைகள் வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் ஆயுதங்களை சுத்தம் செய்து சரஸ்வதிக்கு பூஜை செய்வது வழக்கம்.
அந்த வகையில். நாளை ஆயுதபூஜைக்கு தமிழகம் முழுவதும் பொரி உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 200 ஆண்டுகளாக பாரம்பரிய பொரிக்கு பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொரி உற்பத்தியாளர்கள் ஆயுத பூஜைக்கான பொரி
தயாரிப்பில் இரவு-பகலாக ஈடுபட்டுள்ளனர்.
பொரி தயாரிப்பிற்கு தேவையான அரிசி கர்நாடகத்தில் இருந்து ஐ.ஆர். 64 அரிசியும், கொல்கத்தாவில் இருந்து லாலாட் அரிசி முதல் ரகமும் கொள்முதல் செய்யப்படுகிறது. ரசாயன கலப்படம் இல்லாமல் அரிசியில் தண்ணீர், சீனி, உப்பு உள்ளிட்ட பொருட்களின் விகிதாச்சார கலவைகளால் 3 தினங்கள் ஊற வைக்கப்பட்டு எந்திரங்கள் மூலம் சரியான அளவு வெப்பத்துடன் மொரு மொரு தன்மையுடன் பொரி உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு தயார் செய்யப்படும் பொரி ஆயுதபூஜை மட்டுமின்றி விநாயகர்சதுர்த்தி, கோவில் திருவிழாக்கள் உள்பட வழிபாட்டிற்கும், தினசரி சாப்பிடும் உணவு பொருளாகவும் பயன்படுகிறது.
தற்போது ஆயுத பூஜைக்காக ஒரு நாளைக்கு சுமார் 200 மூடை முதல் 300 மூடைகள் வரை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு மூடையில் 120 லிட்டர் கொண்ட பொரி நிரப்பப்பட்டு அனுப்பப்படுகின்றன.
ஒரு மூடை பொரி ரூ 480 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2, 3 தலைமுறைகளாக பொரி உற்பத்தி செய்துவருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். பொரி உற்பத்தியாளா் சுந்தரசேகரன் கூறுகையில், சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் பொரி சிங்கப்பூர், அமெரிக்கா இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ''ஸ்டப் ரைஸ்'' என்ற பெயரில் அனுப்பப்படுகிறது.
திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, மதுரை, தேனி, விருதுநகர் மாவடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. முக்கிய நகரங்களில் சிங்கம்புணரி பொரி கிடைக்கும் என்ற பதாகைகளுடன் விற்பனைசெய்யப்படுவது எங்கள் பொரிக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறோம் என்றார்.
மீன்கள் விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதன் மீது பென்ஸோயேட் மற்றும் அம்மோனியா ஆகிய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வெளியானது. இந்த வகை வேதிப்பொருட்களால் உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் எனவும், இந்த வகை வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வேதிப்பொருட்கள் கலந்த மீன்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வேதிப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தின் தலைநகரான கோஹிமாவில் உள்ள மீன்கடைகளில் சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் பல்வேறு கடைகளில் இருந்து மீன்கள் எடுத்து செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டு, சுமார் ஆயிரத்து 666 கிலோ எடை கொண்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்கள் இறக்குமதி செய்பவர்களிடமும் இந்த சோதனையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ChemicalMixedFish #Nagaland
கேரளாவின் கோழிக்கோடு அருகே மீன்களில் கலப்படம் செய்வதாக சுகாதாரத்துறைக்கு வந்த புகார்களை அடுத்து, சிறப்பு ஆபரேஷன் ஒன்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்தினர். அந்த ஆபரேஷனில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 47 வகை மீன்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பரிசோதனைக்கூடத்தில் நடத்திய ஆய்வில் மீன்களில் சோடியம் பென்ஸோயேட், அம்மோனியா ஆகியவை கலந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வகை வேதிப்பொருட்கள் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தக்கூடியவை. இதன்மூலம் உடலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் எனவும், இந்த வகை வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த வேதிப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியில் உள்ள எல்லைப்பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து வந்த மீன்களை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட 6 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் கேரளாவில் வேதிப்பொருள் கலக்கப்பட்ட 12 ஆயிரம் கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ChemicalMixedFish #Kerala