என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai IIT"

    • 2014-ல், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது.
    • அடுத்த ஆண்டு 2026-ல், நாம் நான்காவது இடத்தில் இருப்போம்.

    சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார்.

    அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளைப் பார்த்தால், இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக உயர்ந்த வளர்ச்சியை காட்டியுள்ளது.

    பொருளாதாரத்தில் தற்போது முதல் நான்கு இடத்தில் இருக்கும் நாடுகளில் மூன்று நாடுகள் நல்ல மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன. 2014-ல், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. 2021-ல், நாம் ஐந்தாவது இடத்தில் இருந்தோம்.

    அடுத்த ஆண்டு 2026-ல், நாம் நான்காவது இடத்தில் இருப்போம். 2028-ல் நாம் மூன்றாவது இடத்தில் இருப்போம். நாம் அனைவரும் கடினமாக உழைத்தால், 2047-ல் இந்தியா 1 அல்லது 2-வது நாடாக மாறும். நமது சுதந்திரம் அடைந்து 100ஆவது ஆண்டில் இது நடக்கும்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    • தொழில்துறை நிதி உதவி கடந்த சில ஆண்டுகளாக அதிக வளர்ச்சி கண்டுள்ளது.
    • எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி கணிசமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

    சென்னை :

    சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. நாட்டிலேயே முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. சென்னை ஐ.ஐ.டி. 2021-22-ம் நிதியாண்டில் மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து ரூ.768 கோடியும், தொழிலக ஆலோசனை வழியாக ரூ.313 கோடியும் பெற்றுள்ளது.

    கம்ப்யூட்டிங், 5ஜி ஆகிய துறைகளின் வளர்ச்சி காரணமாக தொழில்துறை மற்றும் மத்திய, மாநில அரசுகள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உருவாக்குவதில் சென்னை ஐ.ஐ.டி. முன்னிலை வகிக்கிறது.

    மொத்த நிதி வளர்ச்சியை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5-ல் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    தொழில்துறை நிதி உதவி கடந்த சில ஆண்டுகளாக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. தொழில் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படும் திட்டங்களுக்கான நிதியை பெரு நிறுவனங்களுக்கான சமூக பங்களிப்பு நிதியில் இருந்து வழங்குவது தான் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி கணிசமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாமல்லபுரத்தில் சர்வதேச கட்டமைப்பு நம்பகத்தன்மை மாநாடு நேற்று நிறைவடைந்தது.
    • இதில் இந்தியா, வெளிநாட்டு விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் இணைந்து நடத்திய சர்வதேச கட்டமைப்பு நம்பகத்தன்மை மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது.

    இந்த மாநாட்டை இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை வகித்து நடத்தினார். அறிவியல் தொழில்துறை, ஆராய்ச்சிதுறை செயலர் மற்றும் கவுன்சில் தலைமை இயக்குனர் கலைச்செல்வி காணொலி வாயிலாக மாநாட்டை துவக்கி வைத்தார்.

    மாநாட்டு தலைவரான சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் ரகு பிரகாஷ், இந்திய அணுமின் கழகத்தின் இன்ஜினியரிங் பிரிவு செயல் இயக்குனர் ராமமோகன், தர உறுதி செயல் இயக்குனர் தாமஸ் மேத்யூ மற்றும் இந்தியா, வெளிநாட்டு விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    மாநாட்டில் அணுசக்தி பாதுகாப்பு, ரசாயனம், விண்வெளி ஆய்வு, எண்ணெய் கிணறுகளின் கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகளின் நம்பகத்தன்மை, வருங்கால அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கான ஆய்வு கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.

    • தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.
    • 2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவது சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஆராய்ச்சியாளர்களான செல்வி வர்ஷினி நீதிமோகன், டாக்டர் சிரிஜா மற்றும் டாக்டர் கிரிஜா வைத்தியநாதன், பேராசிரியர் முரளிதான் ஆகியோரை உள்ளடக்கிய ஐ.ஐ.டி. மெட்ராஸ் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வு முடிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களில் (சி பிரிவு) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது.

    அறுவை சிகிச்சை (சி பிரிவு) மகப்பேறு என்பது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பிரசவிப்பதற்காக தாயின் வயிற்றில் கீறலை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை நுட்பமாகும்.


    மருத்துவ ரீதியாக நியாயப்படுத்தப்பட்ட இந்த செயல்முறை உயிரை காக்க கூடியது. அதே நேரத்தில் நிச்சயமாக தேவையற்ற வகையில் மேற்கொள்ளும் போது பாதகமான பல்வேறு சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    தேவையற்ற செலவுகளுக்கு வழிவகுப்பதுடன் பொதுமக்களின் சுகாதார ஆதாரங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடுகிறது.

    தமிழ்நாடு, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரிவான பகுப்பாய்வு நடத்தப்பட்டது. சத்தீஸ்கரை பொறுத்தவரை கர்ப்பகால சிக்கல்கள், அதிக ஆபத்துள்ள கருவூருதல் ஆகியவை அதிகமாக காணப்பட்டன. தமிழ்நாட்டில் அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்கள் அதிக அளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    2021 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 17.2 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் துறையை பொறுத்தவரை 2016-ல் இந்த எண்ணிக்கை 43.1 சதவீதமாக இருந்த நிலையில் 2021-ல் 49.7 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இந்த அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

    நகர்ப்புறங்களில் வசிக்கும் நன்கு படித்த பெண்கள் அறுவை சிகிச்சை பிரசவம் செய்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    குறைந்த எடையுள்ள பெண்களை விட அதிக எடை கொண்ட பெண்களுக்கு இருமடங்கு அதிகமாக அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடக்கின்றன. அதிக எடை கொண்ட பெண்கள் குழந்தை பெற்று கொள்ளும் விகிதம் 3 சதவீதத்தில் இருந்து 18.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    அதே நேரத்தில் 35-49 வயதிற்கு இடைப்பட்ட வயதுடையவர்கள் குழந்தை பெறுவது 11.1 சதவீதத்தில் இருந்து 10.9 சதவீதமாக குறைந்திருப்பதை ஆய்வு கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தனியார் ஆஸ்பத்திரிகளில் நடைபெற்ற மகப்பேறுகளில் 4 மடங்கு அளவிற்கு அறுவை சிகிச்சை மூலம் நடைபெற்று உள்ளது. சத்தீஸ்கரில் அறுவை சிகிச்சை பிரசவத்திற்காக தனியார் ஆஸ்பத்திரிகளை நாடும் பெண்கள் எண்ணிக்கை 10 மடங்கும், தமிழ்நாட்டில் 3 மடங்கும் அதிகரித்து உள்ளது.

    • புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
    • ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    சென்னை ஐ.ஐ.டி. மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூட்டணியில் "மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்" துவங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    புதிய ஆராய்ச்சி மையத்திற்காக சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆராய்ச்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய இளையராஜா உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "இரு கிராமத்தில் இருந்து இசை கற்றுக் கொள்ள சென்னை வந்தேன். வந்த நாளில் இருந்து இந்நாள் வரை நான் இசையை கற்றுக் கொள்ளவில்லை. எல்லோரும் நான் சாதித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் எனக்கு அப்படி தோன்றவில்லை."

    "மூச்சுவிடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ அப்படியே இசையும் எனக்கு இயற்கையாக வருகிறது. யாராவது நன்றாக இசையப்பதாக சொன்னால் நான்றாக சுவாசிக்கிறீர்கள் என சொல்வது போல் உள்ளது," என்று தெரிவித்தார்.

    • 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
    • மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலை முதலிடத்தை பிடித்துள்ளது.

    மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    இந்த தரவரிசை பட்டியலில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 6வது ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.

    தொடர்ந்து, பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் 2ம் இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும், டில்லி ஐஐடி 4ம் இடத்தையும் பிடித்துள்ளன.

    பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், டெல்லி ஐஐடி 2வது இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

    மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலை முதலிடத்தையும், மேற்குவங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலை 2வது இடத்தையும் பிடித்துள்ளது.

    மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தை பிடித்தது. வேலூர் சிஎம்சி 3வது இடமும், புதுச்சேரி ஜிப்மர் 5வது இடமும் பிடித்தது.

    ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை உருவாக்கப்படுகிறது.

    கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமை நடைமுறை, மாணவர்களின் கல்வித்தரம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேலூர் சி.எம்‌.சி. சென்னை ஐஐடி இணைந்து உருவாக்கி உள்ளது.
    • 1000 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

    வேலூர்:

    பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் அதிக செலவு மற்றும் நேரம் ஆகியவற்றை செலவிட வேண்டி உள்ளது. மேலும் பல்வேறு முறை ஆஸ்பத்திரி சென்று கை அசைவு செய்து சிகிச்சை பெற வேண்டி உள்ளது.

    இதனை தவிர்க்கும் வகையில் வேலூர் சி.எம்.சி. சென்னை ஐஐடி இணைந்து கை அசைவு சிகிச்சைக்கான புதுமையான, மலிவு விலையிலான கையடக்க ரோபோடிக் கருவியை உருவாக்கியுள்ளன.

    பிளக் அண்ட் டிரெய்ன் ரோபோ அல்லது ப்ளூடோ எனும் கை நரம்பு மறுவாழ்வுக்கான இந்த கருவி ஒரு மிக்சர் கிரைண்டரின் வடிவமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்துக்கு வேலூர் சிஎம்சியில் உள்ள பயோ இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிவகுமார், பாலசுப்ரமணியன், ஐ.ஐ.டி. சென்னை மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்துள்ளனர்.

    மேலும், இந்த கருவியானது வேலூர் சி.எம்.சி.யில் உள்ள உடல் மருத்துவம், மறுவாழ்வு, நரம்பியல் அறிவியல் துறைகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

    கடந்த 30 மாதங்களில் இது 1000 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 100 டாக்டர்கள் இதனை பயன்படுத்தி உள்ளனர். சிறிய மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் மற்றும் வீடுகளில் இருந்தே இதனை பயன்படுத்துவதற்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்டுபிடிப்புக்கு இந்திய காப்புரிமை பெற்றுள்ள நிலையில், அமெரிக்கா, கனடா நாடுகளின் காப்புரிமைக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த அரிய கண்டுபிடிப்பு இந்தியா மட்டுமின்றி உலகளவில் நரம்பியல் மறுவாழ்வு பராமரிப்பை கணிசமாக மேம்படுத்தும் என தெரிவித்தனர்.

    • சென்னை ஐ.ஐ.டியை கொண்டு வருவதற்காக காரணமாக இருந்த காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும், அங்குள்ள தொழில்நுட்ப ஆய்வகங்களையும் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட முடியும்.

    இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் மார்பளவு சிலையை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி திறந்து வைத்தார்.

    சென்னை ஐ.ஐ.டியை கொண்டு வருவதற்காக காரணமாக இருந்த காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, ஜனவரி 3, 4-ம் தேதிகளில் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்களையும் ஆய்வகங்களையும் பார்வையிடலாம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    'அனைவருக்கும் சென்னை ஐஐடி' என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் ஐஐடி-யில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும், அங்குள்ள தொழில்நுட்ப ஆய்வகங்களையும் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட முடியும்.

    • கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும்.
    • பிரதமர் மோடி அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்கும் உரையில் விநாயகர் உருவம் தான் முதல் குளோனிங் என பேசினார்.

    ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்தை, சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் அந்தஸ்த்தை பயன்படுத்தி செய்வது, தமிழ்நாட்டின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தானது. எனவே சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மிக உயர்ந்த தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குனரான காமகோடி அவர்கள் கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும்.

    இது ஐ.ஐ.டி. போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மீதும், அறிவியல் கண்ணோட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழக்க செய்யவும், மூட நம்பிக்கையை வளர்க்கவும் உதவும்.

    இயக்குனரா, ஆர். எஸ்.எஸ். பிரச்சாரகரா? என வேறுபாடு தெரியாத அளவிற்கு சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியின் சொல்லும் செயலும் வெளிப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே காசி தமிழ் சங்கம் என்ற பெயரில் பா.ஜ.க அரசியலுக்கான செயல்பாட்டு களமாக நிறுவனத்தை அனுமதித்தார். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இந்து மதம் அல்லாத பிற மத அடையாளம் கொண்டோர், சமூக நீதி காரணமாக இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்தோர் பாரபட்சமாக நடத்தப்பட்டனர் என்பது வெனிச்சத்திற்கு வந்த உண்மை.

    இயக்குனரின் வெளிப்படையான ஆர். எஸ். எஸ் ஆதரவு பிரச்சாரம் மேற்படி பாரபட்சத்தை அதிகரிக்கும். பிரதமர் மோடி அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்கும் உரையில் விநாயகர் உருவம் தான் முதல் குளோனிங் என பேசினார். இது வலுவாக எதிர்க்கப்பட்டது.

    அவர் தற்போது கோசாலை விழாவில் உடல் உபாதைகள் மற்றும் காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு கோமியம் அற்புதமான மருந்து என உரையாற்றி இருப்பது, கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல.

    கோமியம் உடல் நலத்திற்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உடனடியாக இயக்குனர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும்.

    மேலும் இவருக்கு வழங்கிய முனைவர் பட்டம் உன்ளிட்ட பட்டங்கள் திரும்ப பெறப்பட வேண்டியவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. மேலும் பாஜக ஆட்சி, ஆய்வு நிறுவனங்களை, இதர தன்னாட்சி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். மையங்களாக மாற்றி வருகிறது என குற்றம் சாட்டியது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், காமகோடி ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்தை, சென்னை ஐ.ஐ.டி இயக்குளர் அந்தஸ்தத்தை பயன்படுத்தி செய்வது, தமிழ்நாட் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தானது.

    எனவே சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்திட வேண்டும் என ஒன்றிய கல்வித்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    வி‌ஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க மனிதர்களுக்கு பதிலாக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய அதிநவீன ‘ரோபோ’வை சென்னை ஐஐடி உருவாக்கி உள்ளது. #PoisonousGas #ToxicGas
    சென்னை:

    இந்தியாவில் லட்சக்கணக்கான கழிவுநீர் தொட்டிகள் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்ய அதனுள் இறங்கும் தொழிலாளர்கள் வி‌ஷவாயு தாக்கி இறந்து விடுகின்றனர்.

    இதனால் தொழிலாளர்களின் குடும்பங்கள் ஆதரவின்றி தவிக்கின்றன. அவர்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகின்றனர்.

    வி‌ஷவாயு தாக்குதலில் உயிரிழப்பை தடுக்க சென்னை ‘ஐ.ஐ.டி.’ அதி நவீன ‘ரோபோ’வை (எந்திர மனிதனை) உருவாக்கி உள்ளது.

    இந்த ‘ரோபோ’க்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கி விடப்பட்டு அது சுழலும் விசிறிகள் மூலம் அலசி சுத்தம் செய்யும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருப்பது போன்று சுழலும் மின்விசிறி பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    அதில் சுழலும் விசிறியில் உள்ள பிளேடுகள் கழிவு நீருக்குள் புகுந்துதொட்டியை அலசுவதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனவே, விசிறியில் 6 துடுப்புகள் போன்ற பிளேடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சுழலும் விசிறிகளை மாணவர் ஸ்ரீகாந்த் உருவாக்கினார்.

    இதே முறையில் ஆயில் மற்றும் கியாஸ் துறைகளிலும் தொட்டிகளை சுத்தம் செய்யும் முயற்சியிலும் சென்னை ‘ஐ.ஐ.டி.’ பேராசிரியர்களும், மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் ‘ரோபோ’வின் செயல்பாடு குறித்த ஆய்வக பரிசோதனையை வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்டில் கழிவுநீர் தொட்டியில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் ஏராளமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கெல்லாம் மிக குறுகிய தெருக்களில் வாகனங்களையும், பம்புகளையும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் ‘ரோபோ’வை எளிதாக எடுத்து சென்று கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய முடியும். #PoisonousGas #ToxicGas
    சென்னை ஐஐடி உணவுக் கூடத்தில் சைவ உணவு உண்போருக்கும் அசைவ உணவு உண்போருக்கும் தனித்தனியான நுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #ChennaiIIT #Mutharasan
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை ஐ.ஐ.டி உணவுக் கூடத்தில் சைவ உணவு உண்போருக்கும் அசைவ உணவு உண்போருக்கும் தனித்தனியான நுழைவு வாயிலும், வெளியேறும் வழியும் உருவாக்கப்பட்டுள்ளன. உணவை உண்பதற்கு தனித்தனியான தட்டுகளும், பாத்திரங்களும் வழங்கப்படுகின்றன. கை கழுவும் இடங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அதை அறிவிக்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

    சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்தின் இச்செயல் அப்பட்டமான சாதீய பாகுபாடாகும். பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கும், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மற்றும் பட்டியல் பழங்குடியின சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரான இச்சாதீய ரீதியான பாகுபாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சாதீய பாகுபாட்டை கடைபிடிக்கும் இக்கல்லூரி நிர்வாகம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #ChennaiIIT #Mutharasan
    சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் பிரிவினை ஏற்படுத்தியது தவறான செயல் என்றும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #BJP #PonRadhakrishnan #ChennaiIIT
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் பிரிவினை ஏற்படுத்தியது தவறான செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

    5 மாநில தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வுக்கு ஏற்பவே பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதில் மத்திய அரசுக்கு எதுவும் இல்லை.

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு எந்த கட்சியுடனும் பிரச்சனை இல்லை. இங்கு, இறப்பை முன்வைத்து அரசியல் செய்வது போன்ற மோசமான நடவடிக்கை எதுவும் இல்லை.

    தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. மூழ்கும் கப்பல் என்று கூறியுள்ளார். அந்த கப்பலில் தான் அவர் இதுவரை துணை கேப்டனாக இருந்தார்.


    இலங்கையில் ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் அங்குள்ள தமிழர்களுக்கும், இங்குள்ள தமிழர்களுக்கும் சுமூக உறவு ஏற்பட்டால் நல்லதுதான்.

    குமரிமாவட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலம் ரூ. 2 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கூறியிருக்கிறார். ஒரு திட்டத்தின் மொத்த மதிப்பீடு என்ன என்பதை கூட தெரியாமல் கூறியிருப்பதை இப்போது தான் பார்க்கிறேன்.

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை திட்டத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. இது பற்றி பேசுபவர்கள் எந்த திட்டத்தில் எவ்வளவு ஊழல் என்பதை தெளிவாக கூற வேண்டும். இது பற்றி நான் அவருக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளேன்.

    குமரி மாவட்டத்தில் ஒரு திட்டங்கள் கூட நடைபெறாத போது வராதவர்கள் இப்போது வந்துள்ளார்கள். இங்கு மதம், ஜாதி பிரச்சனையை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #ChennaiIIT
    ×