என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chess match"
- வேலூரில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடந்தது
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
வேலூர்:
பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக அண்ணா அரங்கில் மாநில அளவிலான செஸ் போட்டி இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இப்போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்து 456 மாணவர்கள், 456 மாணவிகள் பங்கு பெற்றனர். இப்போட்டிகள் 11 வயதிற்கு உட்பட்டோர், 14 வயதிற்கு உட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் என நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெறுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ்களும், பரிசுத்தொகை முறையே ரூ.1000, ரூ.800, ரூ.650 என வழங்கப்படவுள்ளது.
இதில் 14, 17, மற்றும் 19 ஆகிய மூன்று வயது பிரிவுகளில் முதல் 5 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் டிசம்பர் மாதம் 26 முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
செஸ் விளையாட்டு போட்டியானது இங்கே நான்கு பிரிவுகளில் மாநில அளவில் நடைபெறுகிறது. விதிமுறைகளின் படி இந்த விளையாட்டுப் போட்டிகள் முறையாக நடைபெற உள்ளது.
பொதுவாக வெற்றி தோல்வி என்பது நம்முடைய வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இருக்கும். செஸ்ப் போட்டியை பொறுத்தவரை தோல்வியை நெருங்கும் நிலை வரும் பொழுது மாற்றுத் திட்டத்தை பயன்படுத்தி தோல்வி அடையாமல் மீண்டு வருவதற்கு முயற்சி செய்வோம்.
அதுபோல் நாம் நம்முடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு நிலையிலும் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய மனநிலையை நமக்கெல்லாம் விளையாட்டு போட்டிகள் வழங்குகிறது. எனவே நாம் படிப்பில் ஆர்வம் செலுத்துவதை போல விளையாட்டுப் போட்டிகளிலும் நம்முடைய எண்ணங்களை செலுத்தி நல்ல ஒரு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 456 மாணவர்களும், 456 மாணவிகளும் கலந்து கொண்டுள்ளனர். மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் விமலா சீனிவாசன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சதுரங்க போட்டி நடந்தது.
- மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்தின் சாணக்யா அகாடமி ஒருங்கிணைப்பில் சதுரங்க போட்டி மான்போர்ட் பள்ளியில்நடந்தது. 7 வயது, 9 வயது, 11 வயது, 13 வயது, 15 வயது என 5 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளில் இருந்து மொத்தம் 235 மாணவர்கள் கலந்து கொண்டனர். மான்போர்ட் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் இக்னேஷியஸ் தாஸ் தலைமை வகித்தார்.
சதுரங்க போட்டிகளுக்கு சிவகங்கை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் ரமேஷ் கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாலையில் நடைபெற்ற போட்டிகளுக்கு சிவகங்கை மருத்துவக்கல்லூரி தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை பிரிவின் துறை தலைவர் டாக்டர் ஜிம் திவாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். போட்டி முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை சாணக்கியா அகாடமி ஒருங்கிணைத்து நடத்தியது.
- 118 மாணவர்கள் மற்றும் 43 மாணவிகள் பங்கேற்றனர்.
- 25 மாணவிகளுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை:
44-வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி சென்னை மகாபலிபுரத்தில் வருகிற 28.7.22-ந் தேதி முதல் 10.8.22-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 11, 12-ந் தேதிகளில் (சனி, ஞாயிற்றுக் கிழமை) 2 நாட்கள் ஆற்காடு ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெறும் ஆண் மற்றும் பெண் போட்டியாளர் 44-வது சர்வதேச சதுரங்க போட்டியை நேரில் காணும் வாய்ப்பு பெறுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 118 மாணவர்கள் மற்றும் 43 மாணவிகள் பங்கேற்றனர்.
இப்போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, ஆற்காடு நகர மன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
இதில் முதல் 25 இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் 25 மாணவிகளுக்கு ஒலிம்பியாட் சின்னம் பொறித்த பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவர் பிரிவில் ரிஷிகேஷவா, மாணவிகள் பிரிவில் ஸ்ரீ சாத்விகா ஆகியோர் முதலிடம் பிடித்து, சர்வதேச சதுரங்க போட்டியை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் விஜயகுமார், செயலாளர் அப்துல் கரீம், பொருளாளர் சோழவேந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
- 3 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்பு
- 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூரில் 6 சுற்றுகளாக நடைப்பெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் 500-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று விளையாடினர்.
ஒடுகத்தூரில் செயல்பட்டு வரும் வின்னர் செஸ் அகடமி சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான சதுரங்கம் போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சதுரங்கப் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் திருவண்ணா மலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போடி யானது, மொத்தம் 6 சுற்றுகளாக நடைப்பெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் வெளியேறும் வீரர்களுக்கு போட்டியில் கலந்து கொண்ட தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
போட்டியில் முதல் 3 இடத்தை பிடித்தவர்களுக்கு ரொக்க பணம் மற்றும் சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் நிகழ்ச்சியில் போட்டி யாளர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் திருவிழாப்போல் காட்சியளித்தது.
- சுதந்திரா இயக்கம் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் திறனறிவு போட்டிகளை நடத்தி வருகிறது.
- சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி சதுரங்கப் போட்டியை அறிமுகம் செய்து வைக்கிறார்.
சேலம்:
தமிழகம் முழுவதும் சமூகநல சேவைகளை செய்து வரும் சுதந்திரா இயக்கம் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் திறனறிவு போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த சேலம் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை சுதந்திரா இயக்கம், ஜெ.எஸ்.டபிள்யூ உதவியுடன் நடத்துகிறது.
தொடக்க விழா
இதன் தொடக்க விழா நாளை மறுநாள் (24-ந்தேதி) சேலம் திருச்சி மெயின்ரோடு குகையில் உள்ள சுதந்திரா இயக்கம் மாநில தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகின்றது. மாநில தலைவர் காமராஜ் தலைமை தாங்குகிறார்.
ஜே.எஸ்.டபிள்யூ எக்ஸ்கியூட்டிவ் துணை சேர்மன் பிரகாஷ்ராவ், பொது மேலாளர் அரிராஜ், சி.எஸ்.ஆர். மூத்த மேலாளர் பாரதி பழனிசாமி, சேலம் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சிவரஞ்சன், சேலம் மாவட்ட செஸ் அசோஷியேசன், செயலாளர் அருண் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்கள்.
ஏற்பாடுகள் தீவிரம்
சேலம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கென்னடி சதுரங்கப் போட்டியை அறிமுகம் செய்து வைக்கிறார். அரசு மற்று தனியார் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் சுதந்திரா இயக்க நிர்வாகிகள் மற்றும் மூத்த தேசிய சதுரங்கப் போட்டி நடுவர் சக்திவேல் செய்து வருகின்றனர்.
வருகிற ஜனவரி மாதம் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை நடத்த திட்டுமிட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரபாபு தெரிவித்துள்ளார்.
- காமன்வெல்த் செஸ் போட்டியில் மதுரை மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.
- சர்வதேச அளவிலான செஸ் போட்டி களில் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை.
மதுரை
சர்வதேச காமன்வெல்த் யூத் செஸ் போட்டி இலங்கையில் நடந்தது. இதில் மதுரை டி.எஸ்.பி. நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கனிஷ்கா (வயது 14) இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.
அவர் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான செஸ் போட்டி யில் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்ற கனிஷ்கா கூறுகையில், "செஸ் விளையாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பங்கேற்று வருகிறேன்.
மாநில அளவில் தொடங்கி, தேசிய அளவில் முன்னேறி, இன்றைக்கு சர்வதேச அளவில் சாதனை படைத்தது மகிழ்ச்சி தருகிறது. இந்தோனேசியாவில் நடந்த ஆசிய அளவிலான செஸ் போட்டியில் வெள்ளி பதக்கமும், ருமேனியாவில் நடந்த சர்வதேச போட்டியில் 6-வது இடமும் கிடைத்தது.
இந்த போட்டிகள் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்ல உதவியாக இருந்தது. சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை. இதற்காக தினமும் 10-12 மணி நேரம் வரை கடினமாக பயிற்சி எடுத்து வருகிறேன்" என்றார்.
கனிஷ்காவுக்கு, தர்ஷனி செஸ் அகாடமி பயிற்சியாளர் ராஜதர்ஷினி மற்றும் நிர்வாகிகள் அழகு செந்தில்வேல், மணிமாறன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் ஏபிஎஸ் செஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது
- 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்தார்
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஏபிஎஸ் செஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் மாநில அளவில் 2-வது இடத்தையும், 5-ம் வகுப்பு மாணவன் ஜெகத் பிரபு மாணவர்கள் பிரிவில் மாநில அளவில் 7-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- சுரண்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் தினமும் நிகழ்ச்சி நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
- சிறந்த போட்டியாளர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுரண்டை:
சுரண்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் தினமும் நிகழ்ச்சி நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாணவர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் செஸ் போட்டியை தொடங்கி வைத்தனர்.மொத்தம் 48 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்த போட்டியாளர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,நகர நிர்வாகிகள் ஆறுமுகசாமி, சுப்பிரமணியன், பூல் பாண்டியன் சங்கர நயினார், குறுங் காவனம் வெள்ளத்துரை பாண்டியன், வைகை கணேசன்,சசிகுமார், கோமதிநாயகம், டான் கணேசன், கூட்டுறவு கணேசன்,ராஜன்,எழில், சுதன்,மாரிச்செல்வி, ஜோதிடர் இசக்கி மோகன்மகேந்திரன்மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மதுரை ரயில்வே வீரர் சாதனை படைத்தார்.
- அவர் 8.5 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார்.
மதுரை
மாமல்லபுரத்தில் நடந்த 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில், தென்னக ரயில்வே சார்பில் பி.டி. முரளி கிருஷ்ணன் பங்கேற்றார்.
இதில் நீண்ட நேரம் விளையாடக்கூடிய கிளாசிக்கல் போட்டியில் கலந்து கொண்ட அவர் மொத்தம் உள்ள பாயிண்டுகளில், 8.5 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார். அவருக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.
மதுரை ரயில்வே அலுவலக கணக்கியல் பிரிவு ஊழியரான பி.டி. முரளி கிருஷ்ணன், கோட்ட நிதி மேலாளர் இசைவாணனுடன், கோட்டரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- மரக்கன்றுகள் நடப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக 288 ஊராட்சிகளில் செஸ் போர்டில் உள்ள 64 கட்டங்கள் குறித்து அனைத்து ஊராட்சிகளிலும் 64 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் தொடங்கிவைத்து மரக்கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
- காவல் கண்காணிப்பாளர் நல்லு, எழுமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. காவல் கண்காணிப்பாளர் நல்லு, எழுமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
11, 14 மற்றும் 17 வயதினருக்கான போட்டி மற்றும் 17 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டி என 4 பிரிவுகளாக நடந்த போட்டியில் உசிலம்பட்டி, எழுமலை, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30-க்கும் அதிகமான பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளும், 50-க்கும் மேற்பட்ட 17 வயதிற்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லு, டாக்டர் விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர்.
- திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார் .
- இளைஞரணி அமைப்பாளர்எம்.எஸ்.ஆர். ராஜ், திலக்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
44 -வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை சார்பில் திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார் . இதில் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், 36-வது வார்டு கவுன்சிலரும் கல்வி குழு தலைவருமான திவாகர், 22 -வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்எம்.எஸ்.ஆர். ராஜ், திலக்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்