search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "children injured"

    • திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புது தெருவை சேர்ந்தவர் முகமது. காய்கறி வியாபாரி. நேற்று மாலை இவரது மகன் முகமதுஅஸ்லம்(6), மகள் அப்சரா பானு(4) இருவரும் மதுரை ரோட்டில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இருவர் மீது மோதி சென்றது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவன் முகமது அஸ்லாமுக்கு காது, மூக்கு உட்பட பகுதிகளில் ரத்தக்கசிவு இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காயரம்பேடு கிராமத்தில் இருந்து தனியார் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தாம்பரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் காயரம்பேடு கிராமத்தில் இருந்து தனியார் மினி பஸ் கூடுவாஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. காயரம்பேடு பள்ளிக்கூடம் அருகே பஸ் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.

    பின்னர் சாலை ஓரமாக பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் பஸ் டிரைவரை பிடித்து கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூரில் பள்ளி பஸ் மீது தனியார் பஸ் மோதியதில் குழந்தைகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.

    போளூர்:

    ஆரணி அடுத்த கஸ்தம் பாடியில் உள்ள தனியார் பள்ளி பஸ், இன்று காலை போளூரில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருந்தது.

    அப்போது, திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ், பள்ளி பஸ்சின் பின்னால் மோதியது.

    இந்த விபத்தில் பின்பக்க கண்ணாடி உடைந்து பள்ளி பஸ் சேதமடைந்தது. அதேப் போல், தனியார் பஸ் முகப்பு கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 5 பேர் மற்றும் பயணிகள் 15 பேர் என மொத்தம் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பள்ளிக் குழந்தைகள் உயிர் தப்பினர்.

    போளூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், வழக்குப்பதிந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×