என் மலர்
நீங்கள் தேடியது "CITU"
- சி.ஐ.டி.யு. மாவட்ட மாநாடு நடைபெற்றது.
- மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்,
கரூர்:
சி.ஐ.டி.யு.வின் 9-வது மாவட்ட மாநாடு கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாநாட்டு வரவேற்பு குழுத்தலைவர் தண்டபாணி வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும், கரூரின் ஜவுளித்தொழிலை பாதுகாக்க நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட உதவிச்செயலாளர் ராஜாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்."
- சி.ஐ.டி.யு. 12-வது மகாசபை கூட்டம் திருப்பூர் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது.
- சங்கத்தின் மூத்த உறுப்பினர் மருதாசலம் கொடி ஏற்றி வைத்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோ மொபைல்ஸ் லேபர் யூனியன் (சி.ஐ.டி.யு.) 12-வது மகாசபை கூட்டம் திருப்பூர் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ரங்கராஜ் தொடக்கி வைத்தார்.
முன்னதாக சங்கத்தின் மூத்த உறுப்பினர் மருதாசலம் கொடி ஏற்றி வைத்தார்.துணைத்தலைவர் சுதாசுப்பிரமணியம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பு வேலையறிக்கையையும், பொருளாளர் அருண் வரவு செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். இதில் மோட்டார் தொழிலையும், தொழிலாளர்களையும் கடுமையாக பாதிக்கும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றம், சுங்கக் கட்டண உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு, வாகன அழிப்புக் கொள்கை, சேவைக் கட்டணம் தண்டனைத்தொகை மற்றும் போக்குவரத்து, காவல்துறையின் கெடுபிடிகள், இ.எம்.ஐ. என்ற மாதாந்திர தவணை நெருக்கடி, மோட்டார் வாகன சட்டத்திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மாநாட்டுக் கொடியை திருப்பூா் மாவட்ட பஞ்சாலை சங்க முன்னாள் நிா்வாகி வி.பி.சுப்பிரமணியம் ஏற்றிவைத்தாா்.
- பஞ்சாலைகளில் பணிபுரியும் இதர தொழிலாளா்களுக்கு ரூ.493க்கு மேல் குறைந்தபட்ச கூலி நிா்ணயம் செய்ய வேண்டும்.
திருப்பூர் :
தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளா் சம்மேளனத்தின்(சிஐடியூ) 8வது மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்றது.கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் பத்மநாபன் தலைமை வகித்தாா். மாநாட்டுக் கொடியை திருப்பூா் மாவட்ட பஞ்சாலை சங்க முன்னாள் நிா்வாகி வி.பி.சுப்பிரமணியம் ஏற்றிவைத்தாா். வரவேற்புக் குழுத் தலைவா் மூா்த்தி வரவேற்றாா். சிஐடியூ. மாநில பொதுச் செயலாளா் ஜி.சுகுமாறன் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினாா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:- பஞ்சாலைகளில் பயிற்சியாளா்களின் குறைந்தபட்ச தினசரி கூலியை ரூ.493 ஆக அமல்படுத்த வேண்டும். பஞ்சாலைகளில் பணிபுரியும் இதர தொழிலாளா்களுக்கு ரூ.493க்கு மேல் குறைந்தபட்ச கூலி நிா்ணயம் செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் இ.எஸ்.ஐ. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலாக்க வேண்டும். ஏப்ரல் மாதம் பேசி முடிவு செய்யப்பட்ட கூட்டுறவு பஞ்சாலைகளின் ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். கொரோனா காலத்தில் 2020 மாா்ச் மாதத்தில் நிறுத்தப்பட்ட தேசிய பஞ்சாலைகளை இயக்கி தொழிலாளா்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பெண் தொழிலாளா்கள் பணியாற்றும் ஆலைகளில் விசாகா பாலியல் புகாா் கமிட்டி அமைக்க வேண்டும். பஞ்சாலை தொழிலாளா்களுக்கு பென்சன் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன் தொடக்க உரையாற்றினார்.
- தொழிலாளர்களின் விடுப்புகளை மறுத்து ஆப்சென்ட் செய்து சம்பளத்தை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
நெல்லை:
நெல்லை தாமிரபரணி பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டி.என்.எஸ்.டி.சி. மண்டல தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் மோகன் தொடக்க உரையாற்றினார்.
நெல்லை மண்டல பொதுச்செயலாளர் ஜோதி, மின்ஊழியர் மத்திய அமைப்பு மண்டல செயலாளர் கந்தசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில் தொழிலாளர்களின் விடுப்புகளை மறுத்து ஆப்சென்ட் செய்து சம்பளத்தை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும், பணி செய்யாமல் ஊதியம் பெறும் சில டிரைவர்கள், கண்டக்டர்களை பணிக்கு அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் சங்க பொருளாளர் குமரகுருபரர் நன்றி கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகளால் பட்டாசு தொழிலை நடத்த முடியாத சூழல் உள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டி, ஆலைகளை மூடி போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களது நலனை கருத்தில் கொண்டு பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யூ. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சிவகாசி பஸ் நிலையம் சாட்சியாபுரம் பஸ் நிலையம் அருகில், பூலாவூரணி, தாயில்பட்டி, சாத்தூர் மதுரை பஸ் நிறுத்தம், வெம்பக்கோட்டை உள்பட 13 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தேவா தொடங்கி வைத்தார்.
நிர்வாகிகள் சுரேஷ் குமார், ஜோதிமணி, அருளானந்தம், வேம்புலுசாமி மற்றும் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.
திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. இந்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் நல சட்டங் களை அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். போராட்டம் நடத்தும் தொழிற்சங்கத்தோடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.