search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleaning works"

    • சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன.
    • தி.மு.க. அரசின் இரட்டை வேடத்திற்கு கொடுமையான எடுத்துக்காட்டு இது தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சியின் ராயபுரம் (5), திரு.வி.க. நகர் (6) ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், அதற்கு வசதியாக அந்த இரு மண்டலங்களிலும் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான தற்காலிக துப்புறவு பணியாளர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. மிகவும் நெருக்கடியான காலத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது; கண்டிக்கத்தக்கது.

    சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அவற்றில் 11 மண்டலங்களில் தூய்மைப்பணி ஏற்கனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 4 மண்டலங்களில் இரண்டை தனியாருக்கு தாரைவார்க்க தி.மு.க. அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதால் அரசுக்கோ, மக்களுக்கோ எந்த பயனும் இல்லை. ஆட்சியாளர்களின் நலன்களுக்காக தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பலி கொடுக்கப்படுகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    2021-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னையில் பல மண்டலங்களின் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டதால் 700 பணியாளர்கள் நீக்கப்பட்டனர். அப்போது அது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பணி நீக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பட்டியலினத்தவர் என்பதால் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார். இன்று அவரே முதலமைச்சராகியுள்ள நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் நீக்கப்படுகின்றனர்.

    2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால், தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க. சொன்னதை செய்யவில்லை. தி.மு.க. அரசின் இரட்டை வேடத்திற்கு கொடுமையான எடுத்துக்காட்டு இது தான்.

    சமூகத்தின் அடித்தட்டு மக்கள் தூய்மைப் பணியாளர்கள் தான். சமூகநீதிக்காகவே ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடித்தட்டு மக்களை பணிநீக்கம் செய்வது சமூக அநீதி என்பதை உணர வேண்டும். சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கும் முடிவைக் கைவிட்டு, அவர்களுக்கு பணி நிலைப்பு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 23-வது வார்டு பகுதியில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணிகள் நடைபெற்றது
    • பஸ் நிறுத்தம் பகுதியில் ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் விதமாக கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் பேரில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படியும் உதவி கமிஷனர் வாசுதேவன் ஆலோசனையின் பேரிலும் நெல்லை மண்டலம் அலகு எண் 3-க்கு உட்பட்ட 23-வது வார்டு பகுதியில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணிகள் நடைபெற்றது. அதன்படி டவுன் காட்சி மண்டபம் பஸ் நிறுத்தம் பகுதியில் அனுமதியின்றி ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது பஸ் நிறுத்தம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

    • டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் சாக்கடை வாறுகால்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
    • சிவா தெருவில் சிறிய அளவிலான பொக்லைன் உதவியுடன் அடைப்புகள் சரி செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட தெற்கு மவுண்ட் ரோட்டில் சாக்கடை வாறுகால்கள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

    பொது மக்கள் புகார்

    தற்போது முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும், ஆக்கிரமிப்பினாலும், மழைக்காலங்களில் அந்த பகுதியில் சாக்கடை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் அடைப்பு ஏற்பட்டு கால்வாய்களில் இருந்து சாக்கடை நீர் வெளியேறி குடியிருப்புகள் புகுவதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து இன்று கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தலின் பேரிலும் டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தெற்கு மவுண்ட் ரோடு இருபுறமும் சாக்கடை வாறுகாலில் தூர் வாரும் பணி நடைபெற்றது.

    தூர்வாரும் பணி

    இந்த தூர்வாரும் பணியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வாறுகால்களை முழுவதுமாக தூர் வாரி சீரமைத்தனர்.

    தொடர்ந்து டவுன் சிவா தெருவில் சிறிய அளவிலான பொக்லைன் உதவியுடன் அடைப்புகள் சரி செய்யப்பட்டது. குவிந்து கிடந்த மணல், கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஹெலிபேட் தளத்தில் துப்புரவு பணிகள் நடந்து வருகிறது.
    • இந்த பணிகளை பேரூர் செயலாளர் பார்வையிட்டார்.

    மண்டபம்

    ராமநாதபுரத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 10 மாவட்டங் களை சேர்ந்த தி.மு.க. முக வர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதேபோன்று மண்டபத்தில் ஆக.18-ந்தேதி மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறு கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் அவருக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மண்டபம் அருகே ஹெலிபேட் தளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் துப்புரவு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் பார்வையிட்டார்.

    அப்போது கவுன்சிலர்கள் சாதிக்பாட்ஷா, வாசிம் அக்ரம், நிர்வாகி வேல்முரு கன், அவைத்தலைவர் முரு கானந்தம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    இதுகுறித்து அப்துல் ரகுமான் மரைக்காயர் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உத்தரவின் பேரில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மண்டபத்தில் அவர் மீன வர்களை சந்திக்க உள்ளதால் அதற்கான சிறப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் மண்டபம் ஹெலிபேட் தளத்தில் துப்புரவு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் சில நாட்களில் முடிந்து பந்தல் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டத்தில் 2023 - 24 ஆண்டிற்கான 15 ஆவது மத்திய நிதி குழு மானிய தொகைக்கு வேலை செய்ய தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
    • துப்புரவு பணியாளர்களிடம் மினி டிராக்டர் மற்றும் 6 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத்தில் சாதாரண கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2023 - 24 ஆண்டிற்கான 15 ஆவது மத்திய நிதி குழு மானிய தொகை ரூ.39,96,795-க்கு வேலை செய்ய தேர்வு செய்ய தீர்மானிக்கப்பட்டது. மேலும் குத்துக்கல்வலசை ஊராட்சியை தூய்மையான கிராமமாக மாற்ற வழங்கப்பட்ட மினி டிராக்டர் மற்றும் 6 பேட்டரி வாகனங்களை தலைவர் சத்யராஜ் துப்புரவு பணியா ளர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை தலைவர் சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் அம்புலி, கண்ணன், இசக்கி தேவி, கலை செல்வி, சங்கரம்மாள், மைதீன் பாத்து, சந்திரா, சரவணன்,மல்லிகா, கருப்பசாமி, சுப்பையா மற்றும் செயலர் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கீழப்பாவூர் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் ராஜன் தலைமையில் மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி றடைபெற்றது.
    • பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது பற்றியும் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    தென்காசி:

    கீழப்பாவூர் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் ராஜன் தலைமையில் மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி கீழப்பாவூர் அக்ரஹாரம் 4-ம் தெரு மற்றும் சுரண்டை மெயின் ரோடு பகுதியில் விளம்பர சுவரொட்டி அகற்றுதல், துப்புரவு பணிகள் நடைபெற்றன. மேலும் பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது பற்றியும்,, திறந்த வெளியில் மலம் கழித்தல் செயலை தடுத்தல் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கனகபொன்சேகா முருகன், விஜிராஜன், இசக்கிமுத்து, பவானி இலக்குமண தங்கம், வீரன்,ராமகிருஷ்ணன், விநாயகபெருமாள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று டவுன் தெற்கு மவுண்ட் ரோடு சாலையில் உள்ள வாறுகால் ஓடையில் சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்றது.
    • இந்த சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இருந்து வருகின்றன.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த சாக்கடை நீர் ஓடைகள் மற்றும் வாறுகால்கள் சுத்தம் செய்யும் பணி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியின் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.

    தூர்வாரும் பணி

    அதன் தொடர்ச்சியாக இன்று டவுன் தெற்கு மவுண்ட் ரோடு சாலையில் உள்ள வாறுகால் ஓடையில் சாக்கடை தூர்வாரும் பணி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.

    போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இருந்து வருகின்றன. இந்த பகுதியில் சாக்கடை வாறுகால்கள் தூர்ந்து போய் கிடந்த நிலையில் தற்போது மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    சிறிய அளவிலான பொக்லைன் எந்திரம் கொண்டு சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள வெள்ள ளோடை கால்வாயும் சுத்தம் செய்யப்பட்டது.
    • மங்கம்மாள் சாலை தெருவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    முக்கூடல்:

    முக்கூடல் பேரூராட்சி யில் தூய்மை நகரங்க ளுக்கான மக்கள் இயக்கம் நடவடிக்கையாக நீர்நிலை கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    பேரூராட்சி மன்ற தலைவர் ராதா தொடங்கி வைத்தார். இதில் துணைத் தலைவர் லட்சுமணன், செயல் அலுவலர் மாலதி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் சொக்கலால் மேல்நிலை பள்ளி சார ணர் இயக்க மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு நீர்நிலைகள், கோரங்குளத்தின் கரையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி சுத்தம் செய்தனர்.

    அதேபோல் முக்கூடல் பேரூராட்சி அலுவ லகத்தின் பின்புறம் உள்ள வெள்ள ளோடை கால்வாயும் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் மங்கம்மாள் சாலை தெருவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்தல் தொடர்பான சுவ ரொட்டிகள் வரையப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி 2,180 பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்டத்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் 13.6.2022 அன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    கடலூர்: கடலூர் அருகே காரைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தூய்மைப் பள்ளிகள் இயக்கத்தினையும் மற்றும் காரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்திட வலியுறுத்தி சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கிவைத்து பேசியதாவது:- கடலூர் மாவட்டத்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் 13.6.2022 அன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பள்ளிகள் இயக்கம் தொடங்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு, தூய்மைப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பள்ளிகளில் வகுப்பறைகள், வளாகங்கள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தியும், குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் சத்துணவு கூடங்களை நல்ல முறையில் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து காரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை கலெக்டர் தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து வரவேற்று தெரிவித்ததாவது:- அரசுப் பள்ளிகள் நமது சொத்தாகும், நமது பள்ளியின் பெருமையினை நாம் உணர்ந்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ உயர்படிப்புகளில் சேர்வதற்கு வழங்கப்பட்டு வரும் 7.5% இட ஒதுக்கீடு, பெண்கல்வி ஊக்கத்தொகை ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும், மேலும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 14 வகையான நலத்திட்ட உதவிகளை எடுத்துக்கூறி மாணவர்கள் நல் ஒழுக்கத்தோடு பெற வேண்டிய கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை பாதுகாப்பின் முக்கியத்துவம் ஆகியன குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தினையும் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×