search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "closing"

    • இருதய ஆண்டவர் தேவாலய தேர்பவனிவிழா நடந்தது.
    • இன்று 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாம துரை அருகே இடைக்காட்டூரில் பிரபலமான திருஇருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின்

    129-வது ஆண்டு திருவிழா கடந்த 30-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணி முஸ் கொடியேற்றி வைத்து திருப்பலி நடத்தினார். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலையில் இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுரை வழங்கப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார மின்விளக்கு தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது, திரு இருதய ஆண்டவர் சொரூபம் தாங்கிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஆலயத்தைச் சுற்றி உள்ள வீதிகளில் வலம் வந்தது.

    முன்னதாக காலை ஆயர் (பொறுப்பு) ஸ்டீபன் அந் தோணி, திருவிழா திருப்பலி யையும், மாலையில் முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் திருவிழா நிறைவு திருப்பலியையும் நடத்தினர். இன்று 8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

    • தமிழக அரசு முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 500 மது கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தனர்.
    • அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கடைகளை கண்டறிந்து மூடுவதற்கு நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டது.

    கடலூர்:

    தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்ததால், தமிழக அரசு முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 500 மது கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 146 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே டாஸ்மாக் கடை களால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கடைகளை கண்டறிந்து மூடுவதற்கு நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 11 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தி ருந்தனர். 

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் - 2, பரங்கி ப்பேட்டை- 1, சேத்தியா த்தோப்பு -1, காட்டுமன்னா ர்கோவில் -2, பணிக்கன் குப்பம் -1, விருத்தாச்சலம் -1, வீராணம் ஏரிக்கரை வாக்கூர் -1, வடலூர் பார்வதிபுரம் -1, ஸ்ரீமுஷ்ணம் கானூர் -1 ஆகிய இடங்களில் வழிபாட்டுத்தலங்கள், பள்ளி மற்றும் கல்லூரி அருகாமையில் இருந்து வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இன்று முதல் 11 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த பணியாளர்கள் கவுன்சிலிங் மூலம் சீனியாரிட்டி படி பணி அமர்த்தப்பட உள்ளனர். மேலும் இன்று முதல் கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் அங்குள்ள அனைத்து மதுபானங்களும் முறைப்படி கணக்கு செய்து கடலூர் சிப்காட் வளா கத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதினர்.
    சேலம்:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந்தேதி  தொடங்கி 28-ந்தேதியுடன் முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நேற்றுடன் (30-ந்தேதி) நிறைவடைந்தது.

    பிளஸ்-1 பொதுத் தேர்வு  கடந்த  10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. குறிப்பாக சேலம்  மாவட்டத்தில் 154 மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் 82 மையங்களிலும் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்றது.
    இம்மையங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதினர். 

    கடைசி நாளான இன்று  (31-ந்தேதி) செவ்வாய்க்கிழமை  இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் தொழிற்நுட்பம் ஆகிய 3  பாடங்களுக்கு தேர்வு நடந்தது. காலை  10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. இதனால் பிளஸ்-1 பொதுத்தேர்வு அனைத்தும் இன்றுடன்  நிறைவடைந்தன.

    தேர்வு  நிறைவடைந்ததை அடுத்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகம் மகிழ்ச்சியில் பூத்துக்குலுங்கியது. மாணவிகள் துள்ளிக்குதித்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். 

    தங்கள் வகுப்பில்  பயின்றவர்களை சந்தித்து,   ஒருவருக்ெகாருவர் வாழ்த்துக்கள்  ெதரிவித்தனர்.  மேலும் புகைப்படம் எடுத்தும்,  சீருடைகளில் மாறி மாறி மை தெளித்தும், வண்ணப்பொடிகள் தூவியும், செல்போன் நம்பர் பரிமாறிக்கொண்டும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    பொதுத்தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 மாணவர்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது.
    8 நாள் கொண்டாட்டத்திற்கு பின் ஏற்காடு கோடை விழா இன்றுடன் நிறைவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஏற்காடு:

    ஏற்காட்டில் 45- வது  கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ெதாடர்ச்சியாக 8 நாட்கள் நடத்தப்பட்டது.   முதல் நாளான கடந்த  25-ந் தேதி (புதன்கிழமை)  அன்று கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.

    கோடை விழாவின் 7-வது நாளான நேற்று ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெடல் படகு போட்டியும், படகோட்டிகளுக்கு துடுப்பு படகு போட்டியும் நடத்தப்பட்டது. போட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

    போட்டியை நாமக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதிகளுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலா அலுவலர் சக்திவேல் மற்றும் ஏற்காடு படகு இல்ல மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 

    8-வது நாளான இன்று (புதன்கிழமை) கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி  பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நிறைவடைந்தது. காலை 11 மணிக்கு  விளையாட்டு துறை சார்பாக இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கலை நிகழ்ச்சி,  பிற்பகலில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக  இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் நடைபெற்றது.
    விழா நிறைவு நாளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.   விழாவுக்கு சேலம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.  

    சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், பெரும்பாலானவர்கள் மலர் சிற்பங்கள், பழ உருவங்கள் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.   அதுபோல் மலர்கள் முன்பாக தங்கள் பெற்றோரை மழலைகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

    படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பய ணிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஏரியில் படகு சவாரி  செய்து மகிழ்ந்ததோடு, மலர் கண்காட்சியை பார்த்து ரசித்தனர். காய்கறிகளால் ஆன காட்டெருமை, விமானம்,  அண்ணா பூங்காவிலும், ஏரி பூங்காவிலும் உள்ள செயற்கை நீருற்று, மலர்களால் வடிவமைக்கப்பட்ட   மேட்டூர் அணை, பெண்களுக்கான இலவச பஸ், மாட்டு வண்டி, சின்-சான் பொம்மை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

    இதேபோல் ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட் ஆகிய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கோடை விழா- மலர் கண்காட்சியில் தமிழ்நாடு அரசு துறைகள் சார்பில் பல்வேறு கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 

    இதில் சிறந்த கண்காட்சி அரங்கங்கள் எவை? என தேர்வு செய்யப்பட்டு, அந்த அரங்கங்களுக்கு சேலம் மாவட்ட  கலெக்டர் கார்மேகம்  சான்றிதழ்கள் வழங்கினார்.  மேலும் அரங்கங்களை சிறப்பாக அமைத்த  துறை அலுவலர்களையும் பாராட்டினார்.

    விழா நிறைவு நாளான இன்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வழக்கத்தை விட சிறப்பு பஸ்கள் அதிக எண்ணிக்கையில்  விடப்பட்டன. அதுபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், ஏற்காடு அடிவா ரத்திற்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • நிறைவு விழாவாக திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ரவிமரியா, திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்து கொள்ளும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட காவடியாட்டம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் பொதுமக்க ளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    டி.வி புகழ் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, அன்னபாரதி கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி, திரைப்பட பாடகர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி கலந்துகொண்ட இன்னிசை நிகழ்ச்சியையும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    நிறைவு நாள்

    விமர்சையாக நடை பெற்ற சாரல் திருவிழாவின் நிறைவு நாளான இன்று காலையில் சுற்றுலாத்துறை சார்பில் பழைய கார்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி தொடங்கியது. மேலும் மாலையில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ-மாணவிகளின் மங்கள இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியும், சுற்றுலா துறை சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    நிறைவு விழாவாக திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ரவிமரியா, திரைப்பட பாடகர் வேல்முருகன் கலந்து கொள்ளும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வரவேற்று பேசுகிறார். சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, முதன்மை செயலாளர் சந்திரமோகன் தலைமை ஏற்பு உரையும், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பரிசுகள் வழங்கி விழா பேருரையும் ஆற்றுகிறார்.

    சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி சிறப்புரையாற்றுகிறார். மேலும் தென்காசி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றுகின்றனர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் நன்றி கூறுகிறார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் சட்ட விரோதமாக செயல்படும் காய்கறி கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை இழுத்து மூட மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. #Koyambedumarket

    சென்னை:

    கோயம்பேடு வணிக வளாகம் ஆசியாவின் மிகப் பெரிய மார்க்கெட்டாக விளங்குகிறது.

    சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக கமிட்டி இந்த வணிக வளாகத்தில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்து கண்காணித்து வருகிறது. இங்கு காய்கறி மார்க்கெட்டில் 1900 காய்கறி கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 1600 கடைகள் சட்டவிரோதமாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அங்கு காய்கறி கடை வைத்திருப்பவர்களுக்கு அதற்கான உரிய அனுமதி ஆணை எதுவும் இல்லை. வேறொருவர் காய்கறி கடைக்கு அனுமதி பெற்று அதை மற்றவருக்கு வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இதற்கான முறைப்படியான ஒப்பந்தம் எதுவும் செய்யப்படாமல் சட்ட விரோதமாக செயல்படுவதாக மார்க்கெட் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு அறிக்கையாக அளித்துள்ளது. அதில் மொத்தம் உள்ள 1900 கடைகளில் 1600 கடைகள் சட்ட விரோதமாக இயங்குவதாக குறிப்பிடப்பட்டு அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    இதையடுத்து சட்ட விரோதமாக செயல்படும் காய்கறி கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை இழுத்து மூட மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    ஒட்டு மொத்தமாக 1600 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து மூடப்பட்டால் சென்னை நகரில் காய்கறி சப்ளை பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே காய்கறி சப்ளை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்து 450 லோடு காய்கறிகள் வருகின்றன. இங்கிருந்து சென்னை நகரில் உள்ள சிறிய மார்க்கெட்டுகள், சிறிய கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இதேபோல் சென்னை புறநகர் பகுதி வியாபாரிகளும் கோயம்பேடு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்று சில்லரை வியாபாரம் செய்கிறார்கள்.

    இதற்கிடையே சட்ட விரோதமாக செயல்படும் காய்கறி கடைகளுக்கு உரிய அனுமதி பெற வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்குள் முறைப்படி அனுமதி பெற வேண்டும், ஒதுக்கீடுதாரர்கள் மட்டுமே கடை நடத்த வேண்டும் என்று மார்க்கெட் நிர்வாக கமிட்டி அதிகாரி தெரிவித்துள்ளார். #Koyambedumarket

    ×