என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "closing ceremony"
- நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- நிறைவு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட நில அளவை துறையின் சார்பில் நினைவு பரிசு வழங் கப்பட்டது.
கோவில்பட்டி:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4ன் கீழ் புதியதாக தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 153 நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு கடந்த ஜூலை 19-ந்தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரை 60 நாட்கள் நடைபெற்ற நில அளவை பயிற்சி முகாம் நிறைவு விழா கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவில், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. எல்.ஜேன் கிறிஸ்டி பாய் தலைமை தாங்கினார். மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் ஆர்.சீனிவாசகன் முன்னிலை வகித்தார். நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், இவ்விழாவில் கல்லூரி இயக்குனர்எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாஸ முருகவேல், கோவில்பட்டி தாசில்தார் கே.லெனின் மற்றும் மாவட்ட பராமரிப்பு ஆய்வாளர் எஸ்.சுடலைமுத்து உள்பட கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட நில அளவை துறையின் சார்பில் நினைவு பரிசு வழங் கப்பட்டது. மாவட்ட நில அளவைத்துறை கண்காணிப்பாளர் எஸ்.பரஞ்ஜோதி நன்றி கூறினார்.
- ஊர் காவல் படை பயிற்சியும், 10 பேருக்கு கடலோர காவல் குழுமத்தில் பணி புரிவதற்கான பயிற்சியும் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
- போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ஊர் காவல் படையில் பணிபுரிவதற்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 23 பேருக்குஊர் காவல் படை பயிற்சியும், 10 பேருக்கு கடலோர காவல் குழுமத்தில் பணி புரிவதற்கான பயிற்சியும் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.கடந்த 45 நாட்களாக இவர்களுக்கு அடிப்படைக் கவாத்து பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியின் நிறைவு விழா இன்று காலை கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
ஊர்க்காவல் படை விழுப்புரம் சரக உதவி தளபதி கேதர்நாதன் தலைமை தாங்கினார். வட்டார தளபதி அம்ஜத் கான் வரவேற்றார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த ஊர் காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 3 பேருக்கு பதக்கங்களை அணிவித்து கவுரவித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆயுதப் படை ஆய்வாளர் அருள்செல்வன், ஊர் காவல் படை வட்டார துணை தளபதி கலாவதி, செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நிறைவு விழா மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- அரசு திட்டங்கள் குறித்தும், சேவைகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு மிக சிறந்த வாய்ப்பாக இக்கண்காட்சி அமைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நிறைவு விழா மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பேசியதாவது:-
ஓயா உழைப்பில் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி எனும் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் கடந்த 10 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள், உள்ளூர் கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ -மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
மேலும் அரசு திட்டங்கள் குறித்தும், சேவைகள் குறித்தும் அறிந்து கொள்வதற்கு மிக சிறந்த வாய்ப்பாக இக்கண்காட்சி அமைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்பாக அரங்குகள் அமைத்த அனைத்து துறை அலுவலர்களுக்கும், இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பத்திரிகையாளர்களுக்கும், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்திய பரதாலயா, புருஷோத்தமன் நாட்டி யக்குழு, கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் கலெக்டர் பரிசு, கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், துணை தலைவர் சுப்பையா, தென்காசி செய்தி மக்கள் தொடர்புதுறை அலுவலர் இளவரசி, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்டமுதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தார்.
- திருப்பூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் நஞ்சப்பா ஆண்கள் பள்ளி சார்பில் குழந்தைகள் தினம், போதை ஒழிப்பு விழிப்புணர்வு, தேசிய சட்ட விழிப்புணர்வு முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் மாவட்டமுதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் மாணவர்களுக்கு போதை ஒழிப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் கூடுதல் போலீஸ் கமிஷனர் வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்குகிறார்.
- சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி பங்கேற்கிறார்.
186 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடக்கிறது.
விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று வெற்றி பெறும் செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி, சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், செஸ் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்
நிறைவு விழாவில் 600 கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கம் செஸ் காய்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கண்கவர் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு உள்ளேயே மொத்தம் 10-க்கும் மேற்பட்ட அகண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
- நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை ஷரத் கமல் மற்றும் நிகாத் ஜரீன் ஏந்திச் சென்றனர்
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்களின் முடிவில் ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடத்தில் போட்டியை நடத்திய இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம்) இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
கனடா 92 பதக்கங்களுடன்(26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்தியா 61 பதக்கங்களை (22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம்) வென்று நான்காவது இடத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார்.
அடுத்த காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனை அடுத்து காமன்வெல்த் விளையாட்டுக் கொடி விக்டோரியா ஆளுநரிடம் வழங்கப்பட்டது.
பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றிருந்தன. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் ஏந்திச் சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்