search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cock fighting"

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி முனியப்பன் கோவில் அருகே பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • டி.எஸ்.பி உத்தரவின் பேரில் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி முனியப்பன் கோவில் அருகே பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டி.எஸ்.பி உத்தரவின் பேரில் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (36), ஆத்தூர் பேட்டை செல்வம் (31), ஏத்தாப்பூர் முருகன் (41), இடையப்பட்டி ஞானசேகரன் (41), வடுகத்தம்பட்டி சரவணகுமார்(33), தும்பல் கோபி (23), காடையாம்பட்டி ஸ்ரீராம்(21), ஏத்தாப்பூர் சசி (25) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 11 வாகனங்கள், ரூ.4,060 ரொக்கம் மற்றும் 2 சேவல்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சேவல் சண்டை நடப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள பழனிபுரம், பவானி ஆற்றின் கரையோரம் பணம் பந்தயம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த சரவணன் (41), பவானி, கல்தொழிலாளர் முதல் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் (34) ஆகிய இருவரும், பணம் பந்தயம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்க ளிடமிருந்து 2 சேவல்கள், பணம் ரூ. 500 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.

    சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது. அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோரையர் பாலம் பகுதியைச் சேர்ந்த ராஜா (34), சூரமங்கலம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பூபதி (44), சுபாஷ் (30), பிரபு (33),ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 11 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

    • காந்திநகர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு 4 பேர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவர்களி டமிருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள், பணம் ரூ.1200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே காந்திநகர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு 4 பேர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் பவானியை சேர்ந்த சுரேஷ்(வயது 38,), ஈரோட்டை சேர்ந்த பாஸ்கரன்( 48,) கனகராஜ்( 28,) குப்பாண்டபாளை யத்தை சேர்ந்த சவுந்தர்( 27,) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களி டமிருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள், பணம் ரூ.1200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதன் பேரில் சேவல் சண்டை நடத்திய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.4 ஆயிரம் மதிப்பிலுள்ள சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி. சப்-இன்ஸ்பெக்டர். மலர்விழி தலைமையிலான போலீசார் நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்திய அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோகுல்(வயது 23), ராஜகோபால்(26), பவானி, இளங்கோவன்(43), ஈரோடு எலக்ட்ரீசியன் தினேஷ்(29), ஈரோடு நிதி நிறுவன அதிபர் உதயன்(32), ஈரோடு, போட்டோ கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன்(28) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த மாநில அரசு தடை விதித்து உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
    • ஆந்திர மாநிலத்தில் கடலோர பகுதிகளான கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் சேவல் சண்டை புகழ் பெற்றவை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் சேவல் சண்டை பிரபலமான ஒரு விளையாட்டாக நடத்தி வருகின்றனர். இதற்காக வீரியமிக்க சேவல் குஞ்சுகளை வாங்கி வந்து பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட தரமான உணவு அளித்து சண்டை பயிற்சி அளிக்கின்றனர். சுமார் ஐந்து அடி உயரம் வரை வளர்க்கப்படும் இந்த சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு மற்றொரு சேவலுடன் மோத விடுகின்றனர்.

    சேவல்கள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷத்துடன் உயரே பறந்து சண்டையிடும் காட்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவார்கள். சேவல் சண்டை ஆர்வம் உள்ளவர்கள் சண்டையிடும் சேவல்கள் மீது ரூ.1000 முதல் ஒரு லட்சம் வரை பந்தயம் கட்டுவது வழக்கம். பந்தயம் கட்டியவர்களின் சேவல் வெற்றி பெற்றால் 3 மடங்காக பணம் திருப்பி தரப்படும்.

    இந்த நிலையில் ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த மாநில அரசு தடை விதித்து உள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் சேவல் சண்டை அமைப்பாளர்கள் சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகை அன்று சேவல் சண்டைகளை புத்திசாலித்தனமாக ஆன்லைனில் நடத்த திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக ஜிஇ 5 கி நெட்வொர்க் சேவையை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சேவல் சண்டை அமைப்பாளர்கள் வட இந்திய சந்தையை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் கடலோர பகுதிகளான கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்களில் சேவல் சண்டை புகழ் பெற்றவை. அமைப்பாளர்கள் மெசேஜிங், ஆப்ஸ், லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் பேமெண்ட் போர்டல்களுக்கு மாறி உள்ளனர்.

    தற்போது சேவல் சண்டை சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றனர் சண்டையை தொடங்குவதற்கு முன்பு சேவல்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவிடப்படுகின்றன. சூதாட்டத்தில் ஆர்வமுள்ளவர்களை கொண்டு ரகசிய குழுக்களை உருவாக்குகிறார்கள். சூதாட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது பாஸ்வேர்ட் எண்களை சேவலின் பெயர்களுக்கு எதிராக பதிவிடப்படுகிறது.

    உங்களது பதிவு சரி என வந்த பிறகு அமைப்பாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்வது மூலம் சேவல் சண்டையில் சூதாட்டம் நடக்கிறது. வெற்றி பெற்ற சேவல்கள் மீது ஆன்லைனில் பந்தயம் கட்டியவர்களுக்கு அமைப்பாளர்களின் கமிஷன் பிடித்துக் கொண்டு பணம் கட்டியவர்களின் வங்கிக் கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என கூறப்படுகிறது.

    சேவல் சண்டைக்கு ரூ.1000 கோடி வரை பந்தயம் கட்ட ஏற்பாடு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    • கொரமடை கடத்தூர் கொரங்காட்டு தோட்டம் பாலம் அருகில் ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொரமடை கடத்தூர், கொரங்காட்டு தோட்டம், பாலம் அருகில் ஒரு கும்பல் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

    அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.விசாரணையில் அவர்கள் நம்பியூரை சேர்ந்த மணிகண்டன் (24), எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்த மோகனசுந்தரம் (22), மதன்குமார் (25), கோகுல் (22), கடத்தூரை சேர்ந்த மனோஜ் (23) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சண்டைக்கு பயன்படுத்தப்பட்ட 2 சேவல்கள், பணம் ரூ.950 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    ×