search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector talk"

    • கொத்தடிமை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
    • அலுவலர்கள், பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கான ஒருநாள் பயிற்சி நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகை யில், மாவட்டத்தில் கொத்த டிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டம் 1976-ன் படி போதிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இருந்து வருகிறதா? என்பதை மாவட்ட தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, சமூக நலத்துறை மற்றும் பிற துறைகளும் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொத்தடிமைத் தொழிலாளர் முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    அதற்கேற்ப அலுவ லர்கள், பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ராஜா, ஜப பிரின்ஸ், எசக்கியேல், மலர்விழி ஆகியோர் பணியாளர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த பயிற்சி வழங்கினர்.

    • போதைப்பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடை பெற்றது.
    • வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்களது புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொரு ள்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலை மையில் நடை பெற்றது.

    கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை, டாஸ்மாக், வனத்துறை, கலால் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:

    கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது பானம் விற்பனையில் ஈடுபடு வர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேலும் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயங்கள் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வாரம் தோறும் ஒவ்வொரு அலுவலர்களும் இப்பணியில் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். போலி மது பானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனுக்குடன் சம்பந்த ப்பட்ட கள அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாநிலஅளவில் தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டுபாட்டில் செயல்படும் 94429 00373 என்ற எண்ணிற்கு நேரடியாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்களது புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் மது விலக்கு தொடர்பாக வட்ட, கோட்ட மற்றும் மாவட்ட அளவில் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரப்பாளையம், ராயபாளையம், கடத்தூர் மற்றும் நம்பியூர் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் அரசு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து நேரம் கடந்து மது விற்பனை செய்தவர்கள் மீது 122 வழக்குகளும், மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மது பானம் எடுத்து வந்ததற்காக 7 வழக்குகளும் என மதுவிலக்கு தொடர்பாகசு மார் 129 குற்றவாளிகள் கண்டறியப்பட்டு 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களில் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, சப்-கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், ஜெயபால், பவித்ரா (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மோகன சுந்தரம், உதவி ஆணையர் (கலால்) சிவக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தக வாசிப்பு தனிமனிதனை பண்பட்ட நபராக உருவாக்குகிறது என்று கலெக்டர் அனீஷ்சேகர் பேசினார்.
    • ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    மதுரை

    மதுரை பரவையில் உள்ள தனியார் அறிவியல் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை கலெக்டர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு இளைஞர்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களது தனித்திறனை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இளைஞர்க ளின் ஆற்றல் மிக முக்கியமானதாகும்.

    அந்த வகையில் இளைஞர்களின் படைப்பாற்றலை மெருகேற்றிடவும், தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை அதிகரித்திடும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி உள்ளது.

    குறிப்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.

    புத்தக வாசிப்பு தனிமனிதனை பண்பட்ட நபராக உருவாக்கு கிறது. சமூக பொறுப்புணர்வு கொண்ட நபராக மேம் படுத்துகிறது. அதேபோல் இளைஞர்கள் தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் பல்வேறு ஆளுமைகள், எழுத்தாளர்களுடன் நேரடியாக கலந்து ரையாடி தங்களது படைப்பாற்றலை மேம்படுத்திட வாய்ப்பளித்திடும் வகையில் இளைஞர்கள் இலக்கிய பயிற்சிப்பட்டறை, இலக்கியத்திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மாணவர்கள் இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு படிக்க வேண்டும் என்று கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
    • சிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து செல்லும்போது அவர்க ளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இந்த புத்தாண்டில் மாண வர்கள் தங்களுக்கென்று தனி ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போது ஒரு தெளிவான நோக்கத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.

    கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே ஒரு தெளிவான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் இலக்கை நோக்கி நகருவதற்கு எளிதாக இருக்கும்.

    தற்போது உள்ள சூழ்நிலையில் உள்ளது போல், முன்காலத்தில் நல்வழிகாட்டுதலுக்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. ஆனால் தற்போது உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டுவதற்கு தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

    மேலும் பட்டப்படிப்பு படித்து முடித்த பிறகு இந்தியாவில் நிறைய மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளது. இந்த பல்கலைக் கழகங்களின் சேர்வதற்கு போட்டித் தேர்வுகள் உண்டு. பட்டப்படிப்பு படிக்கும் போதே இந்த தேர்வுகளுக்கு உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும், இந்த பல்கலைகழகங்களில் சேர்ந்து பயிலும் போது வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முன்னதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம், இந்திய ஆட்சிப் பணித்தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.

    பின்னர் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக பிரத்யேகமாக தயாரிக்க ப்பட்ட போட்டித் தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டினை வெளியிட்டார்.

    அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்க ளிடையே நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) மகா லட்சுமி, ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின ருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலைய உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர், மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலர் ஞானபிரபா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் (பயிற்சி) ஷாலினி, உதவி பேரா சிரியர் (எஸ்.எப்.ஆர் கல்லூரி) நந்தினி, இளம் நிபுணர் சுமதி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கல்பனா மற்றும் அரசு அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் தலைமையில் நடந்தது.
    • இந்த விழாவில் மாணவர்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி பெருமை தேடி தர வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பள்ளி கல்வித்துறையின் மூலம் மாவட்ட அளவிலான கலை திருவிழா நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன் ஆகியோர் பேசினர்.

    முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். கலை நிகழ்ச்சி களை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-

    ஆர்வத்துடன் கலையை கற்கும்போது மாணவர்களின் திறன் வெளிக்கொண்டு வருவது மட்டுமின்றி அதன் மூலம் சமுதாயத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    கலைத் திருவிழாவிற்காக பங்கேற்க 33 ஆயிரம் மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. அதேபோல் வட்டார அளவில் 15 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி இருப்பது வரவேற்கத்தக்கது.

    கலை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வகையில் உதவியாக இருக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிக அளவு மாணவ, மாணவிகள் பங்கேற்று கலைத்திறனை வெளிப்படுத்தி உங்களுக்கும், பள்ளிக்கும் பெருமை தேடித் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி தொகுத்து வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ரவி, நேசனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செய்யதா அப்துல்லா, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர்கள் செல்வராஜ், கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×