என் மலர்
நீங்கள் தேடியது "comedy"
- அண்ணாமலை ‘நான் தலைவன்’ என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
- கப்பலூர் சுங்கச்சாவடி முழுக்க முழுக்க மத்திய அரசுத்துறையை சார்ந்துள்ளது.
திருமங்கலம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளிக்கு வந்தார். அவர் செயற்கை கோள் உருவாக்கிய பள்ளி மாணவி களை சந்தித்து பொன்னா டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு விருது வழங்கி கவுரவித்தார். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மரக்கன்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தலைவர் என்பவர் தனது தொகுதியில் வெற்றி பெற்றவராக வேண்டும். அதை விட்டுவிட்டு அண்ணா மலை தன்னைத்தானே எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா வரிசையில் மிகைப்படுத்தி கூறுவது நகைச்சுவையாக உள்ளது.
அவர் சட்டமன்ற தேர்தலில் தோல்விய டைந்தவர். எங்களை பொறுத்தவரை அவர், 'நான் தலைவன்' என்று சொல்லுவது வடிவேலு "நானும் ரவுடி தான்" என்று கூறுவது போல் இருக்கிறது. அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று சொல்லட்டும். அதை ஏற்றுக் கொள்கிறோம்.
கப்பலூர் சுங்கச்சாவடி குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியை நானும், கனிமொழியும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். அதற்கு அவர் மார்ச் மாதம் வரை எனக்கு அவகாசம் கொடுங்கள். உரிய முடிவு எடுப்பேன் என்று கூறினார்.
மார்ச் முடிந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஏப்ரல் முதல் வாரத்தி லேயே அவரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்து வோம்.
கப்பலூர் சுங்கச்சாவடி முழுக்க முழுக்க மத்திய அரசுத்துறையை சார்ந்துள்ளது. மக்கள் மீது அராஜகத்தை தூண்டும் வகையில் செயல்படும் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்து வோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
- மதுரையில் கரு.கருப்பையாவின் நகைச்சுவை சொல்லரங்கம் இன்று மாலை நடக்கிறது.
- இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.
மதுரை
மதுரை கீழ மாரட் வீதி பந்தடி 4-வது முக்கில் உள்ள பழைய கோண அரச மரம் பிள்ளையார் கோவி லில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.
இதை யொட்டி இன்று மாலை 6 மணிக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், சிரிப்பு பட்டிமன்ற நடுவரு மான பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு. கருப்பையாவின் நகைச் சுவை சொல்லரங்கம் என்னும் புதுமையான நிகழ்ச்சி நடைபெறுகிறது. ெதாடர்ந்து இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.
- சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.
- உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார்.
அமெரிக்காவின் மிக்சிகன் பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றார். பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் அவரால் கோமாவில் இருந்து மீள முடியவில்லை. சுமார் 5 ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையில் இருந்துள்ளார்.
அவரை கோமாவில் இருந்து குணமாக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வர அவரது தாய் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். எனினும் அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜெனிபரின் தாய் வீட்டில் தனது மகனுடன் பேசி கொண்டிருந்த போது காமெடி செய்துள்ளார். அதை கேட்ட, ஜெனிபர் சிரித்துள்ளார். இதை கவனித்த அவரது தாய் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
5 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தனது மகன் தனது காமெடியை கேட்டு கோமாவில் இருந்து சற்று மீண்டதை அவரால் நம்பமுடியவில்லை. உடனடியாக அவரது மருத்துவரை அணுகி நடந்த சம்பவங்களை கூறினார். இதைத்தொடர்ந்து அவரை பேச வைப்பதற்கும், சாதாரணமாக இயங்க வைப்பதற்குமான நடவடிக்கைகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 1.5 லட்சம் லைக்குகளை குவித்தது. பயனர்கள் பலரும் தாங்கள் அந்த நகைச்சுவையை கேட்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
- நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம்
- இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
'காமெடி நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா' .சினி கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் காமெடி எழுத்தாளர் சாய் ராஜகோபால் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர்.

கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன், ஒ.ஏ.கே.சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து உள்ளார்.இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சென்னை பரணி' டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் கவுண்டமணி பங்கேற்றார். 8 மணி நேரம் தொடர்ந்து உற்சாகத்துடன் கவுண்டமணி 'டப்பிங்' பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்த படம் குறித்து இயக்குநர் சாய் ராஜகோபால் கூறியதாவது :-
"சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன்.

எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.
'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார்.இப்படம் 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த நகைச்சுவை படம் ஆகும்.
கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படுவதாக அமைந்து உள்ளது. இதற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளிப்பார்கள்."என்று கூறினார்.
- ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'.
- துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
துப்பாக்கி' படத்தில் விஜய்யின் வாழைப்பழ காமெடி.. வைரலாகும் வீடியோ
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'. விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகவும் துப்பாக்கி அமைந்தது. விடுமுறையில் ஊருக்கு வரும் ராணுவ வீரன் மும்பை நகருக்குள் ஸ்லீப்பர் செல்களாக இயங்கும் தீவிரவாதிகளுடன் மோதும் கதைக்களத்தை கொண்ட இப்படம் எந்த இடத்திலும் லேக் ஆகாமல் விறுவிறுப்பாக செல்லும்.

விஜய்க்கும் கதாநாயகி காஜல் அகர்வாலுக்குமான கெமிஸ்ட்ரி கச்சிதமாக பொருந்தியிருக்கும். சீரியஸான கதைக்களம் என்றாலும் விஜய்யின் சிறு சிறு மேனரிசம்களும் டயலாக்களும் அவ்வப்போது மெல்லிய சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவின் கிளாசிக் படமான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி செந்திலின் பல காமெடி காட்சிகள் டிரெண்ட்செட்டர்களாக மாறின. அதில் ஒன்று வாழைப்பழ காமெடி. பணம் கொடுத்து செந்திலை 2 வாழைப்பழம் வாங்கி வர சொல்வார் கவுண்டமணி. ஆனால் செந்தில் 2 பழத்தை வாங்கி அதில் ஒன்றை வரும் வழியிலேயே சாப்பிட்டு விடுவார். கவுண்டமணி 1 பழம் மட்டுமே இருப்பதை பார்த்துவிட்டு மற்றோரு பழம் எங்கே என கேட்பார். அதற்கு செந்தில் அது தான் அண்ணே இது என கூற அங்கு களேபரமே ஏற்பட்டுவிடும்.

தற்போது வெளியாகி உள்ள துப்பாக்கி படத்தின் நீக்கப்பட்ட காட்சியில் இந்த காமெடியை கதைப்படி மும்பையில் தனது நண்பன் வேலை பார்க்கும் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்களுக்கு ஹிந்தியில் மிமிக்கிரி செய்து சிரிக்க வைக்கிறார் ஜெக்தீஷ். அதாவது கதைப்படி ஜெக்தீஷாக நடிக்கும் விஜய். இந்த டேலிட்டட் காட்சிகள் வைரலான நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையில் ஜூன் 22 விஜய் பிறந்தநாள் வர உள்ள நிலையில் ஜூன் 21 ஆம் தேதி துப்பாக்கி படம் ரீரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
- மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன்.
அரியானா மாநிலத்தின் குருகுராம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்வீர்சிங். இவர் செயலி ஒன்றில் இணை நிறுவனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
அதில், கடந்த 2 மாதங்களில் மொத்தமாக ரூ.45 ஆயிரத்து 491 ரூபாய் செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு மின் கட்டணம் செலுத்தியதற்கான ஸ்கிரின்ஷாட்டையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார். அதனுடன், அதிக மின் கட்டண உயர்வு காரணமாக மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் எப்படி இவ்வளவு கட்டணம் வந்தது என கேள்வி எழுப்பி உள்ளனர். சில பயனர்கள் தங்கள் வீடுகளுக்கும் அதிகப்படியான மின் கட்டணம் செலுத்துவது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
- பாப் நியூஹார்ட் டெட்பான் [Deadpan] எனப்படும் காமடி வகைக்கு பேர் போனவர் ஆவர்
- 1970 மற்றும் 80 களில் தொலைக்காட்சி சிட்காம்களில் கொடிகட்டிப் பறந்தார் பாப் நியூஹார்ட்.
அமெரிக்காவைச் சேர்ந்த 94 வயதாகவும் பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் பாப் நியூஹார்ட் உயிரிழந்துள்ளார். சிகாகோவைச் சேர்ந்த பாப் நியூஹார்ட் டெட்பான் [Deadpan] எனப்படும் காமடி வகைக்கு பேர் போனவர் ஆவர். அவரது டெட்பான் வகை நகைச்சுவைகள் அவரை உச்சபட்ச தொலைக்காட்சி நட்சத்திரமாக மாற்றியது.

1929 செப்டம்பர் 5 இல் இல்லினோய்ஸ் புறநகரில் பிறந்த பாப் நியூஹார்ட் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்று அதன்பின் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். கொரிய போரில் பணியாற்றிய அவர் நாடு திரும்பியபின் சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பை இடையிலேயே கைவிட்டுவிட்டு அக்கவுன்டன்டாக தனது பணியை தொடங்கிறார்.
ஆனால் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட பாப் நியூஹார்ட் இடையிடையே காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். அதன்பின் கவனம் பெற்ற அவர், வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து காமெடி ஆல்பங்களை வழங்கத் தொடங்கினார். நியூஹார்ட்டின் "The Button-Down Mind of Bob Newhart" காமெடி ஆல்பம் அவருக்கு பபுகழைத் தேடித் தந்தது.
1970 மற்றும் 80 களில் தொலைக்காட்சி சிட்காம்களில் கொடிகட்டிப் பறந்தார் பாப் நியூஹார்ட். 90 களில் நடந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு தோற்றங்களில் தோன்றினார். பிரபல சீரிசான பிக் பாங் தியரியிலும் சிறப்பு தோற்றத்தில் பாப் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது மறைவு அமெரிக்க ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் சில இடங்களில் நிலவி வரும் குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்யும் பொருட்டும், மின் இழப்பை குறைத்திடும் பொருட்டும் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு ரூ.3 கோடியே 73 லட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ரூ.1 கோடியே 6 லட்சம் செலவில் 33.11 கி.வோ கூத்தாநல்லூர் துணை மின் நிலையத்தில் கூடுதலாக திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தொடங்க விழா நேற்று கூத்தாநல்லூர் துணை மின் நிலையத்தில் நடந்தது. விழாவிற்கு திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார், மன்னார்குடி செயற்பொறியாளர்கள் ராதிகா, காளிதாஸ், திருச்சி கட்டுமான மேற்பார்வை பொறியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு புதிய திறன் மின்மாற்றியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலவி வந்த குறைந்த மின் அழுத்தம் புதிய திறன் மின்மாற்றியால் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியை சேர்ந்த கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், வடபாதிமங்கலத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிற்கு உள்ள மின்பாதை வழியாக மின் சாரம் வந்தது தவிர்க்கப்பட்டு தற்போது 5 கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ள மின் பாதை மூலம் மின்சாரம் வழங்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
இந்த கூடுதல் திறன் மின்மாற்றி மூலம் கூத்தாநல்லூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சுமார் 25 ஆயிரம் பயனாளிகள் பயன் அடைவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறி வருவது காமெடியாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு தமிழகமே இருளில் மூழ்கியதை தமிழக மக்கள் மறந்து விட மாட்டார்கள். மு.க.ஸ்டாலினும் மறந்து விட மாட்டார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியது என்பதை யாரும் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அ.தி.மு.க. நகர செயலாளர் பசீர் அகமது, நகர துணை செயலாளர் உதய குமார், பொருளாளர் பாஸ் கரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமதுஅஸ்ரப், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகரன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் வரவேற்றார். முடிவில் கூத்தாநல்லூர் உதவி செயற்பொறியாளர் சங்கர்குமார் நன்றி கூறினார்.
