search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commencement Ceremony"

    • விழாவின் சிகர நிகிழ்ச்சியாக தேரோட்டம் விழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
    • லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறுகிறது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதனைத் தொடர்ந்து தினந்தோறும் காலையில் பல்லக்கில் சாமி வீதியுலாவும், இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. 18-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடைபெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 21-ந்தேதி காலை வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது .

    விழாவின் சிகர நிகிழ்ச்சியாக தேரோட்டம் விழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார். அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாடவீதியில் சென்று நிலையை அடையும். இரவு தீர்த்தவாரி அவரோகணம், 23-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதியுலா, 24-ந் தேதி புஷ்ப யாகம், 25-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • ஆண்டுக்கு 2 முறை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.
    • கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் தை மற்றும் சித்திரை என ஆண்டுக்கு 2 முறை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.

    இந்த நிலையில் சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் இரு வேளைகளில் உற்சவர் வீரராகவ பெருமாள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

     பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் வீரராகவ பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் அதிகாலை 5.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

     அதைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. பனகல் தெரு, குளக்கரை வீதி, பஜார் வீதி, வடக்குராஜ வீதி, மோதிலால் தெரு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து மீண்டும் தேரடியை வந்தடைந்தது.

    இந்த விழாவில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ன பக்தி பரவசத்துடன் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் 9-வது நாளான வருகிற 23-ந்தேதி காலை தீர்த்தவாரி நடக்கிறது. 10-வது நாளான 24-ந்தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

    • 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • திருப்பதி முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் பிரம்மோற்சவ விழா களைகட்டி உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று மாலை அங்கூரார்பணம் நடந்தது. விஷ்வகேஸ்வரர் சுவாமி மாட வீதிகளில் உலா வந்து திருவிழா ஏற்பாடுகளை பார்த்தபடி வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரம்மோற்சவ விழா தொடக்கத்தை ஒட்டி ஆந்திரா முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை இன்று மாலை சமர்ப்பிக்கிறார்.

    திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று இரவு 9 மணிக்கு ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    திருப்பதி முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் பிரம்மோற்சவ விழா களைகட்டி உள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. திருப்பதி அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் வனவிலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் கம்புகளை எடுத்துச் செல்கின்றனர்.

    மேலும் குழந்தைகளுடன் செல்லும் பக்தர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

    திருப்பதியில் நேற்று 77,441 பேர் தரிசனம் செய்தனர். 29,816 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் எட்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

    • பிரமோற்சவத்தின் முதல் நாள் மாநில அரசின் சார்பில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
    • கருட சேவையின் போது நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் அவர் பிரம்மதேவனை அழைத்து உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதை மகிழ்ச்சியுடன் ஏற்று பிரம்மதேவர் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று நிறைவுபெறும் விதமாக 9 நாட்கள் உற்சவத்தை நடத்தினார்.

    பிரம்ம தேவர் நடத்திய உற்சவம் என்பதால் திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரமோற்சவம் என்று அழைக்கப்பட்டு வருவதாக புராணங்கள் கூறுகிறது.

    இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    22-ந்தேதி கருட சேவை 23-ந் தேதி தங்க தேரோட்டம் 25-ந் தேதி திருத்தேர் 26-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றனர்.

    பிரமோற்சவ நாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், வாகன சேவைகள் நடைபெற உள்ளன. அப்போது 9 மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரமோற்சவத்தின் முதல் நாள் மாநில அரசின் சார்பில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.

    கருட சேவை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிவார்கள். அப்போது பக்தர்கள் நெரிசல் இன்றி எளிதில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    கருட சேவையின் போது நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். பக்தர்கள் வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. மாடவீதிக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களை வரிசையில் அனுமதித்து கருட சேவையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    கருட சேவையின் போது 2 அல்லது 3 மணி நேரம் வரை பொறுமையாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அதிகாரிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

    திருப்பதி பிரமோற்சவ விழாவை வெட்டி ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் சென்னை, வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்கவிழா நடந்தது.
    • ஆங்கிலத்துறையின் இளங்கலை மற்றும் முது–கலை மாணவர்கள் பயன் பெற்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் சார்பில் ஆங்கில இலக்கிய மன்றம் நியோ ஐடோலா-2023 தொடக்கவிழா நடை–பெற்றது. விழாவுக்கு கல் லூரி முதல்வர் முனை–வர் பெ.கி.பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    இதையடுத்து மாணவ இலக்கிய மன்ற தலைவர், துணைத்தலைவர், செயலா–ளர் மற்றும் அலுவ–லக உறுப் பினர்கள் ஆகியோர் நிய–மனம் செய்யப்பட்டனர். பின்னர் துறைத்தலைவர் முனைவர் எஸ்.பெமினா வாழ்த்துரை வழங்கினார்.

    பின்னர் முழுமையான வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி நிலை என்ற தலைப்பில் ஜெய்ப்பூர் காம்காம் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவன ஆங்கில பேராசிரியர் முனை–வர் ஷாலினி சிறப்பு–ரையாற்றினார்.

    அப்போது அவர் பேசு–கையில், நேர்மறை எண்ணத் தின் பயனை விவரித்தார். மேலும் வாழ்வின் ஒவ் வொரு நிகழ்வும் நேர்ம–றை–யான விளைவு–களையே ஏற்படுத்தும் என்ற ஏற்றமிகு கருத்தினை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். முன்னதாக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை கே.பி.ஸ்வப்னா வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியை என்.நாகஜோதி நன்றி கூறி–னார்.

    இந்த இலக்கிய மன்றத் தின் தொடர் நிகழ்ச்சியாக மாணவர்களின் தனித்திற–மையை வெளிப்படுத்தும் விதமாக திறனறி விழா நடைபெற்றது. மாணவர்கள் கவிதை, நாடகம், ஆடல், பாடல், மவுன நாடகம் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஆங்கிலத்துறையின் இளங்கலை மற்றும் முது–கலை மாணவர்கள் பயன்பெற்றனர்.

    ×