என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Committee Meeting"

    • ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மறைந்த நுகர்பாதுகாப்பு செயலர் ராஜன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் மரியம்மா, துணை தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மறைந்த நுகர்பாதுகாப்பு செயலர் ராஜன் அவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நியமன பொது செயலாளராக முகமது சலீம், இணைசெயலாளராக வினோபாபோப், கூடுதல் செயலாளராக பீட்டர், செயற்குழு உறுபினராக சுரேஸ், சிவகிருஸ்னா ஆகியோர் நியமனம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் இணை செயலாளர் கண்மணி. செயற்குழு உறுப்பினர்கள் விபின்குமார், பீட்டர், வினோபாபோப், லெனின்மார்க்ஸ், சிவகிருஸ்னா, கிரேஸி, ரோஸ்லின், லலிதா, யசோதா, விக்டோரியா, முகமது இஸ்மாயில் மற்றும் வால்டர், பிரேம்செபாஸ்டியன், இணை செயலாளர் கண்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்முரளிதரன், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது
    • மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து துறை அலுவ லர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான தேனி எம்.பி தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்முரளிதரன், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது.

    பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ் துறை ரீதியாக செயல்படுத்த ப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், நடை பெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.

    அலுவலர்கள் துறைகள் ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியன தொட ர்பாக ஆண்டறிக்கையின்படி விரிவாக எடுத்துரைத்தனர்.

    மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மத்திய அரசின் சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மாநில அரசுடன் இணைந்து அத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்த ப்பட்டு வருகிறது என்ப தனை கண்காணித்து அத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு இக்கூட்டம் நடைபெறுகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பொதுமக்களிடையே சென்றடையும் வகையில் துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகிறீர்கள்.

    அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதே னும் குறைபாடுகள் இரு ப்பின் அரசு அலுவலர்கள் எனது கவனத்திற்கு உடனடி யாக கொண்டு வரும் போது அதற்கான உரிய நட வடிக்கைள் மேற்கொள்ள ப்படும். அதனைப்போன்று, ஊராட்சி மன்றத்தலை வர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை கள் மீது தனிக்கவனம் செலுத்தி அதன்மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து துறை அலுவ லர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான தேனி எம்.பி தெரிவித்தார்.

    • ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • இலங்கையைச் சேர்ந்தவர்களை உடனடியாகநாடு கடத்த வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர் ப.கோபி தலைமையில் நடந்தது. 

    கூட்டத்தில் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சட்டத்தின் படி அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்ற கூற்றை ஏற்றுக் கொண்டோம்.கொலை குற்றவாளிகளை பொதுத்தலங்களில் உலாவிடுவது சரியல்ல. அவர்களை குறிப்பாக இலங்கையைச் சேர்ந்தவர்களை உடனடியாகநாடு கடத்த வேண்டும். மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரித்து நியாயம் வழங்க வேண்டும்.

    சிறு குறு தொழில் நிறுவனங்களை வயிற்றில் அடிப்பது போல் மின்சார கட்டண உயர்வு மிகப்பெரிய அளவிலே பாதிப்பைஏற்படுத்தி இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவினாசி -அத்திக்கடவு நீர் திட்டத்தை விரைவாக நிறைவு செய்து முழுமையான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளித்திட வேண்டும்.

    காங்கேயம் பகுதி மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான காங்கேயம் பசுமாடுகளுக்கான என ஒரு ஆராய்ச்சி மையத்தை அரசாங்கமே நிறுவ வேண்டும் என்பதைஇந்த கூட்டத்தின் வாயிலாககேட்டுக் கொள்ளப்படுகிறது.திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இந்த மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது.
    • கட்சி வளர்ச்சி பணிகள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஊட்டி,

    ஊட்டி நகர தி.மு.க சார்பில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. நகர செயற்குழு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு நகர அவை தலைவர் ஜெயகோபி தலைமை தாங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் செய்திருந்தார்.

    கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், கே.ஏ. முஸ்தபா, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, பி.ரவி, ஏ.ரவி, நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி, நகர துணை செயலாளர் இச்சுபாய், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், கார்த்திகேயன், தம்பி இஸ்மாயில், நகர பொருளாளர் அணில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

    பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு நாளை ஒட்டி இந்த மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது. தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இந்த மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது.

    எதிர்வரும் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் பாக முகவர்கள் ஆலோசனை குறித்து தீர்மானிப்பது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் மேலும் உறுப்பினர்கள் சேர்க்கவும் கட்சி வளர்ச்சி பணிகள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நகராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், ரகுபதி, விஷ்ணு பிரபு, ரமேஷ், கீதா, வனிதா, பிரியா, மேரி பிளோரினா, ஃப்ளோரினா புஷ்பராஜ், மீனா தியாகராஜன், அனிதா லட்சுமி மற்றும் கிளை செயலாளர்கள், தி.மு.க நிர்வாகிகள் ரவீந்திரன், மஞ்சு குமார், சுரேஷ், முத்துராமன், புஷ்பராஜ், ரமேஷ், எஸ். கே.ஸ்டான்லி, நவ்ஷாத், மோகன், ரவி, மேத்யூஸ், செல்வராஜ், மணிகண்டன், காந்தள் சம்பத், கே.ரவி, பாரதிராஜா, ராஜன், ஜெர்ரி, சந்திரசேகர், தாவீது ராஜா, என்.ராஜன், சசிகுமார், கே.சங்கர், முஜிபுர், ராஜா, ரவி, பாபு, வெங்கடேஷ், பெரியசாமி, வீரய்யா, ரமேஷ், ஆனந்த், சர்தார், திருஞானம், வில்லியம், அமலநாதன், சுரேஷ்குமார், சதாசிவம், ஸ்டீபன், ஏ.டி.சி ராஜன், பிரதாப், வரதன், முஸ்தபா, சீனிவாசன், நீல் ஆம்ஸ்ட்ராங், தியாகராஜன், ரங்கநாதன், ராஜ்குமார், சுப்பிரமணி, சத்யராஜ், மகளிர் அணியை சேர்ந்த லூயிசா, பிருந்தா, ஷோபா, பிரேமா, ஜாய்ஸ், நிர்மலா, சாந்தி, கீதா, ஜெய சக்தி, விமலா, ரெஜினா, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் நகர துணை செயலாளர் கார்டன் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். ஜீவா நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் ராமநாதபுரம் மாவட்ட கிளை செ யற்குழு கூட்டம் சேர்மன் சுந்தரம் தலைமையில் நடந்தது. புரவலர்கள் ராமநாதன், உலகராஜ், துணை சேர்மன் ஜெயக்குமார், ராமேசுவரம் கிளை சேர்மன் பாலசுப்ரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஷாலினி பில்லி கிரஹாம், செய்யது முகமது ஹசன், கோபால், ரினி, பவதாரணி, கார்த்திக் முன்னிலை வகித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட கல்லூரிகளில் யூத் ரெட் கிராஸ் செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் வள்ளி விநாயகம், மாவட்ட கன்வீனர்கள் அலெக்ஸ், பாலமுருகன், முதலுதவி பயிற்சிகள்-பேரிடர் கால பயிற்சிகள் குறித்து சொக்கநாதன், ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்த்து கலெக்டரிடம் ஒப்படைத்தல் குறித்து பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கண்ணன், மாவட்ட செயலர் ரமேஷ் ஆகியோர் பேசினார்.

    வரவு செலவு கணக்குகளை மாவட்ட பொருளாளர் குணசேகரன் சமர்ப்பித்தார். புதிய உறுப்பினர் சேர்ப்பு குறித்து பேசப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு முதலுதவி, பேரிடர் காலங்களில் ஏற்படும் சூழ்நிலைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சட்ட ஆலோசகர் காளீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், புரவலர்கள் ஆலோசனைகளை வழங்கினர். திரவிய சிங்கம், தமிழரசன், ஜெயக்குமார், முருகேசன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். ஜீவா நன்றி கூறினார்.

    • ஊர் பொதுமக்கள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    • 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டத்தில் வீரசைவ லிங்காயத்தார் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்களின் சமுதாய முன்னேற்றத்திற்க்கு நீலகிரி மாவட்ட வீர சைவ லிங்காயத்து முன்னேற்ற சங்கம் அமைத்து பல நலத்திட்டங்கள் சமுதாயம் சார்ந்த மற்றும் சமுதாய அல்லாத மக்களுக்கும் செய்து வருகின்றனர். இதில் 3 வருடங்களுக்கு ஒருமுறை புதிதாக பொறுப்பாளர்களை நியமித்து செயல்படுத்தி வரும் தங்களின் குலதெய்வமான ஸ்ரீமகாலிங்கசுவாமி கோவிலில் பொதுகுழுவை கூட்டி வரும் 3 ஆண்டுகளு க்கு தலைவறாக தூனேரி ஆசிரியர் போஜன் கொணவ க்கரை மணி செயலா ளறாகவும் கதுகதொ ரை லிங்கராஜ் பொரு ளாளறாகம் தேர்ந்தெடு க்க பட்டனர். மு ன்னாள் செயலாளர் விஸ்வ நாதன் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.இதில் அனைத்து ஊர் பொதுமக்கள் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

    • மார்ச் 15-ந் தேதி உலக நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
    • குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை சரி செய்ய வலியுறுத்த வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மார்ச் 15-ந் தேதி உலக நுகர்வோர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு நகர பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை சரி செய்ய வலியுறுத்துவது.

    கோத்தகிரி அரசு சித்தா பிரிவில் போதிய மருந்துகள் இல்லாமல் இருப்பதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் இணை செயலாளர் கண்மணி, ஆலோசகர் பிரவின், முகமது இஸ்மாயில், கிரேஸி, செயற்குழு உறுப்பினர்கள் விபின் குமார், சுரேஷ், லலிதா, சங்கீதா, திரைசா, ரோஸ்லின், ராதிகா, பியூலா, மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் பீட்டர் நன்றி கூறினார்.

    • கூட்டத்துக்கு வானூர் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
    • ஒன்றியத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்ய நிர்வாகிகள் உழைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    கோட்டகுப்பத்தை அடுத்த பொம்மையார்பாளையத்தில் வானூர் தெற்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு வானூர் தெற்கு ஒன்றிய தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.கே.ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    வானூர் ஒன்றியத்துக்குட்பட்ட 43 பூத்துகளில் உடனடியாக கமிட்டி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். ஒன்றியத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்ய நிர்வாகிகள் உழைக்க வேண்டும்.

    வானூர் தொகுதியில் பா.ஜனதா வளர்ந்து வரும் நிலையில் மாற்றுக் கட்சியில் இருந்து பா.ஜனதாவில் வந்து இணையும் உறுப்பினர்களுக்கு சரியான பதவி வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட விவசாய அணி தலைவர் குட்டியாண்டி, மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளவரசன், முருகன், ஒன்றிய செயலாளர் குப்புசாமி, ஒன்றிய துணைத் தலைவர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கேந்திர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பாரதீய ஜனதா கட்சி நெல்லித்தோப்பு தொகுதியின் மண்டல் செயற்குழு கூட்டம் சாரம் சக்தி நகரில் தொகுதி தலைவர் உமாபதி தலைமையில் நடந்தது.
    • மாநில விவசாய அணி தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு கட்சியின் உள்கட்டமைப்பு நிர்வாகிகள் திறன் மேம்படுத்துதல் வருங்கால தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டு பற்றி சிறப்புரையாற்றினார்கள்.

     புதுச்சேரி:

    பாரதிய ஜனதா கட்சி நெல்லித்தோப்பு தொகுதியின் மண்டல் செயற்குழு கூட்டம் சாரம் சக்தி நகரில் தொகுதி தலைவர் உமாபதி தலைமையில் நடந்தது. மூத்த தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் சண்முகம், பூங்குன்றனார், ரேணுகாதேவி, தொகுதி பொதுச் செயலாளர் மூர்த்தி, சுனிதா தேவி ஆகியோர் வரவேற்றனர்.

    தொகுதி பொறுப்பாளர் ரிசார்ட் ஜான் குமார் எம்.எல்.ஏ. நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், மாநிலச் செயலாளர் மற்றும் நகர, மாவட்ட பொறுப்பாளர் ரத்தினவேல், மாநில விவசாய அணி தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு கட்சியின் உள்கட்டமைப்பு நிர்வாகிகள் திறன் மேம்படுத்துதல் வருங்கால தொகுதியில் வளர்ச்சி மேம்பாட்டு பற்றி சிறப்புரையாற்றினார்கள். மாநில விவசாய அணி தலைவர் புகேழந்தி கேந்திர பொருப்பாளரிடம் விசாரணை நடத்தினார். 

    முடிவில் நகர மாவட்ட விவசாய அணி பொதுச்செயலா ளர் சவுரிராஜன் நன்றி கூறினார்.

    • புதிய நிர்வாகிகள் அறிமுகம், எதிர்காலத் திட்டம் பற்றிய கூட்டம் நடைபெற்றது.
    • நகர பூத்,கிளை நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பேசினார்.

    உடுமலை :

    உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக உடுமலை தாராபுரம் ரோட்டில் உள்ள மீனாட்சி மஹாலில்செயற்குழுக் கூட்டம், ஆய்வறிக்கை,கிளை,பூத் பொறுப்பாளர்கள் அறிமுகம், புதிய நிர்வாகிகள் அறிமுகம், எதிர்காலத் திட்டம் பற்றிய கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு உடுமலை நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமை தாங்கினார்.நகர பொது செயலாளர் சீனிவாசன் தம்பிதுரை வரவேற்றார்.

    திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, விஜயராகவன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி ,திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்கலம் ரவி உடுமலை நகர பூத் தலைவர்கள் மற்றும் நகர பூத்,கிளை நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பேசினார்.

    திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் கார்த்திகா,உடுமலை நகர மகளிர் அணி தலைவர் ராதிகா,மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் பாலகுரு, மாவட்ட பட்டியல் அணி தலைவர் சித்தார்த்தன், மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ், பாப்புலர் ரவி, விளையாட்டுத்துறை மாவட்ட தலைவர் பாப்புலர் ஜெயராஜ், சிறுபான்மையினர் மாவட்டத் தலைவர் பால்ராஜ்,ஷேக் அப்துல்லா, மாவட்ட செயலாளர் கலா,இளைஞர் அணி நகர தலைவர் தினேஷ்குமார், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு உடுமலை நகர தலைவர் ரஜினி பிரசாந்த், நகர செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.

    • மதியம் 12 மணிக்கு திருப்பூரில் உள்ள மாவட்ட அலுவலகமாக கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடக்கிறது.
    • மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு திருப்பூரில் உள்ள மாவட்ட அலுவலகமாக கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை வெளியிடப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு தெரிவித்ததாவது:

    ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை,

    கைத்தறித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் உள்ளன.

    2023-24-ம் நிதிஆண்டிற்கான கடன் இலக்கு ரூ.16 ஆயிரத்து 30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    விவசாயத்திற்கான கடன் இலக்கு ரூ.8814.95 கோடி, சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் இலக்கு ரூ.5465.26 கோடி, பிற முன்னுரிமைகளுக்கான கடன் இலக்கு ரூ.1596.48 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கடன்களை தொடர்புடைய வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அப்போது தான் அரசுத்துறைகள் மீதும், வங்கிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

    விண்ணப்பித்து நிலுவையிலுள்ள கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டு கடன்களை வழங்கிடவும், குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற பயிர்கடன் மற்றும் சிறுகுறுதொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படுகின்ற கடன்கள் வழங்குவதில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காமலும், முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கிட வங்கிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவி க்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம்,

    வேலை வாய்ப்பற்ற இளைஞர்களு க்கான வேலை வாய்ப்பு உறுவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறை படுத்தும் திட்டம் ஆகிய சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இத்திட்ட ங்களின் மூலம் சிறப்பான சேவைகள் வழங்கிய சிறந்த வங்கிகள் மற்றும் சிறந்த வங்கிக்கிளைகளுக்கும் 2022-2023-ம் ஆண்டிற்கான விருது களையும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

    மேற்காணும் 4 திட்டங்கள் மூலமாக 326 நபர்களுக்குரூ.58.60 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். மாவட்டத் தொழில் மையத்தின் மேலாளர் மருதப்பன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர், ரிசர்வ் வங்கி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    ×