search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commodities"

    • கடலூர் அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 3 பேர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த அகரத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27). இவருக்கும் குள்ளஞ்சாவடியை சேர்ந்த மற்றொரு பாலாஜி (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலாஜி தனது மோட்டார் சைக்கிளில் அகரம் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    அப்போது அங்கு இருந்த பாலாஜி உட்பட 3 பேர் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலாஜி உடனடியாக மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சி செய்தபோது, அவர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    அங்கிருந்து பாலாஜி தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து பாலாஜி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் குள்ளஞ்சாவடியை சேர்ந்த பாலாஜி (23), வன்னியர் பாளையத்தை சேர்ந்த ராகுல் (23), குள்ளஞ்சாவடியை சேர்ந்த குமரகுரு (33) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ரோந்து பணியின் போது சிக்கினார்.
    • 2 பைகளில் வைத்திருந்த மது பறிமுதல்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் முனிரத்தினம், ரவி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

    தொடர்ந்து விசாரணை செய்ததில் ஆந்திரா மாநிலம் சித்தூர் சில்லகுண்டலப்பள்ளி பகுதியை சேர்ந்த ராம்ராஜிவ் (வயது 30) என தெரிய வந்தது.

    மேலும் இவரது உடமைகளை சோதனை செய்த போது 180 கொள்ளளவு கொண்ட கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை 2 பைகளில் வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலிசார் ராம்ராஜிவ் மீது கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தியதாக வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 48லட்சத்து 7 ஆயிரத்து 709-க்கு விற்பனை யானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றி யம், பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 52.32½ குவிண்டால் எடை கொண்ட 14 ஆயிரத்து 924 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.15-க்கும், சராசரி விலையாக ரூ.21.15-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 7ஆயிரத்து 430-க்கு விற்பனையானது.

    அதேபோல் 181.32½குவிண்டால் எடை கொண்ட 407-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.19-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.39-க்கும், சராசரி விலையாக ரூ.79. 89-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.77.06-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.92-க்கும், சராசரி விலையாக ரூ.71.60-க்கும் என மொத்தம் ரூ.13லட்சத்து21 ஆயிரத்து 43-க்கு விற்பனையானது.

    அதேபோல் 243.09 குவிண்டால் எடை கொண்ட 325 மூட்டை எள் விற்ப னைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சவிலையாக ரூ.145.49-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.134.42-க்கும், சராசரி விலையாக ரூ.142.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.148.99-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.135.99-க்கும், சராசரி விலையாக ரூ.143.99-க்கும் என மொத்தம் ரூ.33லட்சத்து 79ஆயிரத்து 236-க்கு விற்ப னையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 48லட்சத்து 7 ஆயிரத்து 709-க்கு விற்பனை யானது.

    • நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்து 557-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 22.45 குவிண்டால் எடை கொண்ட 6 ஆயிரத்து 103 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.00-க்கும், சராசரி விலையாக ரூ.25.20-க்கும் என மொத்தம் ரூ.48 ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு,

    அதேபோல் 107.32 குவிண்டால் எடை கொண்ட 224 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.80.69-க்கும், சராசரி விலையாக ரூ.88.36-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.89.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.99-க்கும், சராசரி விலையாக ரூ.80.89-க்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 495-க்கு விற்பனையானது.

    அதேபோல் 21.36 குவின்டால் எடை கொண்ட 29 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.136.19-க்கும், குறைந்த விலையாக ரூ.110.69 -க்கும், சராசரி விலையாக ரூ.132.39-க்கும் என ரூ. 2 லட்சத்து 65 ஆயிரத்து 590-க்கு விற்பனையானது.

    12.69 1/2 குவிண்டால் எடை கொண்ட 39 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலைக்காய் அதிக விலையாக கிலோ ஒன்று இருக்கு ரூ.75.60-க்கும், குறைந்த விலையாக ரூ.71.50-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் என ரூ. 94 ஆயிரத்து 708-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.12 லட்சத்து 84 ஆயிரத்து 557-க்கு விற்பனையானது.

    • உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்களுக்கு நெப்டிம் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களால் விளக்கி கூறப்பட்டது.
    • முடிவில் முதன்மை செயல் அலுவலர் சிந்துஜா நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மற்றும் வேளாண் வணிக துறையின் இலால்குடி தென்றல் கூட்டுப்பண்ணை சார்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நெப்டிம் மூலமாக இரண்டு நாள் வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி மற்றும் கண்டுணர் சுற்றுலா பயிற்சி தஞ்சாவூர் தேசிய உணவு கழக உணவு பதன தொழில் நிலையத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் சிவகாமி, தொழில்நுட்ப உதவி பேராசிரியர் ஹேமா, தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்குமார், உதவி பேராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

    இப்பயிற்சியில் நெல், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள்,சிறுதானிய பயிர்கள், வாழை, இதர தோட்டக்கலை பயிர்கள் ஆகியவற்றின் மதிப்பு கூட்டுதல் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் சிப்பமிடுதல், பிராண்டிங் மற்றும் வணிக தொடர்புகள் ஏற்படுத்தி கொடுத்தல் ஆகியவை இலால்குடி தென்றல் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு நெப்டிம் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களால் விளக்கி கூறப்பட்டது.

    இதில் இலால்குடி உதவி வேளாண் அலுவலர் சிவசக்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் இலால்குடி தென்றல் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் உழவர் ஆர்வலர் குழு தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை செயல் அலுவலர் சிந்துஜா நன்றி கூறினார்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.28லட்சத்து 67 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 20.54குவிண்டால் எடை கொண்ட 6 ஆயிரத்து92தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.66-க்கும், சராசரி விலையாக ரூ.23.15-க்கும் என மொத்தம் ரூ.45ஆயிரத்து 149-க்கு விற்பனையானது.

    அதேபோல் 264.44½ குவிண்டால் எடை கொண்ட 527 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.99-க்கும், சராசரி விலையாக ரூ.78.40-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.11-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.11-க்கும், சராசரி விலையாக ரூ.73.79-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 93 ஆயிரத்து 581-க்கு விற்பனையானது.

    அதேபோல் 131.77½வரை குவின்டால் எடை கொண்ட430 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலைக்காய் அதிக விலையாக ரூ73.90-க்கும், குறைந்த விலையாக 63.40 -க்கும், சராசரி விலையாக 72.20 -க்கும் என ரூ8 லட்சத்து 73 ஆயிரத்து 565 க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.28லட்சத்து 67 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    • அனைத்து விளைபொருட்களுக்கும் உரிய விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக மாறும் நிலை உருவாகும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் தலா ரூ. 2ஆயிரம் மதிப்பில் 25 விவசாயிகளுக்கு வீரிய ரக மக்காச்சோளம் விதை மற்றும் இடு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கோவை வேளாண்மை பல்கலைக்கழக சிறுதானிய துறை தலைவர் பேராசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். வேளாண்மை துறை (தினை பயிர்) உதவி பேராசிரியர் கதிர்வேலன் வரவேற்றார். இந்த விழாவில் விவசாயிகளுக்கு வீரிய ரக மக்காச்சோளம் மற்றும் இடுபொருட்களை வழங்கி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமத்தின் இயக்குநரும், பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மாநில தலைவருமான ஜி.கே. நாகராஜ் பேசுகையில்,விவசாயத்தில் பயிர் அறுவடைக்கு முன்பு நல்ல விலையில் விற்கும் விளை பொருட்கள் அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது விலை சரிவை சந்திக்கின்றன. அதற்கு காரணம் எந்த விளை பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறதோ அதனையே அனைத்து விவசாயிகளும் பயிரிடுவதால் சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனை சீரமைத்து அனைத்து விளைபொருட்களுக்கும் உரிய விலை கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இனி விவசாயம் என்பது லாபகரமான தொழிலாக மாறும் நிலை உருவாகும். வேளாண்மை துறை வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை சிறப்பு கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறது. நாட்டின் அன்னிய செலவாணியை நாம் சமையல் எண்ணொய், பெட்ரோல், டீசல் போன்றவை இறக்குமதிக்கு தான் அதிக அளவில் செலவிடுகிறோம். அதனை தவிர்க்க உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில்வேல், மாநில விவசாய அணி செயலாளர் மவுனகுருசாமி, மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு குறைந்தால் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை அளவு குறைவாக இருப்பதாக அடிக்கடி பொதுமக்கள் புகார் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

    இதுதொடர்பாக அங்குள்ள ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், பொருட்களின் அளவு சரியாக இருப்பதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி ரேஷன் கடை முறைகேடுகள் குறித்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட குறைதீர்க்கும் அலுவலரான, மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்திற்கு எழுத்து மூலமாகவும், தொடர்பு எண்ணுடனும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    மேலும், 99809-04040 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி புகார் செய்யலாம். இதுபோல் இலவச தொடர்பு எண்ணான 1967, 1800 425 5901 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். 
    ×