search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Compliments"

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் வேப்பேரி பகுதியில் விதிகளை கடைபிடித்த பயணிகளை பாராட்டினர்.
    • போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் போலீசார் செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னை

    சென்னையில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    அதே நேரத்தில் போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் சென்னை வேப்பேரி பகுதியில் இன்று போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாமல் முறைப்படி வாகனங்களை ஓட்டியவர்களை போக்குவரத்து போலீசார் பாராட்டினார்கள்.

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடியும் கார்களில் சீட் பெல்ட் அணிந்த படியும் பயணம் செய்த 100 பேருக்கு ரோஜா பூ வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையிலான போலீசார் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பயணம் செய்தவர்களை பாராட்டி புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் அன்பு கோர் அண்ணாச்சி நூல் ஆசிரியர் வீரையன், பதிப்பாளர் குருமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது.
    • அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் உட்பட பிரமுகர்களும் பள்ளி ஆசிரியர்களும்,மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் மறைந்த அப்பாக்குட்டி பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பள்ளியின் பி.டி.ஏ தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் புகழேந்தி, வர்த்தக சங்க மாநிலத்துணை தலைவர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ் துறை தலைவர் டாக்டர் சேதுபதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் தருமையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த சுவாமிகள், முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன், நாகை எம்பி செல்வராஜ், முன்னாள் எம்பி பிவி ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கிரிதரன்,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், நாகை மாவட்ட வர்த்தக சங்க தலைவர் வேதநாயகம், இலக்கிய பெருமன்ற நாகை மாவட்ட தலைவர் புயல் குமார், செங்கல்பட்டு தொழில் உரிமையாளர்தியாகராஜன், வக்கீல்கள் பாலச்சந்தி ரன்,நமசிவாயம், ஓய்வு பெற்ற பிடிஓ ராஜரத்தினம், அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் உட்பட பிரமுகர்களும் பள்ளி ஆசிரியர்களும்,மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அன்பு கோர் அண்ணாச்சி நூல் ஆசிரியர் வீரையன், பதிப்பாளர் குருமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது. கோயமுத்தூர் தியாகு குழுவினரின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், வேதாரண்யம் கோயில் ஆதின வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி் நடந்தது.

    குருகுலம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கயிலை மணி வேதரத்னம் வரவேற்றார். அலுவலர் ஸ்ரீதர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை குருகுலம் கல்வியியல் கல்லூரி நிர்வாகி கேடிலியப்பன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    • கூட்டத்தில் மன்றத்தின் உறுப்பினர்களாக இருக்கின்ற வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தலைமை அஞ்சலக சேவைகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர்.
    • ஆதார் சேவைக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் வசதியாக அமர்ந்து சேவை பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு பாராட்டு.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் 30-6-2022 வரையிலான முதல் காலாண்டுக்குரிய நுகர்வோர் மன்றம் கூட்டம் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மன்ற த்தின் உறுப்பினர்களாக இருக்கின்ற முக்கிய வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தஞ்சாவூர் தலைமை அஞ்சலக சேவை பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.குறிப்பாக தஞ்சை தலைமை அஞ்சலக த்தின் தோற்றத்தில் ஏற்பட்டு ள்ள மாற்றத்தையும், வாடி க்கை யாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கனி வான சேவையையும் பாராட்டினர்.

    ஆதார் சேவைக்கு வருகி ன்ற வாடிக்கையாளர்கள் வசதியாக அமர்ந்து சேவை பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்த தலைமை அஞ்சலக நிர்வாகத்தை வெகுவாக பாராட்டினார்கள்.மேலும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்ப கூடிய பார்ச ல்களை தலைமைஅஞ்சல கத்திலேயே சிறப்பாக பேக்கிங் செய்துமற்றும் பதிவு செய்து அனுப்பும் சேவையை பாராட்டினார்கள். முடிவில் அஞ்சலக ஊழியர் எஸ்.சித்ரா நன்றி கூறினார்.

    • இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி லெட்சுமி மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் படித்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
    • மாணவியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ரோடு அருகில் உள்ள அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் விடப்பட்ட பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவி த.லெட்சுமி மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 277 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அந்த மாணவியை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்துவாழ்த்து க்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லலிதா, நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை நகரமன்ற தலைவர்செல்வராஜ், அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தின் செயலர்கள் கலாவதி, ஞானசம்பந்தம், தலைமையாசிரியர்கள், மாணவ- மாணவிகள், அரசு வழக்கறிஞர்கள் தனிகை பழனி, அருள்தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×