search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "compost"

    • தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு, சோதனை பணி நடந்து வருகிறது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து உர மூட்டைகளுக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அஜய்ராஜ் தலைமையிலான குழுவினர் உர மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து லாரியை எடுத்து செல்லுமாறு தாசில்தார் அருள்ராஜ் கூறினார். தொடர்ந்து, தஞ்சை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    • திருமங்கலம் நகராட்சியில் மக்கும் குப்பையில் உரம் தயாரித்து நகராட்சி தலைவர் இலவசமாக வழங்கினார்.
    • 45 நாட்களுக்கு ஈரப்பதத்துடன் தண்ணீர் தெளித்து உரம் பதப்படுத்தப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி யில் உள்ள 27 வார்டுகளில் பொதுமக்கள் துப்புரவு பணியாளர்கள் மூலம் பெறப்படும் குப்பைகளை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகிறது. முதற்கட்டமாக 100 மில்லி மீட்டர் அளவுக்கு மக்கும் கழிவுகள் பிரிக்கப்பட்டு அவற்றை அரைத்து உரமாக வெளியேற்றப்படுகிறது.

    அந்த உரத்தை குவித்து வைத்து 45 நாட்களுக்கு ஈரப் பதத்துடன் தண்ணீர் தெளித்து பதப்படுத்தப்படுகிறது. அதன்பின் 30 மில்லி மீட்டர் அளவுள்ள கழிவுகள் இயந்திரங்கள் மூலமாக குறைந்தபட்சம் நாலு மில்லி மீட்டர் அளவுக்கு இயந்திரம் உதவியுடன் பொடியாக மாற்றி இயற்கை உரமாக்கப் படுகிறது. மேலும் குப்பை கிடங்கில் வாழை இலை, தோட்ட கழிவுகள், மா இலைகள் போன்றவற்றை அரைத்து உலர வைத்து அதனை இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

    இதனால் 16 டன் குப்பை களை 10 டன் மக்கும் குப்பைகளாக வருவதை தொடர்ந்து மக்கும் குப்பை களை இயற்கை உரம் ஆக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை பிளாஸ்டிக் கழிவுகள் இயந்திரம் மூலமாக சமப்படுத்தி பண்டலாக மாற்றி சிமெண்ட் தொழிற் சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் 10 டன் வரை தயாரிக்கப்படும் இலவச உரங்களை விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சின்னச்சாமி, வீரக்குமார், திருக்குமார், அமுதா, சரவணன், சங்கீதா, சுகாதார அதிகாரி சண்முகநாதன், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அன்றன்றே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து உரமாக மாற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • கழிப்பிடத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை அருகே உள்ள குப்பை கிடங்கில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டப் பட்டு வருகிறது.இந்நிலையில் கடலூர் செயற் பொறியாளர் கருப்பையா, விழுப்புரம் உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் குப்பை கிடங்கை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மலைபோல் குவிந்து உள்ள பழைய குப்பைகளை உடனடியாக தரம் பிரித்து அதை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் குப்பைகளை குப்பைக்கிடங்கில் கொட்டி அன்றன்றே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து உரமாக மாற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்தையும் ஆய்வு செய்தனர். கழிப்பிடத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது சின்னசேலம் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • பூங்காவை ஆய்வு செய்து மண்புழு உரம் தயாரிப்பு பணிக்கு அறிவுரை வழங்கினார்.
    • அலுவலகத்தில் ஆன்லைன் வரிவிதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவை கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி வளம் மீட்பு பூங்காவை ஆய்வு செய்து மண்புழு உரம் தயாரிப்பு பணிக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும், சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் வளாகம், சன்னதி தெருவில் உள்ள வணிக கடைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சன்னதி தெருவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கழிப்பறை கட்ட அறிவுறுத்தினார்.

    மேலும், பேரூராட்சி அலுவலகத்தில் ஆன்லைன் வரிவிதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின் போது தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் மாதவன், சுவாமிமலை பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    பவானி:

    பவானி வட்டாரம், மயிலம்பாடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப, மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சி பவானி வேளாண்மை உதவி இயக்குனர் வனிதா தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் அருண்குமார் மண்புழு படுக்கை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து மிக தெளிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    ஜே.கே.கே.எம். கோபி வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் ஹாதில்மோன் மண்புழு உரத்தின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து தெரிவித்தார்.

    பவானி உதவி வேளாண்மை அலுவலர் சித்தையன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

    மேலும் இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நந்தினி, செல்வி, லட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    உரம் இருப்பு, விலைப் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் சாகுபடி பணிகள் முழுவதுமாக வடகிழக்கு பருவ மழையை நம்பியே நடைபெறுகிறது. நடப்பு ஆண்டில் 1,25,000 ஹெக்டர் நெல், 7,400 ஹெக்டர் சிறுதானியங்கள், 3,800 ஹெக்டர் பயறு வகைகள் மற்றும் 6540 ஹெக்டர் எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்ய இலக்கு பெறப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு ராபி பருவத்திற்கு தேவையான ரசாயன உரம் 40,440 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிறுவனங்களிலும் தேவை யான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

    இவற்றில் யூரியா 1945 மெ.டன், டி.ஏ.பி 688 மெ.டன், பொட்டாஷ் 140 மெ.டன், கலப்பு உரங்கள் 947 மெ.டன் ஆக மொத்தம் 3720 மெ.டன் என உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 2018 மாதத்திற்கு தேவையான உர விநியோக திட்டத்தின்படி சம்பந்தப்பட்ட உர உற்பத்தி நிறுவனங்களான இப்கோ கூட்டுறவு நிறுவனம்,, ஸ்பிக் நிறுவனம், மதராஸ் உர நிறுவனம், பாக்ட் நிறுவனம், இந்தியன் பொட்டாஷ் ஆகிய நிறுவனங்கள் மூலமாக தனியார் மற்றம் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் தேவைக்கு ஏற்ப உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    உர விற்பனையாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட விற்பனை முனைப்பு எந்திரம் மூலமாக மட் டுமே உரங்கள் விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. யூரியா தவிர பொட்டாஷ், பாஸ்பேட் மற்றும் கலப்பு உரங்கள் அந்தந்த உர உற்பத்தி நிறுவனங்களினால் உர மூடைகளில் அச்சடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும்.

    வேப்பம்புண்ணாக்கு கலந்த யூரியா தற்போது 45 கிலோ மூடைகளில் கிடைக்கிறது. ஒரு மூடையின் அதிக பட்ச விற்பனை விலை ரூ.266.50 ஆகும்.

    உரம் இருப்பு மற்றும் விலைப்பட்டியியல் விபரத்தினை பொதுமக்கள் பார்வைக்கு ஏற்ப வைக்க வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்றாலோ அல்லது தரமற்ற உரங்களை விற்றாலோ விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுபாடு சட்டம் 1985ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×