என் மலர்
நீங்கள் தேடியது "congress MP"
- மத்திய அமைச்சரை வீழ்த்தி முதல் முறை எம்.பியாக நாடாளுமன்றம் வந்தார் முன்னாள் ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் பிமோல் அகோய்.
- தாய்மார்களையும், விதவைகளையும் பற்றி யோசித்து பாருங்கள். அதன்பின்னர் தேசியவாதம் குறித்து பேசுங்கள்
பாராளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வரும் நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய எதிர்கட்சி எம்.பிக்கள் பாஜக மீது காரசாரமான முறையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அந்த வகையில் வன்முறையால் துண்டாடப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் பாஜக மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சனை வீழ்த்தி வெற்றிபெற்று முதல் முறை எம்.பியாக நாடாளுமன்றம் வந்த முன்னாள் ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் பிமோல் அகோய்-க்கு நேற்று இரவு கூட்டம் முடியும் சமயத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஏற்கனேவே பலர் கூட்டத்திலிருந்து வெளியேறிய நிலையில் கிட்டத்தட்ட பெரும்பாலும் காலியாக இருந்த இருக்கைகளுக்கு மத்தியில் பிமோல் பேசத் தொடங்கினார். ஆனால் அவரின் பேச்சு அனைவரையும் வாயடைக்கச் செய்வதாக மிகவும் கூர்மையாக இருந்தது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது, மணிப்பூரில் இன்னும் 60,000 மக்கள் மிகவும் மோசமான நிலையில் நிவாரண முகாம்களில் கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மக்களின் அவஸ்த்தையும் கோபமும் என்னைப்போன்ற ஒரு ஒன்றுமற்ற மனிதனை அமைச்சராக இருந்தவரை வீழ்த்தச் செய்து ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்றத்துக்கு என்னை அனுப்பியுள்ளது. அந்த வலியை எண்ணிப்பாருங்கள். ஆனால் நமது பிரதமர் [மணிப்பூர் விஷயத்தில்] மௌவுனமாக உள்ளார். ஜனாதிபதி உரையிலும் மணிப்பூர் கலவரம் பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெற வில்லை. இந்த மௌனம் சாதரணமானது அல்ல.
மவுனம் தான் மணிப்பூர் போன்ற தென்கிழக்கு மாநிலங்களிடம் நீங்கள் பேசும் மொழியா? என்று நீங்கள் அக்கறை காட்டாத மணிப்பூர் மாநிலம் உங்களை பார்த்து கேட்கிறது, மணிப்பூரில் 200 க்கும் மேற்பட்டோர் கலவரத்தால் இறந்தனர். உள்நாட்டுப்போர் நடப்பது போன்ற சூழலே அங்கு உள்ளது . ஆனால் கடந்த 1 வருடமாக அது யார் கண்களுகும் தெரியவில்லை.
உங்கள் நெஞ்சில் கைவைத்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடற்று நிற்பவர்களையும், தாய்மார்களையும், விதவைகளையும் பற்றி யோசித்து பாருங்கள். அதன்பின்னர் தேசியவாதம் குறித்து பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மணிப்பூரை பற்றி மோடி பேசத் தொடங்கினாள் நான் அமைதி ஆகிறேன் என்று தெரிவித்தார்
- அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இணைந்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.
- கால்பந்து போட்டிகளில் பல்வேறு அணிகளை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வாணியக்குடி பகுதியில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது.

கால்பந்து போட்டிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இணைந்து கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.
கால்பந்து போட்டிகளில் பல்வேறு அணிகளை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி விஜய் வசந்த் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
- சென்னையில் ஜிம்கானா கிளப் காமராஜர் சிலை முன்பு இருந்து செல்வப்பெருந்தகை தலைமையில் பாத யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.
- போலீஸ் அனுமதி மறுத்தால் மறியலில் ஈடுபடவும் காங்கிரசார் தயாரானார்கள்.
சென்னை:
காந்தி பிறந்த நாளான இன்று வெறுப்பு அரசியலை கண்டித்தும் ராகுல் காந்தியை விமர்சிப்பதை கண்டித்தும் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று பாத யாத்திரை நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார்.
சென்னையில் ஜிம்கானா கிளப் காமராஜர் சிலை முன்பு இருந்து செல்வப்பெருந்தகை தலைமையில் பாத யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை 7 மணியில் இருந்து அந்த பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், அண்ணா சாலை வழியாக பாத யாத்திரை செல்ல அனுமதி இல்லை என்றனர்.
இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.க்கள் விஷ்ணு பிரசாத், சுதா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் அனுமதி இல்லை என்றும் அதற்கு பதிலாக ரம்டா ஓட்டல் அருகே சென்று அங்கிருந்து புறப்படும்படியும் தெரிவித்தனர்.
இதை ஏற்க காங்கிரசார் மறுத்தனர். இதனால் காங்கிரசாருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
போலீஸ் அனுமதி மறுத்தால் மறியலில் ஈடுபடவும் காங்கிரசார் தயாரானார்கள். அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
கடைசியில் ஒரு வழியாக மூன்று மூன்று பேராக செல்ல அனுமதித்தனர். 9.30 மணியளவில் பாதயாத்திரை தொடங்கியது. அங்கிருந்து மே தின பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, ரமடாஓட்டல், புதுப்பேட்டை லான்ஸ் கார்டன் வழியாக எழும்பூர் அருங்காட்சியகம் அருகே நிறைவடைந்தது.
பாத யாத்திரையில் மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, அகரம் கோபி, மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜ சேகர், டில்லி பாபு, முத்தழகன், அடையார் துரை மற்றும் பி.வி.தமிழ் செல்வன், திருவான்மியூர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை விளாசியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒடிஷா மாநிலம் பாலாஷோரில் நடந்த ரெயில் விபத்து போலவே கவரைப்பேட்டையில் விபத்து நடந்துள்ளது. ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு சொந்த செலவில் ரூ. 14.65 லட்சம் வழங்கியுள்ளேன்.
- அங்கன்வாடி அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14. 5 லட்சம் ஒதுக்கீடு.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ரூ.14.65 லட்சம் கல்வி உதவி தொகையை கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த கல்வி ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஏழை எளிய மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு சொந்த செலவில் ரூ. 14.65 லட்சம் வழங்கியுள்ளேன்.
நிதி இல்லாத காரணத்தால் எந்த மாணவரும் தங்கள் கல்வி பயணத்தை பாதியில் நிறுத்தி விட கூடாது என எனது தந்தை மறைந்த வசந்த குமார் அவர்கள் உறுதியுடன் இருந்தார்.
இதற்காக அவர் ஏழை மாணவர்களின் கல்வி செலவிற்காக ஏராளமான உதவிகள் செய்து வந்தார். அவரது மறைவிற்கு பின் அவர் வழியில் எல்லா வருடமும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறேன்.
இந்த வருடமும் 2024- 25 கல்வி ஆண்டில் கல்வி நிதி உதவி வழங்குவதற்கு தகுதியான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பெற்றோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர்களின் தகுதியை ஆராய்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடியாக காசோலை வழங்கப்பட்டது.
இந்தியாவின் பிரகாசமான எதிர்காலம் இளைஞர்களின் கரங்களில் உள்ளது. அந்த இளைஞர்களுக்கு சிறந்த கல்வி செல்வதை அளிக்க வேண்டியது நம் அனைவரது கடமை.
எனது தரப்பில் இருந்து என்னால் இயன்ற வரையில் அதை தொடர்ந்து செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்,
அகஸ்தீஸ்வரம் பகுதி பெற்றோர் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு ஒரு அங்கன்வாடி அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 14. 5 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

- பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு மனு.
- ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்து கவலை தெரிவிக்கிறேன்.
தமிழ்நாட்டை தாக்கிய ஃபெங்கல் புயலின் தாக்கத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு மனு அளித்துள்ளதாக கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வசந்த் எம்.பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அவசர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டவட்டமான விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் நோக்கத்திற்காக, பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு மனு அளித்துள்ளேன்.
சபாநாயகர் அவர்களுக்கு, ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகள் குறித்து கவலை தெரிவிக்கிறேன்.
ஃபெஞ்சல் புயல் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் மனித உயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு நிவாரணமாக ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும்.
மேலும், மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி, சேதங்களை மதிப்பிடவும், உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஏழை தொழிலாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காமல் மிகவும் தாமதமாக ஊதியம் வழங்கப்படுகிறது.
- அரசு இவற்றை கருத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் மக்களவையில் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வசந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி ஊராக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் குறித்த நேரத்தில் ஊதியம் கிடைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.
நாட்டில் பெருகி வரும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தினமும் தொழிலாளர்களுக்கு ரூபாய் 500 வழங்க வேண்டும். ஏழை தொழிலாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காமல் மிகவும் தாமதமாக இந்த ஊதியம் வழங்கப்படுகிறது.
அரசு இவற்றை கருத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உருது கவிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
- படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு கவிதையைப் பதிவிட்டதற்காக உருது கவிஞரும் காங்கிரஸ் எம்.பி.யுமான இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இம்ரான் பதிவிட்ட கவிதை வெறுப்பு மற்றும் வன்முறை செய்தியைப் பரப்புவதாகக் கூறி, போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். வழக்கை ரத்து செய்ய கோரி இம்ரான் பிரதாப்கர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் குஜராத் உயர்நீதிமன்றம் எஃப்ஐஆரை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றம் சென்றார்.
இதன் மீதான விசாரணை தற்போது நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இம்ரானுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார். எதிர் தரப்பில் குஜராத் அரசு வழக்கறிஞர் ஆஜரானார்.
விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், குஜராத் காவல்துறையும் உயர் நீதிமன்றமும் இந்த உருது கவிதையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது. தயவுசெய்து உங்கள் புத்தியை பயன்படுத்துங்கள். இது ஒரு கவிதை மட்டுமே. எந்த சமூகத்திற்கும் எதிரானது அல்ல. "யாராவது வன்முறையில் ஈடுபட்டாலும் கூட, நாம் அதில் ஈடுபடுவதில்லை" என்பதே இந்தக் கவிதையின் செய்தி. படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. எஃப்ஐஆரில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி வந்தார்.
- தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி லிப்டில் சிக்கியவர்களை மீட்டனர்.
கடலூர்:
கடலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான விஷ்ணு பிரசாத் வடலூரில் நடந்த கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
அங்கிருந்த விடுதி லிப்டில் அவரும், கட்சி மூத்த நிர்வாகிகளும் இரண்டாம் தளத்துக்கு சென்றனர். அப்போது லிப்ட் பாதி வழியில் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் விடுதி ஊழியர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
விடுதி ஊழியர்கள் அவசர கால சாவியைப் பயன்படுத்தி லிப்டை திறக்க முயற்சித்தனர். அது பலனளிக்கவில்லை என்பதால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி கதவை உடைத்து திறந்து லிப்டின் உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். விஷ்ணு பிரசாத் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணையில் 3 பேர் மட்டும் செல்லக்கூடிய லிப்டில் 6 பேர் சென்றதே பழுதுக்கு காரணம் என தெரிய வந்தது.
பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், மவுலானா அஸ்ரார்-உல்-ஹக். இவர் நேற்று முன்தினம் மாலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு கிஷான்கஞ்சில் உள்ள சுற்றுலா இல்லத்தில் இரவில் தங்கினார்.
அங்கு நேற்று அதிகாலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது ஆதரவாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 76. அவரது இறுதிச்சடங்குகள் நேற்று மாலையில் அவரது சொந்த ஊரில் நடந்தது. மவுலானா அஸ்ரார்-உல்-ஹக் எம்.பி.க்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
மவுலானா அஸ்ரார்-உல்-ஹக் எம்.பி. மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். #CongressMP #MaulanaAsrarulHaqueQasmi
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டார்.
உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த போது இந்த மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக சரிதாநாயார் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் கூறும்போது, உம்மன்சாண்டி மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மோசடியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான சரிதாநாயர், காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் உம்மன்சாண்டி ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.
கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த பின்னர் இந்த வழக்கு மீண்டும் வேகம் எடுத்தது.

இப்போது இந்த வழக்கு தொடர்பாக சரிதாநாயர் மீண்டும் கேரள குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் இவர்கள் இருவர் மீதும் கேரள குற்றப்பிரிவு போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உம்மன்சாண்டி கூறும்போது, சரிதா நாயர் புகாரை சட்டப்படி சந்திப்பேன். கேரளாவில் அய்யப்பன் கோவில் விவகாரத்தில் கம்யூனிஸ்டு அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். மக்களை திசை திருப்ப இந்த விவகாரத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இதற்கு நாங்கள் கோர்ட்டு மூலம் உரிய பதில் அளிப்போம், என்றார்.
இதுபோல கேரள எதிர் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவும், இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார். #OommenChandy #SarithaNair