search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consecration"

    • அர்ச்சனை என்பது இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று.
    • கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூறப்படுகிறது.

    நமது பாவங்களையும், பிரச்சனையும் தீர்க்க கூடிய ஒரே சக்தி கடவுளுக்கு மட்டும் உள்ளது. அதனால் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவோம். கடவுளுடைய வழிபாட்டில் பல விதங்கள் உள்ளது.


    சில பேர் அமைதியாக பிரதிப்பார்கள். சில பேர் அர்ச்சனை செய்து தனது கஸ்டங்களை எல்லாம் கூறுவார்கள். இப்படி அர்ச்சனை செய்து தனது கஸ்டங்களை கூறுவதால் கடவுளுடைய அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

    அர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று ஆகும். பூக்களாலும், குங்குமத்தாலும் இறைவனுக்கு உகந்த நாமாக்களால் அர்ச்சனை செய்து அவரின் கருணைக்கு பாத்திரமாவது நமது வழிபடும் முறையாகும்.

    இந்த பதிவில் அர்ச்சனை செய்வதற்கான காரணத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

    கோவிலில் சென்று அவர்களுடைய கஷ்டத்தை கூறுவதால் கடவுள் அருள்புரிவார் என்று நம்பப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் அர்ச்சனை செய்து அவர்களுடைய கஷ்டத்தை கூறி வழிபடுவதன் மூலம் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது

    அர்ச்சனை என்பது ஒருவரது பிறந்த நாள், திருமண நாள் அல்லது ஏதேனும் தொழில் தொடங்கும்போது இது போன்ற சிறப்பு மிக்க நேரங்களில் செய்யப்படுவது ஆகும்.

    மக்கள் தங்களுக்கு வாழ்வில் முக்கியமான நாள்கள் என்று கருதும் நாள்களில் கோவிலுக்குச் சென்று அர்ச்சனைக்கு கொடுக்கிறார்கள். சில பேர் பலன்களை கொடுத்திருந்தால் அர்ச்சனை செய்து நன்றியை செலுத்துவார்கள், சில பேர் பலன்களை கொடுப்பதற்காக அர்ச்சனை செய்து வேண்டி கொள்வார்கள்.

    அர்ச்சனை செய்பவர்கள் இரண்டு விதமாக செய்வார்கள், ஒன்று அவர்கள் பெயர் மற்றும் ராசியை வைத்து அர்ச்சனை செய்வார்கள். இதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்.



    அவர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் வைத்து அர்ச்சனை செய்தால் அவரை கடவுளுக்கு அறிமுகம் செய்கிறார்கள். அதாவது ஒரு பெயரிலையே பல பேர் இருப்பார்கள். பெயர், ராசி,நட்சத்திரம், லக்னம் கூறி நான் தான் வந்துள்ளேன், எனக்கு அருள் வழங்க வேண்டும் என்று கூறுவதாகும்.

    ஒரு சிலர் சாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள் என்று கூறுவார்கள், இதுவும் ஒரு வகையான அர்ச்சனை தான். கடவுளுக்கு பல பெயர்கள் இருக்கிறது. கடவுள் இல்லா ஊர் என்று இருக்கிறதா.! உங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்தால் நீங்கள் மட்டும் தான் நல்லா இருப்பீர்கள். அதுவே கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யும் போது அவரால் படைக்கப்பட்ட நாமும் நலமாக வாழ்வோம் அதனால் தான் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்கின்றோம்.

    • காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
    • நவ.18-ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகனின் நான்காம் படை கோவில் அமைந்துள்ளது.

    கட்டுமலையால் ஆன இந்த தலம் நக்கீரரால் திருமுருகா ற்றுப்படையிலும், அருணகிரி நாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமாகும்.

    மேலும் பிரபவ முதல் அட்சய முடிய அறுபது தமிழ் வருட தேவதைகளும் இந்த கோயிலில் திருப்படிகளாக அமையப்பெற்று முருகனுக்கு சேவை செய்து வருகின்றன.

    இத்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமிக்கு கந்தசஷ்டி விழா நேற்று திங்கள்கிழமை காலை தொடங்கியது.

    இதில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்ட பத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு மலர் அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து விழா நாள்களில் காலை மாலை இருவேளைகளிலும் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான நவ.18-ஆம் தேதி சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகமும், அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள், உபயதாரர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • ராகு பரிகார தோஷ நிவர்த்திக்காக இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
    • அமிர்த ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆதி ராகுஸ்தலமான நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் அமிர்த ராகு பகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.

    ராகு பரிகார தோஷ நிவர்த்திக்காக இக்கோவிலுக்கு பல்வேறு பக்தர்கள் வருகை புரிந்து பூஜைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம்.

    இந்நிலையில் இக்கோவி லுக்கு திரைப்பட நடிகை வடிவுக்கரசி தனது மகள் மற்றும் பேத்தியுடன் வருகை புரிந்தார்.

    கோவில் சிவாச்சாரியார் முத்துக்கு ருக்கள், கணக்கர் ராஜி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து நாகேஸ்வ ரமுடையார் சுவாமி, பொன்னாகவல்லி அம்மன் ஆகிய சாமி சந்திகளில் தரிசனம் செய்தார்.

    அதன் பின்னர் அமிர்த ராகு பகவானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தார்.

    கோயில் முத்துக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரி யார்கள் அவர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2020, ஆகஸ்ட் 5 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
    • இது ஒன்றும் ஒரு தனி நபர் நிகழ்ச்சி அல்ல என்றார் குர்ஷித்

    உலகெங்கும் உள்ள இந்துக்களின் தெய்வமான ஸ்ரீஇராமபிரான் அவதரித்த தலமான அயோத்தியில் அவருக்கு ஒரு மிக பிரமாண்ட ஆலயத்தை கட்ட முடிவு செய்து 2.77 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ ராம்ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா" (Shri Ramjanmabhoomi Teerth Kshetra) எனும் ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது அவை முடியும் தறுவாயில் உள்ளன.

    2020, ஆகஸ்ட் 5 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அடிக்கல்லை நாட்டி, கட்டிட திருப்பணிகளை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    "பகவான் ஸ்ரீஇராமரின் விக்கிரகம் அடுத்த வருடம் ஜனவரி 22 அன்று இத்திருக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும். 'பிரான் பிரதிஷ்டா' எனப்படும் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு டிரஸ்டின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துள்ளோம். அவரும் வருவதாக ஒப்பு கொண்டுள்ளார்", என கடந்த அக்டோபர் 22 அன்று இந்த டிரஸ்டின் பொது செயலாளர் சம்பத் ராய் (Champat Rai) தெரிவித்தார்.

    "சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்" என இந்த அழைப்பு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த அழைப்பு குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் தெரிவித்திருப்பதாவது:

    ஒரு கட்சிக்கு (பா.ஜ.க.) மட்டும் தான் அழைப்பிதழா? யார் வருவார்கள், வர மாட்டார்கள் என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது. ஆனால், 'கடவுள்' ஒரே ஒரு கட்சிக்கு மட்டும் உரியவராகி விட்டாரா என்ன? அனைத்து கட்சியினரையும் பாகுபாடு இன்றி அழைக்க வேண்டாமா?. இந்த முக்கிய விழா ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமான நிகழ்வாக மாறி விட்டது. இது ஒரு கட்சி நிகழ்வோ, தனி நபர் நிகழ்ச்சியோ அல்ல. அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு குர்ஷித் கூறினார்.

    குடும்பங்களில் முக்கிய நிகழ்வுகளுக்கு அழைக்கப்படாத உறவினர்கள் "எனக்கு ஏன் அழைப்பு வைக்கவில்லை?" என குற்றம் சாட்டுவதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பயனர்கள் குர்ஷித்தின் கருத்து குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • காதோலை கருகமணியை கடலில் விட்டு புனித நீராடி சூரியபகவானை வழிபட்டனர்.
    • வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய 3 அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகும்.

    இந்த நாட்களில் மூதாதையர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம்.

    இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று திதி, நீர்க்கடன் செய்ய வேண்டும். இதனால் அவர்களது ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். நாம் செய்த பாவங்கள் நீங்கும்.

    நீர்நிலைகள் அருகே அமர்ந்து வேதமந்திரங்கள் சொல்லி திதி கொடுப்பது, மூதாதையர்கள் நினைவாக பிண்டம் செய்து உணவாக படைப்பது என்று செய்து வருகின்றனர்.

    அதன்படி, நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது எனப்படும் சித்தர் கடலில் இன்று சூரிய உதயத்தின் போது கடலில் ஏரளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் தேங்காய், வெற்றிலைபாக்கு, எலும்பிச்சைபழம், காதோலை கருகமணியை கடலில் விட்டு புனித நீராடி சூரியபகவானை வழிபட்டனர் .

    பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
    • 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து வருகிற 18-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை மஹா கணபதி ஹோமம், முளைப்பாரி இடுதல், 10.15 மணி முதல் 11.30 மணி வரை புதிய கொடி மரம் நிறுவுதல், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ராஜகோபுர கலசங்களுக்கு பாலாலயம் செய்தல், 19-ந் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை கணபதி வழிபாடு, கிராமசாந்தி , அஷ்ட பலி பூஜை, 24-ந் தேதி காலை 10.30 மணி முதல் 1 மணி வரை விநாயகர் வழிபாடு, புனித தீர்த்த குட புறப்பாடு, முளைப்பாரி ஊர்வலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து நடைபெறும்.

    இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி, திஷா ஹோமம், காப்பு கட்டுதல், 25-ந் தேதி 9.30 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை, 26-ந் தேதி காலை 8 மணி முதல் 12 மணி வரை 2-ம் கால யாக பூைஜ, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம் , மூலஸ்தான விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர் கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.

    • கடந்த 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
    • விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் கடந்த 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    நிகழ்வில் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார்.

    பேட்டை சிவா, கோட்டூர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி, மடப்புரம், ரொக்க குத்தகை, அண்ணாநகர், பாரதியார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது.

    ஊர்வலத்தை பா. ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

    விழா ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் விக்னேஷ், மாதவன், பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் சிவகுமார், மாவட்ட செயலாளர் வினோத், நகர தலைவர் அய்யப்பன், ஒன்றிய தலைவர் பூபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் இளசுமணி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    முடிவில் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயபால் நன்றி கூறினார்.

    • விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
    • பெரியவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட வண்ண வண்ண விநாயகர் சிலையை வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா கடலூர் மாவட்டத்தில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் பெரியவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்வமாக சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட வண்ண வண்ண விநாயகர் சிலையை வாங்கி சென்றனர். மேலும் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்ட பூஜை பொருட்கள், பழ வகைகள், அவல்,பொறி, எருக்கம் பூ மாலை அருகம்புல் மாலை போன்றவற்றை ஆர்வமாக வாங்கி சென்றனர்.இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு விநாயகர் சிலையை கொண்டு சென்று அபிஷேகம் செய்து மற்றும் தீபாராதனை காண்பித்து கொழுக்கட்டை, நாவல் பழம் போன்றவற்றை படைத்து குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் 1300 இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்ய அனுமதி கோரினர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், தமிழக அரசின் விதிகளுக்கு உட்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கினார்.அதன்படி, விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்த பல்வேறு பதிகளை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.மேலும், விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடும் இடங்களில் விழா குழுவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து போலீசார் அனுமதியுடன் 3 அல்லது 5-ம் நாள் விநாயகர் சிலையை அரசு அனுமதி வழங்கிய இடத்தில் கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    • 3 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
    • இன்று நகர பகுதியில் இருந்து இடம் வாரியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. மயில்வாகன விநாயகர், சிவசக்தி விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குபேர விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    3 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். திருப்பூர் மாநகர பகுதியில் 1,000 விநாயகர் சிலைகளும், மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் விநாயகர் சிலைகளும் வருகிற 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்று இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்தார்.

    இதற்காக ஒவ்வொரு பகுதியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இன்று நகர பகுதியில் இருந்து இடம் வாரியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது. நாளை 18-ந் தேதி காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    19-ந் தேதி பொங்கலூர், குண்டடம், காங்கயம், ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. வருகிற 20-ந் தேதி அவினாசி, உடுமலை, பல்லடம், செஞ்சேரிமலை பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது. 21-ந் தேதி திருப்பூரில் புதிய பஸ் நிலையம், செல்லம் நகர் பிரிவு, தாராபுரம் ரோடு ஆகிய 3 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் தொடங்கி ஆலாங்காட்டில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், சிவலிங்கேஸ்வர சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்கள்.

    அதன்பிறகு விசர்ஜனம் செய்ய சிலைகள் சாமளாபுரம் குளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    • சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    • ஊர்வலமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மாவட்ட விநாயகர் கமிட்டி தலைவருமான சரண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் , சீர்காழி, மங்கை மடம், பூம்புகார், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு ஆகிய இடங்களில் 147 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று இந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு மறுநாள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மறுநாள் பழைய பஸ் நிலையத்தில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றி ணைக்க ப்பட்டு பின்னர் ஊர்வ லமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தில் அனைத்து பொதுமக்களும், பக்தர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 5 மணியளவில் 2-ம் கால பூஜையும் இதையடுத்து யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • காலை 9 மணிக்கு சித்திவிநாயகர், சக்தி வாராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    உடுமலை:

    சப்த கன்னிகளில் ஒருவராக உள்ள வாராஹி அம்மனுக்கு கோவில் அமைத்து வழிபடுவதென உடுமலை சின்னவீரம்பட்டி ஊர்ப்பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் கட்டுமான பணி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன் தினம், விழாவின் முதல் நிகழ்வாக மங்கல இசை,கணபதி,லட்சுமி,நவகிரக ஹோமம் பூர்ணாஹுதி நடைபெற்றது.

    2 வது நாளாக மாலை 4.30 மணியளவில் பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி,கோபுரகலசம் வைத்தல், மூலவருக்கு யந்திர ஸ்தாபனம்,அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட முதல் கால பூஜையும் நடைபெற்றது. காலை 5 மணியளவில் 2-ம் கால பூஜையும் இதையடுத்து யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு சித்திவிநாயகர், சக்தி வாராஹி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு 500 மரக்கூழ் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • இந்த ஆண்டு 500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிற 19,20-ந்தேதி ஊர்வலம் நடக்கும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்காக சுற்றுச்சூழல் நண்பனான காகித மரக் கூழால் 500 விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன.

    ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் வருகிற செப்டம்பர் 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் படுகிறது. இதில் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    பின்னர் செப்டம்பர் 19ந்தேதி ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், பரமக்குடி, உச்சிப்புளி ஆகிய இடங்களிலும், வருகிற 20ந்தேதி ராமநாதபுரம், திருப்புல்லாணி, ஏர்வாடி, தேவிபட்டினம், சாயல்குடி ஆகிய இடங்களிலும் விநாய கர் சிலை ஊர்வலங்கள் நடக்க உள்ளது.

    இந்தாண்டு விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழல் நண்பன் என்ற முறையில் மரக்காகித கூழ் கொண்டு 4 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாட்டர் கலர் மூலம் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்னை தமிழை காக்க ஆன்மிகத்தை வளர்ப்போம்' என்ற கருப் பொருளை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது. இந்துக்களின் ஒற்றுமை மற்றும் எழுச்சி விழாவாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இருக்கும்.

    இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் எளிதில் தண்ணீரில் கரையும் விதமாக செய்யப்பட்டுள் ளது. இது மீன்களுக்கு உணவாகவும் பயன்படும். விநாயகர் சிலைகளில் சிம்ம வாகனம், மான் வாகனம், காளை வாகனம், மயில், அன்ன வாகனம் போன்ற வற்றில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். இந்த ஆண்டு 500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிற 19,20-ந்தேதி ஊர்வலம் நடக்கும் என்றார்.

    ×