search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Construction materials"

    • பண்டிகை காலங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வாழ் வாதாரத்தையும் பாதிக்கும்.
    • உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லக்கூடும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பருவமழையும் தொடர்ந்து பெய்து வருவதால் கட்டுமான பொருட்கள் கிடைப்பதில்லை. கட்டுமானத்துக்கு தேவையான ஆற்று மணல் 3 யூனிட் ரூ.40 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டது. ஆனாலும் மணல் கிடைக்கவில்லை.

    இதேபோல் செங்கல், சிமெண்ட், எம் சாண்ட் விலை உயர்ந்து உள்ளதால் பில்டர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் இது கட்டுமானப் பணியில் பாதிப்பையும் சுணக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று பில்டர்கள் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உள்ளூர் கடைகளில் சிமெண்ட் ஒரு மூட்டை ரூ.440-க்கு விற்கப்படுகிறது. இது அரசு நிர்ணயித்த விலையைவிட ரூ.120 அதிகம். மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ப்ளு மெட்டல், எம்சாண்ட் ஆகிய வற்றின் விலை உயர்வு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு கட்டிடங்கள், வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் நீர்வழிகள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. செங்கற்கள் தட்டுப்பாடு காரணமாக விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது ஒப்பந்ததாரர்களுக்கு சவாலாக உள்ளது. பண்டிகை காலங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வாழ் வாதாரத்தையும் பாதிக்கும்.

    உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லக்கூடும். இதனால் அவர்கள் திரும்பியவுடன் கட்டுமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதில் குறிப்பிடத் தக்க தாமதம் ஏற்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கட்டிட அனுமதி வழங்குவதை முறைப்படுத்தவும் கால தாமதத்தை குறைக்கவும் வேண்டிய தேவையும் உள்ளது. அனுமதி வழங்குவதற்கு 30 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் துறையின் சுமையை குறைக்க 100 சதவீதம் உயர்த்தப்பட்ட கட்டிட திட்ட ஒப்புதல் கட்டணம் மற்றும் உள் கட்டமைப்பு மாற்றங்களில் சமீபத்திய அதிகரிப்பு ஆகியவற்றை மறு பரிசீலனை செய்யுமாறு பில்டர் அசோசியேஷன் வலியுறுத்தி உள்ளது.

    • இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் திடீரென மாயமானது.
    • நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி‌. காலனியை சேர்ந்த போஜராஜன் (வயது 25) மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 2 பேர் கட்டுமான பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பார்வதி நகரில் ஒரு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் அங்கிருந்து இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் திடீரென மாயமானது. இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியை சேர்ந்த போஜராஜன் (வயது 25) மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய 2 பேர் கட்டுமான பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போஜராஜன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

    • சிதறி கிடக்கும் பொருட்களின் மீது வாகனங்கள் ஏறி விபத்துக்குள்ளாகி வருகின்றது.
    • பொருட்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    கோத்தகிரி,

    கோத்தகிரி மிஷன் காம்பவுண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதால் அந்த பணிக்காக சாலைகளின் ஓரத்தில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்கள் சாலைகளில் சிதறி கிடக்கின்றது.

    இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையில் வாகனங்களை ஓட்டி வரும் போது சிதறி கிடக்கும் பொருட்களின் மீது வாகனங்கள் ஏறி விபத்துக்குள்ளாகி வருகின்றது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பணியினை எடுத்த ஒப்பந்ததாரர்களிடம் கூறி கட்டுமான பொருட்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • வேனின் வெளிப்புற அளவிற்கும் உட்புற அளவிற்கும் வித்தியாசம் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், வேனை வேப்பூர் போலீஸ் நிலை யத்துக்கு கொண்டு சென்றனர்.
    • போதை மற்றும் புகையிலை பொருள் மூட்டைகளை வைத்து இரும்பு தகரத்தால் மூடி கடத்தி வந்தது தெரிய வந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் வழியாக அரசு தடை செய்த போதைப் பொருள்கள் கடத்தல் நடப்பதாக கடலூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்படி தனிப்படை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார், வேப்பூர் சேலம் சாலையில் விளம்பாவூர் சிப்காட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த பொலிரோ மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், வீடு கட்டுமானப் பணிக்கு தேவையான பொருட்கள் இருந்தது. ஆனால், வேனின் வெளிப்புற அளவிற்கும் உட்புற அளவிற்கும் வித்தியாசம் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், வேனை வேப்பூர் போலீஸ் நிலை யத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர்

    போலீசாரின் சோதனை யில் தப்பிக்க வேனின் பக்க வாட்டில் அறைகள் அமைத்து அதில் போதை மற்றும் புகையிலை பொருள் மூட்டைகளை வைத்து இரும்பு தகரத்தால் மூடி கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், திட்டக்குடி அருகே அருகேரி கிராம த்தில் மளிகைகடை வைத்தி ருக்கும் மகேந்திரன், (வயது35,) அதே கிராமத்தை சேர்ந்த தெய்வமணி (வயது 25), பொலிரோ வேன் டிரைவரான ஆரோக்கிய சாமி (வயது 33), ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடந்த 2 மாத காலமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கரும்பாறைகள் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்டு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசியும் உயர்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    நாம் இந்தியர் கட்சியின் மாநிலத்தலைவர் என்.பி.ராஜா தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு மனு அனுப்பி–யுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள–தாவது:-

    மனிதனின் பயன்பாட்டிற்காக இறைவனால் உருவாக்கப்பட்ட கரும்பாறைகள் மற்றும் சுக்காம்பாறைகளை அரசு அனுமதியோடு கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட மக்களின் கட்டுமான பொருட்களின் தேவைக்கு அங்கங்குள்ள குவாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற குவாரி விபத்திற்கு பிறகு கடந்த 2 மாத காலமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கரும்பாறைகள் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் அனுமதிக்கபட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சில குவாரிகளில் மட்டும் ஜல்லி, எம்.சாண்டு எடுக்கப்படுகிறது.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்டு தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசியும் உயர்ந்துள்ளது. எனவே கட்டிடத்தொழிலை நம்பி இருக்கும் கட்டிடத்தொழிலாளர்கள் கட்டிடத்திற்கு சரக்கு சப்ளை செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

    குறிப்பிட்ட சில இடத்தில் மட்டுமே கல் எடுக்க அனுமதி வழங்குவதால் குவாரிகளில் அதிக ஆழம் வெட்டி எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனால் அதிக பாறைகள் இருக்கும் இடங்களில் குவாரிகள் அமைப்பதற்கு உரிமம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி உரிமம் வழங்க வேண்டும். இதனால் கட்டுமான பொருட்கள் விலையும் குறையும், விபத்துக்களும் தடுக்கப்படும். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களில் குவாரிகளை முறைப்படுத்தி, கட்டுமான பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடுகளை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இதேபோல் டாஸ்மாக் மதுபான கடை மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கேயே அமர்ந்து மது அருந்த பார்வசதிகள் உள்ளன. ஆனால் கடந்த 4,5 மாதகாலமாக டாஸ்மாக் கடையில் பார் நடத்த அனுமதி புதுப்பிக்கப்படாததால் தெரு ஓரங்களிலும், மறைவான இடங்களிலும், நிறுத்தப்பட்டுயிருக்கும் வாகனங்கள் மறைவிலும் மதுபிரியர்கள் மது அருந்துகின்றார்கள்.

    இதனால் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். சிறுவர்கள், பெண்கள் அச்சத்தோடு நடமாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுப்பதற்கு பார் நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    ×